Jan 28, 2010

ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....

மதுவால் தினம், தினம் என் மனதுக்குள்ளே நடக்கும் போராட்டத்தை ஞாய படுத்தி என் மனம் எனக்கே சொல்லும் சமாதானத்தை இங்கே இறக்கி வைக்கிறேன்.....

நானொரு குடிகாரன், இரவினில் மட்டும்,
இந்த நொடி கூட இந்த மது அரக்கனை விட்டு வென்று, வெளியேற முடியும்.....
நான் அதை தோற்கடிக்க விரும்ப வில்லை...

ஏன் ?

சில நேரங்களில், என் எண்ணங்களை, தீய சக்திகளை எதிர்த்து நான்

செய்ய விரும்பும் புரட்சியை "சேகுவாராவாக"  நின்று வழி நடத்துகிறது......

( மனதுக்குலேயாவது )

நிகழ்வில் நடக்காத என் கனவுகளை, ( இந்த உலகத்திலிருந்து )

தீமையையும்,வறுமையையும், வன்முறையையும்,தீண்டாமையையும் .....

அழிக்க விரும்பும் என் போராட்டத்தில்  என் " தளபதியாய்"

நின்று முன்னேறி  செல்கிறது ......

நானும் அதன் பின்னே நின்று, வெல்ல விரும்பிய அந்த போரில்,

ஆக்ரோசமாய் மோதி அழிக்கிறேன், ஜெய்க்கிறேன்....

( மனதுக்குலேயாவது )

என் மனதிடம் தோற்றோடும்  இவை, நாளை மீண்டும் நிகழ்வாய் வந்து இந்த

உலகத்தை மிரட்டத்தான் செய்யும் என்று தெரிந்தும் மோதுகிறேன்,

போதை தெளியும் வரை............

ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....பகல் வரும் வரை.....ஏமாற்றிய என் காதலியின்...., காதல் என்மீது எறியும் நெருப்பு கக்கும் ஈட்டிகளை,

இந்த மது கேடயத்தை கொண்டு தான் தடுத்துகொண்டிருக்கிறேன்,

இல்லையேல் என்றோ தற்கொலையாகி இருப்பேன்.......

இப்போதெல்லாம்,

அவள் நினைவுகள், என் தனிமை மீது போர்தொடுக்கும் போதும் நானே வெல்கிறேன்

என் இதயத்தில் பாய்ந்த அவளின் பார்வை அம்புகளை, எந்த குருதியும், வலியும்

இல்லாமல் பிடுங்கி எறிகிறேன்......

 என் மீது, காதல் வாளை வீசி....என் கா " தலை " கொய்து போட்டாள்,

முண்டமான போதும் எழுந்து நிற்கின்றேன்.....

விரும்பிய போது விழி கொண்டும், வெறுத்த போது வார்த்தை கொண்டும்

தாக்கினாள்,இந்த இரு பக்க தாக்குதலை எப்படி சமாளிக்க.....

அதனால் தான் இந்த தற்காப்பு போரை விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்.

 ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....பகல் வரும் வரை.....

Jan 25, 2010

கட்சாவா, பக்காவா....

குஜராத்தோட பொருளாதார வளர்ச்சி பத்தி ஒங்களுக்கு தெரியும், தொழில் துறைல முன்னேறிய மாநிலம், அதோட GDP பத்தி பத்திரிகைல வருகிற செய்தியெல்லாம் உண்மையா இருந்தாலும்,( During the 10th five-year plan (2002-07), the state's gross state domestic product (GSDP) posted a growth of 10.6%, well ahead of the county's overall growth of 7.7%. It is also much higher than the growth rate of other 'developed' states. )இந்த மாநிலத்தோட உண்மையான GDP அத விட அதிகமாத்தான் இருக்கும், எப்படின்னா இங்க அந்த அளவுக்கு கருப்பு பணம் விளையாடுது, நடக்குற ஒவ்வொரு வியாபார நடவடிக்கைளையும் கிட்ட தட்ட 40% கருப்பு பணம் மூலமா தான் நடக்குது....அது அரசாங்கத்துக்கு தெரிஞ்சிருந்தாலும், இதுக்கு எதிரா பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்க படுவதில்லை....இது நமக்கு தேவை இல்லை, இதுல உள்ள சில சுவராஸ்யமான விசயங்கள மட்டும் பார்போம்,

இங்க நீங்க எந்த பொருள வாங்குனாலும் கடைகாரர் மொதல்ல உங்ககிட்ட கேக்குற கேள்வி , கட்சாவா, பக்காவா ன்னு தான், கட்சான்னா பில்லு தரமாட்டாங்க( ப்ளாக் )  , பக்கான்னா பில்லு கெடைக்கும் ( லீகல் ),

இங்க வந்த புதுசுல என்ன ஆட்சிரியத்துளையும், குழப்பத்தையும் உண்டு பண்ணினது ( Third Party Cheqes ) ங்குற விஷயம் தான், ப்ளாக்ல விக்கும் போது, பணத்துக்கு பதிலா சில செக்கு( Cheque ) இல்ல ( Draft )தருவாங்க, ( உதாரணமா 2 லட்ச ரூபாய்க்கு ஒரு 20,to 25 Chq/DD யோ தருவாங்க) இத கணக்குலளையும் காட்ட முடியாது,இதுல என்னா ஆட்சிரியம்னா, இந்த Cheque/Draft ஒ நம்ம பேர்ல இருக்காது, குப்பு சாமி,முனு சாமி, இந்த மாதிரி சம்மந்தா,சம்மந்தமே இல்லாத பேர்ல இருக்கும், நமக்கு அத குடுக்குரவன்களோட Cheque/Draft ஆவும் இருக்காது, அதுவும் யாரோ முத்து பாண்டி, சரவணநோடதா இருக்கும், அதுவும் ரெண்டு மூணு கை மாறி வந்திருக்கும்,

இத எடுத்துகிட்டு பேங்குக்கு போனா நம்ம ஊரா இருந்த எவனோட Chq/DD யையோ திருடிட்டு வந்துட்டோம்னு  உள்ள தூக்கி போட்டுருவாங்க,பத்து பேர்,பேர்ல உள்ள Chq/DD யையோ டெபாசிட் பண்ண  நம்ம பத்து Account ஆ ஓபன் பண்ண முடியும்,சான்சே இல்ல,அப்பறம் இத எப்படி  Bank Account ல டெபாசிட் பண்ணி பணமாக்குறது, முடியாது, அப்ப நமக்கு வரவேண்டிய பணம் எப்படி வரும், கோவிந்தாவா...

இங்க அத பத்தி கவலையே இல்ல, இத பணமா மாத்தி தருவதற்காகவே ( Sherof ) சேராப், அப்படிங்கற சில இடங்கள் இருக்கு, நம்ம ஊருங்கள்ள அடகு புடிக்கிற சேட்டு கடைங்க மாதிரி தான் இது இருக்கும், அரசாங்கத்துக்கு தெரியாம ரகசியமா இது இயங்கும், இந்த Chq/DD ங்கள இவங்க கிட்ட கொடுத்தா, பணமா தருவாங்க, ஒடனே பணம் வேணும்னா ஒரு குறிப்பிட்ட தொகை கமிசனா குடுக்கணும், ஒரு வாரம் கழிச்சி கிடைச்சா போதும்னா, எந்த கமிசனும் கொடுக்க தேவை இல்ல,சரி இவங்கள எப்புடி நம்புறது பணத்தோட ஜூட் விட்டுட்டாங்கன்னா, அது மாதிரியும் சில முறை நடந்திருக்கு, ஆனா 95% உத்தரவாதம்....

சரி இவங்க அந்த Chq/DD ய எப்புடி பணமா மாத்துறாங்க, அப்புடிங்கிறது தேவ ரகசியம், நானும் எத்தனையோ பேருகிட்ட கேட்டுட்டேன், அந்த ரகசியத்த மட்டும் தெரிஞ்சிக்க முடியல....

அடுத்தது Angaadiyaa ( அங்காடியா)

இத பத்தி கேள்விபட்டுருபிங்க, தெரியாதவங்களுக்காக இதோட நடை முறைய கொஞ்சம் சொல்லுறேன்,

இப்ப குஜராத்ல இருக்க நான் என்னோட கருப்பு பணம் ஒரு 25 லட்ச ரூபாய தமிழ் நாட்ல இருக்க ஒங்களுக்கோ, இல்ல துபாய்ல இருக்க என்னோட நண்பனுக்கோ அனுப்பனும்னு வட்சிகங்க , வாய பொலக்காதிங்க சும்மா ஒரு பேச்சிக்கு தான், பேங்கு மூலமா அனுப்புனா டாக்ஸ் கட்டலேன்னு என்ன உள்ள தூக்கி போட்டுடுவாங்க, எனக்கு அந்த பணம் எப்படி வந்திச்சி, தீவிர வாத இயக்கத்துல இருக்கனா, அப்படிங்கற மாதிரி ஆயிரம் கேள்வி வரும்,

இதுக்கு தான் அங்காடியா உதவுது, நான் அவங்ககிட்ட, பணத்த குடுத்து உங்க முகவரியையும், உங்களோட மொபைல் நம்பரையும்  குடுதன்னா, அடுத்த ஒரு மணி நேரத்துல நீங்க இருக்க ஊர்ல இருக்க இதே மாதிரி அங்காடியா தொழில் பன்னுரவர்டேர்ந்து உங்க மொபைல் நம்பருக்கு அழைப்பு வரும், நீங்க போய் விவரம் சொன்னிங்கன்னா, நீங்க சரியான நபரான்னு செக் பண்ண, அந்த இடத்திலேர்ந்து உங்களோட மொபைல் நம்பருக்கு கால் பண்ணி பார்பாங்க, நீங்க கால எடுத்து அந்த Incoming நம்பர அவங்க கிட்ட காட்டனும், சரியா இருந்திட்சின்னா பணத்த உங்க கிட்ட ஒப்படட்சிட்டு கையெழுத்து வாங்கிக்குவாங்க, மொபைல் வராத காலத்துல எல்லாம், நீங்க வச்சிருக்க ஒரு 10 or 20 ரூபா நோட்டோட சீரியல் நம்பர வாங்கி இங்க குடுக்கணும், நீங்க பணம் வாங்க போகும் போது அந்த சீரியல் நம்பர் உள்ள நோட்ட காட்டுனா தான் பணம் குடுப்பாங்க....இதுக்கு ஆயிரத்துக்கு இவ்வளவு கமிசன்னு இங்க கட்டனும்.....இது தான் அங்காடியா.....

இதெல்லாம் நம்ம ஊருங்கள்ளையும் இருக்குன்னாலும், குஜராத் மாதிரி பெரிய அளவுல நடக்கல....

இந்த அளவுக்கு சுலபமா, இங்க இதெல்லாம் நடக்குரதனால தான்  கருப்பு பண பரிவர்த்தனை அதிகமா இருக்கு.....

இது போதும்னு நெனைக்கிறேன்......அதோட உங்களுக்கு எண் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.....

By.......தம்பி..................
Jan 22, 2010

Physical Exercise இல்லாமதொப்பைய குறைக்க Tummy Tuck செய்முறை..


நடிகையோட இடுப்ப பத்தி எழுதுனா படிப்பீங்க, நல்ல விஷயம் எழுதுனா படிக்கவா போறீங்க, எதாவது பதிவு போடனும்கிரதுக்காக இத எழுதல...என்னோட அனுபவம்.
Any Way....நான் ஊதுற சங்க ஊதுறேன், கேட்ட கேளுங்க....

அதுக்கு முண்ணாடி இத படிங்க.....
 http://www.dinamalar.com//world_detail.asp?news_id=4627

நான் ஒரு 3 வருசத்துக்கு முன்னாடி 81 கிலோ இருந்தேன், தொப்ப 36 இன்ச் இருந்திச்சி..நெறைய மாமூல் வர்ற பூரிப்புல நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு பெருத்து பெரிய குட்டியா இருந்த நான், சிறுத்து சிறுத்த குட்டியா மாறுறதுக்கு  என்னென்னமோ செஞ்சி பார்த்தேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... மாசம் 2 ஆயிரம் கட்டி ஹெல்த் கிளப்ல சேர்ந்தேன், தொடர்ந்து 2 வருஷம் போனேன், டயட், யோகா, அரோபிக்ஸ் எல்லாம் பண்ணி 10 கிலோ ஒடம்ப கொறட்சேன், But என்னோட திருவாளர் தொப்ப மட்டும் கொஞ்சம் கூட கொறயல....

விளம்பரத்த பாத்துட்டு இந்த சோனா பெல்ட்டு,ஆப்ஸ் கிங் கிட்,எல்லாம் வாங்கி Use பண்ணி பார்த்திட்டேன்,காசு தான் செலவாட்சே தவிர அப்பவும்  தொப்ப குறையற மாதிரி தெரியல....

நான் Basical லா சோம்பேறி,நோகாம நொங்கு தின்கிறது எப்புடின்னு யோசிச்சிகிட்டு இருந்த அப்பத்தான் என்னோட கூட வேலை பாக்குற ஒரிசாகாரன், அவனோட பிரண்டு,ஒரு பிரபலமான Body Shape Up பண்ணுற நிலையத்துல ( அதாம்பா சினிமா காரவுங்கல்லாம் போவாங்களே )சேர்ந்து எந்த வித Physical Exercise ம் இல்லாம ஆறு மாசத்துல இருபது கிலோ ஒடம்ப கொறச்சி, தொப்ப கிப்ப இல்லாம செம ஹான்ட்செம் ஆ ஆனா கதைய சொல்லி நாமளும் சேருவமானு கேட்டான்,

சேருவோம்னு முடிவு பண்ணி போய் விசாரிச்சா, கொறஞ்சது 20 Session ஆவது ஒருநாள் விட்டு ஒருநாள் அட்டென் பண்ணனும், அதுல 10 Tummy Tuck க்கும்,10 Sliming Treatment ம் பண்ணுவோம்,கொஞ்சம் டயட்ல மட்டும் இருந்தா போதும், ஒரு Session க்கு Rs.750 + Service Tax ன்னு சொன்னாங்க..சரீன்னு நானும் அவனும் ஆளுக்கு 17,000 ஆயிரம் கட்டி சேர்ந்தோம், என்னா ஆட்சிரியம் அடுத்த 40 நாளைல, 2 கிலோ ஒடம்பு கொறஞ்சி, தொப்ப 36 Inch லேர்ந்து 32 inch க்கு வந்துட்டு, ஊருக்கு போனா என்னடா 10 வயச கொறட்சிட்டன்னு எல்லாரும் சொன்னப்ப வானத்துல பறக்குற மாதிரி இருந்திச்சி.....

அதுக்காக மாசா, மாசம் 17 ஆயிரமா செலவு பண்ண முடியும், அப்பறம் என்ன,அங்க என்னா Tecnic,Use பண்ணுறாங்கன்னு தெரிஞ்சி போச்சி...நானே வீட்டுலேயே Tummy Tuck பண்ண ஆரம்பிச்சுட்டேன், இது நடந்து 1.1/2 வருஷம் ஆகி போச்சி, இப்பவும் என்னோட இடுப்பளவு 32 Inches தான்....அதான் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் அப்படிங்கற நோக்கத்துல, நீங்களும் வீட்லயே Tummy Tuck பண்ணுறது எப்படின்னு சொல்லிதர போறேன்...

இதுல 10 Sliming  Treatment ன்னு அவங்க சொன்னது, காசு புடுங்குற Tecnic தான் அது வெறும் சோனா பெல்ட்  கட்டுறது தான்...இதுல Tummy Tuck பண்ணுறது தான் முக்கியம்....

Tummy Tuck செய் முறை விளக்கம் :

இது ஒன்னும் கம்ப சூத்திர வேலை இல்ல, சாதாரண விஷயம் தான்,ஈஸியா செய்யலாம்,தினமும் ஒரு 15 to 20 நிமிஷம்,  நின்ற நிலையில நீங்களவோ, இல்ல படுக்கைல மல்லார்ந்து படுத்த  நிலையில நீங்களாகவோ, இல்ல உங்க Partner நற கொண்டோ  செய்ய சொல்லலாம்...


இதுக்கு Shape Up Oil, மற்றும் Shape Up Gel தேவைப்படும் இது எல்லா Medical மற்றும் Super Market கள்ளையும் கிடைக்கும், கிழே உள்ள படத்த பாருங்க...
படம் .1
படம்.2 
வயித்துல மேல உள்ள படத்துல அம்பு குறி போட்டிருக்க இடங்கள்ள தான் அதிகமா கொழுப்பு சேர்ந்து தொப்பையா உருவெடுக்கும்,முதல்ல தொப்புளை சுற்றி உள்ள இந்த இடங்கள்ள Shape Up Oil லா கொஞ்சமா தடவி கிழே உள்ள படத்துல செய்யுற மாதிரி, நீங்களே சுயமா செய்யும் போது  தொப்புளுக்கு மேலே ஒரு கையையும், தொப்புளுக்கு கிழே ஒரு கையையும் வச்சி ( இடது கை வலப்பக்கம் போற மாதிரியும், வலது கை இடப்பக்கமா போற மாதிரியும் கொஞ்சம் அழுத்தி Massage பண்ணுங்க...இது ஒரு 10 நிமிஷம், அப்பறம்  Shape Up Gel தடவி மறுபடியும் ஒரு 10 நிமிஷம்,இதே மாதிரி massage பண்ணுங்க...


படம்.3

படத்துல கூட ரெண்டு கையும் நேரா வருது, இதே மாதிரி தொப்புளுக்கு மேலயும், கிழேயும் உங்க கை வரணும்,அடுத்து உங்க ரெண்டு கை கட்ட வெரல வச்சி,படம் எண் 1 லா அம்புகுறி போட்டுருக்க இடத்துல, மேலேர்ந்து கிழேயும், கிலேர்ந்து மேலயும் நல்லா அழுத்தி Massage பண்ணுங்க....இதே மாதிரி கட்ட வெரலால, தொப்புள சுத்தியும் பண்ணுங்க...

இதே உங்க Partner உங்களுக்கு Massage பன்னுனாருன்னா, முதல இடபக்கம் உட்கார்ந்து பண்ணிட்டு, அடுத்து வலப்பக்கம் செய்ய சொல்லுங்க, நீங்க கொழுப்பு உள்ள இடத்துல மட்டும் தான் Massage பண்ணுறதால,உங்க குடலுக்கு எதுவும் பாதிப்பு வராது....இதே மாதிரி உங்க இடுப்பு சதையையும் Massage பண்ணி குறைக்கலாம்...Massage முடிஞ்ச பிறகு ஒரு டவல வெது வெதுப்பான சுடு தண்ணியில நனைத்து கொஞ்சமா புளிஞ்சி Massage பண்ணுன எடத்துல ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுங்க...உங்க எக்ஸ்ட்ரா கொழுப்பெல்லாம் கரைந்து சிறு நீர் வழியா வெளியேறிவிடும்....

இதுக்குன்னு டயம் ஒதுக்க முடியாதவங்க, காலைல குளிக்கபோகும் முன் இந்த Massage பண்ணிட்டு குளிக்கலாம்.ஆரம்பத்துல கொஞ்சம் கை வலிக்கத்தான் செய்யும், போக,போக சரியாகிடும்.

முக்கியமா Diet பாலோ பண்ணுங்க, ரொம்ப Crush Diet  வேண்டாம், நாலு இட்லி தின்கிற எடத்துல மூணு இட்லி சாப்பிடுங்க, இதோட கொஞ்சம் காய்கறி சாலட், அப்பறம் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் ரெண்டு இட்லியா குறைங்க, ஆரம்பத்துல இது கஷ்டமா தான் இருக்கும் அப்பறம் சரியாகிடும், ரொம்ப Tired ஆ இருக்கா Vital-Z ன்னு ஒரு பவுடர் இருக்கு அத வாங்கி தண்ணில கலந்து குடிங்க, இல்லனா எதாவது ஜூஸ்.அப்பறம் இப்படி ஆகிடுவிங்க....இத விட சீக்கிரமா தொப்ப கொரயனும்னா, Tummy Vibrate  பண்ணுற Kit ஒன்னு இருக்கு, Iron Box மாதிரி இருக்கும், இது ஒரு 1500 to 2000 ருபாய் இருக்கும்,தொப்பைல  கொஞ்சம் பவுடர் போட்டு இத வச்சி ஒரு பாத்து நிமிஷம் Vaibrate பண்ணிட்டு, அதுக்கு பிறகு மேலே சொன்ன மாதிரி Massage பண்ணுங்க,

இல்ல எனக்கு நேரமும் இருக்கு, பர்சும் வெய்ட்டா இருக்கு அப்படிங்கறவங்க Body Shape Up பண்ணுற நிலையங்களுக்கு போங்க,

இந்த தகவல்கள் பயன் உள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.....

இது எதுவுமே முடியாதுங்குற சோம்பேறிங்க,  கத்திய வச்சி மாங்காவ கீருற மாதிரி தொப்பைய அறுத்து போட்டுட்டு மேல போங்க.....By ..தம்பி ................


Jan 21, 2010

ஈகோ புடிச்ச ராட்சசிக்காக....

நான் பல்வேறு சமயங்களில் கிறுக்கிய வரிகள்...
இது கவிதையா என்னாநெல்லாம் எனக்கு தெரியாது.....நம்ம ஆளு குசி படத்துல வர்ற ஜோ மாதிரி கொஞ்சம் ஈகோ புடிச்ச ராட்சசி....அவள கூல் பண்ண அப்ப, அப்ப கொஞ்சம் இந்த மாதிரி எடுத்து விடுறது.....அப்பறம் கொஞ்சம் மப்பு கவிதைகள்....

1.   என் கனவுகள் தடுக்கி விழுந்த,
     அந்த இடத்தில்தான்....
      உன்னை கண்டெடுத்தேன்.!
 
 
2. தேடி,ஓடி,தியானித்து,
    நாவரண்டு,
    உன்னிடம்கண்டேன்....
    எனக்கான கடவுளை !!!


3. யார், யாரோ...ஏறி ,ஏறி ...இறங்கிய,
   ரயில் வண்டி என் மனது....
   என்னுள் முதலில் பதிவு செய்து ,
   கடைசி நிறுத்தம்வரை வரும் .....
  முதல் பயணி நீ மட்டும் தன் !!!

 
4.உன் இதயத்திலா கட்டி வைத்திருக்கிறாய் என் காதலை ???
  உலகமெங்கிலும் சுற்றினாலும்....
  உன்னைமட்டுமே சுற்றி, சுற்றி வருகிறதே  என் மனது !!!
  செக்கு மாட்டை போல் .......

 
5.உன் வாசம் எங்கெல்லாம் இருக்கிறதோ ,
  அங்கெல்லாம் என் மனது....
  உன்னை மட்டும் சரியாய் கண்டுகொள்கிறது....
  அந்த பெண்ணைப்பற்றி எனக்கு கவலையில்லை.....

 
6.நீ என் அருகினில் இருக்கும் போது கூட,
  என் நிகழ்வுகளும் கற்பனையாகி போகிறது.....
  உன்னை என் கனவில் மட்டுமே கண்டிருப்பதால்......


மப்பு கவிதைகள்.....

குடி...


குடி, என் முகமூடியை சிதற வைக்க...

நானே வைத்துக்கொள்ளும் வெடி ....


பெண்ணுரிமையாம் பெண்ணுரிமை ^


உன் உணவுக்காக வில் ஏந்தினேன் அன்று ....

உன் காதலுக்காக மற்போர் புரிந்தேன் அன்று ....

உன் கற்பை காக்க உயிர் திறந்தேன் அன்று .....

நீயும் அமைதியாகத்தான் இருந்தாய் " ஐடி " கம்பனியில் வேலை கிடைக்கும்வரை .....இன்று ....


கவிஞன்.....


போதையும்,பேதையும், பற்றி முழுதும் அறியாதவன்

கவிஞன் இல்லை .....

நடிப்பவன் நடிகன், உணர்பவன் மனிதன் ......

வைரமுத்து நடிகன் ....

கண்ணதாசன் மனிதன் .....

பட்டவனுக்கு தானே வலியும் ,தப்பிக்க வழியும் தெரியும் ....

பெற்றவளுக்கு தானே வலியும் ,குழந்தையின் மொழியும் புரியும்...

பொய் காதலி 0


நான் சந்தி பிழை .....
நீ சந்ததி பிழை ....
உணர்ந்தபோதுதான் அறிந்தேன் என் பிழை .....

காதலி !!!!!!


குவாண்டம் தியரி எழுதும் நான் .....
குழந்தையாகிறேன் உன்னிடம் .....


By...தம்பி

Jan 16, 2010

12 மணி நேர ஞானம் தரும் போதி மரம்....

12 மணி நேர ஞானம் தரும் போதிமரம்....

என்னடா இது புதுமையா இருக்கு, அந்த மாதிரி  போதி மரம் எங்க இருக்குனு யோசிக்கிறீங்களா, என்னோட ரூம்ல தான், அதாம்பா, என்னோட அட்டாட்சிடு பாத் ரூம் தான் அது.....

பாத் ரூம், சில பேருக்கு அது மனசு விட்டு பாட்டு பாடுற மேடை,சில பேருக்கு பேப்பர் படிக்கிற படிப்பறை,சில பேருக்கு மனசுக்குள்ளயே லவ்வரோட ரொமான்ஸ்  பண்ற பூங்கா, சில காலி பசங்களுக்கு ( நான் நல்லவம்பா ) புடிச்ச நடிகயோடயோ, பொண்ணுங்க கூடயோ அஜால்,குஜால் பண்ற பெட்ரூம் .....எனக்கு அதுதான் போதிமரம்........

காலைல,அந்த வெஸ்டெர்ன் ஸ்டைல் டாய்லட்ல உக்காந்து ஒரு கிங்ச பத்தவட்சி, இழுத்துகிட்டே,யோசனைய ஓடவிட்டோம்னா.....

இப்படி போகும் என் யோசனை.........( எனக்கு நானே பேசிப்பேன் )

ஏன்டா இப்படி டெய்லி குடிக்கிற, இப்படி குடிட்சின்னா ஒடம்பு என்னத்துக்குடா ஆகும்,

அதெல்லாம் ஒன்னும் ஆகாது  அதான் டெய்லி அஞ்சி கிலோமீட்டர் வாக்கிங் போறம்ல அப்பறம் என்னா,

  இப்பிடியே போனா குடிகாரனா ஆய்டுவேடா,அப்பறம் ஒன்னோட லட்சியமெல்லாம் என்னடா ஆகுறது, பேப்பர்ல வேற அடுத்த பில் கேட்ஸ், இந்தியாவுலேர்ந்தோ,சைனவுலேர்ந்தோ தான் வருவாங்கனு அமெரிக்கா காரனுங்க சொல்லிருக்கானுங்க, அவனுங்க ஒன்ன பத்திதான் சொல்லிருக்கானுங்க.... புரியுதா?

அது தெரியும்,குடிக்கிறது தப்பா ..?

நீனே யோசிச்சி பாரு, பத்து மணிக்கு  ஆபீஸ் போயிட்டு ஏழு மணிக்கு ரூமுக்கு வர்ற,எட்டற மணிக்கு டான்னு பாட்ல தூக்கிர்ற, அப்பறம் சாப்பாடு, தூக்கம்,இப்டி யோசிக்க வேண்டிய நேரத்த எல்லாம் வேஸ்ட்டாக்கிடுற அப்பறம் எப்படிப்பா, நீ
 பில் கேட்ஸ் மாதிரி ஆகுவ,பில் கேட்ஸ் மாதிரி ஆகணும்னு ஆச மட்டும் பட்டா போதுமா,

போடா என்னக்கு தெறமையும்,நம்பிக்கையும் இருக்கு நான் கண்டிப்பா ஜெய்ப்பேன்,

ஒனக்கு தெறம இருக்குப்பா ஒத்துக்கிறேன்,அத வெளிப்படுத்த என்னைக்காச்சும் கொஞ்சமாவது முயற்ச்சி பண்ணிருக்கியா சொல்லு.....சரி நீ ஜெயிட்சிடேனே வட்சிகுவோம், அத அனுபவிக்கவாவது ஆரோக்யமா இருக்க வேணாமா ? பில் கேட்ஸ் , அனில் அம்பானி எல்லாம் குடிக்காமலா இருப்பானுங்க ?

அவனுங்கெல்லாம் சாதிச்சிட்டு குடிகிரனுங்க,நீ என்னாத்த கிழிச்சிருக்க ஒன்னு சொல்லு, அது மட்டுமா அவனுங்க குடிக்கிறது காஸ்ட்லி சரக்கா இருக்கும் ,டென்சன குறைக்க ஒரு 60 மில்லி குடிச்சிட்டு தூங்கிடுவானுங்க,நீ அப்படியா? குடிகிறதே DSPப்ளாக்கோ,  மேக்டொவ்லோ,அதும் ஒரு கோட்டரு+கட்டிங் இல்லாம ஒனக்கு தூக்கம் வருமா சொல்லு?

வராது....

அத விடு குடிச்சிபுட்டு சும்மாவட்சும் இருக்கியா,நேத்து என்னா பண்ணுன ?

என்னா பண்ணுனோம்....

என்னா பண்ணுனியா , போதைல,செய்யுறதெல்லாம் செஞ்சிபுட்டு  அடுத்த நாள் ஏன்னா பண்ணுனேன்னு கேக்குறது...குடிகார பயலே....

ராத்திரி 11 மணிக்கு போன போட்டு, அவள ( யாருன்னு எல்லாம் கேட்கபிடாது )அந்த திட்டு திட்டுற, இன்னும் மூணு நாளைக்கு ஒம்மூஞ்சில முழிக்க மாட்டா..
அப்பறம் எனக்கு யாருமே அன்பு காட்ட மட்டேன்றாங்கனு அவள்டையே பொலம்புறது...ஒன்னஎல்லாம் லவ் பண்றா பாரு அவள சொல்லணும்....

அவ என்னோட தேவதடா ...கோபமெல்லாம் பட மாட்டா...

சரி பொலம்பாத,இப்ப கடைசியா என்னா சொல்ல வர்ற, இப்படி குடிச்சி,குடிச்சி 58 வயசு வரைக்கும் எவன்டயாட்சும் வேலை பாத்துகிட்டே  சாக போறியா, இல்ல ஒன்னோட லட்சியத்த அடைய போறியா.....
               
காவியங்கள் எனை பாட காத்திருக்கும் போது.....

பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு....மொதல்ல  நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.....போன மாசமே டாக்டர் குடிக்கிறதா கொரன்னு சொன்னார்ல, இன்னைக்கும் ப்ளட் டெஸ்ட் வேற பண்ண குடுத்துட்டு வந்துருக்க, ஏன்னா ரிசல்ட் வரும்னு தெரியும்.....இதெல்லாம் தேவையா ?

சரி இன்னிலேர்ந்து தண்ணிய நிப்பாட்டுறோம், அதோட இந்த பதிவு எழுதுறது, மேட்டர் படம் பாக்குறது இதுமாதிரியான வெட்டி வேலையெல்லாம்
விட்டுட்டு,  நம்ம டார்கெட்ட ரீச் பன்னுரதுக்கான ஆக்கபூர்வமான வேலைய பாப்போம் ....ஓகே....

நிற்க.....இதே மாதிரி தாங்க.....

இந்த ஞானம் இன்னைக்கு மட்டும் கிடைக்கலைங்க ,  டெய்லி இதே கத தான், இந்த இன்ஸ்டன்ட் ஞ்யனதோட ஆயுள் வெறும் பன்னிரண்டு மணி நேரம் மட்டும் தான்,
அப்பறம் ஆபிஸ் போயிட்டு நைட்டு ஏழு மணிக்கு வந்தன்னா, எட்டற மணிக்கு சரக்குதான்.....ரிப்பீட்டு.....

இந்த மாதிரி இன்ஸ்டன்ட் ஞானம் பெற்ற அனுபவம் உங்கள்ளையும் நெறைய பேருக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்....வர்ட்டா........


By...தம்பி........
                                          
              
         
                 
,

Jan 14, 2010

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம்.....


நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம்....விடலாமா, நூல் இல்லைனா பட்டம் விடமுடியாது, ஆனா, வால் இல்லாமா பட்டம் விடலாம்...இங்க குஜராத்ல இப்படி தான் பட்டம் விடுறாங்க....நானும் ட்ரை பண்ணுனேன், டைவு தான் அடிட்சிட்சி....குஜராத்ல இருந்துகிட்டு பட்ட திருவிழாவ பத்தி எழுதலன்னா எப்புடி....

             
நம்ம ஊர்ல பொங்கல், மாதிரி குஜராத்ல பட்ட திருவிழா ( மகர சங்கராந்தி ), இதும் பொங்கல் அன்னைக்குதான் வருது, ஆபீஸ் லீவ் இல்ல, லாஸ் அப் பே நாங்க, பரவா இல்ல போங்கடன்னுட்டேன், வாழ்கைய அனுபவிகிறதவிட ஆபீசா பெருசு...


                                                        

             
இது ஆரம்பிக்கிறதுக்கு ஒரு பதினைந்து நாளைக்கு முன்னாடியே, நம்ம ஊர்ல கரும்பு கடை வர்ற மாதிரி, நெறைய பட்டம் விக்கிற கடையா ஊர்பூரா முளைக்கும்,
வித விதமா, பட்டங்களும், நூல்கண்டுங்களும் விப்பாங்க, அஞ்சி ரூபாய்ல ஆரம்பிச்சி, ஆயிரம் ருபாய் வரைக்கும், வித விதமா, பட்டமும், மாஞ்சா போட்ட நூல்கண்டும் விக்கும்,

            

திருவிழா அன்னைக்கு சாமியா கும்புட்டுட்டு, மாடில ஏற ஆரம்பிச்ச நைட்டு தான் கிழ எறங்குவாங்க, சின்ன கொளந்தைங்கள்ள ஆரம்பிச்சி வயசான தாத்த பாட்டி வரைக்கும் பட்டம் விடுவாங்க, அன்னைக்கு முழுசும் வானத்துல லட்சகணக்கான பட்டங்கள் பறக்கும், சும்மா தேமேன்னு பட்டம் விடுறதில்ல, பட்டத்துக்கு, பட்டம் போட்டி போட்டு டீல் போட்டு   அறுக்குறது, மரம், மட்ட,போஸ்ட் மரம் எல்லாத்துலயும் பட்டமா, மட்டிகெடக்கும், இப்படி அன்னைக்கு முழுசும் ஜாலியா போகும்...........

                                                              
               

அடுத்தநாள் பேப்பர பார்த்த, கொறஞ்சது ஒரு ஐம்பது பேரவுது, பரலோகம்  போயிருப்பாங்க, பட்டம் விடுறேன்னு மாடிலேர்ந்து விழுந்தோ,  வண்டில போறப்ப மாஞ்சா நூல் கழுத்த அறுத்தோ, கரண்டுடுல அடிபட்டோ, அது தனி கொடும....அது மட்டும் இல்ல கிட்ட தட்ட இரண்டாயிரம், கழுகு, புறா மாதிரியான பறவைகள் மாஞ்சா நூலால காயம்படுறதோ, மரணம் அடையிறதோ நடக்குது,இத அறிவுறுத்தி அரசாங்கம் எவ்வளவோ விளம்பரம் பண்ணியும், இந்த மாதிரி மரணங்கள கட்டு படுத்த முடியிறதில்ல....
நீங்களும், மாட்டு பொங்கல்ல, மாடுங்கள்ட்ட, மல்லுகட்டி, முட்டிய, கிட்டிய ஒடட்சிக்காம, நல்ல படியா பொங்கல் கொண்டடுவிங்கன்னு  நம்புறேன்....

இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களுடன்.........தம்பி....


Jan 12, 2010

கருப்பு வைரம்- "நிலக்கரி" ( Coal ) பகுதி-3

பகுதி -1      http://athigapadiabu.blogspot.com/2010/01/coal-feild-tecnical-z-from-to-user.html

பகுதி -2    http://athigapadiabu.blogspot.com/2010/01/coal-2.html


சுத்த படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட நிலக்கரி வரைக்கும் பார்த்தோம், இப்ப இதோட அடுத்த கட்ட நடவடிக்கைகளை  பார்போம்...சுத்த படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட நிலக்கரி, Barges எனப்படுகின்ற சின்ன, சின்ன படகுகள்ள ஏற்றபடுகின்றன.....
 Barges கள்ள ஏற்றப்பட்ட நிலக்கரி, சுரங்கம் அமைந்திருக்கும் இடங்களில் இருந்து, அவை ஏற்றுமதி செய்யப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகங்களுக்கு அனுப்பபடுகின்றன...

Barges களிலிருந்து இறக்கப்பட்ட நிலக்கரி துறைமுகங்களில்   சேமித்துவைக்கபடுகிறது..

இங்கே இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் Chattering Team வேலை தொடங்கும், எந்தெந்த நாட்டு துறைமுகங்களுக்கு, சரக்கு அனுப்பப்படவேண்டும், எந்தெந்த காலகட்டத்தில் அனுப்பப்படவேண்டும், எத்தனை மெட்ரிக் டன்,இதையெல்லாம், கணக்கில் கொண்டு, தேவையான கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்,

குறைந்த அளவுன்னா Handy Max  கப்பல்கள், இதன் கொள்ளவு 30 to 50 ஆயிரம் மெட்ரிக் டன்ஸ், ( ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ )
இதவிட கூடுதல் என்றால் Pana Max  கப்பல்கள், இதன் கொள்ளளவு 65 to 80 ஆயிரம் மெட்ரிக் டன்ஸ்..இவைகள் முடிவு செய்யப்பட்டு, வாடகைக்கு, (சில நிறுவனங்கள் தங்களுகென்றே தனி கப்பல்களையும் வைத்திருக்கும்) அமர்த்தப்பட்ட கப்பல்கள் ஏற்றுமதி செய்யும் துறை முகங்களுக்கு அனுப்பப்படும்,


 துறைமுகங்களுக்கு வரவழைக்கப்பட்ட கப்பல்களில், நிலக்கரி நிரப்பபடுகிறது...
சரக்கு நிரப்ப பட்ட கப்பல்களுடன் சில டாக்குமெண்ட்ஸ் அனுப்பப்படும் இவை Load Port Documents என்று அழைக்கபடுகிறது..அவைகள்...

1. Bill of Lading -இதில் இறகுமதியாலரின் முகவரி, ஏற்றப்பட்ட நிலக்கரின் அளவு ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும்.
2.  Draft Survey Report - இதில் கப்பலின் கொள்ளளவு சம்பந்தப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
3.  Certificate of Insurance - இதில் கப்பல் தேவையான இறக்குமதி துறைமுகங்களை சென்று சேரும் வரைக்குமாக எடுக்கப்பட்டிருக்கும் இன்சூரன்ஸ் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
4.  Certificate of Weight - கப்பலில் எற்றபட்டிருக்கும் சரக்கின் மொத்த எடை விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
5.   Report of Orgin - இதில் எந்த நாட்டில், எந்த சுரங்கத்திலிருந்து இந்த நிலக்கரி எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருக்கும்.
6.    Form -B - இதில்  ஏற்றுமதி செய்யும் நாட்டின் Ministry of Trade ஆல் சுரங்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி சம்பந்தமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
௭.Certificate of Analysis - இதில் நிலக்கரியின் தரம் ( Quality ) பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
 சரக்கு, இறக்கப்பட வேண்டிய துறை முகங்களை சென்றடையும்.
இனி சரக்கு இறக்கபடவேண்டிய துறை முகங்களில் நடைபெறும் விசயங்களை பார்போம்.....
 சரக்கு இறக்கப்பட வேண்டிய துறை முகங்களை அடைந்த கப்பல், ஆழ்கடலில் நங்குரமிடபடுகிறது, ( சில ஆழமான துறைமுகங்களை தவிர )

பிறகு Custom Duty செலுத்தப்பட்டு, Bill of Entry எனப்படும் இறக்குமதி சான்றிதழ் பெறப்படுகிறது, இந்த நடைமுறைகளுக்கு பிறகு...ஆழ்கடலில்  நங்குரமிடபட்டிருகின்ற கப்பலிலிருந்து ( Transhipment ) Barges என அழைக்கபடுகின்ற சிறு கப்பல்களுக்கு சரக்கு மாற்றப்பட்டு துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது...

கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதில் ஆரம்பித்து, அதை இறகுமதியாளரின் Stock Yard வரை கொண்டு சேர்ப்பது வரையிலான இந்த வேலைகளை ( Stevedores ) என்று அழைக்கபடுகின்ற உள்ளூர்  சரக்கு கையாளுனர்கள் செய்கிறார்கள், ( இதற்கான தனி ஒப்பந்தம் இறகுமதியாலருக்கும்/ இவர்களுக்கும் இடையே போடபட்டிருக்கும் )

இங்க Lay Time Calculation எனப்படுகிற ஒரு முக்கியமான விசயத்தை பார்போம்,
கப்பலில் இருக்கும் முழு சரக்கையும், இறக்குவதற்கான நேரம் முதலிலேயே முடிவு செய்யப்பட்டிருக்கும், உதாரணமாக மூன்று நாள்..
இந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே, உதாரணமாக 2.1/2 நாளில் இறக்கப்பட்டுவிட்டால், கப்பல் நிறுவனத்திடமிருந்து Despatch Money எனபடுகிற ஊக்க தொகை தரப்படும், இதை இறக்குமதி செய்யும் நிறுவனமும், சரக்கு கையாளுபவர்களும் ( Stevedores ) ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பிரித்துகொள்வர், இதுவே சரக்கு இறக்கப்பட
3. 1/2  நாட்கள் எடுத்துக்கொள்ள படுகின்றது எனும் போது..Demurage Money எனப்படுகின்ற கூடுதல் கட்டணம், கப்பல் நிறுவனத்தால் வசூலிக்கபடுகிறது, இது கொஞ்சம் நஞ்சம் இல்ல, உதாரணமா ஒரு நிமிசத்துக்கு 5 US டாலர்னா, கணக்கு போட்டுக்கங்க....
Barges எனும் சிறு கப்பல்களில் ஏற்றப்பட்ட நிலக்கரி Jetty எனப்படும் துறைமுகப்படுகைக்கு கொண்டுவரப்படுகிறது.....ஜெட்டிக்கு கொண்டுவரப்பட்ட நிலக்கரி , Barge களிலிருந்து இறக்கப்பட்டு, இறக்குமதியாளர்களின் Stock Yard களுக்கு கொண்டுசெல்லபடுகிறது.....

                                     

Stock Yard களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப படுகிறது,

நண்பர்களே கூடுமானவரை நிலக்கரியின், பிறப்பு முதல் இறப்புவரையிலான நிகழ்வுகளை Visuval லா விளக்கி இருக்கிறேன்....இந்த பதிவின் மூலம்,  நிலக்கரி பற்றி உங்களுக்கு, கொஞ்சமாவது அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறன்....
நன்றி...............

by ....தம்பி............


Jan 11, 2010

குஜராத்தில், என் கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்.....

நேத்து காலைல ஒரு 7.35 மணி போல இருக்கும், வழக்கம்போல வாக்கிங் போய்கிட்டு இருந்தேன், அப்பத்தான்,அந்த பயங்கரமான, நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துச்சி, கொஞ்சநேரம் ஆடிப்போயிட்டேன், கண்ணு முன்னாடி நடந்தும்,அத தடுக்க முடியலையேன்ற குற்றஉணர்வு இன்னும் இருக்கு, நைட்டு இத நெனைச்சே ரெண்டு பெக் கூட போட்டேன், அப்பவும் தூக்கம் வரல....

நானும் சூரத்துக்கு வந்து, 5 வருசத்துக்கு மேல ஆய்ட்டு,குஜராத்ல எல்லா இடமும் சுற்றி இருக்கேன், இதுவரைக்கும் நம்ம ஊர்லயெல்லாம் சகஜமா நடக்குமே, அந்த மாதிரி ஒரு, கோஷ்டி சண்டையோ,அடி தடியோ, வெட்டு குத்தோ,கட்ட பஞ்சாயத்தோ நடந்து நான் பார்த்ததே இல்ல, அவங்க உண்டு, அவங்க வேலை உண்டுன்னு போய்கிட்டே இருப்பாங்க.......

நான் கூட நெனட்சிக்குவேன், இவங்க சின்ன, சின்ன சில்லறை சண்டையெல்லாம் போடா மாட்டாங்க போலிருக்கு, எல்லாத்தையும் மொத்தமா சேர்த்து வச்சி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துல நடந்த மாதிரி, ஒரு ரெண்டாயிரம், மூவாயிரம் பேர மொத்தமாத்தான் கொல்லுவாங்க போலிருக்கு, அப்படின்னு.....
இல்ல, இங்கயும் இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு, இந்த சம்பவத்துக்கு அப்பறம் தான் எனக்கு தெரிய வந்துச்சி....

என்னன்னா, ஒருத்தன் எனக்கு எதுக்க, கொஞ்சம் தள்ளி நடந்து வந்துகிட்டு இருந்தான், ஆளு நல்ல செகப்பா, வாட்டம் சாட்டமா, இருந்தான், அவங்க ஆளுங்க மாதிரி தான் இருந்தான், எந்த வித்தியாசமும் தெரியல..
எனக்கு பின்னாடி ஒரு ஆறு, ஏழு பேரு இருப்பாங்க, நல்லா மொரட்டு, மொரட்டு பசங்களா இருந்தானுங்க,ஏதோ ஆக்ரோசமா, சத்தமா பேசிகிட்டு, நின்னுக்கிட்டு இருந்தானுங்க, நான்கூட பயந்துகிட்டே தான், அவனுங்கள கிராஸ் பண்ணி வந்தேன்,

என்ன நெனைசான்னுன்களோ தெரியல,எதுக்க வந்தவன பார்த்துட்டு,கொலவெறியோட,பயங்கரமா சத்தம் போட்டுக்கிட்டு,திடு ,திடுன்னு  என்ன கிராஸ் பண்ணி ஓடுனாங்க, எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு...நான் என்னத்தான் போட போறாங்களோனு நெனச்சேன், நல்லவேள அப்புடி ஏதும் நடக்கல,ஏன்னா எனக்கு, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி மூணு சம்பவம் நடந்திருக்கு,ஆனா இந்த மாதிரி குரூப் அட்டாக் இல்ல.....

இவனுங்க ஓடி வர்றத பார்த்தவுடனே, எதுத்தாப்புல வந்தவனும், திரும்பி, ஓட ஆரம்பிச்சிட்டான், இன்னைக்கு என்னமோ,நடக்க போகுதுன்னு மட்டும் தெரிஞ்சிபோட்சி.....

வெரட்டுனவங்கள்ள தலைவன் மாதிரி இருந்தவன், ஓடி வந்த வேகத்துல கண்ட்ரோல் பண்ணமுடியாம, அவனோட மேல மோத, அவன் ரெண்டடி பறந்து போய் கிழே விழுந்து, ரெண்டு புரண்டு, புரண்டு எழுந்திரிச்சான்,அதுக்குள்ள மத்தவங்களும் வந்து அவன சுத்தி, வளைச்சி பொரட்டி எடுத்துட்டாங்க, நல்லவேள ஆயுதம் எதுவும் அவனுங்களுட்ட இல்ல....

என் ரத்தம் துடிக்குது, இருந்தாலும் தமிழ் பட ஹீரோ மாதிரி போய் காப்பாத்த முடியல...அவன் பயந்து, நடுங்கிகிட்டே எழுந்திரிச்சான், கண்ணுல மரண பயம் தெரியுது, இவனுங்க ஆத்திரமும் கொஞ்சம் தனிஞ்சமாதிரி தெரிஞ்சிச்சி, அவன் ஏதோ சொல்ல, இவனுங்க ஏதோ சொல்ல பிரச்சன முடியிறமாதிரி தெரியல, பொம்பள பிரச்சனையா, இல்ல ஜாதி தகறாரா,ஏரியா தகறாரா, இல்ல வேற ஏதும் பிரச்சனையா என்னன்னு புரியல, எனக்கு இங்க்ளிஷும், ஹிந்தியும், மட்டும் தான் தெரியும்கிரதனால, என்ன பேசிக்கிரானுங்கனு புரியல...பிரச்சன மறுபடியும் சூடாவுது....

இந்த சமயத்துல, அடி வாங்குனவன், கெடைச்ச கொஞ்ச கேப்புல, Escape ஆகி மெயின் ரோட்ட கிராஸ் பண்ண பார்தாம்பாருங்க, எதுக்க வந்த கார் மோதி, ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சி, ஆளு Spot Out.......எல்லாம் ஒரு ரெண்டு  நிமிசத்துல முடிஞ்சி போச்சி......

ஓடிபோய் பார்த்தா...

பார்த்தா....

பார்த்தா ...

பார்த்தா...

 அந்த செகப்பு நிற "நாய்" ரத்த வெள்ளத்துல, செத்து கிடக்கு ....

ரொம்ப Terror ஆ இருக்குல்லா........


(* எனக்கு மூணு முறை இந்த சம்பவம் நடந்திட்சினு மேல சொன்னது, நான் மூணு வாட்டி நாய்கிட்ட கடி வாங்குனத தான்...... )


 
Jan 8, 2010

நேத்து சுஜாதாவும், மானுஷ்ய புத்திரனும்....

நேத்து எனக்கும் எங்க ஜெனரல் மேனேஜருக்கும் கொஞ்சம் வாங்கல், எல்லாத்தையும் மனசுல வச்சிகிட்டு மப்பு எத்துனதுல, மாநாங்கன்னியா போத ஏறி போச்சு, நைட்டு ஒரு பதினோரு மணி போல பொதிகை டிவில, மானுஷ்ய புத்திரனோட பேட்டி ஓடிகிட்டு இருந்திச்சி .....அவரு நம்ம சுஜாதா சாரால பெருமைபடுதபட்டவர் என்பதாலும், அவரோட எழுத்து எனக்கு பிடிக்கும் என்பதாலும் ரொம்ப உன்னிப்பா பார்த்தேன், நல்லா தெளிவா, கம்பீரமா பேசுனாரு, அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு But, இன்னைக்கு காலைல தான் தம்பிங்கல்லாம் கேட்டாங்க  என்னண்ணே நேத்து பயங்கர  மப்பு போல, டிவி ஸ்க்ரீனுக்கு பக்கத்துல போய் உட்கார்ந்துகிட்டு எதோ பாத்துகிட்டு இருந்தீங்கன்னு...
அது மட்டும்  ஞாபகத்துல இல்ல, போடா பொய் சொல்றீங்கனு சொல்லிட்டு, பெட்டுல பார்த்தா, ஒரு பேப்பரு, அத எடுத்து  பார்த்தா, என்னையும்  அறியாம மப்புல கிறுக்கி வச்சிருந்த சில வரிகள்...எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சதால வந்த Side Effects..சரி இன்னக்கி இதையே பதிவா போட்டுரலாம்னு இருக்கேன்,நீங்களும் கொஞ்சம் படிங்க ப்ளீஸ்.....ஆனா திட்ட கூடாது, அடிக்க கூடாது OK....

இத எழுதும்போது, சுஜாதா சாரும், மானுஷ்ய புத்திரனோட பேட்டியும் மைண்ட்ல இருந்திச்சி  போல.                          
                                                                      
                                                                     சுஜாதா.....
நான் நேசித்தவன், அவன் கடவுளும் அல்ல....
ஒரு அனுமானுஷ்ய புத்திரனை பற்றி சொன்னான்... (எனக்கு )...
அந்த மனிதனுடைய புத்திரனும்....
என் நேசிப்பை பற்றி, மிக சிறப்பாகத்தான் சொன்னான்...பொதிகையில்
இந்த இருவருக்கும் பிடித்த ஒருவன்,இறைவன் மட்டுமல்ல..
என்னைப்போல் ஒருவன்-பாரதி ( யும் கூட )
நான் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுப்பவன்....
சுஜாதாவை போல்.....
சுஜாதாவின் காதலி நான்...
நாங்கள் லெஸ்பியனும் இல்லை, அவள் ஆணாக இருபதனால்...
நீ செதுக்கிய சிலைகள் தான், என்னிடம் கற்களாய் இருந்தன...
நீ சொன்ன இலக்கியங்கள் தான், என்னிடம் வார்த்தைகளாய் இருந்தன...
கடவுளை பற்றி விளக்கிச்சொல்ல, கடவுளால் தானே முடியும் சுஜாதா.....

                                                      
ஏதும்  தப்பா எழுதிருந்தா, மன்னிச்சுருங்க ..............           
                                                                  

படங்களை பார்த்துட்டு, ?..

இது சும்மா போட்டோ லிங்க் பண்ணி, எப்படி பதிவு போடுறதுன்னு டெஸ்ட் பண்ணுறதுக்காக, அடுத்தது என்னோட துறை சம்பந்தமா ஒரு Visual பதிவு போடுறதுக்கு முன்னோட்டமா இந்த பதிவு, இதெல்லாம் நான்
 பல்வேறு சமயங்கள்ல எடுத்த புகை படங்கள், இந்த புகை படங்களை பார்த்துட்டு, அதுக்கு தகுந்த மாதிரி, நட்சின்னு Comments ஒ ஹைக்கூ  கவிதையோ எழுதுநிங்கனா, அதுல சிறந்தத தேர்ந்தெடுத்து ஒங்க பேரோட தனி பதிவா போடலாம்னு திட்டம்,  கற்பனை குதிரைய தட்டுங்க.......


இது ஒருநாள் மாலை நேரம் ரோட்டோரமா போய்க்கிட்டு இருக்கும் போது கண்ணுல சிக்குனது, ஒரு பள்ளி மாணவன், அன்றைய Home Work அ எழுதிக்கிட்டே, அவங்க அப்பாவோட கடலை கடை வியாபாரத்த கவனிச்சுக்கிட்டு இருக்கும் போது எடுத்தது, என்ன ரொம்ப பாதித்த புகை படம்.....

                                      

இது ஒருநாள், கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல வர்ற ஈழத்து அவல காட்சிகளை பார்த்துட்டு, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, செம மப்பு அடிச்சிட்டு எழுதுன கவிதை, அத புகைப்படமா எடுத்தது....


                                       

இது நாங்க வேளாங்கண்ணி டூர் போனப்ப எடுத்தது,  கடல் அலையில விளையாடுறது என்னோட தங்கச்சி பொண்ணு......

                                          

இது என்னோட அறைல இருக்க குப்ப தொட்டி, இத பார்த்தாலே நான் எப்படின்னு கண்டுபிடிச்சிரலாம்.....

                                     

இது என்னோட கொடுக்கு, போட்டோ பிடிக்கும் போது எத மறைக்கிறான் பாருங்க....

                                     

இது மும்பைல கடல் தண்ணிக்கு நடுவுல  அமைந்திருக்கும்  Haji Ali தர்ஹா, எங்க அலுவலக ஜன்னல் வழியா எடுத்தது, இந்த பாவா அருளால ஒரு குறிப்பிட்ட நேரத்துல மட்டும், கடல் தண்ணி விலகி, இங்க போறதுக்கு வழி விடுமாம், அப்பறம் மூடிக்கொள்ளுமாம், அப்படின்னு சின்ன வயசுல புருடா விடுவாங்க,  அப்பறம் தான் தெரிஞ்சிச்சி High Tide/ Low Tide ன்னால ஏற்படுதுனு.....

சோதனை பதிவுக்கு இது போதும்.....இதுக்கு மேல உங்கள சோதிக்க விரும்பல.....

Jan 7, 2010

கருப்பு வைரம்- "நிலக்கரி" ய பத்தி தெரிஞ்சுக்கங்க- ( Coal ) பகுதி-1

 

                                             கருப்பு வைரம் என்று அழைககபடுகிற
நான் இருக்கிற "நிலக்கரி" ( Coal Feild ) துறை சம்பந்தமா ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள ஆசை, வள வளன்னு ரொம்ப Tecnical லா எழுதி போரடிக்க விரும்பல, ஆனாலும்  படிக்கிறவங்க இத பத்தி A  to Z ( from Process to User )தெரிஞ்சிகனும்கிரதனால இத ஒரு Visual Treat அ குடுக்கலாம்னு ஒரு ஐடியா, கூடவே, அது எப்படி வியாபாரம் செய்யபடுகிறதுங்கிற விசயத்தையும், ஒவ்வொரு கட்டமா விளக்க போறேன், அதுக்கு முன்ன நிலக்கரி பத்தி ஒரு சின்ன அறிமுகம்...

கூட்ஸ் ரயில் வண்டியில, நிரப்ப பட்டு, எங்கேயோ, அனுப்ப படுவதற்காக, நிருத்தபட்டிருக்கும் காட்சியை, நீங்க அடிக்கடி ரயில்ல போறப்ப, பார்த்திருக்கலாம்,இந்த அளவுக்கு தான் உங்கள்ள, பெரும்பாலானவர்களின் நிலக்கரி பற்றிய அனுபவம் இருந்திருக்கும்,அதுக்கு மேல இத பத்தி கூடுதலான விசயங்களை, நீங்க தெரிஞ்சிக்கணும் என்பது தான் இந்த பதிவோட நோக்கம்,

நிலக்கரி, இது ஒரு கார்பன், இந்த கார்பன் தான், பல கால கட்டங்களுக்கு பிறகு வைரமா மாறுகிறது என்பது கூடுதல் தகவல்,இது பொதுவா எல்லா நாடுகள்லயும் கிடைகிறது, ஆனால் தரம் மட்டும் நாடுகளுக்கு, நாடு மாறுபடும் ,இந்த அட்டவணைய பாருங்க...அடுத்து இதோட தரம், வகைகளை பற்றி தெரிஞ்சிக்க கிழே உள்ள வரைபடத்த பாருங்க


இதுல Lignite ங்கிறது தான்  தரம் குறைந்தது, இதுதான், நம்ம நெய்வேலியில வெட்டி
எடுக்க படுகிறது....
  
இதுல நாம பாக்க போறது, எங்க நிறுவனம் ஈடு பட்டிருக்கிற ( Imported Coal ) பற்றியது,
இத பொதுவா, இரும்பு, சிமெண்ட், மின் உற்பத்தி போன்ற துறைகள்ல துறைகள்ல உபயோக படுத்துறாங்க, சில துறைகள்ல Raw Meterial லா சில துறைகள்ல  எரி பொருளா, பெரும்பாலும் எரிபொருளா, இதோட தரமும், விலையும், இதுல அடங்கி இருக்கிற Chemical அளவுகள், மூலமாகவும், இதோட எரியும் சக்தி ( Gross Calorific Value ) மூலமாகவும், நிர்ணயிக்கப்படுகிறது, உதாரணமா கிழே உள்ள இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியோட Chemical அட்டவணைய, பாருங்க..... பொதுவா எங்க நிறுவனம், இந்தோனேசியா, ஆஸ்ட்ரேலியா, தென்ஆப்ரிக்கா,சைனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது..... 
                                                     
Origin ------------------------------------------Indonesia

Total Moisture ARB-----------------------35%
Inherent Moisture ADB ------------------16%
Ash ADB --------------------------------------6%
Volatile Matter ADB ----------------------38 - 42%
Fixed Carbon ADB -------------------------By diff
GCV Kcal/Kg ADB -------------------------5500 (+/- 100)
Sulphur ADB ---------------------------------0.6 % Max.
Size MM-------------------------------------- 0 to 50 mm


சரி நிலக்கரி பத்தி இந்த அளவு அறிமுகம் போதும், அடுத்து இதோட பிறப்புலேர்ந்து ஆரம்பிப்போம்......

கருப்பு வைரம்- "நிலக்கரி" ய பத்தி தெரிஞ்சுக்கங்க- ( Coal ) பகுதி-2

இப்ப நிலக்கரி வெட்டி எடுக்கபடுவதிலிருந்து - அதை உபயோகிப்பவரை சென்றடையும் வரையிலான நடவடிக்கைகளை Visual லா பார்போம்/கூடவே அந்தந்த கட்டத்துல வியாபார ரீதியா எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பாப்போம், வியாபார நடவடிக்கை விளக்கத்துக்கு முன்னாள் @ இந்த குறிஈடு இருக்கும்.


                                     
                                     
மேலே காணப்படும் இந்த பிரமாண்டமான இயந்திரங்கள் தான் சுரங்கம் தோண்டும் ஆரம்ப கட்ட பணிகளுக்காக பயன் படுத்தப்படுகின்றன......
                                  

                                     


                                     
ஆரம்ப கட்ட தோண்டுதல் பணி முடிந்து, ஆழப்படுத்தும் பணி நடை பெறுகிறது...
@ இந்த கட்டத்துல தான், நிலக்கரின் தரம் மற்றும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது...பிறகு சுரங்க நிறுவனத்திற்கும்,  அந்த நிலக்கரியை கொள்முதல் செய்யும் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது உதாரணமா, 10 மில்லியன் மெட்ரிக் டன்/ 48 US$ டாலருக்கு/
5 வருடங்களில் எடுத்து கொள்வதாக....   இப்படி இருக்கும் அந்த ஒப்பந்தம்...   இந்த விசயங்களை கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் Sourcing Team, 
விற்பனை இலக்கு ,எதிகால தேவை மற்றும் நிறுவனத்தின் நிதி நிலைமை  
ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்யும்/
இதன் பிறகு நிறுவனத்தின்   Finance & Risk துறை திட்டமிட்டபடி ( Projected ) இதற்க்கு தேவையான நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்யும்,
உதாரணமாக, வங்கி கடன், முதலியவை .....                           
   

                                                                                          


                                      
                                      
                                      
                                      
                                      
                                      
                                      

சுரங்கத்தின் உள்ளே நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.......


                                     


                                       

வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி, சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டுவரப்படுகிறது.....


                                    

                                   

                                   

சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட நிலக்கரி,அதன் பருமனுக்கு  தகுந்தார் போல் ( 0-50 mm/ 0-200mm ) பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது.....

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.......