Mar 5, 2010

சாரு சாரு..... அது யாரு யாரு......

இன்னைக்கி உங்களாண்ட பேச வந்திருக்க கேர்ரக்ட்டர்  உங்கள் கபாலி ப்ரம் கீச்சான் குப்பம்-சென்னை ....நம்ம ஜனகராஜ் மாதிரி ஒரு ஆளுன்னு வச்சிக்கங்க...... 

அப்பாவி கபாலி கடந்த ரெண்டு வருசமா வலை தொகுப்பெல்லாம்  படிச்சிகிட்டு வர்றாராம் அவருக்கு ரொம்ப நாளாவே  ஒரு டவுட்டு, அத கிளியர் பண்ணிக்கிறதுக்காக எங்கிட்ட வந்திருக்காரு வாங்க என்ன ஆகுதுன்னு பாப்போம்....

கபாலி: இன்னா நைனா, நல்லாக்கீரியா ( நல்ல இருக்கேன் கபாலி சொல்லுங்க என்ன விஷயம் )...

கபாலி:இல்ல நைனா, நானும் ரெண்டு வருசமாவே இந்த ப்ளக்காமே, அல்லா பிரபலமும் எழுதுவாங்களே, பிரியலையா அதாம்பா நம்ம மெரீனா பீச்சாண்ட மணலு கொஞ்சமாவும்,குப்ப மட்டும் நெர்யாவும் ஒரே கலீஜா கெடக்குமே அத்தே மேரி, ஆங் புச்சிட்டேன்,புச்சிட்டேன் அதாம்பா இந்த வலப்பூ ( ஓ அதுவா அது வலப்பூ இல்ல கபாலி வலைபூ )

கபாலி:இன்னமோ ஒன்னு அத்த விடு, அத பட்சிகின்னு வர்ரம்பா, இன்னா மேரி எழுதுறாங்க தெர்மா..... ஹா த்தூ ( சரி நல்ல விசயம்தானே அதுக்காக, எதுக்கு கபாலி இப்புடி காறி துப்புறீங்க )

கபாலி:அத்து ஒன்னில்லப்பா 420 பீடா போட்டனா அத்தான் துப்புனேன், நீ இன்னா நென்ச்சே  (  ஒண்ணுமில்ல நீங்க சொல்லுங்க )

கபாலி: இத்துல இன்னான்னா முக்காவாசி பிரபலங்க  கம்முன்னு தான் இருக்காங்க நைனா, கொஞ்சகாண்டு பேரு மட்டும்  சதா....... சாரு,சாருன்னு எத்த பத்தியோ அடிக்கொருதபா எழுதிகினே இருக்காங்கப்பா, ஒர்த்தன் திட்றான், ஒர்த்தன் புகல்றான், அத்த பட்சாலே ஒரே மெர்சலாகுதுபா.....அத்து இன்னா சாரு நைனா,அத்த குட்சா ஒடம்புக்கு நல்லதா நைனா....( ஒ அதுவா, அது நீ நினைக்கிற மாதிரி கரும்புச்சாறு  மாதிரியெல்லாம் இல்ல கபாலி  அது ஒருத்தரோட பேரு, அது யாருன்னா  )

கபாலி: நிர்த்து,நிர்த்து அத்தான், அத்து ஒரு ஆளோட பேருன்னு சொல்லிகினியே, அப்பாலையும் கண்டுபுடிக்க முடியாதபடிக்கி நான் இன்னா அவ்ளோ முட்டாளாவக்கிறேன்......( சரி நீயே சொல்லு கபாலி )

கபாலி: இந்த திருச்சியாண்ட ஒரு அம்மா மேயரா இர்ந்தித்சே அத்தா ( அவங்க சாருலதா தொண்டைமான் அவங்க இல்ல )

கபாலி:பின்ன நம்ம கமலு சாரோட அண்ணாத்த ஒன்னு இருந்திச்சே, எப்பங்கட்டியும் பெர்சு,இல்ல ஐயிரு வேஷம் கட்டுமே அத்தா ( அவரு சாருஹாசன் அவரும் இல்ல )

கபாலி: அப்ப்ங்காட்டி நீயே சொல்லு நைனா....( அவர் ஒரு எழுத்தாளர் அவரோட பேரு, சாருநிவேதிதா )

கபாலி:  பொம்பள புள்ளயா எழுதுது ( இல்ல கபாலி அது அவரோட புனை பெயர்ன்னு நினைக்கிறேன் )

கபாலி: நல்லா எழுதுவாரா, அத்துல எதுங்காட்டியும் நீ பட்சிருக்கியா ? (  அவர தெரியும் But  அவர் எழுதுனத அவ்வளவா படிச்சதில்ல )

கபாலி:  ஆளு எப்டி சோக்கா இருப்பாரா ? ( நான் நேர்ல பார்த்ததில்ல, ஆமா கபாலி நீ விஜய் டிவியில வர்ற நீயா நானா பார்க்கிற பழக்கம் உண்டா ? )

கபாலி:  இன்னாப்பா இப்டி கேட்டுட்ட, நம்ம கோபிநாத் தம்பி நடத்துமே, சன்டே சன்டே அத்தான, இன்னா சோக்கான புரோகிராமு தெர்யுமுள்ள, அத்த பாக்காங்காட்டி நமக்கு சன்டேல தூக்கமே வராதுபா, இப்ப அத்த பத்தி ஏன் கேக்குற ? ( இல்ல அந்த நிகழ்ச்சி  தீபாவளி மாதிரியான விசேஷ நாட்கள்ல நடக்கிறப்ப, இந்த  சாரு நிவேதிதா அடிக்கடி சிறப்பு விருந்தினரா கலந்துக்குவாரு அதான் கேட்டேன் )

கபாலி:  இன்னா சொல்ற நீ , கொஞ்சம் ஏறு நெத்தியா, கொஞ்சம் மொத்தமான மீச வச்சிகினு அவ்ரா ( அவரே தான் )

கபாலி:  அவ்ரா, இன்னாமா பேசுவாரு, இன்னா ஒன்னு நம்ல மேரி ஆளுக்கு கொஞ்சம் பிரியாது, ஏம்பா அவ்ருக்கு ஒரு நாப்பத்தஞ்சி, அம்பது வயசு இருக்காது ? ( இருக்கும், ஆமா கபாலி நீ ஏன் அவரோட வயச பத்தி கேட்கிற )

கபாலி:  மேட்ருகீதுப்பா, என்னாங்கடா இத்து. ( என்ன விசயம்னு சொன்னா எனக்கும் புரியுமில்லையா )

கபாலி:  இல்ல நைனா அவ்ர பத்தி கிண்டல் பண்ணி எழுதிகினுகீரானுவளே, அத்ல பாதி பேருக்கு, இவ்ரோட வயசுல பாதி தாம்பா இருக்கும்- " கபாலி சிரிக்கிறார்" ( ஏன் கபாலி சிரிக்கிற , கிண்டல் பண்ணி எழுதுவதற்கும், வயசுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, இது வலையுலகம் இங்க எலோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு )

கபாலி:   நல்லா சொன்னப்போ......எங்க மூத்த அண்ணாத்த ரமேசாண்ட நான் சண்ட போடும் போதுல்லாம் எங்க ஆயா சொல்லும் " டேய் கேப்மாரி அவன் திண்னைய புடுட்சிகினு நடக்கிறப்ப நீ அவ்னோட குண்ணைய புட்சிகினு நடந்தவன்டான்னு "சொல்லும் அண்ணாத்த, நீ சொல்றது  அந்த மேரில்ல இருக்கு. ( நீ என்னா சொல்லவர்றேன்னு புரியல கபாலி, திண்ணை புரியிது அதென்ன கு..... )

கபாலி:  பிரியலையா, அப்ப அத்த உட்டுரு ( இல்ல கபாலி நீ சொல்லியே ஆகணும் )

கபாலி:  இல்லபா இம்மாம் படா ,கோபி நாத்து தம்பியே அவ்ர மதிச்சி இட்டாந்து நீயா நானால பேச சொல்லி சொல்லுங்கோசரம், தம்மா துண்டு பிஸ்கோத்து பசங்கல்லாம் அவ்ர கலாய்க்கிரானுன்களே அத்த சொல்லிகினுகிறேம்பா, அவருக்கு சரக்கு இல்லைனா கோபி நாத்து தம்பி இட்டருமா நீயே சொல்லுபா...( அதெல்லாம் சரி தான் கபாலி, சில நேரம் சின்ன பசங்க கூட கிண்டல் பண்ணுற அளவுக்கு அவர் நடந்துக்கிறார் )

கபாலி:  அப்டி இன்னா பண்ணிருக்காரு கொஞ்சம் நாம கையாண்டையும் சொல்லேன் (  இப்ப நம்ம நித்யானந்தா சாமி விசயத்தையே எடுத்துக்க, இந்த ரஞ்சிதா பிரச்சனையில சிக்குற வரைக்கும் அவர இந்த சாரு தலையில தூக்கி வச்சி கொண்டாடுனாரு, பிரச்சன வெளியில வந்ததுக்கு அப்பறம் அவன் ஒரு துரோகி, பாவின்னு அவரோட வலைபக்கதுல எழுதுறாரு, இப்படி பல்டி அடிக்கலாமா நீயே சொல்லு அதனாலதான் அவர கிழி கிழின்னு கிழிக்கிரானுங்க )

கபாலி:  இது இன்னாபா ஞாயம், முன்ன சாமிய நல்லவருன்னு நென்ட்சிகினு இருந்தாரு, இப்ப சாமி ஒரு டுபாக்கூருன்னு தெரிஞ்சதுக்கப்பால திட்டறாரு இத்துல இன்னா தப்புக்கீது....( அப்படியில்ல கபாலி, அந்த சாமியார  நம்புறதும், நம்பாததும் அவரோட தனிப்பட்ட  விஷயம் தான் அத யாரும் குறை சொல்லல , ஏன் அந்த சாமியாரோட புகழ்பாடி , அவரோட  நம்பிக்கைய  அவரோட வாசகர்களுக்கும் எற்படுதணும், இது ஒரு விதத்துல அந்த போலி சாமியாருக்கு ஆள் புடிச்சி விடுற வேலை மாதிரிதானே இது )

கபாலி: நீ சொல்றதும் சர்தாம்பா, இத்த கூட  விடு தப்பு பண்ணிகினாரு ஏத்துகிறேன் அத்தால அவர கலாய்க்கிரானுங்க சர்தான், அப்போலேந்தே எங்க ஆயாவோட ,ஆயா காலத்துலேர்ந்தே  புச்சா எழ்த வர்ரவன்கூட அவ்ர கலாய்ச்சி  எழுதுரானுன்களே அத்து இன்னாத்துக்கு.....( ஒ அதுவா கபாலி, இந்த வலை உலகத்து அரசியல் உனக்கு புரியாது, இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ,வயசோ தகுதியோ இல்லாட்டியும் கூட அவர மாதிரி கிள்ளு கீரை ஆளுங்கள எல்லாம் திட்டி, கிண்டல் பண்ணி பதிவு போட்டாதான், இங்க பொழப்ப ஓட்ட முடியும், அப்பத்தான் நீ பிரபல பதிவர் ஆகலாம், நெறைய ஓட்டும் விழும்  நெறைய பாலோயர்ஸ் வருவாங்க, கூடவே மனசுக்குள்ள பெரிரிரிரிரிய்ய  எழுத்தாளர்ங்கிர நெனப்பும் வரும், இதெல்லாம் இருந்தாதான் வலைப்பதிவர்கள் கூட்டதுக்குகூட உன்னையும் ஒரு எழுத்தாளர மதிச்சி கூப்பிடுவாங்கன்ன பார்த்துக்கயேன், இல்லைனா தேமேன்னு நீ பாட்டுக்கு எழுதிகிட்டே இருக்க வேண்டியது தான், உன்ன ஒரு புழுவா கூட மதிக்க மாட்டங்க இந்த பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொல்லி கூட்டம் போடுரவனுங்க புரியுதா )

கபாலி:   ஒ இப்டி ஓன்னுகீதா, சரி பிரபழ பதிவர் மேரி ஆனா இன்னா பெனிபிட்டு, துட்டு எதும் வருமா ? ( அது பிரபழம் இல்ல பிரபலம் )

கபாலி:  அத்த உடுப்பா, நான் இன்னா கேட்டுகினுகீரன், நீ இன்னா சொல்லிகினுக்கீர மேட்ருக்கு வா, துட்டு வருமா வராத  ? ( அட நீ வேற கபாலி, துட்டெல்லாம் வராது, கேபிள் அண்ணா மாதிரி நிறைய ஹிட் ரேட் உள்ளவங்களுக்கு, ஆன்லைன் விளம்பரத்துலேர்ந்து நிறைய பணமெல்லாம் இல்ல ஐநூறோ, ஆயிரமோ கிடைக்கும் அவ்வளவுதான், ப்ளாக் எழுதுறத ஹாபியா வச்சிருக்கவங்களுக்கு பிரச்சன இல்ல, இருந்தாலும் நேர விரயம் தான், எப்பவுமே அதுலயே கவனத்த செலுத்துரவங்களுக்கு, சோறு போடுற வேலையிலையும் கவனம் போய், கடசில உண்டக்கட்டி வாங்கி சாப்புடுகிற நெலம தான்  வரும் )

கபாலி:  இத்துல இம்மாம் விஷயம் இருக்கா, ஆமா அண்ணாத்த  உன்னாண்ட ஒன்னு கேக்கணுமே ( கேளு கபாலி )

கபாலி : எப்பவுமே ரண்டு பக்கமும் சப்போர்ட்குடுத்து பேசிகின்னுகீறியே, நீ எப்டி...ஒனக்கு யாராண்டையும் காண்டு இல்லையா ?( கபாலி நான் வந்து வேற அளுகிட்ட பாடம் படிச்சவன், அவர் எங்களுக்கெல்லாம்  எப்டி படிக்கணும்,எழுதணும்,ரசிக்கணும், குறிப்பா நாடு நிலையோட எப்படி நடந்துக்கணும்  நல்லா சொல்லி குடுத்திருக்காரு, எங்க பாஸ் அவரு வேற மாதிரி கபாலி )

கபாலி:   அவரு யாருப்பா அம்மம் பெரிய பாஸு ஒங்க பாஸு ( அண்ணன் கபாலி அண்ணன், எனக்கு அண்ணன்னா, எழுதுற எல்லாருக்குமே அவர் தான் அண்ணன், நீயே கண்டு புடிச்சிக்கோ )

கபாலி: ஒ அவ்ரா, நம்ம தலிவரு, இன்னும் கொஞ்ச நாள் உசுரோட இருந்திருக்கலாம்பா , இன்னா பண்ண நாமா குட்துவச்சது அவ்ளோதான்......சரி அண்ணாதே அப்பால வரன்..

இம்மா நேரம் பொறுமையா ப்ச்சதுக்கு,  நன்றி நைனா...
அன்புடன்.....
கபாலி-கீச்சான் குப்பம்,சென்னை.....400 026 .

By.......தம்பி.......................6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உண்டக்கட்டி வாங்கி சாப்புடுகிற நெலம.......

////////

இங்கேயும் அதே நிலைமைதான் தம்பி

தம்பி.... said...

இன்னாபா இமாம் படா வலைச்சரம், அங்கயுமா உண்டக்கட்டி

கலை said...

superya

தம்பி.... said...

அப்டியா....தேங்க்ஸ்யா....

துளசி கோபால் said...

மெய்யாலும் சரிதான் தம்பி.

உண்டக்கட்டி லெவலுக்கு வந்துருக்கேம்பா!!!

தம்பி.... said...

பதிவு எழுதுறது ஒரு போதை மாதிரி துளசி அண்ணா, அதும் நம்ம எழுதுனது கொஞ்சம் பேரு படிச்சிட்டு ஓட்ட கீட்ட போட்டுட்டா சொல்லவே வேணாம்.....எந்த வேலை இருந்தாலும் அத உட்டுபுட்டு, அடுத்த பதிவு என்ன எழுதனும்னு தான் மனசு யோசிக்கிது...

Post a Comment