Mar 15, 2010

தூள் பக்கோடா....

உலக பிரபலங்களைப் பற்றிய நீங்கள் கேள்வி பட்டிராத சில சுவராஸ்யமான விசயங்களை தொகுத்து எழுதி இருக்கிறேன்....

பில் கேட்ஸ்.........
இவர் சிறு குழந்தையாக இருக்கும் போது யாரவது ஒருவர் இவர் படுத்திருக்கும்  தொட்டிலை தொடர்ந்து ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டுமாம், தூங்கிவிட்டார் என்று தொட்டிலை ஆட்டுவதை கொஞ்சம் நிறுத்தினாலும் அழ ஆரம்பித்து விடுவாராம், சில நாட்களில் யாரையுமே எதிர்பார்க்காமல் படுத்தவாக்கில் அங்கும் இங்கும் புரண்டு தன்னுடைய தொட்டிலை தானே ஆட்டிக்கொள்ள பழகிகொண்டுவிட்டாராம், மகனின் இந்த மழலை சாதனையை பார்த்து கொஞ்சம் வளர்ந்தவுடன் அவருக்கு ஓர் ஆடும் மரக்குதிரையை வாங்கிக் கொடுத்தாராம் அவருடைய தாய், அதில் மணிக்கணக்காக உட்கார்ந்து ஆடிக்கொண்டே இருப்பாராம்....பில் கேட்ஸ்.....

இன்று வரை கேட்ஸுக்கு இந்த ஆடும் பழக்கம் உண்டாம்,முக்கியமான பிஸினெஸ் பிரச்சனைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடியபடியே தான்  யோசிப்பாராம், சில சமயம் அசையாத நாற்காலியில் அமர நேர்ந்தாலும் கூட, உடலை மட்டும் முன்னும் பின்னும் அசைத்துக்கொண்டே இருப்பாராம், பில் கேட்ஸ் இடம்பெறும் பல வீடியோக்களில் இந்த காட்சியை தவறாமல் பார்க்க முடியும்.....( ஆதாரம்: என்.சொக்கன் எழுதிய பில் கேட்ஸ் என்ற புத்தகத்திலிருந்து )

அமீர் கான்........
2002 ல் மனைவி ரீனவுடனான 16 வருட திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஒருநாள் விடாமல் ஒரு புல் பாட்டில் பக்கார்டி மது அருந்தினாராம், தான் குழந்தைகளை பார்க்கும் வாரத்தின் ஆறு மணிநேரங்களும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டுமே பக்கார்டிக்கு ஓய்வு தருவாராம், மொடா குடியராக இருந்தாலும் கூட தொடர்ச்சியாக 4  நாட்கள் இவரால் பக்கார்டி மதுவை தொடாமல் இருக்க முடியுமாம்....( ஆதாரம்: சமீபத்தில் வந்த இந்திய டுடே பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இருந்து )

கில் கிரிஸ்ட்.............
இவருக்கு எப்போதும்  இடது கால்  சூவை முதலில் அணிவது தான் ராசியானது என்று நம்புகிறாராம்.....( சமீபத்தைய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான இவருடைய பேட்டியிலிருந்து )

ரத்தன் டாடா..........
டாடா குழுமத்தின் தற்போதைய தலைவரும், உலக பணக்காரர்களில் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒருவரான 75 வயது  ரத்தன் டாடாவுக்கு புகை,மது போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதாம்,இவர்  திருமணம் செய்துகொள்ளவும் இல்லையாம், மும்பையில் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் ஒரு எளிய  வீட்டில் தான் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறாராம் ( கிழக்கு பதிப்பகத்தின் டாடா வரலாறு என்ற புத்தகத்திலிருந்து )
* இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் எவ்வளவு எளிமையா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம கட்டுபாடோட இருக்காரு, நம்ம என்னாடான சம்பளத்துக்கு வேளை பாக்குறப்பவே இந்த ஆட்டம் போடுரமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன் )

ACTN3........
ACTN3 ங்கற இந்த ஜீன் தான் உங்க குழந்தை உசைன் போல்ட் மாதிரி வேகமான தடகள வீரராகவோ,நீண்ட தூர ஓட்ட வீரராகவோ, அதிக சக்தி தேவைப்படுகிற இந்த மாதிரி விளையாட்டை தேர்ந்து எடுக்க வேண்டுமா  இல்லை கிரிகெட் மாதிரியான சாப்ட் விளையாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்கிறதாம்.....இந்த ஜீன் டெஸ்ட் வசதி இப்போதைக்கு சில முக்கிய நகரங்களில் மட்டும் வந்திருக்கிறது, இந்த டெஸ்டுக்கு 2000 ரூபாய் செலவாகுமாம்......

தமிளிஷ் & உலவு........

எனக்கு ஒரு யோசனை தோன்றியது, தமிளிஷ்,தமிழ் மனம் மாதிரியான வலைதொகுப்புகளின் முகப்பு பக்கத்தில் ஒரு Chatting Widow ஏன் இணைக்க கூடாது என்று, பிரபலங்கள் சுட சுட சண்டை போட்டுக்கொள்ள வசதியா இருக்கும் இல்லையா....இந்த விசயத்த பற்றி தமிளிஷ் மற்றும்  உலவு தளங்களுக்கும் மட்டும் மின் அஞ்சல் செய்திருக்கிறேன்.....என்ன ஆகுதுன்னு பாப்போம்......அந்த மின் அஞ்சல் கிழே......


2010/3/10 தம்பி abuthanisa@yahoo.com

மதிப்பிற்குரிய தமிளிஷ் வலைத்தொகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு,

நான் உங்கள் தளத்தின் தீவிர வாசகன்,

ஏன் நீங்கள் தமிழிஷ் தளத்தில் ஒரு CHATTING WINDOW வை அமைக்க கூடாது, அந்தந்த பக்கத்தில் பதிவேற்றப்பட்ட, பதிவுகளை, அதேபக்கத்தில் வைத்து காரசாரமாக விவாதித்துக்கொள்ள வசதியாய் இருக்கும் அல்லவா, அதுமட்டும் இன்றி இன்றைய இளங்கர்கள் CHATTING செய்வதை மிகவும் விரும்புகிறார்கள் அவர்களுடைய CHATTING தாகத்தையும் தீர்த்தது போல இருக்கும் அல்லவா, என் கணிப்புப்படி இந்த ஐடியா உங்கள் தளத்துக்கு மேலும் Traffic Rank ஐ உயர்த்தும் என்று நம்புகிறேன்.....
என் வலைதள முகவரி....http://athigapadiabu.blogspot.com/

நன்றியுடன் ......தம்பி From Surat Gujarat...

From: "Tamilish - Support" Add sender to ContactsTo: "தம்பி" abuthanisa@yahoo.com


அன்புள்ள தம்பி...

உங்கள் கருத்துக்கு நன்றி...சேட்டிங் விண்டோ தனி பக்கமாக திறக்கவேண்டுமா அல்லது முகப்பு பக்கத்திலேயே இருக்கலாமா ? உங்கள் விருப்பம் என்ன ?

அன்புடன்

தமிழிஷ்

From: "abunisa abunisa" Add sender to Contacts
To: "Tamilish - Support"

மதிப்பிற்குரிய தமிளிஷ் வலைத்தொகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு,


முகப்பு பக்கத்தில் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும், மேலும் கீழும் Scroll செய்யும் போது அதற்க்கு தகுந்தார் போல் மேலும்,கீழும் ஏறி இறங்காமல் எப்போதுமே ஒரே இடத்தில காட்சி தரும்வண்ணம் Chatting Window வை வடிவமைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்....ஒருவர் இணைக்க பட்டிருக்கும் அடுத்தவருடைய பதிவை படித்து முடித்ததும் உடனடியாக அந்த பதிவை பற்றி பொதுவில் விமர்சிக்கும்/பாராட்டும் வகையில் இருக்கவேண்டும்....

நன்றியுடன் ......தம்பி From Surat Gujarat...


விசு........
நேத்து ஜீ டிவியில் சுதாங்கன் அவர்கள் நடத்தும் தமிழர் பார்வைன்கிற நிகழ்ச்சிய பார்க்க நேர்ந்தது, விசு விருந்தினரா வந்திருந்தார்....சுதாங்கன் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையாகவும்,வெளிப்படையாகவும் விசு பதில் சொன்னார்......அதிலிருந்து சில துளிகள்......

சில வருடங்களுக்கு முன்பு விசு மிக பெரிய குடிகாரராக இருந்தாராம், பல நேரங்களில் குடித்து விட்டு பிளாட் பாரங்களில் விழுந்து கிடப்பாராம், அவரோட சகோதரர்கள் தான் வந்து தூக்கிக்கொண்டு போவார்களாம், இப்போது கூட கடுமையான மனகஷ்டம் ஏற்படும் போது அறையை 
சாத்திக்கொண்டு அவருடைய  மனைவியின் அனுமதியோடு மது அருந்துவாராம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 சிகரெட் பிடிப்பாராம் இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார், சுதாங்கன் கூட கேட்டார், இப்படி எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக இந்த விசயங்களை ஒப்புக் கொள்கிறீர்களே விசு, உங்கள் தற்போதைய இமேஜ் பதிக்கப்படாதான்னு, விசு சொன்னார் அவங்க தான் என்னை இதனை உயரத்துக்கு தூக்கி விட்டார்கள், இந்த உண்மையை சொன்னதற்காக அவர்கள் என்னை தூக்கி எறிந்தாலும் பரவா இல்லை என்று.......
* அப்பத்தான் நம்ம பதிவுலகத்துல நடக்கிற கூத்த பத்தி  யோசிச்சேன், ஏன் எல்லாருமே நல்லவங்க மாதிரியே வேஷம் போடுறாங்களேன்னு, யாராவது வெளிப்படையா இருக்க ஒரு ஆள காட்ட முடியுமா இங்க.....

ஜான்சி ராணி......
அவள் கணவனான கங்காதர் ராவ் ஒரு அலி... ஜான்சியின் ராஜாவான கங்காதர் ராவின் முதல் மனைவி இறந்து விடவே (அவளுக்கும் குழந்தை இல்லை) கங்காதர் தனக்கு ஒரு பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டாம் பேஷ்வா பாஜிராவின் பரிவாரத்தைச் சேர்ந்த மொரோபாந்த் தம்பேயின் மகளான சபேலிக்கு ஒரு ஆண் வீரனைப் போல் குதிரையேற்றம், வாள் சண்டை என்று சகல வித போர்ப் பயிற்சிகளும் கற்றுத் தரப்படுவதை அறிந்த ராஜா, தனக்குத் துணையாக இருப்பாள் என்று நினைத்து சபேலியை மணந்து கொண்டார். அந்த சபேலி தான் ஜான்சி ராணி.

ராஜா கங்காதர் ராவ், பெண்ணைப் போல் புடவையெல்லாம் அணிந்து கொண்டு அலியாகவே வாழ்ந்தவர். இதற்கு ஆதாரம் கோட்சே எழுதிய, "எனது பயணம்!' என்ற நூல்! கோட்சே என்றால் காந்தியைக் கொன்ற கோட்சே அல்ல; இது வேறு கோட்சே, விஷ்ணு பந்த் கோட்சே; சுருக்கமாக கோட்சே பாய்ஜி.


கோட்சே, 1857ல் நடந்த அந்த சம்பவங்களை நேருக்கு நேர் பார்த்து எழுதியிருக்கிறார்.
செயற்கையான சவுரி முடி வைத்து ஜடை பின்னி, பூ வைத்து, பொட்டிட்டு, பிளவுஸ் மற்றும் புடவையுடன் உப்பரிகையின் மீது வெட்கத்துடனும், நாணத்துடனும் அமரும் ஜான்சி ராஜாவைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாதது நம்முடைய தவறு! என்கிறார் பேராசிரியர்.

இது ஒன்றும் மிகப் பழைய வரலாறு கூட அல்ல... வெறும் 140 ஆண்டுகளுக்கு முந்தி நடந்த ஒரு விஷயத்தையே நாம் தலை கீழாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?

பேராசிரியர் பேசி முடித்த பின் என்னுள் எழுந்த கேள்விகள்:

* தன் கணவன் அலி என்பதால், அவன் இடத் தை தான் எடுத்துக் கொண்டு போரிட்டு மடிந்த ராணி ஜான்சியின் வீரம் எப்படிப்பட்டது?

* தன்னை ஏமாற்றி மணந்து கொண்ட ராஜா வை அவள் ஏன் எதிர்க்க துணியவில்லை?

* ராஜாவைப் பற்றிய விஷயம் தெரிந்திருந்தும், ஒரே ஜாதி என்பதையும், அந்தஸ்தையும் மட்டுமே பார்த்து தன்னை ஒரு அலிக்கு மணம் செய்து வைத்த தன் தந்தையை அவள் ஏன் எதிர்க்கவில்லை?

* பெண்ணீயம் பேசுபவர்களுக்கு இந்த உண்மை சம்பவங்கள் தெரியாதா?
வாரமலர்....அந்துமணியின் பா.கே.ப...14.3.2010.

BY .....................தம்பி.................

Mar 9, 2010

கூடை நிறைய மலர்கள்....ஆனால்.....?

இந்த பதிவுக்கு எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவான்னு தான் தலைப்பு வைக்கனும்னு முடிவு பண்ணி இருந்தேன்......இத எழுத கூடாதுன்னு கூட முடிவு பண்ணி இருந்தேன்.....

நான் தினமும் காலை நேரத்துல வாக்கிங் போகும் போது, தினமும் ஒரு அம்மாவும், அம்மாவோட கையை பிடித்துக்கொண்டு ஒரு எட்டு   வயது மகனும் எனக்கு எதிர் திசையில் நடந்து போவாங்க ....அந்த இருவரையும் கடந்து போகும் போதெல்லாம் என்னை ஒரு  இனம் புரியா சோகமும்,ஆற்றாமையும்  ஆட்கொள்ளும் , வீடு வந்து சேரும் வரை அவர்கள் நினைவாகவே இருக்கும்....என் மனமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும்,அதுஒரு விவரிக்க முடியாத இதயத்தின்  
வலி   இது தினமும் நடக்கும் நிகழ்வு தான்,  அதற்க்கு காரணம் உண்டு ....அந்த பையனுக்கு தானாகவே நடந்து போகிற அளவுக்கு கால்களில் சக்தி இல்லை.....ரெண்டு கால்களிலும் கிளிப் போடப்பட்டிருக்கும், அவனுடைய அம்மா ஒரு பக்க கையை பற்றி இருக்க அந்த பிடிமானத்தில் மெல்ல மெல்ல எட்டுவைத்து நடை பயின்று வரும் அந்த மொட்டு கூட விரியாத மலர்.......அதை பார்க்கும் போதெலாம் கடவுளின் மீது கட்டுக்கடங்கா கோபம் வரும்.......

இன்னைக்கு ஆபீஸ் போறதுக்காக வழக்கம் போல ஆட்டோல வந்துகிட்டு இருந்தேன்,ஆட்டோ நான் தங்கி இருக்கிற ஏரியாவ தாண்டி  மெய்ன் ரோட்டு பக்கம் திரும்பும் போது அவங்க ரெண்டு பேரையும் பாத்தேன்.... வெள்ளை நிற ஸ்கூல் பஸ் வந்து  நிக்கிது அவனோட அம்மா அவன தூக்கி பஸ்சுக்குள்ள ஏத்திவிட ட்ரை பண்றாங்க, போகமாட்டேன்  நைமா,நைமான்னு சொல்லிக்கிட்டு  ரோட்டோட தடுப்பு கட்டையில உட்கார்ந்து கிட்டு  கதறி அழுகுறான் புள்ள....அவனோட முதுகுல புத்தக மூட்டை வேற மாட்டி இருக்கு, அந்த எடையோட அவன தூக்கி பஸ்சுக்குள்ள ஏத்திவிட முடியாம அவங்க அம்மா தினருறாங்க...அப்பவும் முடியல, இயலாமையும்,எனக்கு மட்டும் இப்படி ஒரு பிள்ளையை குடுத்திடியேஆண்டவாங்குற  ஏக்கமும் சேர்ந்து அழுகை முட்டிக்கொண்டு வர கலங்கி போன கண்ணோட சுத்தி முத்தி பார்த்த  அந்த அம்மாவோட முகத்த பாக்கணுமே,ஆண்டாவா  அத எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல,நிமிர்ந்து பஸ்சுக்குள்ள பார்த்தா அதவிட கொடுமை கண்ணுல கருப்பு கண்ணாடியும், கையில வாக்கிங் ஸ்டிக்கோடையும்,காதுல ஹியரிங் எயடோடையும் 
கால்ல கிளிப்போடையும் அந்த பஸ் முழுக்க  எல்லாமே மாற்று திறனுடைய குழந்தைகள்,அதுல இருந்த எல்லா குழந்தைகளுக்கும் பத்து வயசுக்குள்ள தான் இருக்கும், அது ஒரு மாற்றுதிறன் உடயோருக்கான பள்ளியின் பேருந்து,அத பார்த்த எனக்கு   நெஞ்சே  வெடிச்சி போன  மாதிரி ஒரு உணர்வு   குமிறிக்கிட்டு அழுகை
வருது, ஆட்டோகாரர் பார்த்திட கூடாதுன்னு அடக்கி பாக்குறேன் கட்டு படுத்த முடியல, கண்ணுல தண்ணி வழிய ஆரம்பிச்சிட்டு......

ஏண்டா ஆண்டவா, ,உலகத்தில் இந்த மாதிரி எத்தனை பேரை குறையோடு படைத்திருக்கிறாயோ, குழந்தைகள் மலர்களை போன்றவர்கள் அவர்களையாவது உன் திருவிளையாடலில் இருந்து விட்டு வைத்திருக்க கூடாதா, எத்தனையோ தீயவர்களும், கொலைகாரர்களும், கெட்டவர்களும்,கொடூரமானவர்களும்  எந்த குறையும் இல்லாமல் உலகத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க இந்த பிஞ்சி மலர்களை  கூட  குறையோடு படைக்க உனக்கு எப்படி மனம் வந்ததுன்னு, திட்டிக்கொண்டே,  நீ படைத்த விசயங்களை என்னால் மாற்றமுடியாது, அவர்களை மனதளவில் மகிழ்ச்சியாய் வைத்திருக்கவாவது எனக்கு  இன்னும் பொருளாதார வசதியை கொடு, அதற்காக இன்னும் கடுமையாய் உழைப்பவனாய் என்னை மாற்றியருள்ன்னு வேண்டிக்கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தேன்......கனத்த இதயத்துடன்.......

கூடை நிறைய மலர்கள்....
ஒன்றில் கூட இதழ்கள் இல்லை.....
எப்படி நான் சிரிக்க......... 

By .......................தம்பி........Mar 5, 2010

சாரு சாரு..... அது யாரு யாரு......

இன்னைக்கி உங்களாண்ட பேச வந்திருக்க கேர்ரக்ட்டர்  உங்கள் கபாலி ப்ரம் கீச்சான் குப்பம்-சென்னை ....நம்ம ஜனகராஜ் மாதிரி ஒரு ஆளுன்னு வச்சிக்கங்க...... 

அப்பாவி கபாலி கடந்த ரெண்டு வருசமா வலை தொகுப்பெல்லாம்  படிச்சிகிட்டு வர்றாராம் அவருக்கு ரொம்ப நாளாவே  ஒரு டவுட்டு, அத கிளியர் பண்ணிக்கிறதுக்காக எங்கிட்ட வந்திருக்காரு வாங்க என்ன ஆகுதுன்னு பாப்போம்....

கபாலி: இன்னா நைனா, நல்லாக்கீரியா ( நல்ல இருக்கேன் கபாலி சொல்லுங்க என்ன விஷயம் )...

கபாலி:இல்ல நைனா, நானும் ரெண்டு வருசமாவே இந்த ப்ளக்காமே, அல்லா பிரபலமும் எழுதுவாங்களே, பிரியலையா அதாம்பா நம்ம மெரீனா பீச்சாண்ட மணலு கொஞ்சமாவும்,குப்ப மட்டும் நெர்யாவும் ஒரே கலீஜா கெடக்குமே அத்தே மேரி, ஆங் புச்சிட்டேன்,புச்சிட்டேன் அதாம்பா இந்த வலப்பூ ( ஓ அதுவா அது வலப்பூ இல்ல கபாலி வலைபூ )

கபாலி:இன்னமோ ஒன்னு அத்த விடு, அத பட்சிகின்னு வர்ரம்பா, இன்னா மேரி எழுதுறாங்க தெர்மா..... ஹா த்தூ ( சரி நல்ல விசயம்தானே அதுக்காக, எதுக்கு கபாலி இப்புடி காறி துப்புறீங்க )

கபாலி:அத்து ஒன்னில்லப்பா 420 பீடா போட்டனா அத்தான் துப்புனேன், நீ இன்னா நென்ச்சே  (  ஒண்ணுமில்ல நீங்க சொல்லுங்க )

கபாலி: இத்துல இன்னான்னா முக்காவாசி பிரபலங்க  கம்முன்னு தான் இருக்காங்க நைனா, கொஞ்சகாண்டு பேரு மட்டும்  சதா....... சாரு,சாருன்னு எத்த பத்தியோ அடிக்கொருதபா எழுதிகினே இருக்காங்கப்பா, ஒர்த்தன் திட்றான், ஒர்த்தன் புகல்றான், அத்த பட்சாலே ஒரே மெர்சலாகுதுபா.....அத்து இன்னா சாரு நைனா,அத்த குட்சா ஒடம்புக்கு நல்லதா நைனா....( ஒ அதுவா, அது நீ நினைக்கிற மாதிரி கரும்புச்சாறு  மாதிரியெல்லாம் இல்ல கபாலி  அது ஒருத்தரோட பேரு, அது யாருன்னா  )

கபாலி: நிர்த்து,நிர்த்து அத்தான், அத்து ஒரு ஆளோட பேருன்னு சொல்லிகினியே, அப்பாலையும் கண்டுபுடிக்க முடியாதபடிக்கி நான் இன்னா அவ்ளோ முட்டாளாவக்கிறேன்......( சரி நீயே சொல்லு கபாலி )

கபாலி: இந்த திருச்சியாண்ட ஒரு அம்மா மேயரா இர்ந்தித்சே அத்தா ( அவங்க சாருலதா தொண்டைமான் அவங்க இல்ல )

கபாலி:பின்ன நம்ம கமலு சாரோட அண்ணாத்த ஒன்னு இருந்திச்சே, எப்பங்கட்டியும் பெர்சு,இல்ல ஐயிரு வேஷம் கட்டுமே அத்தா ( அவரு சாருஹாசன் அவரும் இல்ல )

கபாலி: அப்ப்ங்காட்டி நீயே சொல்லு நைனா....( அவர் ஒரு எழுத்தாளர் அவரோட பேரு, சாருநிவேதிதா )

கபாலி:  பொம்பள புள்ளயா எழுதுது ( இல்ல கபாலி அது அவரோட புனை பெயர்ன்னு நினைக்கிறேன் )

கபாலி: நல்லா எழுதுவாரா, அத்துல எதுங்காட்டியும் நீ பட்சிருக்கியா ? (  அவர தெரியும் But  அவர் எழுதுனத அவ்வளவா படிச்சதில்ல )

கபாலி:  ஆளு எப்டி சோக்கா இருப்பாரா ? ( நான் நேர்ல பார்த்ததில்ல, ஆமா கபாலி நீ விஜய் டிவியில வர்ற நீயா நானா பார்க்கிற பழக்கம் உண்டா ? )

கபாலி:  இன்னாப்பா இப்டி கேட்டுட்ட, நம்ம கோபிநாத் தம்பி நடத்துமே, சன்டே சன்டே அத்தான, இன்னா சோக்கான புரோகிராமு தெர்யுமுள்ள, அத்த பாக்காங்காட்டி நமக்கு சன்டேல தூக்கமே வராதுபா, இப்ப அத்த பத்தி ஏன் கேக்குற ? ( இல்ல அந்த நிகழ்ச்சி  தீபாவளி மாதிரியான விசேஷ நாட்கள்ல நடக்கிறப்ப, இந்த  சாரு நிவேதிதா அடிக்கடி சிறப்பு விருந்தினரா கலந்துக்குவாரு அதான் கேட்டேன் )

கபாலி:  இன்னா சொல்ற நீ , கொஞ்சம் ஏறு நெத்தியா, கொஞ்சம் மொத்தமான மீச வச்சிகினு அவ்ரா ( அவரே தான் )

கபாலி:  அவ்ரா, இன்னாமா பேசுவாரு, இன்னா ஒன்னு நம்ல மேரி ஆளுக்கு கொஞ்சம் பிரியாது, ஏம்பா அவ்ருக்கு ஒரு நாப்பத்தஞ்சி, அம்பது வயசு இருக்காது ? ( இருக்கும், ஆமா கபாலி நீ ஏன் அவரோட வயச பத்தி கேட்கிற )

கபாலி:  மேட்ருகீதுப்பா, என்னாங்கடா இத்து. ( என்ன விசயம்னு சொன்னா எனக்கும் புரியுமில்லையா )

கபாலி:  இல்ல நைனா அவ்ர பத்தி கிண்டல் பண்ணி எழுதிகினுகீரானுவளே, அத்ல பாதி பேருக்கு, இவ்ரோட வயசுல பாதி தாம்பா இருக்கும்- " கபாலி சிரிக்கிறார்" ( ஏன் கபாலி சிரிக்கிற , கிண்டல் பண்ணி எழுதுவதற்கும், வயசுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, இது வலையுலகம் இங்க எலோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு )

கபாலி:   நல்லா சொன்னப்போ......எங்க மூத்த அண்ணாத்த ரமேசாண்ட நான் சண்ட போடும் போதுல்லாம் எங்க ஆயா சொல்லும் " டேய் கேப்மாரி அவன் திண்னைய புடுட்சிகினு நடக்கிறப்ப நீ அவ்னோட குண்ணைய புட்சிகினு நடந்தவன்டான்னு "சொல்லும் அண்ணாத்த, நீ சொல்றது  அந்த மேரில்ல இருக்கு. ( நீ என்னா சொல்லவர்றேன்னு புரியல கபாலி, திண்ணை புரியிது அதென்ன கு..... )

கபாலி:  பிரியலையா, அப்ப அத்த உட்டுரு ( இல்ல கபாலி நீ சொல்லியே ஆகணும் )

கபாலி:  இல்லபா இம்மாம் படா ,கோபி நாத்து தம்பியே அவ்ர மதிச்சி இட்டாந்து நீயா நானால பேச சொல்லி சொல்லுங்கோசரம், தம்மா துண்டு பிஸ்கோத்து பசங்கல்லாம் அவ்ர கலாய்க்கிரானுன்களே அத்த சொல்லிகினுகிறேம்பா, அவருக்கு சரக்கு இல்லைனா கோபி நாத்து தம்பி இட்டருமா நீயே சொல்லுபா...( அதெல்லாம் சரி தான் கபாலி, சில நேரம் சின்ன பசங்க கூட கிண்டல் பண்ணுற அளவுக்கு அவர் நடந்துக்கிறார் )

கபாலி:  அப்டி இன்னா பண்ணிருக்காரு கொஞ்சம் நாம கையாண்டையும் சொல்லேன் (  இப்ப நம்ம நித்யானந்தா சாமி விசயத்தையே எடுத்துக்க, இந்த ரஞ்சிதா பிரச்சனையில சிக்குற வரைக்கும் அவர இந்த சாரு தலையில தூக்கி வச்சி கொண்டாடுனாரு, பிரச்சன வெளியில வந்ததுக்கு அப்பறம் அவன் ஒரு துரோகி, பாவின்னு அவரோட வலைபக்கதுல எழுதுறாரு, இப்படி பல்டி அடிக்கலாமா நீயே சொல்லு அதனாலதான் அவர கிழி கிழின்னு கிழிக்கிரானுங்க )

கபாலி:  இது இன்னாபா ஞாயம், முன்ன சாமிய நல்லவருன்னு நென்ட்சிகினு இருந்தாரு, இப்ப சாமி ஒரு டுபாக்கூருன்னு தெரிஞ்சதுக்கப்பால திட்டறாரு இத்துல இன்னா தப்புக்கீது....( அப்படியில்ல கபாலி, அந்த சாமியார  நம்புறதும், நம்பாததும் அவரோட தனிப்பட்ட  விஷயம் தான் அத யாரும் குறை சொல்லல , ஏன் அந்த சாமியாரோட புகழ்பாடி , அவரோட  நம்பிக்கைய  அவரோட வாசகர்களுக்கும் எற்படுதணும், இது ஒரு விதத்துல அந்த போலி சாமியாருக்கு ஆள் புடிச்சி விடுற வேலை மாதிரிதானே இது )

கபாலி: நீ சொல்றதும் சர்தாம்பா, இத்த கூட  விடு தப்பு பண்ணிகினாரு ஏத்துகிறேன் அத்தால அவர கலாய்க்கிரானுங்க சர்தான், அப்போலேந்தே எங்க ஆயாவோட ,ஆயா காலத்துலேர்ந்தே  புச்சா எழ்த வர்ரவன்கூட அவ்ர கலாய்ச்சி  எழுதுரானுன்களே அத்து இன்னாத்துக்கு.....( ஒ அதுவா கபாலி, இந்த வலை உலகத்து அரசியல் உனக்கு புரியாது, இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ,வயசோ தகுதியோ இல்லாட்டியும் கூட அவர மாதிரி கிள்ளு கீரை ஆளுங்கள எல்லாம் திட்டி, கிண்டல் பண்ணி பதிவு போட்டாதான், இங்க பொழப்ப ஓட்ட முடியும், அப்பத்தான் நீ பிரபல பதிவர் ஆகலாம், நெறைய ஓட்டும் விழும்  நெறைய பாலோயர்ஸ் வருவாங்க, கூடவே மனசுக்குள்ள பெரிரிரிரிரிய்ய  எழுத்தாளர்ங்கிர நெனப்பும் வரும், இதெல்லாம் இருந்தாதான் வலைப்பதிவர்கள் கூட்டதுக்குகூட உன்னையும் ஒரு எழுத்தாளர மதிச்சி கூப்பிடுவாங்கன்ன பார்த்துக்கயேன், இல்லைனா தேமேன்னு நீ பாட்டுக்கு எழுதிகிட்டே இருக்க வேண்டியது தான், உன்ன ஒரு புழுவா கூட மதிக்க மாட்டங்க இந்த பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொல்லி கூட்டம் போடுரவனுங்க புரியுதா )

கபாலி:   ஒ இப்டி ஓன்னுகீதா, சரி பிரபழ பதிவர் மேரி ஆனா இன்னா பெனிபிட்டு, துட்டு எதும் வருமா ? ( அது பிரபழம் இல்ல பிரபலம் )

கபாலி:  அத்த உடுப்பா, நான் இன்னா கேட்டுகினுகீரன், நீ இன்னா சொல்லிகினுக்கீர மேட்ருக்கு வா, துட்டு வருமா வராத  ? ( அட நீ வேற கபாலி, துட்டெல்லாம் வராது, கேபிள் அண்ணா மாதிரி நிறைய ஹிட் ரேட் உள்ளவங்களுக்கு, ஆன்லைன் விளம்பரத்துலேர்ந்து நிறைய பணமெல்லாம் இல்ல ஐநூறோ, ஆயிரமோ கிடைக்கும் அவ்வளவுதான், ப்ளாக் எழுதுறத ஹாபியா வச்சிருக்கவங்களுக்கு பிரச்சன இல்ல, இருந்தாலும் நேர விரயம் தான், எப்பவுமே அதுலயே கவனத்த செலுத்துரவங்களுக்கு, சோறு போடுற வேலையிலையும் கவனம் போய், கடசில உண்டக்கட்டி வாங்கி சாப்புடுகிற நெலம தான்  வரும் )

கபாலி:  இத்துல இம்மாம் விஷயம் இருக்கா, ஆமா அண்ணாத்த  உன்னாண்ட ஒன்னு கேக்கணுமே ( கேளு கபாலி )

கபாலி : எப்பவுமே ரண்டு பக்கமும் சப்போர்ட்குடுத்து பேசிகின்னுகீறியே, நீ எப்டி...ஒனக்கு யாராண்டையும் காண்டு இல்லையா ?( கபாலி நான் வந்து வேற அளுகிட்ட பாடம் படிச்சவன், அவர் எங்களுக்கெல்லாம்  எப்டி படிக்கணும்,எழுதணும்,ரசிக்கணும், குறிப்பா நாடு நிலையோட எப்படி நடந்துக்கணும்  நல்லா சொல்லி குடுத்திருக்காரு, எங்க பாஸ் அவரு வேற மாதிரி கபாலி )

கபாலி:   அவரு யாருப்பா அம்மம் பெரிய பாஸு ஒங்க பாஸு ( அண்ணன் கபாலி அண்ணன், எனக்கு அண்ணன்னா, எழுதுற எல்லாருக்குமே அவர் தான் அண்ணன், நீயே கண்டு புடிச்சிக்கோ )

கபாலி: ஒ அவ்ரா, நம்ம தலிவரு, இன்னும் கொஞ்ச நாள் உசுரோட இருந்திருக்கலாம்பா , இன்னா பண்ண நாமா குட்துவச்சது அவ்ளோதான்......சரி அண்ணாதே அப்பால வரன்..

இம்மா நேரம் பொறுமையா ப்ச்சதுக்கு,  நன்றி நைனா...
அன்புடன்.....
கபாலி-கீச்சான் குப்பம்,சென்னை.....400 026 .

By.......தம்பி.......................


Mar 4, 2010

தப்பு பண்ணுனாலும் சூதானமா பண்ணனும் ராசா....

தப்பு பண்ணுனாலும் சூதானமா பண்ணனும் ராசா....என்ன போ, ஊருக்கே அறிவுரை சொல்லுற ஆளு நீ இப்புடி சின்ன புள்ளதனமா மாட்டிகிட்டியே....நித்யானந்தம்....

சிறியார் இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க....அத்த நீ கன்பார்ம் பண்ணிட்டியே ராசா, உண்மையிலேயே ஒனக்கு வயசு பத்தாதுன்னு நிருபிட்சிபுட்டியே கண்ணு....இப்பெல்லாம் டவுசருலேயே கேமரா வக்கிறாங்க ஒன்னுக்கு போறதுக்கு கூட ரொம்ப யோசிக்க வேண்டி கடக்கு....நீ என்னாடான்னா, , ஒரு சூப்பரு பிகர உசார் பண்ணிருக்க  கொஞ்சம் கேர்புல்லா  இருந்திருக்கவேனாமா,வெளிநாட்டுகெல்லாம் போயி படா,படா கமபனி ஆளுங்களுக்கு எல்லாம், ஆன்மீகத்த பத்தி படாம் எடுத்தியே ராசா, அவங்க கிட்ட லேட்டஸ்ட்  டெக்நாலஜிய பத்தி கொஞ்சம் கேட்டு தெரிஞ்சி வச்சிருக்க வேணாமோ என்ன புள்ள நீ ஒன்னோட சிஷ்ய புள்ளைன்னு சொல்லிக்கவே வெக்கமா,வெக்கமா இருக்கு....

சரி ஒனக்கு சொந்த அறிவு தான் இல்ல, ஒன்னோட பீல்டுலையே இருக்க சீனியர்களுகிட்டயாச்சும் அட்வைஸ் கேட்ருக்கலமோ இல்லையோ, அதையும் செய்யல, ஒன்னமாறியே கேப்மாரிதனமெல்லாம் செஞ்சிபுட்டு இத்தன வருசமா, இமேஜ மெய்ண்டைன் பண்ணிக்கிட்டு எத்தன பேரு இருக்காங்க, நீயும் தான் இருக்கியே, அவங்கெல்லாம் அடிக்காத லூட்டியவா நீ அடிச்சிபுட்ட, பக்கத்துலதான் நம்ம சங்கராச்சாரி இருக்காரு அவருகிட்ட கேட்டுருக்கலாம், அதவிடு Atleast ஒரு STD போட்டு நம்ம சாய் பாபாகிட்டயாச்சும் கேட்டிருக்கலாம் அதெல்லாம் விட்டுபுட்டு இப்புடி அப்புராணியா மாட்டிகிட்டயே மன்மத ராசா, நம்ம இளைஞர் வர்கத்தையே அசிங்க படுதிட்டியே பங்காளி....இதுக்கு தான் எதையும் செய்யிறதுக்கு முன்னாடி மூத்தவன்களோட அட்வைச கேட்டுக்கணும்னு நம்ம மூதாதையர்  சொல்லி வச்சிருக்காங்க, அதையும் நீ கேர் பன்னால,ஒன்ன நெனச்சா கோவம் தான் வருது...

சரி அவ புருஷன் மில்டரியில வேற இருக்கானே அவனுக்கு இன்னுமா  இந்த விஷயம் தெரியாம  இருந்திருக்கும், அவன் வந்து ஒன்னோட லுல்லாவுலையே சுடுறதுக்கு முன்னாடி, எங்கயாச்சும் அமெரிக்கவுலையோ, ஆப்ரிக்கவுலையோ போய் ஒளிஞ்சிக்க, முடியலையா Atleast ஒரு புல்லெட் ப்ரூப் ஜட்டியவாச்சும் வாங்கி மாட்டிக்கிற வழிய பாரு....

சரி அது என்ன ராசா எதோ Tablet எல்லாம் போடுறியே, வயாகராவா, அதுக்குள்லேயேவா வீக்கா போய்ட்ட, நல்ல கறு,கறுன்னு எரும கன்னுக்குட்டி மாதிரி தெம்பா தான இருக்க, ஆமா தெனமும் இதே வேலையா இருந்த யாரு தான் வீக்காக மாட்டா, சரி ஒரு வேலை இளிச்சவாய் தனமா ஜெயிலுக்கு,கியிளுக்கு போற சூழ்நிலை வந்திச்சின, ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டு, மறக்காம நம்ம சிவராஜ் சித்த வயித்தியர போய் பாத்துரு.....

ஒரே நாள்ல ஒன்னோட கோமனத்த டார்,டாரா கிளிட்சிபுட்டான்களே பங்காளி அந்த டிவி காரங்க,  ஒனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன,ஐயா முன்னாடி அஜித் மாதிரி உதார்,கிதார்  உட்டியா இல்ல,அவைங்க டிவிக்கு புரோகிராமு, கிரோகிராமு பண்ண மாட்டேன்னு அடம் புடிட்சியா  இப்பவாச்சும் உண்மைய சொல்லு,

நீ சொல்ல மாட்ட , அத விடு  இந்த பிரச்சனயிலேர்ந்து எஸ்கேப் ஆகா ஒனக்கு ஒரு அட்வைஸ் குடுக்குறேன் கேட்டுக்க,எதாவது பெரிய தலைக்கு நம்ம ரஞ்சி பொண்ணு மாதிரி ரெண்டு வெயிட் பார்டியா பார்த்து ரூட் போட்டுகுடுத்து தப்பிக்க பாரு, உன்கிட்ட தான் இந்த மாதிரி நெறைய குஜால்ஸ் இருக்கும் போல தெரியுதே, அதவிட்டுட்டு நம்ம பிரேமானந்தா மாதிரி கேன தனமா உள்ள, கிள்ள போயிராத  அம்புட்டுதான் சொல்லுவேன்....சூதானமா நடந்துக்க.....

கடைசி,கடைசியா உன்கிட்ட ஒரே ஒரு  ரெக்வேஸ்ட்டு, உள்ள போறமாதிரி ஒரு சுச்சிவேசன் வந்துட்ட நம்மள மறந்துறாத ராசா....பெருசா ஒன்னும் கேக்கமாட்டேன், உன்னோட அடுத்த வாரிசா என்னைய அறிவிச்சி,  சின்னவர் போஸ்ட்ல மட்டும் 
உக்காரவட்சிட்டு போய்டு ராசா ஒன்னக்கு புண்ணியமா போகும், எனக்கும் உன்னைய மாதிரியே ஆன்மீக தொண்டு ஆட்டனும்னு, சீ ஆற்றனும்னு ஆச, ஆசையா இருக்கு.........

இத படிச்சி ரொம்ப டயர்ட் ஆகி இருப்பீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க ஒரு சோக்கு....

If Gay Relationship Recognises in India....
The Tailor will Ask You, Where Should i Fix the Zip in your Pant Sir,Front or Back.?
அன்புடன் சப லிஸ்ட்    சுப்புணி ...                                                                                                                                                                         

( பி.கு ) தம்பிக்கு ஸ்பிலிட் பர்சனாலிட்டியாம், டாக்டர் சொல்லி இருக்காரு, இனிமே மேட்டருக்கு தகுந்த மாதிரி ஒரு ஒரு கேரக்டரா வந்து Current Affaires அ அலசி காயப்போட ஐடியா பண்ணி வச்சிருக்கான்...நீங்க தான் கேர்புள்லா இருந்துக்கனும்...

By ..........................தம்பி....


Mar 3, 2010

கதவை திற ரஞ்சிதா வரட்டும்.....நாளை நீயும் வா...


....நித்யானந்த நமக....
கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு மார்வாடி வீட்டு இளம் பெண் துறவறம் ஏற்று கொண்ட சம்பவத்தை படித்த போதே இதைபற்றி எழுதலாம் என்று நினைதுக்கொண்டிருந்தேன், அதை எழுதுவதற்கான  சந்தர்ப்பத்தை நம் அருள்மிகு சாமியார் மிஸ்டர் நித்யானந்தர் எனக்கு அருள்கூர்ந்து இன்று வழங்கி இருக்கிறார்.....அவர் நாமம் வாழ்க......

இப்போதைய நவீன உலகத்தில்,பிரம்மச்சரியமும், துறவறம்,கன்னியாஸ்திரி வாழ்க்கையும்  சாத்தியமா ? என்னை பொறுத்தவரை  முடியாது என்றே தோன்றுகிறது....ஆபாசமும், ஆடம்பரமும், அதை  நம் படுக்கை அறை வரை கொண்டுசேர்க்கும் வூடகங்களும்  மலிந்துவிட்ட இந்த அல்ட்ரா மாடர்ன் உலகத்தில் அவர் பிரம்ம ரிசியாகவே இருந்தாலும் தடுமாறித்தான் போவார்.....

என் பள்ளி பருவ நாட்களில், எங்கள் ஊரில்  அமைந்திருந்த கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியைப் பற்றி அரசல் புரசலாக வெளிவரும் சில செய்திகள் கிளுகிளுப்பை அளித்தாலும், மனம் நம்ப மறுத்தது, மறுத்தது என்பதை விட, என்னை  மறுக்கும் படி மாற்றி வைத்திருந்தது நான் படித்த பள்ளி, இன்னொரு சம்பவம் என் கல்லூரி காலத்தில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, அதில் மிக ஆதிக்க சக்தியாக இருந்த ஒருவருடைய உறவினரின் திருமணதிற்கு எங்களின் தொகுதியின் சார்பாக கூட்டம் காட்டும் நோக்கத்தில் குவாட்ட்ரரும், கோழி பிரியாணியும் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மந்தைகளில் நானும் ஒருவனாக சென்றிருந்தேன், அப்போது  ஒரு வெள்ளை நிற வேனில் இரண்டு வெள்ளைக்கார பெண்களின் தோள்மீது கைகளை போட்டுகொண்டு 7,8 அழகிகள் புடைசூழ பள பளக்கும் காவி ஆடையில் வந்து இறங்கினார் நம் அருள் மிகு சுருட்டை முடி செந்தில் " பிரேமானந்தா" அவர்கள், அவரிடம் அந்த முக்கிய புள்ளிகள் காட்டிய பணிவென்ன,பக்தி என்ன, அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும்.....

இதெல்லாம் சில உதாரணங்களே, இந்து மதம் சொன்ன பிரம்மச்சரியமும்,கிருஸ்துவ மதம் சொன்ன கன்னியாஸ்திரி வாழ்கையும்,ஜைன மதம் சொன்ன துறவறமும் புனிதமாகவும்,பின்பற்ற எளிதாகவும் தான்  இருந்தன, அவை சில நல்ல நோக்கங்களுக்காகதான் சொல்லப்பட்டிருந்தன, இவைகளை பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ்ந்து அதன் மூலம் மற்றவர்களையும் நல்வழி படுத்தியவர்களுக்கு ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம், இந்த உதாரணங்கள் எல்லாம் காஞ்சி பெரியவரோடும்,தன்முன் நிர்வாணமாய் நின்ற பெண்ணையே அன்னையாக பார்த்த விவேகானந்தரோடும்,அன்னை தெரசாவோடும் முடிந்து விட்டதாகவே எனக்கு படுகிறது...

இன்னும் சொல்லப்போனால் கடந்த 1970 பதுகளோடு, அதன் பிறகே இதன் புனிதம் கெட ஆரம்பித்தது, இயற்க்கை தந்த காமத்தையும் காதலையும், அடக்கி அதன் மூலம் ஆன்மீகத்தை தேட மிக மனவலிமை தேவை, அது மேற்சொன்னவர்களிடம் இருந்தது, அதற்க்கு மிக முக்கியகாரணம் அவர்களின் புனிதத்தை கலைப்பதற்கான எந்த வித புறக்காரணிகளும் அப்போது இல்லை,

இப்போது அப்படியா, நமீதாவின் தொப்புளைகாட்டியே குழந்தைக்கு சோறுட்டும் அம்மாக்களும் இருக்கிறார்கள், எல்லாம் நாகரீகத்தின்,விஞ்ஞான வளர்ச்சியின்  கைங்கர்யம்,ஒரு குழந்தையே இப்படி இருக்கும் போது, ஒரே ஒரு தவறான மிஸ்டு காலால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிப்போய்விடும் இந்த கால கட்டத்தில் ஒரு பருவ வயது ஆணோ,பெண்ணோ, இந்த நாகரீகங்களுக்கு எல்லாம் அடிமையாகாமல், மனதை அடக்கி வெற்றி காண்பதெல்லாம் இயலாத காரியமே.........
அவனே உண்மையான பக்தியோடு, அதில் ஈடு பட்டாலும், அவன் விரும்பாத போதும் அவன், சிலரின்  அரசியல்,பணம் பண்ணுதல் போன்ற குறுக்கு வழி காரணங்களுக்காக புனிதனாக சித்தரிக்கப் பாட்டு அவனே கனவிலும் நினைத்துப் பார்த்திடாத உயரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறான் , இதன் மூலம் பெரும் இன்பங்களை   அனுபவிக்க ஆரம்பிக்கும் அவன் தடம் மாறிப் போவது என்பது தடுக்க முடியாததே.....போதாக்குறைக்கு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கும் உயர் வர்க்கமும், பொருளாதார வாழ்க்கை போராட்டத்தில் போட்டி போட்டு ஓடி மனச்சோர்வு அடையும் இளவர்கமும், இவரின் மூலமாகவாவது உயர்வு கிடைக்காத என ஏங்கி தவிக்கும் ஏழை வர்க்கமும் போட்டி போட்டு கொண்டு அவனின் மடிமீது தானாகவே என்று விழும்போது,அவன் ஆண்மை இல்லாதவனாகவே இருந்தாலும் சபலப்படுவது இயல்புதான்....இதைதான் இந்த நடிகையும் செய்திருக்கிறாள்....இது போன்று  எத்தனையோ சம்பவங்களையும், சாமியார்களையும் பற்றி கேள்வி பட்ட போதும், நாம் திருந்துவதாய் இல்லை, இந்த நித்யானந்தா பரபரப்பு இன்னும் ஒரு மாதமோ, சில நாட்களோ,நாளை மீண்டும் ஒரு சாமியார் வருவார் இதைப்போலவே உங்களை ரட்சிக்க....

மதங்கள் சொன்ன வழிகளில் தவறில்லை, அதை கடைபிடிப்பதற்க்கான  புற சூழ்நிலை இப்போது இல்லை, இனிமேலும் இப்படி கடவுளின் இடைத்  தரகர்களாக தங்களை காட்டிக்கொண்டு உங்களுக்கு அமைதியையும்,சாந்தியையும் வழங்குவதாக கூறிக்கொண்டு எவனும் எந்த மதத்திலிருந்து வந்தாலும்,  நம்பி மோசம் போகாதீர்கள்.......கடவுளை மட்டும் நம்புங்கள், இல்லையா நாத்திகனாக கூட இரு ......மீறினால்

நாளை  உங்கள் மானமும், சன் செய்தி கப்பலில் ஏறுவது  உறுதி.....அந்த வீடியோவை நானும்  ரசிக்க தயாராய் தான் இருக்கிறேன்......

By.................தம்பி......