பில் கேட்ஸ்.........
இவர் சிறு குழந்தையாக இருக்கும் போது யாரவது ஒருவர் இவர் படுத்திருக்கும் தொட்டிலை தொடர்ந்து ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டுமாம், தூங்கிவிட்டார் என்று தொட்டிலை ஆட்டுவதை கொஞ்சம் நிறுத்தினாலும் அழ ஆரம்பித்து விடுவாராம், சில நாட்களில் யாரையுமே எதிர்பார்க்காமல் படுத்தவாக்கில் அங்கும் இங்கும் புரண்டு தன்னுடைய தொட்டிலை தானே ஆட்டிக்கொள்ள பழகிகொண்டுவிட்டாராம், மகனின் இந்த மழலை சாதனையை பார்த்து கொஞ்சம் வளர்ந்தவுடன் அவருக்கு ஓர் ஆடும் மரக்குதிரையை வாங்கிக் கொடுத்தாராம் அவருடைய தாய், அதில் மணிக்கணக்காக உட்கார்ந்து ஆடிக்கொண்டே இருப்பாராம்....பில் கேட்ஸ்.....
இன்று வரை கேட்ஸுக்கு இந்த ஆடும் பழக்கம் உண்டாம்,முக்கியமான பிஸினெஸ் பிரச்சனைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடியபடியே தான் யோசிப்பாராம், சில சமயம் அசையாத நாற்காலியில் அமர நேர்ந்தாலும் கூட, உடலை மட்டும் முன்னும் பின்னும் அசைத்துக்கொண்டே இருப்பாராம், பில் கேட்ஸ் இடம்பெறும் பல வீடியோக்களில் இந்த காட்சியை தவறாமல் பார்க்க முடியும்.....( ஆதாரம்: என்.சொக்கன் எழுதிய பில் கேட்ஸ் என்ற புத்தகத்திலிருந்து )
அமீர் கான்........
2002 ல் மனைவி ரீனவுடனான 16 வருட திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஒருநாள் விடாமல் ஒரு புல் பாட்டில் பக்கார்டி மது அருந்தினாராம், தான் குழந்தைகளை பார்க்கும் வாரத்தின் ஆறு மணிநேரங்களும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டுமே பக்கார்டிக்கு ஓய்வு தருவாராம், மொடா குடியராக இருந்தாலும் கூட தொடர்ச்சியாக 4 நாட்கள் இவரால் பக்கார்டி மதுவை தொடாமல் இருக்க முடியுமாம்....( ஆதாரம்: சமீபத்தில் வந்த இந்திய டுடே பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இருந்து )
கில் கிரிஸ்ட்.............
இவருக்கு எப்போதும் இடது கால் சூவை முதலில் அணிவது தான் ராசியானது என்று நம்புகிறாராம்.....( சமீபத்தைய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான இவருடைய பேட்டியிலிருந்து )
ரத்தன் டாடா..........
டாடா குழுமத்தின் தற்போதைய தலைவரும், உலக பணக்காரர்களில் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒருவரான 75 வயது ரத்தன் டாடாவுக்கு புகை,மது போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதாம்,இவர் திருமணம் செய்துகொள்ளவும் இல்லையாம், மும்பையில் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் ஒரு எளிய வீட்டில் தான் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறாராம் ( கிழக்கு பதிப்பகத்தின் டாடா வரலாறு என்ற புத்தகத்திலிருந்து )
* இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் எவ்வளவு எளிமையா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம கட்டுபாடோட இருக்காரு, நம்ம என்னாடான சம்பளத்துக்கு வேளை பாக்குறப்பவே இந்த ஆட்டம் போடுரமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன் )
ACTN3........
ACTN3 ங்கற இந்த ஜீன் தான் உங்க குழந்தை உசைன் போல்ட் மாதிரி வேகமான தடகள வீரராகவோ,நீண்ட தூர ஓட்ட வீரராகவோ, அதிக சக்தி தேவைப்படுகிற இந்த மாதிரி விளையாட்டை தேர்ந்து எடுக்க வேண்டுமா இல்லை கிரிகெட் மாதிரியான சாப்ட் விளையாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்கிறதாம்.....இந்த ஜீன் டெஸ்ட் வசதி இப்போதைக்கு சில முக்கிய நகரங்களில் மட்டும் வந்திருக்கிறது, இந்த டெஸ்டுக்கு 2000 ரூபாய் செலவாகுமாம்......
தமிளிஷ் & உலவு........
எனக்கு ஒரு யோசனை தோன்றியது, தமிளிஷ்,தமிழ் மனம் மாதிரியான வலைதொகுப்புகளின் முகப்பு பக்கத்தில் ஒரு Chatting Widow ஏன் இணைக்க கூடாது என்று, பிரபலங்கள் சுட சுட சண்டை போட்டுக்கொள்ள வசதியா இருக்கும் இல்லையா....இந்த விசயத்த பற்றி தமிளிஷ் மற்றும் உலவு தளங்களுக்கும் மட்டும் மின் அஞ்சல் செய்திருக்கிறேன்.....என்ன ஆகுதுன்னு பாப்போம்......அந்த மின் அஞ்சல் கிழே......
2010/3/10 தம்பி abuthanisa@yahoo.com
மதிப்பிற்குரிய தமிளிஷ் வலைத்தொகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு,
நான் உங்கள் தளத்தின் தீவிர வாசகன்,
ஏன் நீங்கள் தமிழிஷ் தளத்தில் ஒரு CHATTING WINDOW வை அமைக்க கூடாது, அந்தந்த பக்கத்தில் பதிவேற்றப்பட்ட, பதிவுகளை, அதேபக்கத்தில் வைத்து காரசாரமாக விவாதித்துக்கொள்ள வசதியாய் இருக்கும் அல்லவா, அதுமட்டும் இன்றி இன்றைய இளங்கர்கள் CHATTING செய்வதை மிகவும் விரும்புகிறார்கள் அவர்களுடைய CHATTING தாகத்தையும் தீர்த்தது போல இருக்கும் அல்லவா, என் கணிப்புப்படி இந்த ஐடியா உங்கள் தளத்துக்கு மேலும் Traffic Rank ஐ உயர்த்தும் என்று நம்புகிறேன்.....
என் வலைதள முகவரி....http://athigapadiabu.blogspot.com/
நன்றியுடன் ......தம்பி From Surat Gujarat...
From: "Tamilish - Support"Add sender to ContactsTo: "தம்பி" abuthanisa@yahoo.com
அன்புள்ள தம்பி...
உங்கள் கருத்துக்கு நன்றி...சேட்டிங் விண்டோ தனி பக்கமாக திறக்கவேண்டுமா அல்லது முகப்பு பக்கத்திலேயே இருக்கலாமா ? உங்கள் விருப்பம் என்ன ?
அன்புடன்
தமிழிஷ்
From: "abunisa abunisa"Add sender to Contacts
To: "Tamilish - Support"
மதிப்பிற்குரிய தமிளிஷ் வலைத்தொகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு,
முகப்பு பக்கத்தில் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும், மேலும் கீழும் Scroll செய்யும் போது அதற்க்கு தகுந்தார் போல் மேலும்,கீழும் ஏறி இறங்காமல் எப்போதுமே ஒரே இடத்தில காட்சி தரும்வண்ணம் Chatting Window வை வடிவமைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்....ஒருவர் இணைக்க பட்டிருக்கும் அடுத்தவருடைய பதிவை படித்து முடித்ததும் உடனடியாக அந்த பதிவை பற்றி பொதுவில் விமர்சிக்கும்/பாராட்டும் வகையில் இருக்கவேண்டும்....
நன்றியுடன் ......தம்பி From Surat Gujarat...
விசு........
நேத்து ஜீ டிவியில் சுதாங்கன் அவர்கள் நடத்தும் தமிழர் பார்வைன்கிற நிகழ்ச்சிய பார்க்க நேர்ந்தது, விசு விருந்தினரா வந்திருந்தார்....சுதாங்கன் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையாகவும்,வெளிப்படையாகவும் விசு பதில் சொன்னார்......அதிலிருந்து சில துளிகள்......

From: "Tamilish - Support"
அன்புள்ள தம்பி...
உங்கள் கருத்துக்கு நன்றி...சேட்டிங் விண்டோ தனி பக்கமாக திறக்கவேண்டுமா அல்லது முகப்பு பக்கத்திலேயே இருக்கலாமா ? உங்கள் விருப்பம் என்ன ?
அன்புடன்
தமிழிஷ்
From: "abunisa abunisa"
To: "Tamilish - Support"
மதிப்பிற்குரிய தமிளிஷ் வலைத்தொகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு,
முகப்பு பக்கத்தில் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும், மேலும் கீழும் Scroll செய்யும் போது அதற்க்கு தகுந்தார் போல் மேலும்,கீழும் ஏறி இறங்காமல் எப்போதுமே ஒரே இடத்தில காட்சி தரும்வண்ணம் Chatting Window வை வடிவமைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்....ஒருவர் இணைக்க பட்டிருக்கும் அடுத்தவருடைய பதிவை படித்து முடித்ததும் உடனடியாக அந்த பதிவை பற்றி பொதுவில் விமர்சிக்கும்/பாராட்டும் வகையில் இருக்கவேண்டும்....
நன்றியுடன் ......தம்பி From Surat Gujarat...
விசு........
நேத்து ஜீ டிவியில் சுதாங்கன் அவர்கள் நடத்தும் தமிழர் பார்வைன்கிற நிகழ்ச்சிய பார்க்க நேர்ந்தது, விசு விருந்தினரா வந்திருந்தார்....சுதாங்கன் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையாகவும்,வெளிப்படையாகவும் விசு பதில் சொன்னார்......அதிலிருந்து சில துளிகள்......
சில வருடங்களுக்கு முன்பு விசு மிக பெரிய குடிகாரராக இருந்தாராம், பல நேரங்களில் குடித்து விட்டு பிளாட் பாரங்களில் விழுந்து கிடப்பாராம், அவரோட சகோதரர்கள் தான் வந்து தூக்கிக்கொண்டு போவார்களாம், இப்போது கூட கடுமையான மனகஷ்டம் ஏற்படும் போது அறையை
சாத்திக்கொண்டு அவருடைய மனைவியின் அனுமதியோடு மது அருந்துவாராம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 சிகரெட் பிடிப்பாராம் இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார், சுதாங்கன் கூட கேட்டார், இப்படி எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக இந்த விசயங்களை ஒப்புக் கொள்கிறீர்களே விசு, உங்கள் தற்போதைய இமேஜ் பதிக்கப்படாதான்னு, விசு சொன்னார் அவங்க தான் என்னை இதனை உயரத்துக்கு தூக்கி விட்டார்கள், இந்த உண்மையை சொன்னதற்காக அவர்கள் என்னை தூக்கி எறிந்தாலும் பரவா இல்லை என்று.......
* அப்பத்தான் நம்ம பதிவுலகத்துல நடக்கிற கூத்த பத்தி யோசிச்சேன், ஏன் எல்லாருமே நல்லவங்க மாதிரியே வேஷம் போடுறாங்களேன்னு, யாராவது வெளிப்படையா இருக்க ஒரு ஆள காட்ட முடியுமா இங்க.....ஜான்சி ராணி......
அவள் கணவனான கங்காதர் ராவ் ஒரு அலி... ஜான்சியின் ராஜாவான கங்காதர் ராவின் முதல் மனைவி இறந்து விடவே (அவளுக்கும் குழந்தை இல்லை) கங்காதர் தனக்கு ஒரு பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டாம் பேஷ்வா பாஜிராவின் பரிவாரத்தைச் சேர்ந்த மொரோபாந்த் தம்பேயின் மகளான சபேலிக்கு ஒரு ஆண் வீரனைப் போல் குதிரையேற்றம், வாள் சண்டை என்று சகல வித போர்ப் பயிற்சிகளும் கற்றுத் தரப்படுவதை அறிந்த ராஜா, தனக்குத் துணையாக இருப்பாள் என்று நினைத்து சபேலியை மணந்து கொண்டார். அந்த சபேலி தான் ஜான்சி ராணி.
ராஜா கங்காதர் ராவ், பெண்ணைப் போல் புடவையெல்லாம் அணிந்து கொண்டு அலியாகவே வாழ்ந்தவர். இதற்கு ஆதாரம் கோட்சே எழுதிய, "எனது பயணம்!' என்ற நூல்! கோட்சே என்றால் காந்தியைக் கொன்ற கோட்சே அல்ல; இது வேறு கோட்சே, விஷ்ணு பந்த் கோட்சே; சுருக்கமாக கோட்சே பாய்ஜி.
கோட்சே, 1857ல் நடந்த அந்த சம்பவங்களை நேருக்கு நேர் பார்த்து எழுதியிருக்கிறார்.
செயற்கையான சவுரி முடி வைத்து ஜடை பின்னி, பூ வைத்து, பொட்டிட்டு, பிளவுஸ் மற்றும் புடவையுடன் உப்பரிகையின் மீது வெட்கத்துடனும், நாணத்துடனும் அமரும் ஜான்சி ராஜாவைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாதது நம்முடைய தவறு! என்கிறார் பேராசிரியர்.
இது ஒன்றும் மிகப் பழைய வரலாறு கூட அல்ல... வெறும் 140 ஆண்டுகளுக்கு முந்தி நடந்த ஒரு விஷயத்தையே நாம் தலை கீழாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?
பேராசிரியர் பேசி முடித்த பின் என்னுள் எழுந்த கேள்விகள்:
* தன் கணவன் அலி என்பதால், அவன் இடத் தை தான் எடுத்துக் கொண்டு போரிட்டு மடிந்த ராணி ஜான்சியின் வீரம் எப்படிப்பட்டது?
* தன்னை ஏமாற்றி மணந்து கொண்ட ராஜா வை அவள் ஏன் எதிர்க்க துணியவில்லை?
* ராஜாவைப் பற்றிய விஷயம் தெரிந்திருந்தும், ஒரே ஜாதி என்பதையும், அந்தஸ்தையும் மட்டுமே பார்த்து தன்னை ஒரு அலிக்கு மணம் செய்து வைத்த தன் தந்தையை அவள் ஏன் எதிர்க்கவில்லை?
* பெண்ணீயம் பேசுபவர்களுக்கு இந்த உண்மை சம்பவங்கள் தெரியாதா?
வாரமலர்....அந்துமணியின் பா.கே.ப...14.3.2010.
BY .....................தம்பி.................