Feb 26, 2010

GE யின் சேர்மனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம்.......


 மீபத்தில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு இருந்த ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட " நினைத்தேன் ஜெயித்தேன் " என்ற திரு தேவன் அரோரா அவர்களின் வெற்றி கதையை படிக்க நேர்ந்தது -மெய் மறந்துவிட்டேன், இந்த புத்தகத்தை என்னுடன் வேலைபார்த்து, தற்போது டெல்லியில் சொந்தமாக நிறுவனம் நடத்திவரும் ( கடந்த ஆண்டு 35 கோடி ருபாய் Transaction ஆம் ) என் வட இந்திய நண்பனுக்கு பரிசளிக்க விரும்பி, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இந்த புத்தகம் கிடைக்குமா என கேட்டு  கிழக்கு பதிப்பகத்தாரிடம்   தொலைபேசியில் விசாரித்தேன் , அவர்கள் இல்லை எனக்கூறிவிட, அந்த புத்தகத்தின் ஆசிரியரும், ஜப்பானின் GE நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,  IconAsia என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தற்போதைய அதிபருமாகிய  திரு தேவன் அரோரா அவர்களுக்கு, பதில் வருமா என்ற தயக்கத்துடனே ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன், ஆச்சரியப்  படும்விதமாக பதில் அனுப்பி என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டார், அது மட்டுமின்றி அவர் எழுதியிருந்த ஒரு  விஷயம்  என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திவிட்டது, உங்கள் பார்வைக்காக அந்த மின்மடலை அப்படியே கிழே தந்திருக்கிறேன்...

அதற்க்கு முன் அந்த புத்தகத்தை பற்றி ஒரு சிறு அறிமுகம்....

இந்தியாவின் மீரட் நகரத்தை சேர்ந்த, ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, 25 முறை தேர்வு எழுதியும் தோல்வியடைந்து ,கல்லூரி படிப்பை கூட முடிக்க முடியாத ஒரு சராசரி இளைஞன், வெளிநாட்டு கொள்கைகளில் சிக்கலான நடைமுறைகளை கொண்ட 1965 ம் ஆண்டுகளிலேயே, பல சிரமங்களுக்கிடையில் ஜப்பான் சென்று, ஆரம்பான காலங்களில் கஷ்ட்டப்பட்டு,பின்னாட்களில் General Electronics என்ற உலக புகழ் பெற்ற நிறுவனத்திலேயே இயக்குனரா உயர்ந்து, தற்போது Icon Asia என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அதிபராக உயர்ந்து, விடா முயற்சியும்,சாதிக்கும் வேட்கையும் இருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு உயரம் போகமுடியும் என நிருபித்த திரு தேவன் அரோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த புத்தகம்.....

அவர் ஆரம்ப நிலையில் சந்தித்த பிரச்சனைகள், GE நிறுவனத்தில் பணியாற்றிய போது எதிர்க்  கொண்ட சுய,வியாபார சோதனைகள், அதை எதிர்கொண்ட விதம், அதன் மூலம் அவர் அடைந்த பதவிகள்,நிறுவனத்தின்  இலக்குகளை அடைய அவர் மேற்கொண்ட வியாபார மற்றும் வேலை நுணுக்கங்கள், அவர் அடைந்த ஏற்ற தாழ்வுகள், Icon Asia என்ற தான் சொந்த நிறுவனத்தை தொடங்கியது வரையிலான சுவராஸ்யமான  
விசயங்களை அலுவலக சூழ்நிலையிலேயே விளக்கி இருக்கிறார், கையிலெடுத்தால் கிழே வைக்க முடியாத அளவுக்கு மிகவும் சுவராஸ்யமாக செல்கிறது இந்த புத்தகம்,

உலக பெரும் வியாபார சாம்ராஜ்யங்களின் இயக்கங்களையும்,அதன் தலைவர்களின் செயல் பாடுகளையும்,அதன் வியாபார நுணுக்கங்களையும் எண்ணி,வியப்பும் குழப்பமும்,ஆச்சிரியமும் அடைந்திருந்த எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது இந்த புத்தகம், வெறும் ஏட்டு சுரைக்காயை இல்லாமல் ஒருவருடைய அனுபவத்தில் இருந்து எடுத்து  சொல்லும் போது, அதற்கீடாக எதுவும் இருக்க முடியாதில்லையா...
இந்த ஒரு புத்தகத்தை படிப்பதும் 100 நிர்வாகவியல் புத்தகங்களை படிப்பதற்கு சமம், அதற்க்கு நான் கியாரண்டி.....வாழ்கையில் முன்னேற விரும்புபவர்களிடம் கண்டிப்பாய் இருக்க வேண்டிய புத்தகம்...

நினைத்தேன் ஜெயித்தேன் -விலை ரூ 70
கிடைக்கும் இடம்:
கிழக்கு பதிப்பகம்,New Harizone Media Pvt Ltd,No:33/15,Eldams Road,Alwarpet,Chennai-600 018
Tel-044-43009701. for Online Purchase Tamil Version-www.nhm.in- for English -www.bjain.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Tuesday, 23 February, 2010 2:38 PM
From: "Deven Arora" Add sender to ContactsTo: "ABUTHAKIR SULTAN ABUTHAKIR" Cc: "Kuldeep Jain" , badri@nhm.in, "subra balan" , "Natarajan Ramachandran"
Dear Mr. Abuthakir !


Thanks for your inspiring feedback.

It's my honor if My Book," 'NINAITHTHEN JEYITHTHEN' " did make positive difference in your life.
Please do let me know as to how I could improve its contents.

During the presentation of My Book, A Yen for Yen: Cashing Big on Dreams ...
to Dr. Manmohan Singh, Prime Minister of India, he counseled me with the following golden nugget:
'What we have done for ourselves alone dies with us;
what we have done for others and the world remains and is immortal.'


One creative way to hasten our meeting could be that you help me arrange to share my 38 years of distilled wisdom with college students in your area or in such institutions:
1. Indian Institute of Management, Ahmedabad
2. IIM-A AgriBusiness Management (ABM), Ahmedabad


I'll take care of my expenses. All you've to do to provide me with the opportunity.

You can order your copy, A Yen for Yen: Cashing Big on Dreams ... from:


Mr. Kuldeep Jain
CEO
B. Jain Group of Companies
Direct: +91 11 4567 1070
Tel.: +91 11 4567 1000
Fax: +91 11 4567 1010
E-mail: kuldeep@b.jain.com
Web: www.bjain.com
Look forward to meeting you soon ...
With my warmest regards ... deven.

Deven Arora
President,
ICONASIA, Ltd. ... We Bridge Asia.
1-2-39 Higashi Gotanda
Shinagawa-ku, Tokyo 141 0022
Japan.
Tel/Fax: 81 3 3447 6294
Cell: 81 90 3532 7009              www.iconasia-bridge.com

----- Original Message -----
From: ABUTHAKIR SULTAN ABUTHAKIR
To: deven1006@yahoo.com
Sent: Tuesday, February 23, 2010 4:42 PM
Subject: Respected Sir,

Respected Sir,

i have red your book " Ninaithen Jeyithen " in Tamil which was ( Publisher -Badri Seshadri )published by New Horizon Media -Chennai, it was a amazing experience &also realy impresed me , i would like to thanks for that, in my view that book was equal to 100 management study books, and also i eager to meet you, can you give me your appoinment when you come to india if possible , also i would like to present this book to one of my friend,jsut can you let me now the contact details of English or Hindi version Publishers.

Thanks & Regards/
Sultan Abuthakir.....Surat Gujarat.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
I'll take care of my expenses. All you've to do to provide me with the opportunity.
என்னுடைய செலவுகளை நான் ஏற்று கொள்கிறேன்,நிகழ்ச்சியை மட்டும் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர் கேட்டுகொண்டபடி,அவர் உரை நிகழ்த்த விரும்புகிற IIM,IIMA போன்ற இடங்களை அணுகும் அளவுக்கு எனக்கு தொடர்புகள் இல்லாததால்,இந்த மின் அஞ்சலை அந்நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறேன், இவ்வளவு பெரிய மனிதர் , தன் அனுபவம் நம் இளைய சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  தானாகவே விரும்பி வாய்ப்பை வழங்கி இருக்கிறார், இந்த பதிவை படிக்கும் உங்களில் யாருக்கேனும், இந்தியாவிலோ,தமிழ் நாட்டின் IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்பு இருந்தால், அவரின் மதிப்பு மிக்க கருத்தரங்கத்தை நிகழ்த்த ஏற்பாடு செய்து,நீங்களும் உங்களின் மூலம் இந்த இளைய சமுதாயமும் பயன் பெற ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்...

By..................தம்பி..............

Feb 22, 2010

தாழ்த்தப் பட்டவனும்...தாழ்த்தப் பட போகிறவனும்....

உன்னை தாழ்த்தப் பட்டவன் என்று ஒதுக்குகிறார்களே சகோதரா சில மூடர்கள், அவர்களை விட நீ எந்த வகையில் தாழ்ந்து விட்டாய்.....உனக்கு மட்டும் இந்த அவப்பெயர் எப்படி வந்தது....என்ன காரணம்.....

நீ பிரம்மனின் காலடியில் இருந்து பிறந்தவனா ?...இருக்காது, பிறப்பால் எல்லோரையும் சமமாகத் தான் படைத்திருப்பான்  அந்த ஏக இறைவன்,  அப்படி ஏற்றத் தாழ்வோடு படைத்திருந்தால் அவன் இறைவனாகவே இருந்திருக்க முடியாது.....பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் சில கீழ் தரமான மனித இதயங்களின் செயலே ...
உயர்க் குலத்தினர் என்று கூறிக் கொள்கிறார்களே அவர்களின் பிரித்தாளும் சதி என்கிறாயா ? அது உண்மையே என்றே வைத்துக்கொண்டாலும்,எத்தனையோ 
சமூகத்தினர் இருக்க ஏன் உன்னை மட்டும் காலம்,காலமாக அடிமைப் படுத்தி வைத்தார்கள் ?

எல்லாவற்றிக்கும் காரணம் நீ,  நீ மட்டும்  தான், உன்மீது தான் தவறு, உன்னை சொல்லவதை விட, உன் மூதாதயர்களைத் தான் குற்றம் சாட்ட  வேண்டும்.ஏன் அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்கிறாயா ?

Survival of the Fittest, எனப்படும் ஜீவ,மரண தத்துவம் பற்றி கேள்விப் பட்டிருப்பாய்,
" எந்த ஒரு உயிரினம், சூழ்நிலையை எதிர்கொண்டு, சமாளித்து வாழக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வில்லையோ அது பின்தங்கி விடுகிறது அல்லது அழிந்து விடுகிறது " இப்போது சொல்....

எல்லோரையும் போல் சம பலமும், தகுதியும் இருந்தும், போட்டி போட்டு உழைத்து 
முன்னேற  தயங்கியது உன் மூதாதையரின்  குற்றமா இல்லையா ? கிடைத்ததே போதுமென்று நிறைவு கொண்டது அவர்கள் குற்றமா இல்லையா ? அடங்கி போனது அவர்கள் குற்றம், புதிதாய் முயற்சிக்க தயங்கியது அவர்கள் குற்றம், வாழ்க்கைத் தேடலில் எல்லா சமூகத்தாரும் வேகமாய் ஓடிகொண்டிருந்த போது, சம பலம்  இருந்தும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் குற்றம்,  பலி மட்டும் உன்மீது.......

நீயும் அவர்கள் செய்த அதே தவறைத் தான் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறாய், குலத் தொழிலெல்லாம் உன் அப்பனோடு போகட்டும், சலுகைகளுக்காக கெஞ்சிக்கொண்டிருக்காதே, வெளியே வா கோடிக்கணக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன...படிப்பும் பணமும் இல்லையே என்று தயங்குகிறாயா ? படிக்காத மேதைகளையும், புத்திசாலித்தனமே இல்லாமல் கோடிகளை குவித்தவர்களை நீ பார்த்ததிலையா....

உனக்கு இப்போது தேவை தீவிர முயற்சியும், புதுமை தேடலுமே, ஆரம்பத்தில் சில கஷ்ட்டங்களை நீ எதிர்கொண்டே ஆகவேண்டி இருக்கும்...அதையும் எதிக்கொள்ளும்  மான நிலையோடு வெளியே வா....

இந்த அவபெயரும்,அடிமைப்பட்டுகிடந்ததும்  உன்னோடு போகட்டும், நாளை வரும் உன் சந்ததிகளை  எல்லோருக்கும் சரிக்கு சமமானவர்களாய் வாழச் செய்யவேண்டியது உன் கடமை.....உன் பொறுப்பு...
இந்த கருத்து  எந்த சகோதரருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.... 
காலம் நாளை மாறலாம்...
காட்சி எல்லாம் தெளியலாம்..
சோகமென்ன தோழனே...
சூழ்ச்சி வெல்வாய் வீரனே..
எதிர்த்து நின்று போரிடு...
நீயும் வாள் எடு.....

சரி அது யாரு தாழ்த்தபட போகிறவர்கள் என்று யோசிக்கிறீர்களா ? ஏன் அது நீங்களாகவோ,நானாகவோ கூட இருக்கலாம்...

" ஏனோ தொடர் தோல்விகளால் நான் இருண்டு போயிருந்தாலும்,இன்னதென்று விவரித்துச் சொல்லமுடியாத ஓர் அபாரமான தன்னம்பிக்கை என்னிடமிருந்தது, நிச்சயம் எனக்கொரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உளமார நம்பினேன் " -தேவன் அரோரா -CEO ( GE )

இந்த நம்பிக்கையும், கனவும் இப்போது  இருக்கிற இளைஞர்களிடம் இல்லை என்று நினைக்கிறேன், இருக்கிற வேலையே போதும், இதில் உயர் பதவிகளை அடைந்தால் மட்டும் போதும் என்கின்ற சாதாரண மனநிலை தான் நிறைய பேர்களிடம் இருக்கிறது,அடுத்த கட்ட திட்டங்கள்  கூட இருப்பதில்லை....அடுத்தவர்களை சார்ந்திருப்பதை நினைத்து சிறிதளவு கூட வெட்கப்படுவதில்லை இவர்கள்....இதன் காரணமாக சமீபத்தைய Recession சமயத்தில என்ன ஆனது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்....

இருக்கிறத விட்டுட்டு, பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது, இதுவே போதும் என்று எவன் ஒருவன் தன்னிறைவு அடைந்துவிடுகிறானோ,அவன் தேங்கிய சாக்கடையாக போகிறான் என்பது மட்டும் நிச்சயம்....இது பழைய மொழி, இப்போதைய சூழ்நிலைக்கு  இதெல்லாம் ஒத்து வராது....

ஒரு விஷயம் தெரியுமா, எவனுக்கு  கனவுகளும்,ஆசைகளும் பிரம்மாண்டமானவையாக இருக்கிறதோ, அவனுடைய   தற்போதைய முயற்சிகளில்/வேலைகளில் எத்தகைய  இடையூறுகளும், கஷ்டங்களும் வந்தாலும் அவன் பாதிக்கப்பட மாட்டான்..அவனுக்கு மன அழுத்தமும் வராது, அதனால் அவன் உடல் நலமும் பாதிக்கப்படாது, அவன் மன அமைதி தேடி எந்த சாமியார்களையும் தேடி போகமாட்டான்...இதென்ன பெரிய விசய்ம்கிற மாதிரியான  ( Just Like That ) மனநிலையில் இருப்பான், காரணம் அவனுடைய கனவுகளுக்கு முன்னாள் இந்த விஷயங்கள் ஒரு பொருட்டாகவே இருக்காது.....

 நீங்கள்  எந்த துறையில் இருக்கிறீர்களோ, எந்த துறையை நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த துறையில் தற்போதைக்கு முன்னணியில் இருக்கும் சாதனையாளரை மிஞ்சிக்காட்ட வேண்டும் என்று Atleast கனவாவது காணுங்கள், கண்டிப்பாய் மாற்றம் வரும் உங்களுக்குள்  மாற்றம் வந்தால், ஏற்றம் வரும், ஏற்றம் வந்தால்,பணம் வரும், பணம் வந்தால் உங்கள் சந்ததியே ஏற்றம் பெரும் என்று தான் சொல்ல வருகிறேன்...பணம் தான் பாஸ் எல்லாமே....

வெறும் கனவு மட்டும் இருந்தால் வெற்றி வந்துவிடுமா, முயற்சி எடுங்க, ஒரு விசயத்துல, ஒரு மனிதன் ஜீனியஸ் ஆகுவதற்கு, அந்த விசயத்திற்காக 10000 மணி நேரம்  உழைத்தால் மட்டுமே  போதும் என்று ஒரு சமீபத்தைய ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கிறார்கள், அடைய விரும்புகிற கனவுக்காக குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஒதுக்குங்க, வருசத்துக்கு 720 மணிநேரம் , 5 வருசத்தில கிட்டத்தட்ட பாதி கனவு நிறைவேறி இருக்கும்.....
என்னடா இவன் பணத்த பற்றியே பேசுகிறானே, குணத்தை  விடவா பணம் பெரியது என்று தத்துவம் பேசுகிறவர்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.....

இப்ப சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமா ஓடிய 2012 ங்கிற ஆங்கில திரைபடத்தை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள், அதில் உலகம் அழிவது போல் காட்டப்படும், ஒரு உதாரணத்துக்கு உண்மையிலேயே உலகம் அழிகிறது என்று வைத்துக்கொள்வோம், என்ன நடக்கும், அந்த படத்தில் யார்,யாரெல்லாம் உயிர் தப்பிப்பதாக காட்டாப்படும், முக்கிய தலைவர்களும்,பணம் படைத்தவர்களும் தான், அதே தான் மாதிரி தான் உண்மையிலும் நடக்கும்...நமக்கெல்லாம் டாட்டா ,பைபை காட்டிவிட்டு அவங்க போய்கிட்டே இருப்பாங்க......

இப்போதைக்கு  நடக்கிற FOS ங்கிற ஜீவ,மரண போராட்டத்தில், உங்க சந்ததியும் ஜெயித்து,நிலைத்து நிற்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பணம் வேணும் மக்கா,கோடி,கோடியா பணம் வேணும், அதற்க்கு  நீங்கள்  முயற்சிக்க விரும்பவில்லை என்றால் இந்த பாழாய் போன பணம் படைத்த உலகத்தாரால் நீங்களும் ,உங்கள் சந்ததியும் தாழ்த்தப் பட்டவர்களாக ஆக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.....

நம் இந்தியா வல்லரசு ஆகுவதற்க்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும்,இந்த பொன்னான சூழ்நிலையில், அதில் முக்கிய பங்கு வகிக்க போகின்ற, முக்கியஸ்தர்களில்,நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுங்கள்....

கடவுளோட விதி, செண்டிமெண்ட்,பணம் வந்தால் நிம்மதி இல்லாமல் போய்விடும்,பணத்த விட குணம் தான் பெரியது, இப்படியெல்லாம் வெட்டிப் பேச்சி, பேசிகிட்டு தோற்று போய்விடாதீர்கள்... இது தன்னம்பிக்கை கட்டுரை இல்லை, அதை எழுதும் தகுதியும் எனக்கு இன்னும் வரவில்லை, இதுதான் Practical ...மாமே,Practical...அப்பறம் உங்க இஷ்டம்....

" எல்லா சாதனைகளும் ஓர் ஆசையிலிருந்து தான் தொடங்குகிறது,இதை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்,பலவீனமான ஆசைகள்,பலவீனமான வாழ்க்கையையே கொடுக்கும்-சிறிய அளவிலான நெருப்பு, சிறிதளவு வெப்பத்தையே தரக்கூடியது போல " - நெப்போலியன் ஹில்.
By........தம்பி......

Feb 19, 2010

எதுத்த வீட்டு பார்வதியக்கா பொண்ணு....

இது ஒரு காதல் கடிதம் தான், என்ன ஒன்னு கல்யாணமாகி குழந்தை குட்டிகளோட இருக்குற நம்ம கார்த்திக், அடுத்தவனோட பொண்டாட்டிக்கு  எழுதுறது தான் இங்க சிக்கலே, அவ வேற யாரும் இல்ல சின்ன வயசுல ரொம்ப தீவிரமா ஒருதலையா காதலிச்ச பொண்ணுதான்..அவ  இவன காதலித்தாளான்னு தெரிஞ்சிக்க முடியாமலேயே முடிந்துப் போன  காதல் அது.....

அவ மேல வச்சிருந்த புனிதமான  காதல சொல்ல ஒரு அருமையான வாய்ப்பு நம்ம கார்த்திக்குக்கு இப்ப கிடைச்சிருக்கு, இப்ப காதல சொல்லி ஒன்னும் நடக்க போறதில்லை, அவ அடுத்தவனோட மனைவின்னு  அவனுக்கும் நல்லாவே  தெரியும், இருந்தாலும் இத்தனை வருசமா,அவன் சுமந்துகிட்டு இருந்த காதல் சுமைய இறக்கி வைத்திட்டோம்கிற
திருப்பதி  அவனுக்கு That's All..... 

இந்த ஒருதலைக்காதல் அனுபவம் நம்மல்ல நிறையப் பேருக்கு இருக்கும், So நம்மளும் கார்த்திக் கூடவே போய்.....என்ன ஆகுதுன்னு பார்போம்,

 கொஞ்சம் அலுப்புப்  பார்காமக்  கடைசி வரைக்கும் படிச்சிடுங்க, ஒரு விஷயம் இருக்கு.....

அன்புள்ள சோபனா,

முதல் காதலும், முதல் முத்தமும், வாழ்நாளில்  மறக்கவே முடியாத விசயங்க அக்கான்னு  உணர்ச்சிவசப்பட்டு, அழுதுட்டியாமே, என் மனைவி  சொன்னா ....

நீயுமா, என்னை காதலிச்ச  ? ஒரே ஒரு கண் ஜாடையில கூட சொல்லி இருக்கலாமேயடி, அந்த அழகான, மறக்க முடியா நாட்களை நினைச்சி  நானும் எத்தனையோ முறை வருதப்பட்டுருக்கன்டி  சோபனா, நீ அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தாலும் , எனக்கு நீ எப்பவுமே  பார்வதியக்கா பொண்ணு தான், அதனால  "டீ" போட்டு எழுதுறத தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்....

1 .நான் 12 படிச்சிகிட்டு இருந்தேன், அப்ப நீ ரொம்ப அழகா இருப்ப தெரியுமா,ரெட்ட ஜட போட்டுக்கிட்டு, செக்க செவேல்னு, பார்வதி அக்கா கூட சாட்சாத் அந்த மகாலச்சுமியே வந்து எனக்கு பொறந்துருக்கான்னு அடிக்கடி, சொல்லும் , அந்த அழகுல மயங்கின எம்மனசுல காதல் ஜுரம் வந்து நெருப்பாய் கொதித்தது உனக்கு  தெரிஞ்சிருக்க ஞாயம் இல்ல தான் , ஏன்னா ஒனக்கு அப்ப 14 வயசுதான்,நீ பாட்டுக்கு ரொம்ப கூல எங்க வீட்டுக்கு வருவ,போவ....

2 . நீ என்ன எதார்த்தமா பார்த்தா கூட, எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா, நல்ல வெயில் காலத்துல, நம்ம தெப்ப குளத்துல குளிக்கும்  போது மேல இருக்க தண்ணி சூடவும், அதுக்கு கிழே கொஞ்சம் வெது வெதுப்பவும், அதுக்கு கிழே ஜில்லுன்னும் இருக்கும் தெரியுமா, அந்த மாதிரி ஒரு வித்யாசமான,கலவையான ஒரு  உணர்வு வரும்....

3 நீ என்னோட உணர்வ  புரிஞ்சிக்காம இருக்கத நினைச்சி,
 .என்னுள்ளே, உன்மீதான காதல் ஈர ஊற்றாய் கசிந்து சுரக்க,
 உன்மனமோ  ஏதுமறியா பாலையாய் வறண்டு கிடக்கிரதுன்னு...
 கவிதைகூட எழுதினேன், அந்த நோட்ட கூட இப்பவும் பத்தரமா வச்சிருக்கேன்......

4 .நீ தனியா வரும் போது மனச தைரிய படுத்திகிட்டு காதல சொல்ல வாய தொறப்பேன், பயத்துல வார்த்தையே வெளியே வராம வாய் முடிக்கும்....

5 . அதையும் மீறி சோபனா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு ஆரம்பிப்பேன், அந்தே நேரம் பார்த்து தான் எவனாச்சும் அந்த பக்கம் வருவான், அப்பறம் சொல்லுறேன்னு பேச்சை நிறுத்திட்டு அவனோட கிளம்பிருவேன்....

6 .அப்ப நீ வயசுக்கு வந்துட்ட , சில நேரம் எங்க வீட்டுல யாருமே இல்லாத நேரத்துல நீ வருவ, நானும்  இதுதான் லவ்வ சொல்ல சரியான  நேரம்னு நினைச்சி  நெருங்கி வருவேன், அத்த இல்லையான்னு கேட்டுட்டு Just Like நீ போய்கிட்டே இருப்ப.... என்னடா ஒரு 16 வயசு பொண்ணுக்கு இதகூட புரிஞ்சிக்க தெரியாதான்னு அப்ப வரும் பாரு எனக்கு கோவம்...

7 & 8 .இவ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறா, இனிமேலும் தயங்க கூடாது இன்னைக்கு எப்படியாச்சும், சொல்லியே தீரணும்னு முடிவுப்  பண்ணி , காலையிலேயே எந்திரிச்சி குளிச்சிட்டு ரொம்ப வேகமா உன்ன தேடிகிட்டு வருவேன், அப்பத்தான் நீ பய பக்தியோட கோவில் பிரகாரத்த அடிமேல் அடிவைத்து மெதுவா சுத்தி வருவ.....கோவில்ல வச்சி ஏதும் சொல்ல கூடாதுன்னு வாய மூடிகிட்டு, மனச அடக்கிகிட்டு  திரும்பிடுவேன்....

9 . சில நேரம் கணவர்  இல்லாமலே, இவ்வளவு வறுமையிலும்  உன்ன, இந்த அளவுக்கு, அடக்கமாகவும், தெய்வ பக்தியோடவும் வளர்த்த உங்க அம்மாவ நினச்சா பெருமையா இருக்கும்...நீ எனக்கு  கிடைத்தா என் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு கனவு கூட  காணுவேன்....

10 . உன்கிட்ட நேரடியா சொல்லத்தான் பயம், கைக் காலெல்லாம் நடுக்குதுன்னு யோசிச்சி, ரொம்ப ஈசியான ஒரு வழிய தேர்ந்தெடுத்தேன், சிம்பிளா, மனசுல இருக்க என் காதலையெல்லாம் கொட்டி ஒரு காதல் கடிதம் எழுதி சட்டை பக்கெட்டுல வச்சிக்கிட்டு, உன்ன பார்க்க வெளிய கிளம்புனேன்....அந்த நேரம் பார்த்துதான்.....?

அதுக்கு முன்னாடி கிழே இணைத்துள்ள Scan கப்பிய பார்த்துடுங்க....


நேத்து தண்ணியடிக்க, சைட் டிஷ்சா  வாங்குன கல்லைய இந்த பேப்பர்ல தான் மடிச்சி குடுத்தான், மப்பு ஏறுனதுக்கு அப்பறம் எதார்த்தமா இதுல Similar Or Opposites ங்குற படிச்சப்ப தோன்றின ஐடியாதான் இந்த காதல் கடிதம்,இதுல உள்ள வார்த்தைகள வச்சே ஒரு பதிவு எழுதலாமேன்னு முயற்சி பண்ணி இருக்கேன்
 கார்த்திக் எழுதின லெட்டர்ல Bold பண்ணியிருக்க வார்த்தையும், இந்த Scan காப்பியையும் மேச் பண்ணி பார்த்துக்கங்க, நல்லா இருந்தா சொல்லுங்க இன்னும் 10  பாய்ன்ட் பாக்கி இருக்கு அத அடுத்த பதிவுல எழுதுறேன்....நீங்க டிலே பண்ணிராதிங்க, ஏன்னா சோபான திங்கள் கிழமை ஊருக்கு கிளம்பிடுவா, அப்பறம் கார்த்திக் லெட்டர அவகிட்ட குடுக்க முடியாது.....

By.............தம்பி.......


Feb 17, 2010

எழுதுவது எப்படி ? - எழுத்தாளர் சுஜாதா....

என்னடா சுஜாதா, சார் பேர சொல்லி இவன் அடிக்கடி ( அவரோட பாஷையிலேயே சொல்லனும்னா )  ஜல்லி அடிக்கிறானே, எழுதுற பதிவ போனி பன்னுரதுக்கான டெக்னிக்கா, அப்படின்னு நீங்க யோசிக்கிறது புரியிது.....

மன்னிச்சிருங்க, தமிழ்ல எழுத்துன்னு வந்துட்டாலே, எத்தனையே சிறந்த எழுத்தாளர்கள் இருந்தாலும் நம்ம தல தான் முன்னாடி வந்து நிக்குது அதுக்கு நான் என்ன செய்ய...( I Want & Wish to be Every Think Best in My Life )....

தலையோட முகத்த  பார்த்து ரொம்ப நாளாச்சி இல்ல, கொஞ்சம் பார்த்துக்கங்க...

நேற்று, நான் படிச்சி முடிச்ச பழைய புத்தகத்த எல்லாம் சேர்த்து வச்சிருந்த அட்டை பெட்டிய நோண்டிகிட்டு இருந்த போது, சுஜாதா சார் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு இருந்த " பார்வை 360 " ங்கிற ஒரு அருமையான புத்தகம் கண்ணுல பட்டது, அதுல போகிற போக்குல நம்ம சுஜாதா சார்,எப்படி ஒரு புது எழுத்தாளர் எழுதணும்,அதுக்கு என்னென்ன வழிமுறைகள பின்பற்றனும்கிற ரீதியில சில குறிப்புகள அவரோட அனுபவத்துலேர்ந்தே குடுத்திருந்தாரு, சரி நம்மளுக்கும் பதிவு எழுத மேட்டரு எதுவும் கிடைக்கலையே, இன்னைக்கு நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு எதுவும் கருத்து சொல்லாம  இருந்தா நைட்டு குவாட்டர் + கட்டிங் அடிச்சாலும் தூக்கம் வராதே அப்படிங்கிற கெட்ட எண்ணத்தில அத அப்படியே கொடுத்திருக்கிறேன், படிச்சி பாருங்க உங்களுக்கும் எழுத்தும் போது உதவியா இருக்கும்...அதுக்கு முன்னாடி உயிர்மை பதிப்பகத்துக்கு ஒரு நன்றிய சொல்லிருவோம்........அப்பறம் மானுஷ்ய புத்திரன் சார் எம்மேல Copy Rights சுக்காக கேச,கீச போட்டுருவாரு.....
நன்றி-சுஜாதா சார் & உயிர்மை பதிப்பகம்....
புத்தகத்தின் விலை-ரூ.40
கிடைக்கும் இடம்-உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை-600 018.Tel No:044-24993448,E-Mail.uyirmmai@gmail.com.

( பக்கம் 28  )
" இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நான்கு முறை போர் மூண்டிருக்கிறது.சுதந்திரம் வந்த உடனே முதல் முறை.1965-ல் இரண்டாவது முறை.1971-ல் மூன்றாம் முறை.போரின் விளைவாக பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து பங்களாதேஷ் உருவாயிற்று.இந்தப் போரைப் பின்னணியாக அமைத்து ' பதினாலு நாட்கள் ' என்ற தொடர்கதையை அந்த யுத்தம் நடந்த சூட்டில் எழுதினேன்.'எப்படி பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு டாக்காவில் நடந்த போரைப் பற்றி எழுதமுடியும் ?' என்று ஓர் எழுத்தாளர் கிண்டல்கூடச் செய்திருந்தார். ஓர் இந்திய விமானப் படை பைலட் கிழக்கு பாகிஸ்தானில் குண்டு போடச் சென்றபோது,விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் விழுகிறான்.இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் மாட்டிக்கொள்கிறான் என்று கதை போகிறது.இந்த கதை  செளரி அவர்களால் 'செளதா தின்' என்று இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்தது. இந்திய விமானப்படையில் எனது நண்பர் விங் கமாண்டர் ரங்கநாதன் உதவியுடன் டெக்னிக்கல் சமாசாரங்கள் பலவற்றை Close Air Space. தொடர்பான விஷயங்கள் எழுத முடிந்தது. கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல.அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம்.

தெரியாத புதிதான விசயங்களை எழுதும்போது,இந்த முறையை அமெரிக்க பெஸ்ட் செல்லர் எழுத்தாளரான ஆர்தர் ஹெய்லி முதலில் பயன்படுத்தினார்.அவருக்குப்பின் ராபின் குக், ஜான்  க்ரெஷம் போன்றவர்கள் வெற்றிகரமாக எழுதினார்கள்.இவர்கள் எல்லாம் வருஷக் கணக்கில் தகவல் சேகரித்து, கதையின் சூழலிலேயே வாசம் செய்து எழுத வல்லவர்கள். அந்த அளவுக்கு வசதியும் அவகாசமும் இல்லையெனினும் எழுத்தும் விஷயம் எதுவானாலும் அதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் எழுதுவது என்கிற முறையை அப்போதிலிருந்தே கடைப்பிடித்தது என் வெற்றிக்கு ஒரு முக்கியக்காரணம். கணேஷ் வசந்த் நாவல்களில் வரும் ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. சட்ட சம்பந்தமான விஷயங்கள் ஏறக்குறைய சரியாகவே இருக்கும். அதேபோல்,பெங்களூர் பின்னணியில் நான் எழுதிய ' கமிஷனருக்குக் கடிதம்' ஆஸ்பத்திரியை மையமாக வைத்து 'பேசும் பொம்மைகள்', ஆடிட்டரி ஹாலுசினேஷன் என்னும் உபாதையை வைத்து எழுதிய ஆ போன்றவைகளிலும் இந்தத் தகவல் சேகரிப்பு இருக்கும். ஒரு சாமியார் மேல் இளம்பெண் கேஸ் போடுவதாக எழுதிய 'மாயா' குறுநாவலுக்காக ஸர் ஜான் உட்ராபின் 'தந்த்ரா' புத்தகத்தில் ஹேவஜ்ர பூஜை பற்றி விவரமாகப் படித்து எழுதினேன். இம்மாதிரி நிஜமாகவே  ஒரு பிரபல யோகியின்மேல் ஒரு பெண் வழக்குத் தொடர்ந்ததாக ஒரு வக்கீல் அண்மையில் எனக்கு மெய்ல் அனுப்பியிருந்தார். பல விசயங்களை எழுத வேண்டியது முக்கியம். படித்துவிட்டு எழுதுங்கள்.இல்லையேல்,கண்ணாடியில் தன்னழகையே பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரே கதையைத் திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டிருப்பீர்கள்.

புதிய எழுத்தாளர்களுக்கு இந்த அறிவுரை பயன்தருவது.உங்கள் சூழலுக்கு வெளிப்பட்ட எதையும் எழுதுவதானால் அதைப் பற்றிப் படித்துவிடுங்கள்.அல்லது தெரிந்தவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

( பக்கம் 38 )

"அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை. எழுத்தில் எந்த அளவுக்கு அந்தரங்க விஷயங்கள் கலக்கவேண்டும்: எந்த விகிதத்தில் உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும் என்பது பற்றி கருத்துக்கள் வேறுபடுகின்றன. என்னைக் கேட்டால் முழு உண்மையை அப்படியே எழுதக்கூடாது. எப்படியும் நான் எழுதமாட்டேன். தின வாழ்கையில் உள்ள சம்பவங்கள் இலக்கிய அந்தஸ்து பெற,அவற்றில் ஒரு காலம் கடந்த உண்மை பொதிந்திருக்கவேண்டும்.இல்லையேல் அது சாதாரணச் சிறுவனின் நாட்குறிப்பு போல, காலை எழுந்தேன், பல் தேய்த்தேன், குப்பை பொறுக்கினேன் என்று அற்பமாக முடிந்துவிடும். முழுக்க முழுக்க கற்பனையாகவும் எழுத முடியாது. அப்படி எழுதினால் அது கதையல்ல fairy tale,fantasy. உண்மையும் கற்பனையும் கலக்க வேண்டும். இந்த கலக்கல், ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு கடையில் மட்டும் கிடைக்கும் நன்னாரி சர்பத் போல தனிப்பட்டது. இந்த விகிதாச்சாரம் ஆளுக்காள் மாறுபடுவதைக் கவனிக்க, கோபிகிருஷ்ணன்,தி.ஜானகிராமன்,ஆதவன் இம்மூவரின் கதைகளைப் படித்துப் பாருங்கள் " 

என்ன சுஜாதா சாரோட அறிவுறையப் படிச்சாச்சா, நல்லா எழுதுங்க,நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்....

கொஞ்சம் பெரிய பதிவாப் போச்சில்ல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இந்த ஜோக்க படிங்க.....சுட்டது தான்.....

At 18 a Lady is Like a Football, 22 Men Behind Her......
At 28 a Basket Ball, 10 Men Behind Her.......
At 38 a Golf Ball, 1 Man Behind Her......
At 48 a Table Tennis Ball, 1 Man Pushing Her to the Other......

By.............தம்பி................

Feb 15, 2010

நீங்க கடவுளை பார்க்க வேண்டுமா ?

நீங்க,   கடவுளை பார்க்க வேண்டுமா ? its Not a Joke, ஆன்மீகமும் இல்லை......நாத்தீகமும் இல்லை....இது உண்மைலேயே வேற, வேற,வேற....

அதுக்கு முன்னாடி இந்த வீடியோவ கண்டிப்பா பார்த்திடுங்க......நீ யாருப்பா ? நான் ஒரு ஹிந்து மத தலைவர் + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் ஒரு  இஸ்லாமியன் மத தலைவர்  + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் ஒரு  கிருஸ்துவன்  மத தலைவர் + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் புத்த மத தலைவர் + அரசியல்வாதி  ஐயா...

நீ யாருப்பா ? நான் ஒரு பகுத்தறிவாளன்  ...நான் இவங்கள மாதிரி கேவலமான அரசியல் வாதி இல்ல ஐயா, நான் ஒரு கடவுள் மறுப்பு கொள்கையுடைய கழகத்தின் தொண்டன், ஆனா தேர்தல் நேரத்துல எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு இருக்கோ,  அந்த கட்சிக்கு ஆதரவு மட்டும் அளிப்போம் அவ்வளவு தான், எங்க பொழப்பும் ஓடனும்ல ஐயா......

ஏன் நீங்கெல்லாம்   கூட்டமா இங்கே வந்துருக்கிங்க ?

( இவர மக்களை நேரடியா சந்திக்க விட்ட, உண்மையெல்லாம் சொல்லி தங்களோட பொழப்புக்கு ஆப்பு வச்சிருவாருன்னு பயந்து,எல்லா மத அரசியல் தலைகளும் கூடிப்பேசி, இவர்கிட்ட எடக்கு,மடக்கா எதையாவது பேசி, விரட்டிடனும்னு  முடிவு பண்ணிக்கிறாங்க )
பகுத்தறிவாதி - அட லூசு பயலே நீ தானடா இல்லாத கடவுளை, பார்கனுமான்னு கேட்ட......அதான் வந்துருக்கோம்,இருக்க சாமியாருங்க பத்தாதுன்னு நீ வேற கிளம்பி இருக்கியா ? ஆளு ஒரு மாதிரி வித்யாசமா இருக்கியே மொதல்ல நீ  யாருன்னு சொல்லு ( ஆகா தமிழிஷ்,தமிழ் மணத்துல தான் கடவுள திட்டி, பக்கத்துக்கு மூணு பதிவு எழுதி உயிர வாங்குரானுங்கன்னா,இங்கயும் வந்து இவனுங்க வேலைய காட்ட ஆரம்பிட்சிட்டான்களே, )

கடவுள நீங்க பார்க்கணும்னா ?

ஹிந்து.அ.வா  - நாங்க பார்க்கணும்னா, என்ன ஒத்த கால்ல நின்னு ஆயிரம் வருஷம் தவம் பண்ண சொல்லுறிங்களா  ? அதெல்லாம் எங்க முன்னோர்கள் செஞ்சி பார்த்துட்டாங்க...
இல்ல சமாதி நிலைய அடையனுமா ? நாங்க அதையும் முயற்சி செஞ்சி பார்த்துட்டோம்...
இல்ல எங்கள சாக சொல்லுறிங்களா ?

நீ எந்த மதத்து காரன்டா, அப்படின்னா எங்க மதம் கடவுளை அடைய/உணர சொன்ன வழிகள் எல்லாம் பொய்யா ?
இப்ப நீ மட்டும்   கடவுள காட்டல, அப்பறம் இருக்குடி ஒனக்கு பூஜை.....

( ஆகா சூடாகுரானுங்க )No...No...No....அதெல்லாம் தேவை இல்லை மகனே.....நான் உங்க மதத்த குறை சொல்லவும் நான் வரவில்லை....

 இஸ்லாமிய அ.வா  -என்னா அதெல்லாம் தேவ இல்ல, அப்பறம் என்ன தான்யா செய்ய சொல்லுற, நாங்க அஞ்சி வேளை தொழுகிறோம், ஜக்காத் குடுக்குறோம், ஹஜ்ஜிக்கு போறோம், இதெல்லாம் செய்யுற எங்களாலேயே அவன பார்க்க  முடியல...உருவம் இல்லாத அவனை நீ பார்க்க முடியும்ன்னு சொன்னதுக்கே உன்ன பலி போட்டுருக்கணும்.........நீ ஒரு காபிர் மரியாதையா இங்கே இருந்து ஓடிடு ( ஆகா இவனுங்களும் சூடாகுரானுங்க )

என்ன கொஞ்சம் பேச உடுங்க நண்பர்களே.....

கிருஸ்துவ அ.வா  - நீங்க  ஒன்னும் பேச வேணாம், நாங்களும், அழுது தொழுது, கடுவுள்கிட்ட மன்றாடி மன்னிப்பெல்லாம் கேட்டு பார்த்தும்  எங்கள் தேவனை பார்க்க முடியல,
நீங்க எப்படி அவர காட்ட முடியும் சகோதரரே, ( அப்பாட இவராச்சும் கொஞ்சம் சாந்தமா பேசுறாரே )
இன்னும் கொஞ்ச நாளில் அவரே இந்த பூமியில் தோன்றி எங்களை ரட்சிக்க போகிறேன்னு சொல்லிருக்காரு, அதுக்கு முன்னாடி எங்கள் தேவனை காட்டுகிறேன் என்று சொல்லி நீ குழப்பம் செய்ய வந்திருக்கிறாயா சாத்தானே.....இறுடி மகனே , இந்த விசயத்த எங்க மேலிடத்துல சொல்லி உன்ன நசுக்க சொல்லுறேன் ( ஆகா இதுக்கு அவனுங்களே தேவலை போல, வெட்டுவோம், குத்துவோம்னு தான் சொன்னாங்க சாந்தமா பேசுறாருன்னு நெனைச்சா இவரு நம்மள இன்டெர் நேசனல் லெவல் பிரச்சனையில சிக்க வட்சிருவாரு போல )

புத்திஸ்ட் அ.வா - உலக ஆசைகளை துறந்து, ஒரு துறவி மாதிரி வாழுகிற எங்களால கூட பார்க்க முடியாதததையா நீ காட்ட போறன்னு இவரும் எகிறி குதிக்க....

( உண்மைலேயே  கடவுளை பார்க்க வழி சொல்ல வந்த கடவுளால் அனுப்பப்பட்ட , கேலக்சியின் ( Galaxy )36 வது நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த  உண்மையான ஞானி, இவனுங்க எதை சொன்னாலும் கேட்கிற மான நிலையில இல்ல, இவனுங்களுக்கு, அவங்கவங்க  மதம் தான் முக்கியம், இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நம்மள கொத்து பரோட்டா  போட்டுடுவானுங்கன்னு பயந்து,கையில வைத்திருந்த ரெண்டு புகைபடத்த தோள்ல மாட்டியிருந்த பை உள்ளே அவசர,அவசரமா சொருகிகிட்டு 
 எஸ்கேப் ஆய்ட்டாரு )

இந்த சமயத்துல இன்னொரு குரல் கேக்குது  ...."   கடவுளை நீங்க பார்க்கணுமா " வாங்க நான் காட்டுகிறேன், அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒரு வித்யாசமான மனிதர் வர்றார்...-அவர் கையிலயும்  ரெண்டு புகைபடத்த மறைத்து வைத்திருக்கிறார் ,  இவர் கேலக்சிகளெல்லாம் அடங்கி இருக்கிற பால் வெளியின்              ( Milky Way ) 9999 ஆம் கேலக்சியில இருந்து வர்றார்......இவரையும் கடவுள் தான் அனுப்பி வைத்திருக்கிறார் .....

ஏற்கனவே கொலை வெறியோட இருக்குற நம்ம மதவாதிகள் , இவரையும்  பேசவே விடகூடாது,பேச விட்ட இத்தனை வருஷம் நாம் கட்டி காத்த நமது மத கொள்கைகள் பொய் என்ற உண்மை மக்களுக்கு வெளி பட்டுவிடும் என்று   பயந்து, அவர் கொஞ்சம் வித்தியாசமா தோற்றத்தில் இருந்ததால, அவர
அடிக்கபோய் சாபம், கீபம் விட்டுடுவாரோன்னு பயம் வந்து ,அவர மறைமுகமா மிரட்ட முடிவு பண்ணுறாங்க....

அந்த ஞானி பேச ஆரம்பிக்கிறார்....

நீங்கள்   கடவுளை பார்க்க வேண்டுமா ?

பகுத்தறிவாதி -நிறுத்து நீ  ஒரு பொய்யன், இவன நம்பாதிங்க....கடவுள் என்ற ஒருவரே இல்ல அப்படின்னு எங்க பெரிய ஐயாவும், சின்ன ஐயாவும் சொல்லிருக்காங்க,இருக்க மதங்கள் பத்தாதுன்னு நீவேற புதுசா ஒரு மதத்த ஆரம்பிக்கிற  திட்டத்தோட வந்துருக்கியான்னு ஆரம்பிச்சி வைக்கிறார்....

ஹிந்து அ.வா - இங்க பாருங்க, எங்க கடவுளுக்கு கோயில் கட்டுவதற்காக, ஒரு மாற்று மதத்தினரின் வழிபட்டு தளத்தையே இடிச்சி, பெரிய கலவரத்தையே நடத்தி அப்பாவி மக்களை கொன்று....அந்த இடத்துல மறுபடியும் அவருக்கு கோவில் கட்டாம உட மாட்டோம்னு உறுதியா இருக்க எங்க புனிதமான பக்திக்கு செவி சாய்த்து  எங்களுக்கே  காட்சி தராத எங்க கடவுளையா, நீங்க காட்ட போறீங்க, இப்படி பொய் சொல்லுறத நிறுத்திட்டு மரியாதையா ஓடிடுங்க.....அவ்வளவு  தான் சொல்லுவோம்...கேக்கல மும்பைல இருக்க எங்க ஆளுகிட்ட சொல்லி நீங்க வெளியில கூட நடமாட முடியாத அளவுக்கு பண்ணிருவோம்......

இஸ்லாமிய அ.வா  - எங்கள் ஏக இறைவனுக்காக, ஜிகாத் ங்கிற   பெயரால் அப்பாவி உலக மக்களை கூடுமானவரை கொன்று குவிக்கிற புனித பணியை செய்து வருகிற எங்களுக்கே  காட்சி குடுக்காத கடவுளை நீங்க பார்க்க வழி சொல்லுகிறேன்னு நீங்கள் சொல்வதை  நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம், இதை மீறினால் உங்க மேல "பத்வா" விதிப்போம்,அப்பறம் உங்க இஷ்டம்......  

கிருஸ்துவ அ.வா -  நாங்க அவங்கள மாதிரியெல்லாம் இல்லைங்க,நாங்க ஏழைகளுக்கு  உதவி செய்கிறோம், படிக்க விரும்புகிறவர்களுக்கு  கல்வி கொடுக்கிறோம், அவங்க அசந்தா மட்டும் எங்க மதத்துல சேர்த்துக்குவோம், எங்க தேவனுக்காக பிரபல பதிவர்கள் மாதிரி கூட்டம் சேர்க்கிறோம், அவருக்கு கூட்டம் சேர்க்கிறதுக்காக நாங்க எதை வேணும்னாலும் செய்வோம், இந்த மகத்தான எங்கள் சேவையை மதித்து எங்களுக்கு மட்டும் மீட்சி அளிக்க,எங்கள் தேவன் வரபோகிறார், எங்கள் மதத்தில் சேராத மற்றவர்களுக்கு இந்த சலுகை இல்லைங்க....அதனால நீங்களும் எங்க மதத்துல சேர்ந்துடுங்க நம்ம எல்லாம் சேர்ந்து மத்தவங்கள மூளை சலவை செய்யலாம்.....

புத்திஸ்ட்  அ.வா - அன்பரே நாங்க அமைதியானவங்கன்னு தப்பா  நினைச்சிராதிங்க இலங்கைல நாங்க செய்த அட்டுளியத்த பத்தி ஈழ தமிழர்கள் கிட்ட கேட்டு பார்திருந்திங்கன்ன, இங்க வருவதுக்கே யோசிட்சிருபீங்க.....மரியாதையா எடத்த காலி பண்ணிருங்க அவ்வளவு தான் சொல்லுவோம்,

இப்படி ஆளாளுக்கு அந்த ஞாநிய மிரட்ட, துண்ட காணோம், துணிய காணோமுன்னு ஓடி போய், கடவுள்கிட்ட ......தல உன்னோட பேர சொல்லிக்கிட்டு அலைகிற இந்த மதவாதிகள் இருக்கிறவரை, அப்பாவி மக்களை  நீனே நேர்ல போனாலும் திருத்த முடியாது தலன்னு  முறை இட்டாரு

 நான் எல்லாருக்குமே பொதுவானவன்னு  புரிஞ்சிக்காம, என்னோட பேர சொல்லியே அடிச்சிகிட்டு சாகுரானுங்கலேன்னு பரிதாப பாட்டு, என்னை பற்றிய  உண்மைய சொல்ல சொல்லி, நான் அனுப்புன தூதர்களையே மிரட்டி அனுப்பின மனிதர்களை   நினைத்து கடவுள்  தலைல அடுச்சிகிட்டு,எக்கேடு கெட்டோ போங்கடான்னு சொல்லிட்டு வேற வேலைய பார்க்க போயிட்டாரு.......


சரி அந்த கடவுளால் அனுப்ப பட்ட  இரண்டு ஞானிகளும் கடவுளை பார்க்க என்னத்தான் செய்யணும்ன்னு சொல்ல வந்தாங்க, அவங்க கையில மறைத்து வைத்திருந்த அந்த ரெண்டு புகைப்படம் தான் என்ன .....

கிழே பாருங்க.....
இப்படி குறிகிய சிந்தனையோட, கடவுள்  படைத்த ஒரு சின்ன கிரகமான ( பூமி )உலகத்தை பற்றிய   சிந்தனைகளை  மட்டும் மனதில் வைத்து  கொண்டு , குறுகிய மனதோடு,  கடவுளை பார்க்க வேண்டி  நீ சுற்றும், முற்றும் நோக்கினால், உங்கள் கண்களுக்கு கடவுள் தெரிய மாட்டார், இந்த பதிவ எழுதுன தம்பி மற்றும் பிரபல பதிவர்களோட இத்து போன மூஞ்சி மட்டும் தான் தெரியும்......So....
உங்கள் சிந்தனைகளையும், மன ஓட்டத்தையும் விசாலமாக்கி,
உங்கள் எண்ணங்களை இந்த நிகழ் உலக நடப்புகளிலிருந்து விலக்கி வைத்துவிட்டு, உங்கள் மனக்கண்ணால் கடவுள் படைத்த முழு அண்ட வெளியை ஒரே ஒரு நிமிடம் பாருங்க...( உங்கள் மனம் அண்டை வெளிக்கும் வெளியே இருக்கட்டும், மேஜை மேல் இருக்கும் பந்தை பார்பதுபோல் பாருங்கள் ) இறைவனின் பரிபூரண அழகும்,பிரமாண்டமான வடிவமும், அவனின் ஆளுமையும் தெரியும்.....அவன் அழகினை தரிசித்த மகிழ்ச்சியில்,உன் கடவுள்,என்கடவுள்,உன்மதம்,என்மதம் என்ற அறியாமை உங்கள் மனதிலிருந்து தெறித்து விலகி ஓடும், ஒரு ஆழ்ந்த,பரிபூரண அமைதிகிட்டும்.....

என்னோட கண்ணுக்கு கடவுள் தெரியிராருப்பா ,
உங்க கண்ணுக்கு தெரியிறாரா....?

Last but not Least : பகுத்தறிவாளர்களே, மூட நம்பிக்கைகளை சாடுங்கள், கடவுளரை பழிக்காதீர்கள் Please....

என்னோட Boss சுஜாதா சார் கடவுளை பற்றி விளக்கும்  போதெல்லாம் நம்மாழ்வார்  பரசுரம் ஒன்னு குறிப்பிடுவார்...இதோ உங்களுக்காக.....

உளன் எனில் உளன் அவன்
உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்
அருவம் இவ்வுருவுகள் அவை
உளன் என இலன் என
குணம் உடைமையில்
உளன் இரு தகைமையோடு
ஒழிவிலன் பரந்தே.

கடவுள் இருக்கிறான் என்று சொன்னாலும், இல்லை என்று சொன்னாலும்  இருக்கிறான்,உளன் அலன் என்கின்ற இரண்டு குணங்களையும் உடையவன் என்பதால்,உருவமுள்ளது,உருவமற்றது எல்லாமே, அவனுடைய ஸ்தூல சரீரமும்,சூட்சும சரீரமுமாகும், எல்லா காலங்களிலும்,எல்லா இடங்களிலும் உள்ளவன்......நன்றி- உயிர்மை பதிப்பகத்தின்- கடவுள் ( சுஜாதா )புத்தகத்திலிருந்து.....

இது, புனே குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது ஏற்பட்ட  ஆதங்கத்துளையும்,கோவத்திலும் எழுதுனது....

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்....

By............தம்பி.........................


Feb 13, 2010

குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம்.....வாங்க

எனக்கு பதிவு  எழுதி எதாவது பெருசா சாதிக்கனும்ன்னு எந்த ஆசையும் இல்ல, எதோ மனசுல பட்டத எழுதுறேன்...என்னோட ஆசைகளையும்,அனுபவங்களையும்,கோவத்தையும் பதிவு பண்ணுறேன்....

சும்மா கண்டத எழுதுறதுக்கு ஒரே ஒரு பதிவாவது  அடுத்தவங்களுக்கு பிரயோஜனமா இருக்குற  மாதிரி எழுதுவமேன்னு சின்ன ஆசை...

நம்ம தான் வேலை பார்க்கிறோம்/பார்க்காட்டியும் சம்பளம் வந்துரும்,
வேலைக்கு போற அளவுக்கு படிக்கலையே,  முன்னேருவதுக்கு எதாவது வழிகிடைக்காத, கொஞ்சமா கைகாசு போட்டு எதாவது தொழில் பண்ணலாமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கிற நம்ம அண்ணன் தம்பிகளோ,உறவினரோ, நண்பர்களோ கண்டிப்பா இருப்பாங்க அவங்களுக்கு உதவுகிற விதமா கொஞ்சமா முதலீடு போட்டு செய்யுற மாதிரி எனக்கு தெரிந்த சில தொழில் பத்தி சொல்லுறேன், இது சம்பந்தமா என்னால நிதி உதவி செய்ய முடியலைனாலும், மற்ற உதவிகள கண்டிப்பா செய்ய தயார இருக்கேன்....சரி மேட்ட்ரருக்கு போவோம்....

சூரத் ன்னு சொன்னாலே புடவைகள் தான் ஞாபகம் வரும், இங்க அதோட விலையும் குறைச்சல் தான், இங்கே இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப படுது, நம்ம ஊருலேர்ந்தும் நேரடியாகவும்  ஆட்கள் வந்து கொள்முதல் பண்ணிகொண்டுபோய்  விக்கிறாங்க ..
80 ரூபாயில இருந்து 2000 ருபாய் வரையிலான விலைகள்ள புடவைகள் கிடைக்கும், ஒரு புடவைக்கு குறைந்தது 20 ரூபாயில இருந்து புடவையோட தரத்திற்கு தகுந்த மாதிரி  400  ருபாய் வரைக்கும் லாபம் வைத்து நீங்க விற்க முடியும். கொள்முதல் பண்ணுன புடவைகள இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு அனுப்ப லாரி வாடகையும் ஒன்னும் பெருசா இல்ல 150 புடவைகள அனுப்ப 200  ருபாய் ஆகும், ( சென்னைல பழைய வண்ணார பேட்டயிலையும் புடவை கொள்முதல் பண்ணலாம்,   சூரத்  விலைய விட 5 - 10  ரூபாய்கள் தான் கூடுதலா இருக்கும்னு  கேள்விபட்டேன் )

அதே மாதிரி ஓரளவு தரமான பேண்ட் & சட்டை பிட்டுகளும் 150   ரூபாயில் இருந்து இருந்து கிடைக்கும் , அப்பறம் சுரிதார் துணிகள்,ஜாக்கெட் பிட்ஸ் , Jeans Pants, Readymade  Shirts இது மாதிரி நிறைய ஐட்டங்கள் ஒரு அளவுக்கு ஞாயமான விலைகள்ள வாங்கலாம்....

இதெல்லாம் சரி தான், வாங்கிட்டு போற பொருள, உங்க ஊருங்கள்ள எப்படி வியாபாரம் செய்யுறதுன்னு  முன்னாடியே முடிவு பண்ணி வச்சிட்டு இதுல எறங்குங்க.....

புடவை, மாதிரி துணி சம்பந்தமான பொருட்களை , உங்க வீட்டுல உள்ள பெண்களை கொண்டு , உங்க வீட்ல வைத்தே கூட விற்கலாம்.... ஒரு நாலைந்து தெருக்கல்ல இந்த மாதிரி கூடுதல் வருவாய் ஈட்ட விரும்புகிற பெண்கள் கிட்ட  கொடுத்து அவங்க கொஞ்சம் கூடுதல் லாபம் வைத்து விற்கிற மாதிரி கூட ஏற்பாடு செய்யலாம் , இல்ல உங்க வீட்டு தாழ்வாரத்துல கூட சின்ன கடை மாதிரி கூட செட் பண்ணி மேல சொன்ன மாதிரி வியாபாரம் செய்யலாம்....
உங்க ஊர் நடுத்தர நகரமா இருந்ததுன்னா நீங்களே அங்க உள்ள துணி கடைகள்ல ஆர்டர் பிடித்து சப்ளை  பண்ணலாம்....

இதே மாதிரி மும்பைல செம்பூர் பகுதிக்கு,சாயங்கால நேரமா போனிங்கன்ன, அங்க நல்ல,நல்ல குழந்தைகள் உடைகள் வெறும் 50  ரூபாய்க்கு விக்கிறதா  பார்க்கலாம், 50 ரூபாய்க்கு விக்கிராங்கன்னா, அவங்க எந்த விலைக்கு கொள்முதல் பண்ணி இருப்பாங்கன்னு பாருங்க, அத நல்ல முறைல பேக்கிங்  பண்ணி நம்ம ஊருங்களுக்கு கொண்டுபோய்  விற்றோம்னா, குறைந்தது 200 -250 ரூபாய்க்கு கூட போகும்,எல்லாம் புதுசு தான், Secound Hand துணிகள் இல்ல....எல்லாம் பாம்பே தயாரிப்பு...

அதே மாதிரி Leadies,Jents காலணிகள், பெண்களுக்கான Hand Bags எல்லாம் வெறும் 50 -100 ரூபாய்கள் தான், நம்ம ஊருங்கள்ள இத மூணு மடங்கு விலைக்கு விக்க முடியும், அதற்கான தரமும் இருக்கும்....

ஆர்வம் இருந்தா நீங்களே போய், அவங்க எங்கே இருந்து கொள்முதல் பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது இந்த மாதிரி இடங்கள்ல இருந்தாங்கன இன்னும் வசதி....

இந்த மாதிரி தொழில்களெல்லாம் ஆரம்பிக்க குறைந்தது ஒரு 5000 -10000 ருபாய் இருந்தா கூட போதும்....

அதுக்கு அப்பறம், கடவுளோட கருணையும்,உங்களோட விட முயற்சியும் இருந்தா கண்டிப்பா ஒரு நல்ல நிலைக்கு உயர முடியும்.....


மும்பைக்கு தினமும் சென்னையில் இருந்து ரெண்டு,மூணு ரயில் புறப்படுது, வந்துசேர 24 மணி நேரம் ஆகும்....இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளதுக்கான ரயில் கட்டணம் சுமார் 400 ருபாய் ஆகும்,அதே மாதிரி....

சென்னையில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு Navajeen Exspress என்ற ரயில் புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 4 மணிக்கு சூரத் வந்து சேருது ....இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ளதுக்கான ரயில் கட்டணம் சுமார் 450 ருபாய் ஆகும்...


 

வெற்றி பெற வாழ்த்துக்கள் ......

By.....தம்பி........

Feb 8, 2010

தெரியுமா....தெரியாதா ?

 பொதுவா சின்ன சின்ன விசயங்கள   கூட,தவறுகள  கூட  ஊதி, ஊதி பெரிய விசயமாக்குற ஊடகங்களோ,

தெரியாமலோ,அறியாமலோ  செய்து விட்ட  குற்றத்திற்கு கூட சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,குற்றம்,குற்றமே  என்கின்ற அடிப்படையில் தண்டனைகளை வகுத்து வைத்திருக்கிற அரசாங்கங்களோ ...

ஒரு சிறிய, ஏமாற்றத்தையோ, பொய்யையோ கூட தாங்கிக்கொள்ள முடியாமல் எகிறி குதிக்கிற நம்மை போன்ற பொது ஜனங்களோ....

 இது குற்றம்,இது தவறு, இது பொய்,இது ஏமாற்று வேளை என்று வெளிப்படையாக தெரிந்தும், இந்த உலகத்தில் உள்ள ஆறறிவு பெற்ற மக்களாகிய நாம், எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல்,மிக  எளிதாக எடுத்துக்கொண்ட,ஏற்று கொண்ட மிக,மிக அதி முக்கியமான  சில விசயங்களை, தெரியுமா....தெரியாதா ? என்கின்ற ரீதியில் நமக்கு நாமே கேள்வியாக கேட்டு பார்போம்.....

1 . ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு கடவுள்களையும்,வழிபட்டு முறைகளையும்,சட்ட திட்டங்களையும்   உருவாக்கி வைதிருகின்றோமே ,அந்தந்த மத கடவுள்கள்,அந்தந்த  மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் தான் படைத்தார,காப்பாற்றுகிறாரா? மாற்று மதத்தினரை அழித்து விடுகிறாரா ? அந்த சக்தி உள்ள கடவுள் நினைத்தால் நம் அனைவரையும் ஒரு நொடிப்பொழுதில் ஒரே மதத்தினராக மாற்றிவிட முடியாத ? இவை எல்லாம் உண்மை இல்லை என்று தெரிந்தும் -கடவுள் ஒருவனே, நம் தவறான நம்பிக்கைகளும், சிந்தனைகளும்  தான் சக மனிதர்களை  மத ரீதியாக பிரித்து வைத்திருகின்றது என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

2 . ஒரு சிறு எறும்பை கொள்வது கூட பாவம் என்று தெரிந்தபோதும் , வன்முறையின் பெயராலும்,போர்களின் பெயராலும் கோடி கணக்கான மக்களை கொன்று குவிப்பதை தற்காப்புக்காக என்றும், Survival of the Fittest என்றும் சப்பைக்கட்டு கட்டுவது மாபெரும் குற்றம் என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

3.  .அரசியல்வாதிகள், வன்முறையை நிகழ்த்தியும், பணத்தை இறைத்தும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருவது நமக்கு சேவை புரிய இல்லை , பணம் சம்பாதிக்க தான் என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

4 . அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பள பணத்தை வைத்து மட்டும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகமுடியாது என்றும்,தனக்கென்று தனி தீவையே
விலைக்கு வாங்க முடியாதென்றும், அவை நாம் வரிப்பணத்திலிருந்து கொள்ளயடிக்கபட்டது தான் என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?

5 .   ரவுடிகளையும், குற்றவாளிகளையும், திருடர்களையும், கூலிப்படையினரையும் காவல் துறையினர் நினைத்தால் ஒரு நாளைக்குள், கைது செய்து நாட்டையே அமைதி பூங்காவாக மாற்ற முடியும் என்ற போதும், அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் தான் தங்கள் சுய நலத்திற்காக, இவர்களை வளர்த்து விடுகிறார்கள், சுதந்திரமாக நடமாட விடுகிறார்கள் என்று நமக்கு தெரியுமா தெரியாத ?

6 .  எல்லோரும் மனிதர்களே,அவர்களுக்கு அதிசயங்கள் நிகழ்த்தி காட்டும் சக்தி இல்லை என்று தெரிந்த போதும், சாமியார்கள் வாயிலிருந்து,லிங்கம் வரவழைப்பதும்,கையிலிருந்து திருநீறு,மோதிரம் வரவழைப்பதும் பொய்  என்று தெரிந்தும் ,உண்மையை நம்ப மறுக்கும் மூடர்களுக்கு சாமியார்கள் செய்வது சித்து வேலை தான் என்று தெரியுமா தெரியாதா ?

7 . அனைத்து  உயிர்களை  படைத்தவர் இறைவன் தான் என்று நன்கு தெரிந்த போதும், கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு மாற்று மதத்தினரை கொள்வதை கடவுள் விரும்புவது இல்லை என்பது தீவிரவாதிகளுக்கு தெரியுமா தெரியாதா ?

8 . சட்டங்கள் எல்லாம், மக்களுக்குத்தான், அவை ஆளுபவர்களை கட்டுப்படுத்துவதில்லை...  என்ற உண்மை தெரிந்த போதும், சட்டங்கள் அனைவருக்கும் பொது என்று நம்பிக்கொண்டு இருக்கும் நம்முடைய அறியாமை நமக்கு தெரியுமா தெரியாதா ?

9 . ஆயிரம் ருபாய் வரி ஏய்ப்பு செய்தவனை, தண்டிக்கும் அரசுக்கு, சுவிஸ் வங்கியில் பதிக்கி வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி ருபாய் வரி ஏய்ப்பு செய்து செய்து தான் பதுக்கி வைக்கப்பட்டு இருகின்றது என்பது தெரியுமா தெரியாதா ?

இந்த மாதிரி,  இது குற்றம்,இது தவறு, இது பொய்,இது ஏமாற்று வேளை என்று வெளிப்படையாக தெரிந்தும்,சட்டத்தாலும்,ஊடகங்களாலும், நம்மாலும்  சகஜமாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான விஷயங்கள் பாக்கி இருக்கு.... எல்லாவற்றையும் இங்கே பட்டியல் போட முடியாது.....உங்களை நீங்களே கேட்டுக்கங்க......

By.................தம்பி.........

Feb 6, 2010

The Boss.....?

Boss இந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் இருக்கு தெரியுமா.....

பேர கேட்டாலே சும்மா அதுருதுல்ல....அப்டீங்கிற  மாதிரி இந்த வார்த்தைய கேட்ட்கும் போதே,ஒரு வைப்ரேசன உணரமுடியும்....

ஒரு மல்டி நேசனல் கம்பெனியோட பாஸ், வருசத்துல எப்பயாவது ஒருநாள் வர்றாருன்னு தெரிஞ்சாலே, அந்த அலுவலகமே அவர் வந்துட்டு போற வரைக்கும் உண்மைலேயே அதிரும், அந்த அலுவலகமே துடைத்து வச்சது மாதிரி பளபளக்கும், ஸ்டாப்ச பத்தி சொல்லவே வேணாம்,  குளிக்காம ஆபீஸ் வர்ற ஆளு கூட ( எங்க ஆபிஸ்ல ஒருத்தன் இருக்கான் ), நல்லா முடி, நகமெல்லாம் வெட்டி, இருக்கதுலையே நல்ல ட்ரெஸ்சா போட்டுக்கிட்டு ஜம்முன்னு,வழக்கமா லேட்டா வர்ற ஆளுகூட ஒருமணி நேரம் முன்னாடியே வந்துருவான்....பாஸுங்கிற வார்த்தைக்கு அந்த அளவு மரியாத இருக்கு....

அதுக்காக நாய்,நரி,நத்தை எல்லாத்தையும் பாஸ்ன்னு சொல்லமுடியுமா,கண்டிப்பா நான் சொல்லவேமாட்டேன்,இதுக்கு பேர் கர்வமோ,ஆணவமோ
இல்ல,என்னோட அகராதியில பாஸ்ன்னா,சாதிட்சவன்னு அர்த்தம்....தற்போதைய உலகம்  நிர்ணயிட்சி இருக்கிற,நமக்கு கணவாய் மட்டும், இருக்கின்ற சாதனை எல்லைகளை கடந்தவர்கள்ன்னு அர்த்தம்.....அது ஒரு வார்த்தை தானே, இதுக்கு ஏன் இவ்வளவு அலட்டிக்கனும்னு நினைக்கிறவங்க, தயவு செய்து இத்தோட கழண்டுக்கலாம்......

இதுக்கு உதாரணம் சொல்லனும்ன்னா, நான் மனசார Boss ன்னு ஏத்துகிட்ட( ஆமாம் இவரு பெரிய பு _ _ கி ன்னு நீங்க மனசுக்குள்ள திட்டுறது கேக்குது )  மூணு பேர சொல்லலாம்.....

1. Mr.பில் கேட்ஸ்..
2. Mr.சச்சின் டெண்டுல்கர்...
3. Mr.சுஜாதா சார்....

இப்ப சுஜாதா சாரா எடுத்துக்கங்க, நம்ம தமிழ் எழுத்துலகின் எல்லைகளை அனாயசமா கடந்தவர், இத யாராவது மறுக்க முடியுமா ? அவர் கற்பனை கதைகள மட்டுமா எழுதினார், அவருக்கு இலக்கியம்,அறிவியல்,மொழி, வரலாறு, அரசியல்,பத்திரிக்கை  இது மாதிரியான எல்லா விஷயங்கள்ளையும் அரைகுறை இல்லாத முழு அறிவும், இன்னும் சொல்ல போனா முழு அனுபவமும் இருந்தது, அதனாலதான் அவர் எழுதிய விசயங்கள மறுப்பே சொல்ல முடியாம ஏத்துக்க முடிந்தது...வெறும் கற்பனையையும், எனக்கு தெரிஞ்ச கொஞ்ச அறிவையும் வச்சிகிட்டு குவாண்டம் தியரிய பத்தி எழுதினா நீங்க என்ன அடிக்க வரமாட்டிங்க...
இப்ப இருக்கிற வளரும்  எழுத்தாளர்களுக்கும்   அவர் தானே  ரோல் மாடல், அவர மாதிரி தானே வரணும்னு ஆசை படுறோம், இந்த ரோல் மாடல் ங்கிற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் தான் Boss...

இப்ப சொல்லுங்க யார Boss ன்னு சொல்லாம், சுஜாத்தா சாராயா, இல்ல ஆள வச்சி,குரூப் சேர்த்துகிட்டு  ஹிட் கவுண்டரரோட எண்ணிக்கைய கூட்டி காட்டி  அதையே ஒரு பதிவா போடுற நம்ம பிரபல பதிவர்கலையா ?

 எப்படி , நெப்போலியன் குவாட்டர் அடிக்கிறவன எல்லாம், நெப்போலியன் தி கிரேட்ன்னு சொல்ல கூடாதோ அதே வித்யாசம் தான் Boss க்கும் மத்தவங்களுக்கும் .....( அலெக்ஸ்சாண்டர தான் தி கிரேட்ன்னு சொல்லுவாங்க அவர் பேர்ல சரக்கு ஒன்னும் அகப்படல ) எந்த திறமையும் இல்லாத,அரை  வேக்காடு,காட்டி கொடுத்தோ,கூட்டி கொடுத்தோ  
 பதவிக்கு வந்தவன எல்லாம் மேலதிகாரியா இருகாங்கன்கிற ஒரே காரணத்துக்காக
பாஸ்ங்கிற கம்பீரமான வார்த்தைய பயன் படுத்தி அந்த வார்த்தையே அசிங்க படுத்துறாங்க ,ப்ரைவேட் கம்பெனிகல்ல மட்டும் தான் இந்த கூத்து நடக்குது...ஏன் அப்படி, ஒன்னு இவங்க எந்த இலக்குகளும்,கனவுகளும்  இல்லாத ஒரு சாதாரண மனிதனா, வாழ்ந்தோம்-இறந்தோம்னு போற டைப்பா இருக்கணும், இல்ல இவங்களோட திறமை , சுய மரியாதை, எல்லாத்தையும் மறந்துட்டு, சம்மந்த பட்டவங்க  காது பட இந்த மாதிரி எல்லாம் துதி பாடுனாதான்,சம்பளமும்,பதவியும் ஏறும்கிற கேவலமான எதிர் பார்ப்பு உள்ளவங்களா இருக்கணும் ,இவங்கள விடுங்க -இவங்களுக்கும் அரசியல் ஆதாயத்துக்காக அம்மா கால்ல விழுற கேவலமான அரசியல்வாதிங்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கு சொல்லுங்க....
நீங்க எந்த கவர்ன்மென்ட் அலுவலகத்துலயாட்சும் இந்த வார்த்தைய, அட்லீஸ்ட் ஒரு கடைநிலை ஊழியராவது உபயோகிச்சி கேட்டுருக்கின்களா ? வாய்ப்பே இல்ல...ஏன்னா அங்க சம்பளத்துல இருந்து,பதவி உயர்வு வரை ஒரு ஆர்டரா தான் ஏறும், அப்படி கிடைக்காட்டியும் நம்ம நீதி கேட்டு கோர்ட் வரைக்கும் போகமுடியும்....யாரையும் காக்க புடிக்கனும்னு அவசியம் இல்ல...

 சம்பளம் குடுக்குரதனால மட்டும் ஒரு நிறுவனத்தோட   முதலாளிய Boss ன்னு சொல்லலாமா, கூடாது  ஏன்னா அவர் நம்முடைய   உழைப்ப எடுத்துக்கிட்டு தான்  ஊதியம் தர்றார்... Just இது ஒரு பண்ட மற்று That's all....அவர CEO ன்னு சொல்லுங்க, MD/Proprietor இந்த மாதிரி ஆயிரம் வார்த்தை இருக்கு அவர குறிப்பிட....

சம்பளம் தர்ற முதலாளிக்கே இந்த கதின்னா, உங்க மேலதிகாரிய நீங்க Boss ன்னு கூப்பிடலாமா? இந்த நிமிஷம் அவர் எனக்கு   மேலதிகாரி, நாளைக்கே இந்த  வேலைய விட்டுடலாம்ன்னு நான் முடிவு எடுதிட்டாலோ, அதே மாதிரி  இந்த கம்பெனிய விட்டுட்டு அவர் வேற கம்பெனியில சேரனும்ன்னு முடிவு பண்ணிட்டாலோ, அவருக்கு என்மீதான  அதிகாரம் "ஜீரோ" -இப்ப சொல்லுங்க ஒருத்தருக்கு அதிகாரம் இருக்கதால மட்டும்  அவருக்கு Boss ங்கிற அங்கீகாரம் குடுக்க முடியுமா, அவர் ஒரு சக ஊழியர், அவர குறிப்பிட GM,RM, FM,Team Leder,Department Head இந்த மாதிரி பல வார்த்தைகள் இருக்கு அத மட்டும் உபயோக படுத்துங்க.....

ஒரு உதாரணம் சொல்லுறேன், எனக்கு தெரிந்த ஒரு மல்டி நேசனல் கம்பெனியோட, Country Head அவர்,அவர் ஒரு சிங்கம் மாதிரி, வந்தாலே ஆபீஸ்ல எல்லாம் நடுங்குவாங்க, அதிகாரம் தூள் பறக்கும், சின்ன சின்ன தப்புக்கெல்லாம்  வரைமுறை இல்லாம திட்டுவாரு...ஒரு நாள் அவருக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து படுத்துட்டாரு, என்னாச்சி அந்த கம்பெனியே இனிமேல் அவர் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு முடிவு பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டு...
இப்ப அவரோட Boss ங்குற பதவி என்னாச்சி ?

 உங்க மேலதிகாரியோட திறமைக்கும், பதவிக்கும் குடுக்க வேண்டிய ஞாயமான மரியாதைய குடுங்க.....அவங்களோட பதவி பேர மட்டும் சொல்லி குறிப்பிடுங்க, எல்லாரையும் Boss ன்னு சொல்லி அந்த உயர்ந்த அர்த்தம் உடைய வார்த்தையின் மதிப்ப கெடுக்காதிங்க....

உங்களோட பதவியையும்,சம்பளத்தையும் நிர்ணயிக்கிரவங்க உங்க Boss இல்ல....

உங்களோட கனவுகளையும், இலட்சியத்தையும் நிர்ணயிக்கிரவங்க தான் உண்மையான Boss....

உங்கள் எண்ணங்களும்,கனவுகளும்,செயல்களும்,வார்த்தைகளும் உயர்வாக
இருந்தால் , உங்கள் வாழ்க்கையும் உயர்வாகவே அமையும்.......

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.....

By...........தம்பி......


Feb 4, 2010

நான் அடிச்சா தாங்க மாட்ட....

நான் அடிச்சா தாங்க மாட்ட....நாலு நாளு தூங்க மாட்ட...
பத்தரமா வீடு போயி சேர மாட்ட......

நீங்க அடிச்ச அடியில மூணு பேர் கோமா ஸ்டேஜில இருக்காங்க, ஒருத்தன் இப்பவோ, அப்பவோன்னு இழுத்துகிட்டு கெடக்கான், இவங்கள செக் பண்ணுன டாக்டர் எல்லாம் மெரண்டு போய்ட்டாங்க, இது சாதாரண ஆளு அடிச்ச அடி மாதிரி தெரியல, நாடி, நரம்பு எல்லாம்  ரத்த வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் அடிக்க முடியும்கிறாங்க,
நீங்க யாரு......?உண்மைய சொல்லுங்க  பாம்பேல( சூரத்ல ) என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க......
சொல்லுங்க....சொல்லுங்க.....சொல்லுங்க....
சொல்லுங்க....சொல்லுங்க.....சொல்லுங்க....

இப்படியெல்லாம் விஜய் மாதிரி பாடணும்னும், பாட்சா ரஜினிய அவரோட தம்பி கேக்குற மாதிரி, என்னையும் யாராச்சும் கேட்கனும்னும் உள்ளுக்குள்ள ஆச தான்.....ஆனா அந்த அளவுக்கு, ஒனக்கு ஒர்த்து இல்லாம போச்சேடா கைப்புள்ள....

நிற்க.....

ஒரு பூனை கூட அதுக்கு ஆபத்து வந்தா சீறும், உங்களுக்கு கோபமே வராதா ? நீங்க யாரையும் கை நீட்டி அடிச்சதே இல்லையா ?
ஹாஹ் ஹாஹ் ஹாஹ்.... ஹா ஓ ஹாஹ் ஹாஹ்  ஹா.....

லூசாட நீ ? கேள்வி கேட்டா கிறுக்கன் மாதிரி சிரிக்கிற அப்புடீன்னு நீங்க கேக்குறது புரியிது/ நீங்க கேக்காட்டியும் சொல்லத்தான் போறேன்...

சுஜாதா சார் ஸ்ரீரங்க நாட்களை  பத்தி எழுத்தும் போது அடிக்கடி ஒரு  டீம  பத்தி சொல்லுவாரு தெரியுமா..." அடையவளஞ்சான்" டீம்,   அதே மாதிரி குரூப் தான் எங்க கேங்கு...எல்லாம் வீரம் விளைந்த மதுரை மண்ணின் மைந்தர்கள்...பிழைப்புக்காக அங்கேர்ந்து வந்து ரெண்டு தலைமுறைக்கு முன்பு எங்க தெருவுல குடியேரினவங்க...அடி தடிக்கு அப்பவே எங்க ஊர்ல பேர் போனவுங்க....

தலை முறை,தலை முறையாவே இவங்களுக்கும், எங்க ஊரோட மண்ணின் மைந்தர்களான சில பக்கத்துக்கு கிராமத்தார்களுக்கும், குறிப்பிட்ட சில தெருக்காரர்களுக்கும் பகை உண்டு(எங்க தெருவோடு சேர்த்து, ஒரு அஞ்சி ரவுடி தனம் பண்ணுற தெரு இருக்கு, எல்லா பிரச்சனையும் இவனுங்ககுள்ள தான் ) ....சொத்து பிரட்சனை எல்லாம் இல்ல, கபடி விளையாட போகும்போதோ, திருவிழா,தெப்பம் மாதிரியான விழாக்கல்லையோ ஏற்பட்ட மோதல்கள் தான்...குறிப்பா சொல்லனும்னா நீ பலசாலியா ? நான் பலசாலியா ?இந்த மோதல் தான்.... அந்தந்த கால கட்டத்துல யார் ரவுடீன்னு பேர் எடுக்குறாங்களோ, அவங்களோட வாரிசுகள் இத தொடரும்....இந்த நிமிடம் வரைக்கும் இது தொடருது...ஆனா முன்ன மாதிரி இல்ல, எல்லாம் படிக்க ஆரம்பிட்சதனால நிறையவே மாறிட்டாங்க....இவங்கள அரசியல் லாபத்துக்காக அடி, தடிக்கு உபயோக படுத்தி முன்னேறுன D.M.K / A.D.M.K அரசியல்வாதிங்க எல்லாம் இப்ப பெரிய பதவியில  இருக்காங்க....என்னோட அஞ்சு  வயசுல நாங்க அந்த தெருவுக்கு குடிமாறி வந்தோம், (அதுக்கு ஒரு காரணம் இருக்கு, இருந்த சொந்த வீடு, நிலம், அம்மாவோட நகை எல்லாத்தையும் வித்து புட்டு நான் ஒன்னாம்கிளாஸ் படிக்கும் போது வெளிநாடு போனவருதான் எங்க அப்பா, நான் டிகிரி முடிச்சி  கிட்ட தட்ட 21 வருஷம் கழிச்சி  நான்தான் அங்க   போய் அவர அனுப்பி வச்சேன்,அப்பத்தான் வெவரம் தெரிஞ்சி அவர முதல் முறையா பார்த்தேன், அப்பா இருந்தும், இல்லாத மாதிரி வளர்ந்த அந்த சோகம் எனக்கு இன்னும் இருக்கு,அவர சொல்லியும் குத்தமில்ல,மூணு பொண்ணுங்கள கரையேத்தணும்,அங்க அனுப்புன ஏஜென்ட்   நல்ல வேலைன்னு சொல்லி ஏமாத்திட்டான்,
அம்மாவும்,பாட்டியும், எங்க தாய் மாமனும் தான் எங்க 5 பேரையும்  கஷ்ட பட்டு வளர்த்தாங்க,
இந்தியா  வந்த 2 மாசத்துல மேல போயிட்டாரு, எல்லாம் விதி இத விடுங்க சொந்த கத,சோக கத,ஏன்னா ஒன்னு, இங்க இறக்கி வச்சதுல கொஞ்சம் மன பாரம் கொறஞ்ச
மாதிரி இருக்கு) நான் ஆரம்பத்துல எங்க வயசு பசங்ககுள்ள  எந்த போட்டியோ , சண்டையோ அவங்க கூட தான், நாங்க ஒரு குரூப்பு, அவனுங்க ஒரு குரூப்பு, அப்பறம் போக,போக எல்லாம் ஒண்ணா சேர்ந்தாட்சி...

சேர்ந்தாட்சின்னு சொல்லுறத விட கலந்தாட்சின்னு சொல்லலாம், எங்க வீட்டுக்கு வர்றவுங்க எங்க அம்மாகிட்டயே, என்னமா அந்த தெரு பையன் உங்க வீட்டுகுள்லேர்ந்து வர்றான்னு கேப்பாங்க, எங்க அம்மாவும் இவன்தான் என்னோட ரெண்டாவது பையன்னு பொறுப்பா அறிமுகப்படுத்தும், அதுக்கு இன்னொரு காரணம், எங்க அஞ்சி பேர்ல நான் மட்டும் தான்,சும்மா தக, தகன்னு எம்.ஜி.ஆர் கலர்ல இருப்பேன், ( கோடீஸ்வரனா ஆகி முதல்ல மைகேல் ஜாக்சன் மாதிரி கலர மாத்தணும்னு ஒரு திட்டம் இருக்கு பாப்போம் )

எங்க வயசுல எங்க குரூப்புக்கு தலைமை ஏற்றது, போன பதிவுல குரூன்கிற நண்பன் காயத்திரியோட நம்பர் குடுத்தான்னு சொன்னேன்ல அவனோட அண்ணன், அவங்க அப்பா பெரிய சாராய வியாபாரி... சொல்லவா வேணும்...

அடையவளஞ்சான் தெருவுல இந்த கைப்புள்ளயும்  இருகிருந்ததுனால ( பில்டிங் ஸ்ட்ராங்கவும்,பேஸ்மெண்டு வீக்காவும் இருந்த
என்னோட வீரத்த பத்தி எனக்கு தெரியும், எதிரிங்களுக்கு தெரியாதே  ), ஒரு பெனிபிட் இருந்திச்சி , சினிமா தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட், கடைதெரு, திருவிழா,ஸ்கூல்,காலேஜ்,கிரிகெட் மேட்ச், இந்த மாதிரி எங்க போனாலும் ஒரு  மரியாதயும்,முன்னுரிமையும்  கிடைத்தது,அது போலியா இருந்தாலும் அந்த வயசுல அது ஒரு கிக்கா இருந்தது, இத நம்பி சோப்ளாங்கி பக்கத்துக்கு தெரு பசங்க எல்லாம் எங்க கிட்ட பஞ்சாயத்துக்கு வருவாங்க....ரெண்டு மூணு காதல் ஜோடிய சேர்த்து வச்சிருக்கோம்..இந்த மாதிரி நெறைய பேரோட வைத்தெரிட்சல கொட்டிக்கிட்டோம்....

பெனிபிட் மட்டுமா இருந்திச்சி,இனிமே தான் டெரர்ரே இருக்கு, இவனுங்க கூடவோ, தனியாவோ, ஒரு சினிமாவுக்கோ,கோவிலுக்கோ,திருவிழா,தேரு,தெப்பம், எங்கயும் போக முடியாது,எங்க போனாலும் சண்ட, சண்ட, எங்க ஊர்ல இருந்த, நாலு தியேட்டர்ல இப்ப ஒன்னே,ஒன்னு தான் இருக்கு, அதும் இத்து போன தியேட்டர், பாக்கி எல்லாம் மூடிட்டாங்க, அதுக்கு காரணமே இந்த அஞ்சி தெருகர்ரனுங்க தான்,இதுல என்னோட நிலைமை தான் ரொம்ப மோசம், புலி கூட்டத்துல மாட்டுன எலி நிலைமைதான் எனக்கு, அத இவனுங்க கிட்டயும் காட்டிக்க முடியாது, மான பிரச்சனை , அந்த கெத்த இன்னைக்கு  வரைக்கும் நான் மெயிண்டன் பண்ணிக்கிட்டு வர்றதுக்கு காரணமா ஒரு சம்பவம் நடந்திச்சி அது அப்பறம் ,

அதுக்கு முன்னாடி, சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு என்னோட நண்பர்கள்  முன்னாடி உதார் உட்டுகிட்டு திரிஞ்ச இந்த கைப்புள்ள பட்ட பாட்ட கொஞ்சம் தெரிஞ்சிகாங்க.....குருன்னு சொன்னல்ல,  அவன தான்  உண்மையான கைப்புள்ளன்னு சொல்லலாம், எல்லா பிரச்சனைக்கும் இவன் தான் காரணமா இருப்பான்,இவன பார்த்தாலே எங்க எதிரிங்களுக்கு அடிக்கணும் போல தோணும் போல , அதனால இவன் அடி வாங்காத தெருவே இல்லன்னு சொல்லலாம், இப்ப சமீபத்துல கூட ஒரு பிரச்சனைல,எங்க எதிரிங்க நெஞ்சிலேயே மிதிட்சிருக்கானுங்க, இதையும் அவன்தான் போன் போட்டு சிரிச்சிகிட்டே சொன்னான், திரும்ப ஆள தெரட்டிட்டு போய் பதிலடி குடுத்துருவான்,அது வேற விஷயம்...இதுல எனக்கு என்ன பிரச்சனைனா,அவன் கிட்ட தட்ட என்னோட உயரம், என்னோட கலரு பின்பக்கதிலேர்ந்து பார்த்தா அடையாளமே கண்டு பிடிக்க முடியாது, இப்ப சொல்லுங்க அப்பாவியான நான் என்னா பாடு பட்டுருப்பேன்,எங்க வெளியில போனாலும், திரும்பி, திரும்பி பாத்துக்குவேன்,அவன்னு நெனைச்சி எவனாவுது பொடனியில அடிச்சி மூளைய கலக்கிட்டானா....இது கூட பரவா இல்லங்க....

குரூப்ப உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும் போது திடீர்னு எவனாச்சும் வருவான், கெளம்புங்கடா,பார்ல நம்ம பசங்கள அந்த தெருகாரனுங்க 
அடிட்சிபுட்டானுன்கலாம்,இன்னும் அங்க தான் இருக்கானுன்கலாம்,அப்புடீன்னு 
சொல்லிக்கிட்டு எவனாவுது வருவான்  பாருங்க, எனக்கு குலையே நடுங்கிடும்...எஸ்கேப் ஆகவும்  முடியாது,  இந்த மாதிரி சமயத்தில, நீங்க போய்கிட்டே இருங்க,அம்மா ரேசன் கடைல மண்னென்னை ( கெரசின் ) வாங்கி வச்சிக்கிட்டு நிக்குதாம், அத வாங்கிட்டு வந்து வீட்ல குடுத்துட்டு உடனே வர்றேன்னு சொல்லிட்டு தப்புட்சிருவேன், கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள இருந்துட்டு வெளியில வந்தா , அதுக்குள்ள பிரச்சனை முடிஞ்சிருக்கும், கதை மட்டும் கேட்டுகிறது, அந்த ஆனந்து பய இருந்தானா, அவன போட்டிங்களா, இல்லையா, அவன ஒருநாளைக்கு நாயடி அடிக்கணும் பங்காளி, ச்சே நான் தான் வரமுடியலைன்னு...ஒரு பிட்ட போட்டம்ன்னா நம்பிருவாங்க...

இதே ஆன்தி ஸ்பாட் பிரச்சனைன்ன, அதோகதி தான், கூடுமானவரை, ரெண்டு பக்கமும் எதாவது பேசி சமாதானம் பண்ணிவட்சிடுவேன் , அடிதடில எறங்கிட்டானுங்கன்னா, எஸ்கேப் ஆகிடுடா கைபுள்ளே தான், திரும்ப வந்து நீங்க இங்க சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க, அந்த குமாரு பய நம்ம பேட்ட தூக்கிகிட்டு, இந்த பக்கமா ஓடுறான்...நானும் மணியும் தான் ( அவனும் என்னோட கேரக்ட்டர் தான் )அவன துரத்தி புடிச்சி, நாலு சாத்து,சாத்தி புடுங்கிகிட்டு வர்றோம், நான் வேற பேட்டால அவன் மண்டைல அடிச்சதுல, மண்ட உடைஞ்சி ரத்தம் ஊத்துதுடா, வாங்கடா போலீஸ் வர்றதுகுள்ள ஓடிடுவோம்னு ஒரு பிட்ட போட்டுட்டு எஸ்கேப்...எப்பூடி.....

இதுக்கே இப்புடின்னா, பஞ்சாயத்து பேசுறதுன்னு ஒன்னு இருக்கு, அது இதவிட டெரரா இருக்கும், அவங்க தெரு பசங்களையே அடிட்சிபுட்டு, சில நேரம்,அவங்க தெரு பெரிய தலைங்க பிரச்சனைய பெருசாக்க வேணாமேன்னு பஞ்சாயத்து பேச, அவங்க தெருவுக்கே  கூப்பிட்டு அனுப்புங்க....( சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள்ளேயே வச்சி கொலை நடக்குது, ) அடி வாங்குனவணுவ என்னா கொலை வெறியோட இருப்பானுங்க,  இவனுங்கள நம்பி அங்க போக முடியுமா? இதுக்கு  தைரியசாலியான , என்னையும் கூப்பிடுவானுங்க, போவான இந்த கைப்புள்ள, இது பொதுவா நைட்டுல தான் நடக்கும்கிறதனால, இல்ல பங்காளி நாளைக்கு செமஸ்டர், படிக்கணும்னு சொல்லிட்டு வேற என்னா எஸ்கேப்.....

இதவிட இன்னொரு கூத்து, ஏதாவது பிரச்சனைய கேள்வி பட்டுட்டு, எங்க அம்மா, குடும்ப கதையெல்லாம் சொல்லி,ரொம்ப சீரியஸா  அட்வைஸ் பண்ணும், இவனும் தாம்மா போயிருப்பான்னு என் தங்கச்சி ஏத்திவிடுவா....எனக்கு சிப்பு,சிப்பா வரும், டெரரா முகத்த வச்சிகிட்டு, சரிம்மா இனிமேல் போவல ஓகே...சோற போடுங்கிறது...
எப்புடி நம்ப வட்சிருகேன் பாத்திங்களா....

இந்த தென்னாலிய,என்னோட பிரண்டுங்க இன்னும்,  பெரிய ரவுடி,தைரியசாலீன்னு நம்பிகிட்டு இருக்குறதுக்கு சாட்சியா, நான் வெளிநாட்டுக்கு போறதுக்கு கொஞ்ச ஒரு நாளைக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்திச்சி.....

எங்க தெருவுக்கு அடுத்து ஒரு நோஞ்சான் தெரு,எங்க தெருலேர்ந்து ஒரு 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்கும், எங்கள கண்டா, ரொம்ப,ரொம்ப  பயப்படுற  ஒரு தெரு, நான்கூட  நெஞ்சநிமித்திக்கிட்டு, சும்மா கம்பீரமா நடந்து போவேன்னா பாத்துகங்க, எங்க கேங்குல இருக்க நண்பன் ஒருத்தன்,அந்த தெருவுல குடியிருந்தான், ஒருநாள் நைட்டு நாங்க ஜாலியா பேசிகிட்டு உட்கார்ந்து இருக்கப்ப, டேய் என்ன, எங்க எதுத்த வீட்டு டைலர் ரவியும், இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து அடிட்சிபுட்டாங்கடான்னு சொல்லிக்கிட்டு ஓடி வர்றான், ஏதோ சாதாரண பிரச்சனை, எங்க நண்பர் ஓவரா ஸீன போட்டுட்டாரு போல, மூணு பேரு சேர்ந்து ஒரு காட்டு, காட்டிட்டாங்க.......

நாங்களும், ( சத்தியமா நானும் தாங்க, அந்த தெருவோட வெயிட்டு எங்களுக்கு தெரியுமுள்ள )கைல கிடைச்சத எடுத்துகிட்டு அந்த தெருவுக்கு ஓடுறோம்,நானும் ஒரு ஒரு அடி நீளமுள்ள  ஒரு ஹோஸ்பைப்ப  (அதோட முனைல ஒரு இரும்பு நட்டு மாட்டி இருந்தது லாரிக்கு யூஸ் பண்ணுறதுன்னு நெனைக்கிறேன் ) எடுத்துகிட்டு ஓடுனேன்...

எங்க பசங்க டைலர் ரவிய அடிக்கிறானுங்க ,  (நான் சண்ட நடக்குற இடத்துலேர்ந்து ஒரு 25 மீட்டர் தூரத்துல நிக்கிறேன்,எனக்கு அப்பவும் எவனையும் அடிக்கிற மூடு இல்ல..) அவன் ஒரு ஆறு அடி இருப்பான், அவனும்,இன்னொருத்தனும் திரும்ப அடிக்கிறானுங்க சாது மிரண்டுட்டு போல, எங்க பசங்க ஒரு பத்து பேரு அவனுங்க மூணு பேரு, சுத்தி நிக்கிற மத்தவுங்க சண்டைய விளக்கிவிடுறாங்க ... இதுல மூணாவது ஆளு தப்பிச்சி அங்க நிக்கிற மில்டரி ரவின்கிற என் நண்பன்கிட்டேர்ந்து எஸ்கேப் ஆகி எனக்கு எதுத்த மாதிரி ஓடி வர்றான் ( அவன நல்லா தெரியும் அப்புராணி பய - சரி ஓடி தப்பிச்சி போகட்டும்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன், )அவன அடிடா அத்தான்னு, மில்டரி ரவி சொன்னதுதான் தாமதம், என்னையும் அறியாம, ஹோஸ் பைப்பால மடார்னு அவன் நெஞ்சில அடிச்சேன், அங்கேயே சுருண்டு விழுந்துட்டான்,எந்திரிக்கவே இல்ல, பைப்பு முனைல உள்ள நட்ட தொட்டு பாக்குறேன்,ரத்தம் மாதிரி பிசு,பிசுன்னு ஏதோ கைல ஒட்டுது, இருட்ட இருந்ததால சரியா தெரியல..

எனக்கு உயிரே, போயிட்டு..... செத்துட்டான்,நம்ம லைப் காலின்னு  நினைச்சிகிட்டு அதிர்ச்சில நிக்கிறேன் ....

இந்த சமயத்துல, பேரன அடிக்கிரானுங்கலேன்னு தடுக்க போன டைலர் ரவியோட பாட்டி, தள்ளு முள்ளுள, எவனோ அது மேல மோத மயக்கம் போட்டு கிழே விழுக... பசங்க பாட்டி செத்து போச்சின்னு நினைக்க....அந்த நேரம் எவனோ போலீஸ் வருதுன்னு சொல்ல, ஏற்கனவே பயத்துல நிக்கிற நானும்,பசங்களும் எஸ்கேப்.....
எங்க போனாங்கன்னும் தெரியல....

பக்கத்துல இருந்த தாமரை குளத்துக்குள்ள, ஹோச தூக்கி போட்டுட்டு, ( கை ரேகை பதிஞ்சிருக்குமுள்ள ) பின் பக்கமா சுத்தி வீட்டுக்கு போய் படுத்துட்டேன், தூக்கமே வரல, இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து பிடிச்சுட்டு போகபோகுதுன்னு பயம், எப்படா விடியும்னு காத்திருந்தேன்...காலைல பத்து மணியாகியும் வெளிய போகல....அவன் செத்து போயிருந்தா இந்நேரம் எவனாவது வந்து சொல்லிருப்பானுங்கல்லன்னு யோசிச்சிகிட்டு, பதுங்கி பதுங்கி தெரு பக்கம் போறேன்....நான் அடிட்சனே அவன் சீட்டி அடிச்சிகிட்டு சைக்கிள்ல வேலைக்கு போய்கிட்டு இருக்கான்.....அப்பத்தான் உயிரே வந்திச்சி, என்னடா ஆட்சின்னு என் நண்பர்களுகிட்ட கேட்டா,

நீ நைட்டு எங்கடா போன, போலீஸ் எல்லாம் வரல, எவனோ புரளிய கிளப்பிருக்காண்டா, அதுக்கு அப்பறம் எங்க அண்ணன் போய் சமாதானம் பேசிட்டு வந்த பிறகு, நாங்க போய் தண்ணி அடிச்சம்டா அப்புடீன்னான் குரு....

நான் அடிச்சி ஒருத்தன் சுருண்டு விழுந்தத மில்டரி ரவி எல்லா பசங்ககிட்டையும் சொல்லிட்டாம் போல, என்னடா அவன இப்புடி அடிச்சிட்ட, செத்து போயிருந்தா என்னடா பன்னிருப்பேன்னு கேட்டானுங்க, எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு வழக்கம் போல உதார் உட்டேன் நம்ப்பிட்டானுங்க....

இது நடந்து ஒரு மாசம் போல இருக்கும்,எங்கிட்ட அடி வாங்குன அந்த அப்பாவிய பார்த்து , நெஞ்சில அடிச்சதுக்கு சாரி நண்பான்னேன்...நீ எங்க என் நெஞ்சில அடிச்ச, நான் சட்டை பையில வச்சிருந்த மணி பர்சுல தானடா அடிச்ச அப்புடீன்னான்....
அப்பறம் ஏண்டா, சுருண்டு விழுந்தேன்னு கேட்டேன், இல்லேன்னா நீ சும்மாவா விட்டுருப்பே...அப்புடீன்னான்.....எனக்கு  சிப்பு,சிப்பா வந்திச்சி......

By..........தம்பி..........

Feb 1, 2010

காயத்ரி.......?....!

" காயத்ரி "மங்களகரமான பேருல. யாரு இவ, நல்லவளா-கெட்டவளா, கருப்பா- செகப்பா-எந்த ஊரு  எதுவும் எனக்கு தெரியாது, இருந்தாலும் சில நாள் என் காதலியாவும்,சில நாட்களுக்கு என் மனைவியாவும் இருந்தா, குழப்புறனோ...

 இது உண்மையிலே நடந்த, என்னோட சொந்த அனுபவம், படிச்சிட்டு நான் செஞ்சது தப்பா, சரியானு நீங்க தான் சொல்லணும்...அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம், எனக்கு ஏற்கனவே திருமணமாகி  "காதலி "   இருக்காங்க,இத ஏன் சொல்லுறேன்னு கடைசில புரியும்....

ஒரு ஏழு,எட்டு மாசத்துக்கு முன்ன, லீவுக்காக சொந்த ஊருக்கு போயிருந்தேன், நண்பர்களோட ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போது, குரு'ங்கிர நண்பன் 98946----- காயத்திரியோட இந்த மொபைல் நம்பர குடுத்தான், இவ யாரு கால் பண்ணுனாலும் பேசுவா, ஒனக்கு போரடிட்சிசின்னா கால் பண்ணி கல்ல போட்டுக்கன்னு சொன்னான், ஏதும் சிக்கல்ல மாட்டிவிட்டுடாதடா,அவ எந்த ஊரு?ஒனக்கு எப்புடி இந்த நம்பர் கிடைட்சிட்சி,நீ பேசி இருக்கியான்னு கேட்டேன், திண்டுக்கல்லுக்கு பக்கதுல ஒரு பிரபலமான ஊர்லேர்ந்து பேசுறேன்னு சொன்னா, நெறைய வாட்டி  அவகிட்ட பேசி இருக்கேன், அவ Missed Call மட்டும் தான் குடுப்பா நம்மதான் கால் பண்ணனும், எனக்கு ரீ சார்ஜ் பண்ணி கட்டுபடியாவள அதான் உட்டுட்டேன்,ஒனக்குதான் உன்னோட கம்பெனி பில்லு கட்டுதே அப்பறம் என்னான்னா, நானும் அந்த நம்பர சேவ் பண்ணி வச்சதோட சரி அதோட மறந்துட்டேன்....

அப்பறம் லீவு முடிஞ்சி சூரத் வந்துட்டேன், ஒருநாள் எதார்த்தமா மொபைல நோண்டிகிட்டு இருக்கும் போது காயத்திரியோட   நம்பர் கண்ணுலபட்டுட்சி,ஒரு சபலம், அவளோட ரியாக்சன் எப்புடி இருக்குனு தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு மிஸ்டூ கால் குடுத்து வச்சேன், அடுத்த செகண்ட் அவகிட்டேர்ந்து மிஸ்டூ கால் வந்திச்சி, எனக்கு பயம், நான் ரியாக்சனே பன்னால, மறுபடியும்,மறுபடியும் அவ கிட்டேர்ந்து மிஸ்டூ கால் வந்துகிட்டே இருந்திச்சி, தைரியத்த வரவலட்சிகிட்டு கால் பண்ணுனேன் அவ தான் பேசுனா.....

நல்ல அமைதியான,இனிமையான குரல், அவளோட குரல்ல நல்ல குடும்பத்து பெண்களோட அதே அச்சம்,மடம்,நாணம் எல்லாம் இருந்திச்சி.நீங்க யாரு, எந்த ஊரு, ஏன் கால் பண்ணுனீங்க, அப்புடின்னு கேட்டா, நான் சாரிங்க என்னோட பிரண்டுக்கு கால் பண்ணுனேன், நம்பர் தப்பா போனதால உங்களுக்கு வந்துட்டுன்னு சொல்லி மறுபடியும், தப்பா நெனைட்சிகாதிங்க சாரின்னு சொன்னேன், இல்ல பரவா இல்லன்னு சொன்னா, அப்டியே பேச்சி தொடர்ந்திட்சி நான் என்னோட பேர் விஜி,கோயம்புத்தூர்ல சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கேன்னு சொல்லி அறிமுகபடுத்திகிட்டேன், அவளும் என்  பேர் காயத்ரி,நான் BA முடிச்சிட்டு,கம்ப்யூட்டர் கிளாஸ் போய்கிட்டு இருக்கேன் , எங்கப்பா ரிடயர்ட்டூ டீச்சர்,
நாங்க மூணு சகோதரிங்க, அதுல நான் ரெண்டாவது பொண்ணு அப்படின்னு சொல்லி என் பிரண்டு சொன்னா  அதே ஊர் பேர சொன்னா,அப்டியே பேச்சி ஒரு அரை மணிநேரம் தொடர்ந்திட்சி,பிரெண்டாயிட்டோம்....

காலைல எல்லாம் பேச மாட்ட, கேட்ட அம்மா, அப்பா சந்தேக பாடுவாங்கன்னு சொல்லுவா, SMS மட்டும் அனுப்புவா, அடுத்தடுத்த நாட்கள்ல, வாங்க-போங்க,வா-போன்னு ஆட்சி, உலக விசயதுலேர்னு, பக்கத்துக்கு வீட்டு விஷயம் வரைக்கும்,அறிவு பூர்வமாவும் பேசுவா, எனக்கு,அவளோட பேசாம இருக்கவே முடியாதுங்கிற நிலைமை ஆகிபோட்சி....ஊருக்கு வந்தா உன்ன மீட் பண்ணமுடியுமான்னு கேட்டேன், தாராளமா வரலாம்னு சொன்னா....

அடுத்து வந்த நாட்கள்ல வாடி,போடியாட்சி, நான் என்னோட நிலமைய மறந்து உண்மையிலே அவள லவ்வே பண்ண ஆரம்பிட்சிடேன், அவளும் தான்,நான் உன்ன பார்த்தது கூட இல்லடா நீ எப்படி இருந்தாலும் பரவா இல்லடா உன்னோட அன்பு மட்டும் போதுண்டான்னு அடிக்கடி சொல்லுவா , அடுத்து கல்யாணம், முதலிரவுன்னு எங்க பேச்சி டெவலப் ஆகி போய்கிட்டே இருந்திச்சி, நைட்டு ரெண்டு மூணு மணி வரைக்கும் பேசுவோம், போர்வைக்குள்ள படுத்துகிட்டு குசு,குசுனு பேசுவா,நாங்க பேசாத பேச்சே இல்லன்னு சொல்லாம்,கணவன்-மனைவியாகவே வாழ்ந்தோம்,அவகிட்ட நீ இனிமே யார்கிட்டேயும் பேசகூடதுன்னு கண்டிசன் எல்லாம் போட்டேன்....ஒத்துகிட்டா....

கொஞ்ச நாளைல, நான் பண்ணிக்கிட்டு இருக்கது தப்பூன்னு ஒரைட்சிட்சி, நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்,அப்படி இருக்கப்ப ஒரு அப்பாவி பொண்ண நம்ப வச்சி ஏமாத்துறது எவ்வளவு பெரிய பாவம்னு உணர்ந்தேன்,இனிமே இந்த பாவத்த தொடரகூடதுன்னு முடிவு பண்ணுனேன்...

இந்த விசயத்த  என்னோட லவ்வர்கிட்ட கூட சொன்னேன்,அவளுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்,அதனால ஜாலியா எடுத்துகிட்டா, இப்பகூட ரெண்டுநாள் கால் பண்ணலன்னா, ஒனக்கு என்னடா காயத்திரி இருக்கா, என்னோட ஞாபகமா வரபோகுதுன்னு,சில சமயம் சீரியசாவும்,சில சமயம் ஜாலியாவும் கிண்டல் பண்ணுவா....

அடுத்தநாள்  கால் பண்ணி, காயத்திரி -எங்க  கம்பெனி On Site ப்ராஜெக்ட் விசயமா என்ன ஆஸ்ட்ரேலியா அனுப்புறாங்க,நாளைக்கே கிளம்பனும், திரும்ப வர 7-8 மாசம் ஆகும், அதுவும் இல்லாம நம்ம கல்யாணத்த பத்தி, எங்க அப்பா,அம்மாட்ட பேசுனேன் அவுங்க ஒத்துக்க மாட்டேன்குறாங்க நாம பிரிஞ்சிருவோம்டா,என்ன மறந்திருன்னு சொன்னது தான் தாமதம்,பயங்கரமா அழுக ஆரம்பிச்சிட்டா,பக்கத்துல கூட யாரோ ஏண்டி இப்படி அழுகுறேன்னு படபடப்பா கேக்குற சத்தம் கேக்குது, ஒண்ணுமில்லேம்மான்னு சொல்லிகிட்டே அழுகைய அடக்குரா,அவளால முடியல....
என்னடா  இவ்வளவு  சீரியஸா எடுதுகிட்டாலேன்னு, நானே கொஞ்சநேரம் தடுமாறி போய்ட்டேன், அந்த நேரத்துல எதோ சமாதானம் சொல்லி போன வட்சிட்டேன்,

ஆனாலும் அவளோட அழுகை மட்டும்,மனசுக்குள்ள கேட்டுகிட்டே இருந்திச்சி,இந்த நேரத்துல நான் கல்யானமானவன்குற  உண்மைய சொல்லிடலாமேன்னு கூட யோசிச்சேன், இவ்வளவு உணர்வு பூர்வமா இருக்குரவ ஏதும் தவறான முடிவுக்கு கூட போகலாம் இல்லையா,அதனால அடுத்த நாள், நான் ஆஸ்ட்ரேலியா கெளம்பிட்டேன், வந்து ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னு சொல்லி சமாதானம் பண்ணுனேன்,  ஒனக்காக நீ வர்ற வரைக்கும் காத்துகிட்டே இருப்பேண்டா என்ன மறந்திறாதடான்னு சொல்லி அழுதா,அதுதான் அவகிட்ட நான் கடைசியா பேசுனது,அதுக்கப்பறம் என்னோட போன் நம்பர மாத்திட்டேன்,

ஆனா அவளோட ஞாபகத்த மட்டும், இன்னைக்கு வரைக்கும்  மறக்கவே முடியல,
ஏன்னா, அவள நான் உண்மைலேயே லவ் பண்ணுனேன், இப்பவும் பண்ணுறேன்.....

இது நடந்து ஒரு மூணுமாசம் ஆகியிருக்கும் ,ஒரு நாள்  எனக்கு 
அவளோட போன் நம்பர குடுத்த என்னோட பிரண்டுகிட்ட, அவள பத்தி விசாரிச்சேன்,அவன் சொன்னான் , இப்பல்லாம் நாங்க எத்தன வாட்டி கால் பண்ணுனாலும், எடுக்கவே மாட்டேன்கிறா, தொடர்ந்து அடிச்சிகிட்டே இருந்தா, எடுத்து கண்ணா பின்னான்னு திட்டுறா, இனிமே இந்த நம்பர்லேர்ந்து கால் வந்தா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன்னு மெரட்டுரா, அதுனால இப்பெல்லாம் நாங்க அவளுக்கு கால் பண்ணுறதே இல்ல, ஆமாம் உனக்கு அவளோட  நம்பர் குடுத்தனே நீ பேசுநியான்னு கேட்டான், இல்லடா அதுக்கெல்லாம் எங்கடா நேரம் இருக்குன்னு அவன்கிட்ட பொய் சொன்னேன்...


அப்பவும் எனக்கு மனசு கேக்கல, என்னோட லவ்வர்கிட்ட, காயத்ரியோட நம்பர குடுத்து நீ என்னோட தங்கச்சின்னு சொல்லி அவ கிட்ட பேசு, அவ மனசு மாறி இருக்கான்னு பாரு, இப்பவும் அவ அதே தீவிரத்தோட இருந்தா, எங்க வீட்ல உங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்கிறாங்கன்னு செண்டி மென்டா பேசி புரியவையுப்பான்னு சொன்னேன், அவ   போன் பண்ணி சொன்னப்ப, அவகிட்டையும் அழுது பொலம்பிருக்கா, அவரு எப்ப வேணும்னாலும் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கட்டும், நான் இப்பவே உங்க வீட்டோட வந்துருறேன், நீங்க என்ன வந்து அழைச்சிட்டு போங்கன்னு சொல்லி துடிட்சிட்டாலாம் என் காயத்ரி....மறுபடி,மறுபடி அவ கால் பன்னுனதனால இவ பயந்து போய் நம்பர மாத்திட்டாளாம்.....  இதுக்காக என்னோட லவ்வர் என்ன திட்டுனா, ஆனா முன்ன விட எம்மேல அவளுக்கு பொசசிவ்நஸ் கூடிருச்சி....

என் லவ்வர்  சொன்னத கேட்ட எனக்கு, காயத்ரி  மேல இன்னும் மரியாதை கூடிருச்சி, நம்ம தப்பே பண்ணிருந்தாலும்,ஒரு அப்பாவி பெண்ணோட வாழ்க்கை சீரழியாம நான் அவமேல கொண்ட காதல் இன்னும் காப்பாத்திகிட்டு இருக்குன்ற ஆழ்ந்த மன திருப்தி உண்டாட்சி, நீங்களே யோசிங்க அவ முண்ணாடி மாதிரி அப்பாவியா கண்டவன்கிட்ட போன்ல பேசி, யாரோ ஒரு கெட்டவன்கிட்ட மாட்டி சீரழிஞ்சி போய் இருந்தான்னா....அவளோட வாழ்க்கையும் நாசமாகிருக்கும், ஒரு நல்ல ஆசிரியரோட குடும்ப மானமும் கப்பல் ஏறி இருக்கும்.....

இப்ப சொல்லுங்க நான் பண்ணினது தப்பா ? சரியா ?

சரி என்ன சந்திக்கிறதுக்கு முன்னால என்னோட  காயத்ரி  ஏன் அப்படி இருந்தா? அப்புடீன்னு யோசிச்சி பாக்குறேன்,

எல்லாருகிட்டேயும் அப்பாவியா பேசுனதனால அவ கெட்டவளா ? இல்ல என்னோட காயத்ரி புனிதமானவ,
ஒரு வேளை மூணு பெண்ணுங்களுக்கும் வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணிகுடுக்க வசதி இல்லாத அந்த ஏழை ஆசிரியருக்கு மகளா பொறந்துட்டாளே அதனாலயா  ,

இல்ல மூணுமே பெண்ணா பொறந்துட்டதால, அவ குடும்பதுலேர்ந்து பாசமோ,அன்போ  கிடைக்லையோ, அந்த அன்பை தான் என் காயத்திரி வெளியே தேடினாலோ,

இத புரிஞ்சிக்காம தான், ஆரம்பத்துல நானும், என் நண்பர்களும், இந்த சமூகமும் அவள தப்பான கண்ணோட்டத்துல பார்த்திருகோம், இந்த மாதிரி தவறாய் பார்க்கப்படும் எத்தனை காயத்திரிகளோ    என் இந்தியாவுல.....

Any Way....
என்னோட காயத்திரிக்கும் திருமணமாகி, திகட்ட,திகட்ட கணவனோட அன்பு கிடைச்சி சந்தோசமா, வாழ்க்கைல எந்த குறையும் இல்லாம வாழணும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன்....

By........தம்பி.........