எனக்கு பதிவு எழுதி எதாவது பெருசா சாதிக்கனும்ன்னு எந்த ஆசையும் இல்ல, எதோ மனசுல பட்டத எழுதுறேன்...என்னோட ஆசைகளையும்,அனுபவங்களையும்,கோவத்தையும் பதிவு பண்ணுறேன்....
சும்மா கண்டத எழுதுறதுக்கு ஒரே ஒரு பதிவாவது அடுத்தவங்களுக்கு பிரயோஜனமா இருக்குற மாதிரி எழுதுவமேன்னு சின்ன ஆசை...
நம்ம தான் வேலை பார்க்கிறோம்/பார்க்காட்டியும் சம்பளம் வந்துரும்,
வேலைக்கு போற அளவுக்கு படிக்கலையே, முன்னேருவதுக்கு எதாவது வழிகிடைக்காத, கொஞ்சமா கைகாசு போட்டு எதாவது தொழில் பண்ணலாமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கிற நம்ம அண்ணன் தம்பிகளோ,உறவினரோ, நண்பர்களோ கண்டிப்பா இருப்பாங்க அவங்களுக்கு உதவுகிற விதமா கொஞ்சமா முதலீடு போட்டு செய்யுற மாதிரி எனக்கு தெரிந்த சில தொழில் பத்தி சொல்லுறேன், இது சம்பந்தமா என்னால நிதி உதவி செய்ய முடியலைனாலும், மற்ற உதவிகள கண்டிப்பா செய்ய தயார இருக்கேன்....சரி மேட்ட்ரருக்கு போவோம்....
சூரத் ன்னு சொன்னாலே புடவைகள் தான் ஞாபகம் வரும், இங்க அதோட விலையும் குறைச்சல் தான், இங்கே இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப படுது, நம்ம ஊருலேர்ந்தும் நேரடியாகவும் ஆட்கள் வந்து கொள்முதல் பண்ணிகொண்டுபோய் விக்கிறாங்க ..
80 ரூபாயில இருந்து 2000 ருபாய் வரையிலான விலைகள்ள புடவைகள் கிடைக்கும், ஒரு புடவைக்கு குறைந்தது 20 ரூபாயில இருந்து புடவையோட தரத்திற்கு தகுந்த மாதிரி 400 ருபாய் வரைக்கும் லாபம் வைத்து நீங்க விற்க முடியும். கொள்முதல் பண்ணுன புடவைகள இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு அனுப்ப லாரி வாடகையும் ஒன்னும் பெருசா இல்ல 150 புடவைகள அனுப்ப 200 ருபாய் ஆகும், ( சென்னைல பழைய வண்ணார பேட்டயிலையும் புடவை கொள்முதல் பண்ணலாம், சூரத் விலைய விட 5 - 10 ரூபாய்கள் தான் கூடுதலா இருக்கும்னு கேள்விபட்டேன் )
அதே மாதிரி ஓரளவு தரமான பேண்ட் & சட்டை பிட்டுகளும் 150 ரூபாயில் இருந்து இருந்து கிடைக்கும் , அப்பறம் சுரிதார் துணிகள்,ஜாக்கெட் பிட்ஸ் , Jeans Pants, Readymade Shirts இது மாதிரி நிறைய ஐட்டங்கள் ஒரு அளவுக்கு ஞாயமான விலைகள்ள வாங்கலாம்....
இதெல்லாம் சரி தான், வாங்கிட்டு போற பொருள, உங்க ஊருங்கள்ள எப்படி வியாபாரம் செய்யுறதுன்னு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிட்டு இதுல எறங்குங்க.....
புடவை, மாதிரி துணி சம்பந்தமான பொருட்களை , உங்க வீட்டுல உள்ள பெண்களை கொண்டு , உங்க வீட்ல வைத்தே கூட விற்கலாம்.... ஒரு நாலைந்து தெருக்கல்ல இந்த மாதிரி கூடுதல் வருவாய் ஈட்ட விரும்புகிற பெண்கள் கிட்ட கொடுத்து அவங்க கொஞ்சம் கூடுதல் லாபம் வைத்து விற்கிற மாதிரி கூட ஏற்பாடு செய்யலாம் , இல்ல உங்க வீட்டு தாழ்வாரத்துல கூட சின்ன கடை மாதிரி கூட செட் பண்ணி மேல சொன்ன மாதிரி வியாபாரம் செய்யலாம்....
உங்க ஊர் நடுத்தர நகரமா இருந்ததுன்னா நீங்களே அங்க உள்ள துணி கடைகள்ல ஆர்டர் பிடித்து சப்ளை பண்ணலாம்....
இதே மாதிரி மும்பைல செம்பூர் பகுதிக்கு,சாயங்கால நேரமா போனிங்கன்ன, அங்க நல்ல,நல்ல குழந்தைகள் உடைகள் வெறும் 50 ரூபாய்க்கு விக்கிறதா பார்க்கலாம், 50 ரூபாய்க்கு விக்கிராங்கன்னா, அவங்க எந்த விலைக்கு கொள்முதல் பண்ணி இருப்பாங்கன்னு பாருங்க, அத நல்ல முறைல பேக்கிங் பண்ணி நம்ம ஊருங்களுக்கு கொண்டுபோய் விற்றோம்னா, குறைந்தது 200 -250 ரூபாய்க்கு கூட போகும்,எல்லாம் புதுசு தான், Secound Hand துணிகள் இல்ல....எல்லாம் பாம்பே தயாரிப்பு...
அதே மாதிரி Leadies,Jents காலணிகள், பெண்களுக்கான Hand Bags எல்லாம் வெறும் 50 -100 ரூபாய்கள் தான், நம்ம ஊருங்கள்ள இத மூணு மடங்கு விலைக்கு விக்க முடியும், அதற்கான தரமும் இருக்கும்....
ஆர்வம் இருந்தா நீங்களே போய், அவங்க எங்கே இருந்து கொள்முதல் பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது இந்த மாதிரி இடங்கள்ல இருந்தாங்கன இன்னும் வசதி....
அதுக்கு அப்பறம், கடவுளோட கருணையும்,உங்களோட விட முயற்சியும் இருந்தா கண்டிப்பா ஒரு நல்ல நிலைக்கு உயர முடியும்.....
மும்பைக்கு தினமும் சென்னையில் இருந்து ரெண்டு,மூணு ரயில் புறப்படுது, வந்துசேர 24 மணி நேரம் ஆகும்....இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளதுக்கான ரயில் கட்டணம் சுமார் 400 ருபாய் ஆகும்,அதே மாதிரி....
சென்னையில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு Navajeen Exspress என்ற ரயில் புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 4 மணிக்கு சூரத் வந்து சேருது ....இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளதுக்கான ரயில் கட்டணம் சுமார் 450 ருபாய் ஆகும்...
வெற்றி பெற வாழ்த்துக்கள் ......
By.....தம்பி........
25 comments:
இந்த இடுகையின் மூலம் பலருக்கு புதிய வழி திறக்கட்டும்... உங்கள் வெளிப்படையான இந்த இடுகைக்கு வாழ்த்துகள்.
நல்ல பதிவு!
சிறப்பான பதிவு.. பலர் பயன்பெறட்டும்..உன்களுக்கு மிகுந்த நன்றிகள்.
நல்ல பதிவு நண்பரே
நல்ல பகிர்வு இதனால் ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தாலும் இந்த பதிவுக்கு வெற்றியே!
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
தேவைப்படுபவர்களுக்கு கண்டிப்பாக உபயோகமான தகவல்கள்...
i like to always give good comments for us...
சூரத்தில் இருந்து வாங்கி வரும் புடவைகளை வீட்டுக்குள் வினியோகிக்காதீர்கள்,என்ன நடக்கும் என்று தெரியும் சொல்லவேண்டாம். :)
நானும் சில முறை அங்கு சென்று பார்த்திருக்கேன்(வியாபாரியாக அல்ல),அருமையான டிசைன்கள் கிடைக்கும்.
Excellent....நல்ல பகிர்வு
//நல்ல பகிர்வு இதனால் ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தாலும் இந்த பதிவுக்கு வெற்றியே!//
ரிப்பீட்டேய்ய்......
நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்
அடுத்த பதிவு என்ன? நீங்க முன்னேற 100 வழிகள்?
தொடர்ந்து எழுதுங்க
இதை பதிவிட சொன்ன நண்பர் சக்திக்கு தான் நன்றி சொல்லணும்
நன்றி சக்தி....
பின்னூட்டம் இட்ட கேபிள் அண்ணா, நண்பர்கள் புலவர்,அன்பு மணி,அருணா,ஞான சேகரன்,சரவண குமார்,தமிம்,வடுவூர் குமார்,கண்ணன், ஆகிய அனைவருக்கும் நன்றி....
சூப்பர்! முதல் முறையா இப்படி ஒரு தொழில் தொடங்க ப்ராக்டிகலான, உபயோகமான பதிவை படிச்சிருக்கேன் !
அருமை !
Thank Kabilan....
very superb.i like ur blog by ramki.asathalram@gmail.com
அவ்வளவு நல்லாவா எழுதுறேன்....
நன்றி ராம்...
good
nalla seithi nanbare.....
surat la enga wholeseal sarees kidikum area sonna usefull la irukum frend
Thanks ma.................
கடலுர் (ம வ) லால்பேட்டை 608303
என்ன சுயதொழிழ் செய்வது
உதவி
கடலுர் (ம வ) லால்பேட்டை 608303
என்ன சுயதொழிழ் செய்வது
உதவி
சூரத்தில் இருந்து வாங்கி வரும் புடவைகளை வீட்டுக்குள் வினியோகிக்காதீர்கள்,என்ன நடக்கும் என்று தெரியும் சொல்லவேண்டாம். surat la enga wholeseal sarees kidikum area sonna usefull la irukum frend
Yenna nadakum?
லாபம் வரும் சரி நஷ்டத்தை எப்படி கையாளுவது அதையும் சொல்லுங்க இல்ல இதுல என்னென்ன மாறி நஷ்டங்கள் வரலாம்
Post a Comment