செய் முறை :
Dec 31, 2009
NEW YEAR SPECIAL 2 HOT DRINKS ( Chilli Punch & Cocktail )- செய்முறை
செய் முறை :
கருப்பு பண ரகசியங்கள் பகுதி - 2 ( அறிமுகம் )
Dec 30, 2009
கருப்பு பண ரகசியங்கள் பகுதி - 1 ( அறிமுகம் )
எதுக்காக ஞாயமா சம்பாதித்த பணத்த கணக்கு காட்டாம, கருப்பு பணமா பதுக்குறாங்க, முக்கியமா வரி ஏய்ப்பு செய்யத்தான், சில நேரம் நிர்ணயித்தத விட கூடுதலா உற்பத்தி ஆகுறது கூட காரணமா இருக்கலாம்,
அது என்னன்னா, சட்டத்துக்கு புறம்பா சம்பதிகிறது, உதாரணமா அரசு அதிகாரிங்க வாங்குற லஞ்ச பணம், அரசியல்வாதிங்க செய்யற ஊழல் மூலமா சேருகிற பணம், போதை பொருள் விக்கிறது மூலமா வர்ற பணம்,இதுக்கெல்லாம், கணக்கும் காட்ட முடியாது, வரியும் கட்ட முடியாது, So, Obviously இந்த பணமெல்லாம் கருப்பு பணமா மாறுவதை தடுக்கவும் முடியாது...இந்த மாதிரி சேர்கிற கருப்பு பணத்தோட சதவீதம் தான் அதிகம் ......நம்ம அரசாங்கம் என்ன பண்ணுது,சும்மா பேருக்கு சில, அரசியல்வதிங்களையும், அரசாங்க அலுவலர்களையும், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா கைது பண்ணுது, அதுலயும் அரசியல் ரீதியா பலி வாங்குறது தான் முக்கிய நோக்கமா இருக்கு..ஆனா தொழில் துறையில உள்ளவங்களுக்கு, ஆயிரம் சட்ட, திட்டம் இருக்கு...
சட்டத்துக்கு புறம்பா சம்பாதித்தவன்களோட நோக்கம் சொத்து சேக்குறது, சரி இவ்வளவு Risk எடுத்து, தொழில் துறைல முன்னணியில உள்ள ஜாம்பவான் நிறுவனங்கள் கூட எதுக்கு கருப்பு பணத்த Generate பண்ணனும்......
அது Next......
Dec 29, 2009
நீங்களும் பத்திரிக்கை அதிபர் தான்.....
இல்லையா, உங்க அப்பாவோ, தாத்தாவோ, முதல்வரா இருந்து, காசு, கோடி, கோடியா குவிஞ்சி இருந்து, சரி காசுதான் கோடி, கோடியா இருக்கே, சும்மா ஒரு 200 கோடிய போட்டு கழுத, ஒரு பத்திரிக்கைய தான் ஆரம்பிபோமேனு, ஆரம்பிச்சி, நம்மக்கிட்ட உள்ள TV சேனல Use பண்ணி, செகண்டுக்கு 3 வாட்டி காது கிளியிர மாதிரி விளம்பரம் செஞ்சி, 50 காசுக்கோ, 75 காசுக்கோ அத வித்து, கூடவே, ஸ்டிக்கர் பொட்டு, சாம்பு பாக்கெட், பவுடர் டப்பா, லொட்டு, லொசுக்கு எல்லாம் Free யா குடுத்து, சரி அதுல இருக்குற செய்தியவிட, போண்டா, பக்கடா, மடிக்கிரதுக்கு வசதியா இருக்குதுன்னு நினைட்சாட்சும், என்ன மாதிரி மங்குனி பாண்டிங்க 50, 60 ஆயிரம் பேராவது வாங்க ஆரம்பிச்சி, அந்த பத்திரிக்கை பிரபலமாகி, அதுல நம்ம கருத்தையோ, படைப்பையோ, எவன் படிச்சா என்ன, படிக்காட்டி என்னன்னு, எத்தனை பக்கத்துக்கு வேணும்னாலும் எழுதிக்கலாம்......
Dec 24, 2009
எனதருமை ஈழ சகோதரா....உனக்கான "Game Plan "
" கந்தல் ஆனாலும், தாய் மடி போல் ஒரு சுகம் வருமா....வருமா....
சொர்க்கம் சென்றாலும், சொந்த ஊர் போல சுதந்திரம் வருமா....வருமா...
கண் திறந்த தேசம் அங்கே, கண் மூடும் தேசம் எங்கே ?
பிரிவோம் நதிகளே, பிழைத்தால் வருகிறோம்....
மீண்டும் தாயகம், அழைத்தால் வருகிறோம்.....
கண்ணீர் திரையில், பிறந்த மண்ணை, கடைசியாக பார்கின்றோம்.....
--------------------------------------------------------------------------------------
விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே,
பனை மர காடே, பறவைகள் கூடே, மறு முறை, ஒரு முறை, பார்ப்போமா...?
----------------------------------------------------------------------------------------
உதட்டில் புன்னகை தொலைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்....
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்......
என் ஈழ சகோதரா,கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல வர்ற இந்த பாட்ட கேட்ட, நான் சூழ்நிலைய மறந்து கதறி அழுதுவிடுவேன், உன்னை நினைத்து என்னால் தற்போது செய்ய முடிந்தது இதுதான்,
நீ எத்தனையோ இழப்புகளை சந்தித்துவிட்டாய், ஈழத்தில் உன் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஆயுதத்தை தூக்கிக்கொண்டு, கடல் கடந்து வந்து உனக்கு தோல் கொடுக்க வேண்டும் என்று எனக்கும் ( எங்களுக்கும் ) ஆசைதான்,என்ன செய்ய, எங்கள் நாடு எங்களையும் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடும் என்ற பயத்தில் ஒதுங்கி இருக்கிறோம்.....மன்னித்து விடு நாங்கள் கூட்டு குடும்பத்தில் பிறந்துவிட்டோம்....
உன் நிலையை நினைத்து கண்ணீர் விடவும், கவிதை/கட்டுரை மட்டுமே, எழுதக்கூடிய கையறு நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்,என்ன செய்ய?
நீ ,இன்னுமா எங்கள் அரசியல்வாதிகளை நம்பிகொண்டிருக்கிறாய் ? அதற்கு பதில், நீயாகவே தற்கொலை செய்துகொள்வது உத்தமம், உன் பெயரை சொல்லி, அரியணையை பிடிப்பதுதான் அவர்களின் நோக்கம், அவர்களின் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதைவிட, நீ முக்கியமில்லை...அதற்காக உங்கள் உயிர்களை முதலீடு செய்கிறார்கள், இவர்களை நம்பி நீ இழந்ததெல்லாம் போதும், இனிமேலும் உன்னை பலி கொடுக்க நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்,உன்னை கரை சேர்க்க நினைத்த "அண்ணனையும் "காணவில்லை, மீண்டும் வருவான் என்ற உன் நம்பிக்கையையும், நான் தகர்க்க விரும்பவில்லை,நல்லது நடந்தால், நானும் சந்தோசமே படுவேன்,இனி எந்த ரட்சகனும், வானிலிருந்து குதித்து வந்து உன்னை காப்பாற்ற வரபோவதில்லை என்பதை நீயும் அறிவாய்.....
பிறகு என்னதான் நாங்கள் செய்வது, இப்படி மடிவதையும், நாடு விட்டு, நாடு ஓடிக்கொண்டு இருப்பதையும் தவிர, எங்களுக்கு வேறு மார்க்கமே இல்லையா ? என்று நீ கேட்க நினைபதையும் நான் அறியாதவன் அல்ல...
பொருத்தது போதும், பொங்கி எழு என்று உன்னை உசுப்பேற்ற வரவில்லை நான், பொறுமையை கையில் எடு, கொஞ்சம் பொறுத்திரு என்றுதான் சொல்ல வந்தேன்
நீ யார் தெரியுமா? கல் தோன்றி, மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய, மூத்த குடியில் பிறந்தவன், உலகுக்கே வழிகாட்டிய நாகரீகாதிலிருந்து வந்தவன், உன்னை மிஞ்ச இந்த உலகத்தில் ஒரு இனம் இல்லை, உன் அறிவுக்கு நிகரான எந்த மனித இனமும் இல்லை, இத்தனை சிறப்பு பெற்ற நீ, ஏன் அறிவை உபயோகித்து எதிரியை வெல்ல கூடாது?
சத்ரியன் உன் நெஞ்சிக்குள் இருக்கட்டும்,உன் சாணக்கிய தனத்தை கொஞ்சம் வெளிக்காட்டு, உன்னை மிஞ்சிய அரசியல் ஞானம் பெற்றவன் எவனும் இல்லை என்பதை நிருபி, எதிரிக்கு கொஞ்சம் அரசியல் விளையாட்டை காட்டு என்று சொல்லவருகிறேன்,
நீ எத்தனையோ அயல் நாடுகளில் பரவி, பெரிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருகின்றாய் உன் பொருளாதார நிலையும் நன்றாகவே இருக்கிறது ,
நீ செய்ய வேண்டியது இது தான், எல்லா நாடுகளிலும் உள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்கு, ஈழ மீட்ட்புக்கான அணைத்து நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு தீர்மானிக்கட்டும்,உங்களின் இறுதி இலக்கு தமிழீழ விடுதலையாக இருக்கட்டும்,
செய்ய வேண்டிய பணிகள் இலங்கைக்கு வெளியே :
நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வை, உங்களின் ஒவ்வொருவருடைய பொருளாதார முனேற்றமும் முதன்மையாக இருக்கட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதன் பொருட்டு ஈழ வங்கி ஒன்றை தொடங்கு,உங்களின், சேமிப்பும்,முதலீடுகலும், அதன் மூலமாக நடைபெறட்டும், அதை மற்ற இடங்களிலும், விரிவு படுத்து, உங்கள் எல்லோருடைய பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக அது இருக்கட்டும், அடுத்து உங்கள் குழந்தைகளின் கல்விதரம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்படி பார்த்துகொள்,அவர்கள் நாளைய உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள இது உதவும், இவை இரண்டிலும் நீ பலம் பெற்றுவிட்டால், உன் தனி ஈழ கனவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக அர்த்தம், அடுத்து அரசியல் நீ குடியேறி இருக்கும் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பில் குறிப்பிட்ட பதவிகளிலும், நிலைகளிலும் இடம்பெறுமாறு காய்களை நகர்த்து, இவை எல்லாவற்றிற்கும் உங்கள் உலகம் தழுவிய ஒற்றுமை முக்கியம் இதை நன்றாக நினைவில் வை.......
ஈழத்தில் செய்ய வேண்டிய பணிகள் :
ஈழ வங்கியின் வருவாயின் ஒரு பகுதி,ஈழத்தில் உள்ள வறியவர்களின் உணவுக்கும், முக்கியமாக சிறப்பான கல்விக்கும், உன் சகோதர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும், மருத்துவத்திற்கும் உதவட்டும்,உன் சகோதரன் உள்நாட்டு அரசியல் அமைப்புகளில் உயர்ந்த நிலைகளை அடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும்,செய், உள்நாட்டு அரசியலை கூர்ந்து கவனித்து, எடுக்க வேண்டிய அரசியல் முடிவுகளையும், செயல் பாடுகளையும் மேற்குறிய அமைப்பு முடிவு செய்யட்டும், உள்நாட்டு அரசியலில் அழுத்தமாக காலுன்ற வேண்டியது அதி முக்கியம், உன் ஒவொரு அசைவும், இலங்கையின் உள்நாட்டு அரசியலை,அசைதுப்பாற்பதாக இருக்கட்டும்,
ஈழ மக்களின் வாழ்க்கைதரம் உயர உயர, நம்பிக்கை வரும்,இப்பொது தொடங்கு உன் தாக்குதலை, வன்முறை வழியில் இல்லை, அரசியல் ரீதியாக அது இருக்கட்டும், வேறு வழியே இல்லாமல் எதிரிகள் உன் காலடியில் வந்து பனியும் படி செய் ---உன் தமிழ் ஈழ கனவு, நனவாக வந்து அமையும்.....
இதற்கான காலக்கெடு " 20 " வருடங்களாக நிர்ணயித்துகொள்,இந்த இருபது வருடங்களில்,உன் அரசியல்வழி தாக்குதளுக்கான ஆயத்த பணிகள் மறைமுகமாக நடந்துகொண்டே இருக்கட்டும், தீராத தமிழ் ஈழ கனவு உன் நெஞ்சில் அனலாய் கொதித்துகொண்டே இருக்கட்டும், நாளைய புதிய தலைமுறைகளின் செயல்பாடுகளில், எதிரிகளின் கூடாரம் தூள்,தூள் ஆகட்டும்,அதேநேரத்தில் நாங்களும் வல்லரசு ஆகி இருப்போம்,எங்களுக்கும் மற்ற நாடுகளை ஆட்டிவைக்கும் பலம் வந்திருக்கும், உனக்கு முழுவதுமாய் கைகொடுப்பதை தடுக்க, அப்போது எந்த அந்நிய சக்திக்கும் துணிவு இருக்காது, நாம் இருவரும் சேர்ந்து ஆயுதமில்லா இறுதி தாக்குதலை தொடுத்து தமிழ் ஈழத்தை மீட்டெடுப்போம்.........
ஓட,ஓட விரட்டிகொள்ளப்பட்ட, உலகமெங்கும் விரட்டப்பட்ட யூதர்களின் கனவு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு நிறைவேறியது உனக்கு ஞாபகம் இல்லையா ? சகோதரா......
ஏன் உன்னால் முடியாது ?....நமக்கு வெறும் இருபது வருடங்கள் தானே......
ஆரம்பமாகட்டும் நம் அடுத்த கட்ட இறுதி போருக்கான ஆயத்தம், ஆதி பராசக்தி நமக்கு துணையிருப்பாள் .......வெற்றி நமதே.....
புரட்சிக்கான வித்தை இட்டுவிட்டேன், இனி புரட்சி மட்டும்தான் பாக்கி
"என் பாரதி சொன்னபடி,
" அக்கினி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கே ஓர் காட்டிடை பொந்தினில் வைத்தேன், வெந்து தணியட்டும் காடு ......
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.......
( தமிழ் நாட்டிலிருந்து உன் அன்பு தம்பி )
Dec 23, 2009
பிரபல பதிவர் ஆவது So Simple...( Easy Formula )
Dec 21, 2009
அபுவாகிய நான் பிராமணனாக பிறக்க ஆசை படுகிறேன்............
இந்த வார்த்தையும், இவர்களையும், நான் காதலித்து கொண்டே தான் இருக்கிறேன், இந்த காதலுக்கான காரணம் இதுவாக கூட இருக்க்லாம்......
எங்கள் ஊர் மன்னார்குடியை பொறுத்தவரை, பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்,இப்பொது இதில் நிறைய பிராமணர்கள்,பணிநிமிர்தமாகவோ,தொழில் நிமிர்தமாகவோ,வெளியேறி வெளி மாநிலங்களிலும்,வெளி நாடுகளிலும் குடியேறி விட்டார்கள், அவர்களில் பெரும்பாலனவர்கள் வசித்த ராஜகோபால சுவாமி கோவிலை சுற்றிவுள்ள, தெற்கு வீதி, வடக்கு வீதிகளில் மற்றவர்கள் தற்போது பெரும்பாலும் குடியேறி விட்டார்கள், அவர்கள் வசித்த புராதானமான வீடுகள் பெரும்பாலும் இடிக்கப்பட்டு concrete கட்டிடங்கலாகிவிட்டன, அந்த தெருக்களை இபோதெல்லாம் கடந்து செல்கையில், ஏதோ ஒரு வெறுமையே உணரமுடிகிறது,
அந்த ஆட்சரமான தெருக்கள், நாகரீகத்தை பூசி பொய்யாய் சிரிக்கின்றன.....
குங்குமம் இழந்த சுமங்கலிகளை ஞாபக படுத்துகின்றன......
தலைப்புக்கான விசயத்திற்குள் புகும் முன், இன்னும் பசுமையாய் என் மன ஊற்றில் பெருக்கெடுத்து, சல சலத்து ஓடிகொண்டே இருக்கும் என் நினைவுகளின் ஆற்றில் கொஞ்சம் மூழ்கி, எழுந்து கொள்கிறேன்.....
பெரிய கோவிலின் நான்கு மதில்களையும் சுற்றியுள்ள வீதிகளிலும், பெரிய தெப்ப குளத்தின் நான்கு கரைகளிலும் இருந்த வீதிகளிலும் ஏராளமான பிராமணர்கள் வசித்து வந்தார்கள், ஊரின் மற்ற இடங்களிலும் இருந்தாலும், எங்கள் தெருவிலிருந்து ஒரு 10 நிமிட நடை தூரத்தில் இருந்ததால், மற்ற இடங்களில் இருந்த பிராமணர்களைவிட கோவிலும், அதை சுற்றி இருந்த பிராமணர்களுமே எங்களுக்கு பிரசித்தம்,
என்னுடைய, என் நண்பர்களுடைய 7,8 ஆம் வகுப்பு பருவத்திலிருந்து, கல்லூரி, முதலாமாண்டு பருவம் வரையிலான ( மது, சிகரட்,etc,etc...எல்லாம் அப்போது நாங்கள் பழகி இருக்கவில்லை ) நிகழ்வுகள் பெரிய கோவிலையும், தெப்ப குளம் சார்ந்த இடங்களையும் சுற்றியே அமைந்திருந்தன, பெரிய கோவிலின் பிரமாண்டமும், யானையும், அங்கே பரவி இருக்கும் ஈர பத வாசனையும், வௌவால்களின் எச்சத்தின் நாற்றமும், எங்களுக்கு மிக பிடிதமானவையாகவே இருந்தன, கூடவே மட பள்ளியில் தரப்படும்,புளியோதரையும், தயிர் சாதமும், முறுக்கும், சுண்டலும், எங்களை கிட்ட தட்ட அடிமையாகவே ஆக்கி வைத்திருந்தது......
வீட்டு கட்டுபாடுகளில்லிருந்தும், அங்க போகாத, இங்க போகாத,எனும் பெரியவர்களின் அதட்டல்களில் இருந்தும், விடுபட ஆரம்பித்த எங்கள் 13 ஆம் வயதிலேயே, நெருக்கமாக அறிமுகமாகி இருந்தது பெரியகோவில், புறா,மற்றும் கிளிகளை பிடிக்கவே அங்கே செல்ல ஆரம்பித்தோம், பிறகு பரீட்சை நேரங்களில் புத்தகத்துடன் ஆஜராகி உட்பிரகார மண்டபங்களில் வில்வ மரத்து நிழலில்,அந்த அமைதியான சூழலில் சிலர் படிக்க, மற்றவர்கள் தூங்கிகொண்டோ, வில்வமர காய்ந்த கொட்டைகளை வைத்து Cricket ஆடிகொண்டிருபோம், இபோதுள்ள கட்டுபாடுகள் அப்போது இல்லை....
இதற்கு தோதான மதிய நேரங்களில் அங்கே ஆஜராகி இருப்போம், இந்த பக்கம் செங்கலை வைத்து யானையை தேய்த்து குளிப்பட்டி கொண்டிருப்பார் பாகன் ( இவர் என் கல்லூரி தோழனின் தந்தை ) இதை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி ஆனந்தம்,அடுத்தடுத்த வருடங்களில் எங்களுடைய கால் பந்தாட்ட குழு ( Maradona Football Club -MFC ) ஆரம்பித்த நாட்களில் கோவிலின் முன் பக்கத்தில் உள்ள யானை மண்டபத்திற்கு எதிர் பக்கமே எங்கள் கால் பந்தாட்ட பயிற்சி களமானது,
மாலை நேரங்களில் பந்துடன் ஆஜராகி, ஆக்ரோசமாக விளையாடிகொண்டிருபோம், ஒரு முறை என் நண்பன் அடித்த பந்து,சாமி கும்பிட வந்த ஒரு ஐயர் மாமி நெஞ்சில பட்டு " அந்த மாமி நீங்க எல்லாம் மார்கழில போயிருவிங்கடா " என்று திட்டிய அந்த வார்த்தை இன்னும் நினைவுகளின் ஊடே இருந்து கொண்டுதான் இருக்கிறது,என் பதினாறாம் வயதுகளில், நான் சுத்திகிட்டு இருந்த, என்னோட ஆளுன்னு சொல்லிக்கிட்டு அலஞ்ச " சோபனா " ( செக்க செவேல்னு இருப்பா, அவளோட கன்னத்து கற்றை முடியே ஆயிரம் கத சொல்லும், மொத்தத்துல சூப்பர் பிகரு )ஒரு 11 மணி போல குடும்பத்தோட கோவிலுக்கு வந்தா விளையாடி கொண்டிருந்த நானும், அப்பத்தான் முதல் முதலா கோவிலின் கருவறை வரை சென்றேன் ,அவள் ராஜா கோபாலனை தருசிக்க, நான் அவளை தரிசித்து கொண்டிருந்தேன், அவ அப்பா என்ன மொரட்சிக்கிட்டு இருந்தாரு, ஆஹா எத்தனை ரம்மியமான, மனதிலிருந்து நீக்கவே முடியாத நாட்கள் அவை...
பங்குனி மாதம் வந்துட்டாலே நாங்களெல்லாம் பரபரப்பாகிவிடுவோம், ஒரு மாத திருவிழா, தேரோட்டம் என்ன, வெண்ணைதாலி உற்சவம் என்ன, வானவேடிக்கை காட்டும் சூரிய பிறை என்ன, தெப்பம் என்ன, வெட்டும் குதிரை புறப்பாடு என்ன, திருவிழா கடை என்ன, ராட்டினம் என்ன, மரணகிணறு என்ன, வெண்ணை தாலி அன்றைக்கு Free யா நீர் மோரு கடைகிதினு, கடைக்கி, கடை மோரா வாங்கி குடிச்சிபுட்டு, வயித்த புடுங்கி ஆத்து பக்கம் ஓடுறது என்ன,
திருவிழா பாக்க வெயில் தாள வரும் ஐயர் வீட்டு பாவாடை, தாவணி கட்டிய தேவதைகலென்ன, பட்டு புடவைல அம்மன் சிலை மாதிரி செக்க செவேல்னு வரும் ஐயர் வீட்டு மாமிகலென்ன, போச்சி,போச்சி எல்லாமே போச்சி....
இப்போதும் அந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், இந்த பிராமண தேவதைகளின் நடமாட்டம் இல்லாமல் வெறுமை ஆகிவிட்டன....
வேலை நிமிர்த்தமாகவும், தொழில் நிமிர்த்தமாகவும் அவர்கள் பல நாடுகளுக்கும்,பல மாநிலங்களுக்கும் ,வெளி ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டாலும், ராஜகோபாலனையும், மன்னார்குடியையும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அவர்கள் இல்லாத எங்கள் மன்னார்குடி தெய்வீக தன்மையை இழந்து கொண்டிருகிறது என்றே நினைக்கிறேன், அவர்களின் இடபெயர்சி எங்கள் மனதை எதோ செய்கிறது, இந்த பிரிவு வலியை அவர்களும் உணர்ந்தார்களா? தெரியவில்லை.....
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்..........
Dec 16, 2009
வலை பூவின் துர் நாற்றம் , இந்த பிரபல பதிவர்கள்...
இது ஒரு பதிவல்ல,நானும்,என்னை போன்ற எத்தனையோ சாதாரண,பொதுவான "வலைபூ" வாசகனும் ,இந்த வலைபூ ஞானிகளுக்கு ( நேர்ல கெடச்சா கொலவெறியோட பொரடியில அடிச்சி ) சொல்லனும்னு நினைக்கிற விசயங்களையும்,இவிங்க பண்ற அலும்பு,அராஜகத்தையும் மனசுவிட்டு கொட்டி இருக்கிறேன் ( அவுங்க,இவுங்கன்னு மரியாதையா எழுதனும்னுதான் நினைத்தேன் but மனசு வல்ல ).....
இதுல நல்ல பதிவர்களும், துறைசார்ந்த பதிவர்களும் அடங்கமாட்டாங்க....
இந்த நாயமான கோவத்துக்கு 2 நாளைக்கு முன்பு நடந்த முக்கியமான நிகழ்ச்சிதான் காரணம் அது கடைசில.....
அவிங்கள சொல்லி குத்தமில்ல, என்ன செருப்பாலேயே அடிசிக்கணும்,சரி வேல வெட்டி இல்லையே,கிடைக்கிற நேரத்துல debonairblog,FSIblog,indiansex4u, இன்னு போய் காஞ்சிபுரம் சாமியார் லீலைஎல்லாம் பாத்துட்டு குஜாலா இல்லாம, தமிழ் blogs எல்லாம் படிச்சி,அறிவ வளர்த்துக்கிட்டே பொழுது போக்கலாமேனு நம்பி வந்தேன்.....
இங்க வந்துபாத்தாதான் தெரியிது, ஒரு குங்குமம் புக்க முழுசா படிக்கிறதும், ஜெயா TV Newsa ஒரு மணி நேரம் சலிக்காம பாக்குறதும் ,ஒரு முழு சிம்பு படத்த கஸ்ட் பட்டுக்கிட்டேயாட்சும் பாத்து முடிச்சிறதும் இதவிட பெட்டர்னு.....
இதுக்கெல்லாம் காரணம் இந்த பிரபல பதிவர்கள் தான், அப்படி என்னதான் பண்றாங்க,என்னதான் கூத்து அடிக்கிறாங்க, என்ன என்ன வார்த்தை அடிக்கடி Use பண்ணுவாங்க,எல்லா பிரபல பதிவர்களும் அப்படிதானா,இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அவிங்கள பற்றி ஒரு Definition கீழே....
பிரபல பதிவர் ( சிறுகுறிப்பு )
" இந்த பிரபல பதிவர்னு சொல்லியோ,அல்லது உரிமையோட பெயரை சொல்லியோ, இவர்அவிங்கள பாத்து ( பிரபல ) ம்பாரு,அவரு இவிங்கள பாத்து ( பிரபல ) ம்ம்னு மாத்தி,மாத்தி அவிங்ககுள்ளேயே சொல்லிக்கிவாங்க "
அதில்லாம இவிங்க Post போட்ட 1 நிமிசத்துகுல்லேயே,( அத படிச்சி முடிக்கவே 1/2 மணி நேரம் ஆகும் ) அது இரவானாலும் சரி,பகலானாலும் சரி, vote Counter "18 " Vote காட்டும், அடுத்த 1 மணி நேரத்துல " 25 to 28 " Vote காட்டிகிட்டு,பிரபல இடுகை வரிசைக்கு வந்துரும் ( ஏன் என்றால் இவர் பிரபல பதிவர் ),
அடுத்த முக்கியமான விஷயம், பிரபல sorry ( பிரபலமாக்கப்பட்ட),இடுகையின் பின்னுட்டத்தில், ( Me The First ) என்ற வரலாற்று சிறப்புமிக்க வார்த்தை இடம் பெற்றிருக்கும்... அதிக ஓட்டு எண்ணிக்கையை பாத்துட்டு ஆர்வமா பதிவ திறந்தால், அந்த பிரபல பதிவர் Night அடுச்ச சரக்கு ஒத்துக்காம ( வாந்தி ) எடுத்து வைத்திருப்பர் " .........
இப்பவாச்சும் புரியுதா ? நான் எந்த மாதிரி பிரபல பதிவர்களை பத்தி சொல்றேன்னு....
இவிங்க Approx ஒரு 20 to 25 பேர் இருகாங்க
நல்ல,நடுநிலையான, சுவாரஸ்யமா எழுதுற, தரமான,எங்களை போன்ற பொதுவான வாசகர்கள் Vote போடுற " உண்மையிலே பிரபலமான பதிவர்கள்" ஒரு 10 to 15 பேர் இருகாங்க...உதாரணமா,
கேபிள் சங்கர் Sir..
ஜாக்கி சேகர் Sir...
S.முருகன் ( கவிதை 07 )...
ஆமா " தாமிராவ " எங்க ரொம்பநாளா காணோம் ,இது போல நெறைய பேர் இருகாங்க.....
இப்ப டுபாகூர் பார்டிங்கள பத்தி மேல பேசுவோம் ,இவிங்க அடிகடி Use பண்ற Words, இவிங்க Mentality, etc..etc...இதுல சில விஷயங்கள் மேல சொன்ன உண்மையான பிரபலங்கலோடும் ஒத்து போகும் But குழப்பிக்க கூடாது....
இவிங்க பிரபல பதிவாளரா காட்டிக்க என்ன என்ன வார்த்தை Use பண்ணுவாங்கனு பார்போம்....
1.ஆணி புடுங்குவது ( நீங்க எதுவும் எழுதாம ஆணியே புடுங்கிகிட்டு இருந்திருக்கலாம், சுத்தியலாவது எங்க தலையில விழாம இருக்கும் )
2.பெட்டி தட்டுறது ( Software காரனுன்கலாம்,நாங்கெல்லாம் அறிவு ஜீவிகள் எங்க எழுத்தும் அப்படித்தான் இருக்கும்னு மறைமுகமா சொல்லுரான்கலாம் )
3.தங்கமணி .
4.பின்நவீனத்துவம் ( என்ன எளவோ )
5.மொக்கை ( இது அது மொக்கை பதிவுன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க, என்னமோ இதுக்கு முன்னாடி எழுதுனது எல்லாம் உலக இலக்கியத்துல சேர்க்கப்பட்ட மாறியும், இதுக்கு மேல வார்த்த வல்ல )
6.மீள் பதிவு ( No Comments )
ஆரம்பத்துல இந்த வார்த்தை எல்லாம் படிக்க நல்லாத்தான் இருந்திச்சி,இப்பலாம் இந்த வார்த்தைய கேட்டாலே BP எகிறுது அதும் இவிங்க Use பண்ணும்போது.
சரி இவிங்க Mentality எப்பிடி .....
அது Next.............