Mar 3, 2010

கதவை திற ரஞ்சிதா வரட்டும்.....நாளை நீயும் வா...


....நித்யானந்த நமக....
கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு மார்வாடி வீட்டு இளம் பெண் துறவறம் ஏற்று கொண்ட சம்பவத்தை படித்த போதே இதைபற்றி எழுதலாம் என்று நினைதுக்கொண்டிருந்தேன், அதை எழுதுவதற்கான  சந்தர்ப்பத்தை நம் அருள்மிகு சாமியார் மிஸ்டர் நித்யானந்தர் எனக்கு அருள்கூர்ந்து இன்று வழங்கி இருக்கிறார்.....அவர் நாமம் வாழ்க......

இப்போதைய நவீன உலகத்தில்,பிரம்மச்சரியமும், துறவறம்,கன்னியாஸ்திரி வாழ்க்கையும்  சாத்தியமா ? என்னை பொறுத்தவரை  முடியாது என்றே தோன்றுகிறது....ஆபாசமும், ஆடம்பரமும், அதை  நம் படுக்கை அறை வரை கொண்டுசேர்க்கும் வூடகங்களும்  மலிந்துவிட்ட இந்த அல்ட்ரா மாடர்ன் உலகத்தில் அவர் பிரம்ம ரிசியாகவே இருந்தாலும் தடுமாறித்தான் போவார்.....

என் பள்ளி பருவ நாட்களில், எங்கள் ஊரில்  அமைந்திருந்த கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியைப் பற்றி அரசல் புரசலாக வெளிவரும் சில செய்திகள் கிளுகிளுப்பை அளித்தாலும், மனம் நம்ப மறுத்தது, மறுத்தது என்பதை விட, என்னை  மறுக்கும் படி மாற்றி வைத்திருந்தது நான் படித்த பள்ளி, இன்னொரு சம்பவம் என் கல்லூரி காலத்தில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, அதில் மிக ஆதிக்க சக்தியாக இருந்த ஒருவருடைய உறவினரின் திருமணதிற்கு எங்களின் தொகுதியின் சார்பாக கூட்டம் காட்டும் நோக்கத்தில் குவாட்ட்ரரும், கோழி பிரியாணியும் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மந்தைகளில் நானும் ஒருவனாக சென்றிருந்தேன், அப்போது  ஒரு வெள்ளை நிற வேனில் இரண்டு வெள்ளைக்கார பெண்களின் தோள்மீது கைகளை போட்டுகொண்டு 7,8 அழகிகள் புடைசூழ பள பளக்கும் காவி ஆடையில் வந்து இறங்கினார் நம் அருள் மிகு சுருட்டை முடி செந்தில் " பிரேமானந்தா" அவர்கள், அவரிடம் அந்த முக்கிய புள்ளிகள் காட்டிய பணிவென்ன,பக்தி என்ன, அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும்.....

இதெல்லாம் சில உதாரணங்களே, இந்து மதம் சொன்ன பிரம்மச்சரியமும்,கிருஸ்துவ மதம் சொன்ன கன்னியாஸ்திரி வாழ்கையும்,ஜைன மதம் சொன்ன துறவறமும் புனிதமாகவும்,பின்பற்ற எளிதாகவும் தான்  இருந்தன, அவை சில நல்ல நோக்கங்களுக்காகதான் சொல்லப்பட்டிருந்தன, இவைகளை பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ்ந்து அதன் மூலம் மற்றவர்களையும் நல்வழி படுத்தியவர்களுக்கு ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம், இந்த உதாரணங்கள் எல்லாம் காஞ்சி பெரியவரோடும்,தன்முன் நிர்வாணமாய் நின்ற பெண்ணையே அன்னையாக பார்த்த விவேகானந்தரோடும்,அன்னை தெரசாவோடும் முடிந்து விட்டதாகவே எனக்கு படுகிறது...

இன்னும் சொல்லப்போனால் கடந்த 1970 பதுகளோடு, அதன் பிறகே இதன் புனிதம் கெட ஆரம்பித்தது, இயற்க்கை தந்த காமத்தையும் காதலையும், அடக்கி அதன் மூலம் ஆன்மீகத்தை தேட மிக மனவலிமை தேவை, அது மேற்சொன்னவர்களிடம் இருந்தது, அதற்க்கு மிக முக்கியகாரணம் அவர்களின் புனிதத்தை கலைப்பதற்கான எந்த வித புறக்காரணிகளும் அப்போது இல்லை,

இப்போது அப்படியா, நமீதாவின் தொப்புளைகாட்டியே குழந்தைக்கு சோறுட்டும் அம்மாக்களும் இருக்கிறார்கள், எல்லாம் நாகரீகத்தின்,விஞ்ஞான வளர்ச்சியின்  கைங்கர்யம்,ஒரு குழந்தையே இப்படி இருக்கும் போது, ஒரே ஒரு தவறான மிஸ்டு காலால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிப்போய்விடும் இந்த கால கட்டத்தில் ஒரு பருவ வயது ஆணோ,பெண்ணோ, இந்த நாகரீகங்களுக்கு எல்லாம் அடிமையாகாமல், மனதை அடக்கி வெற்றி காண்பதெல்லாம் இயலாத காரியமே.........
அவனே உண்மையான பக்தியோடு, அதில் ஈடு பட்டாலும், அவன் விரும்பாத போதும் அவன், சிலரின்  அரசியல்,பணம் பண்ணுதல் போன்ற குறுக்கு வழி காரணங்களுக்காக புனிதனாக சித்தரிக்கப் பாட்டு அவனே கனவிலும் நினைத்துப் பார்த்திடாத உயரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறான் , இதன் மூலம் பெரும் இன்பங்களை   அனுபவிக்க ஆரம்பிக்கும் அவன் தடம் மாறிப் போவது என்பது தடுக்க முடியாததே.....போதாக்குறைக்கு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கும் உயர் வர்க்கமும், பொருளாதார வாழ்க்கை போராட்டத்தில் போட்டி போட்டு ஓடி மனச்சோர்வு அடையும் இளவர்கமும், இவரின் மூலமாகவாவது உயர்வு கிடைக்காத என ஏங்கி தவிக்கும் ஏழை வர்க்கமும் போட்டி போட்டு கொண்டு அவனின் மடிமீது தானாகவே என்று விழும்போது,அவன் ஆண்மை இல்லாதவனாகவே இருந்தாலும் சபலப்படுவது இயல்புதான்....இதைதான் இந்த நடிகையும் செய்திருக்கிறாள்....இது போன்று  எத்தனையோ சம்பவங்களையும், சாமியார்களையும் பற்றி கேள்வி பட்ட போதும், நாம் திருந்துவதாய் இல்லை, இந்த நித்யானந்தா பரபரப்பு இன்னும் ஒரு மாதமோ, சில நாட்களோ,நாளை மீண்டும் ஒரு சாமியார் வருவார் இதைப்போலவே உங்களை ரட்சிக்க....

மதங்கள் சொன்ன வழிகளில் தவறில்லை, அதை கடைபிடிப்பதற்க்கான  புற சூழ்நிலை இப்போது இல்லை, இனிமேலும் இப்படி கடவுளின் இடைத்  தரகர்களாக தங்களை காட்டிக்கொண்டு உங்களுக்கு அமைதியையும்,சாந்தியையும் வழங்குவதாக கூறிக்கொண்டு எவனும் எந்த மதத்திலிருந்து வந்தாலும்,  நம்பி மோசம் போகாதீர்கள்.......கடவுளை மட்டும் நம்புங்கள், இல்லையா நாத்திகனாக கூட இரு ......மீறினால்

நாளை  உங்கள் மானமும், சன் செய்தி கப்பலில் ஏறுவது  உறுதி.....அந்த வீடியோவை நானும்  ரசிக்க தயாராய் தான் இருக்கிறேன்......

By.................தம்பி......6 comments:

rama said...

மதங்கள் காட்டும் வழிகளை பின்பற்றும் சூழல் இல்லை. மறுக்க முடியா உண்மை. வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

மக்கள் மீதுதான் குற்றம்...

தம்பி.... said...

நன்றி ரமா

தம்பி.... said...

அத்த தான புலவா நான் அப்போலேர்ந்தே சொல்றேன்

sakthi said...

தம்பி

உண்மையில் எனக்கு நிறைய முரண்பாடுகள் தோன்றுகின்றது .

முதலில் எது ஊடக தருமம் ?. ஒரு adult movie யில் கூட பார்க்க முடியாத நிகழ்வுகளை எப்படி ஒரு news channel திரும்ப திரும்ப ஒளிபரபரப்ப முடியும்? இதனை எப்படி ஒரு வீட்டில் தாய், தந்தை மற்றும் சகோதரிகளுடன் பார்க்க முடியும் ?என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை . அந்த அளவிற்கு நாம் மரத்துவிட்டோமா ?இரண்டாவது, இன்று கல்லால் அடிபவர்கள் நேற்று?சரி ? சாமியார்களின் முகத்திரையை கிழிப்பது என்றால் உங்களுக்கு தெரிந்த போலியான சாமியார்களை நீங்கள் நினைத்து கொள்ளுங்கள் .அவர்களை என்ன செய்வார்கள்?எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது . ஏமாந்தவர்கள் என்றும் இது புரியாத பொது மக்கள் தான் .எனது அனுதாபங்கள் அந்த நடிகைக்கு .ஒரு போலி சாமியாரை அணுகியதால் அவர் பெற்றது அவமானம் மட்டுமே .

தம்பி.... said...

நீங்களும் நானும் கவலைப்பட்டு என்ன ஆகா போகுது, ஒன்னும் இல்ல,சக்தி இவ்வளோ எழுதுனதுக்கு, இத வச்சி நீங்களே ஒரு பதிவு போட்ருக்கலாம்....

Post a Comment