Mar 9, 2010

கூடை நிறைய மலர்கள்....ஆனால்.....?

இந்த பதிவுக்கு எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவான்னு தான் தலைப்பு வைக்கனும்னு முடிவு பண்ணி இருந்தேன்......இத எழுத கூடாதுன்னு கூட முடிவு பண்ணி இருந்தேன்.....

நான் தினமும் காலை நேரத்துல வாக்கிங் போகும் போது, தினமும் ஒரு அம்மாவும், அம்மாவோட கையை பிடித்துக்கொண்டு ஒரு எட்டு   வயது மகனும் எனக்கு எதிர் திசையில் நடந்து போவாங்க ....அந்த இருவரையும் கடந்து போகும் போதெல்லாம் என்னை ஒரு  இனம் புரியா சோகமும்,ஆற்றாமையும்  ஆட்கொள்ளும் , வீடு வந்து சேரும் வரை அவர்கள் நினைவாகவே இருக்கும்....என் மனமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும்,அதுஒரு விவரிக்க முடியாத இதயத்தின்  
வலி   இது தினமும் நடக்கும் நிகழ்வு தான்,  அதற்க்கு காரணம் உண்டு ....அந்த பையனுக்கு தானாகவே நடந்து போகிற அளவுக்கு கால்களில் சக்தி இல்லை.....ரெண்டு கால்களிலும் கிளிப் போடப்பட்டிருக்கும், அவனுடைய அம்மா ஒரு பக்க கையை பற்றி இருக்க அந்த பிடிமானத்தில் மெல்ல மெல்ல எட்டுவைத்து நடை பயின்று வரும் அந்த மொட்டு கூட விரியாத மலர்.......அதை பார்க்கும் போதெலாம் கடவுளின் மீது கட்டுக்கடங்கா கோபம் வரும்.......

இன்னைக்கு ஆபீஸ் போறதுக்காக வழக்கம் போல ஆட்டோல வந்துகிட்டு இருந்தேன்,ஆட்டோ நான் தங்கி இருக்கிற ஏரியாவ தாண்டி  மெய்ன் ரோட்டு பக்கம் திரும்பும் போது அவங்க ரெண்டு பேரையும் பாத்தேன்.... வெள்ளை நிற ஸ்கூல் பஸ் வந்து  நிக்கிது அவனோட அம்மா அவன தூக்கி பஸ்சுக்குள்ள ஏத்திவிட ட்ரை பண்றாங்க, போகமாட்டேன்  நைமா,நைமான்னு சொல்லிக்கிட்டு  ரோட்டோட தடுப்பு கட்டையில உட்கார்ந்து கிட்டு  கதறி அழுகுறான் புள்ள....அவனோட முதுகுல புத்தக மூட்டை வேற மாட்டி இருக்கு, அந்த எடையோட அவன தூக்கி பஸ்சுக்குள்ள ஏத்திவிட முடியாம அவங்க அம்மா தினருறாங்க...அப்பவும் முடியல, இயலாமையும்,எனக்கு மட்டும் இப்படி ஒரு பிள்ளையை குடுத்திடியேஆண்டவாங்குற  ஏக்கமும் சேர்ந்து அழுகை முட்டிக்கொண்டு வர கலங்கி போன கண்ணோட சுத்தி முத்தி பார்த்த  அந்த அம்மாவோட முகத்த பாக்கணுமே,ஆண்டாவா  அத எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல,நிமிர்ந்து பஸ்சுக்குள்ள பார்த்தா அதவிட கொடுமை கண்ணுல கருப்பு கண்ணாடியும், கையில வாக்கிங் ஸ்டிக்கோடையும்,காதுல ஹியரிங் எயடோடையும் 
கால்ல கிளிப்போடையும் அந்த பஸ் முழுக்க  எல்லாமே மாற்று திறனுடைய குழந்தைகள்,அதுல இருந்த எல்லா குழந்தைகளுக்கும் பத்து வயசுக்குள்ள தான் இருக்கும், அது ஒரு மாற்றுதிறன் உடயோருக்கான பள்ளியின் பேருந்து,அத பார்த்த எனக்கு   நெஞ்சே  வெடிச்சி போன  மாதிரி ஒரு உணர்வு   குமிறிக்கிட்டு அழுகை
வருது, ஆட்டோகாரர் பார்த்திட கூடாதுன்னு அடக்கி பாக்குறேன் கட்டு படுத்த முடியல, கண்ணுல தண்ணி வழிய ஆரம்பிச்சிட்டு......

ஏண்டா ஆண்டவா, ,உலகத்தில் இந்த மாதிரி எத்தனை பேரை குறையோடு படைத்திருக்கிறாயோ, குழந்தைகள் மலர்களை போன்றவர்கள் அவர்களையாவது உன் திருவிளையாடலில் இருந்து விட்டு வைத்திருக்க கூடாதா, எத்தனையோ தீயவர்களும், கொலைகாரர்களும், கெட்டவர்களும்,கொடூரமானவர்களும்  எந்த குறையும் இல்லாமல் உலகத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க இந்த பிஞ்சி மலர்களை  கூட  குறையோடு படைக்க உனக்கு எப்படி மனம் வந்ததுன்னு, திட்டிக்கொண்டே,  நீ படைத்த விசயங்களை என்னால் மாற்றமுடியாது, அவர்களை மனதளவில் மகிழ்ச்சியாய் வைத்திருக்கவாவது எனக்கு  இன்னும் பொருளாதார வசதியை கொடு, அதற்காக இன்னும் கடுமையாய் உழைப்பவனாய் என்னை மாற்றியருள்ன்னு வேண்டிக்கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தேன்......கனத்த இதயத்துடன்.......

கூடை நிறைய மலர்கள்....
ஒன்றில் கூட இதழ்கள் இல்லை.....
எப்படி நான் சிரிக்க......... 

By .......................தம்பி........




5 comments:

Unknown said...

கூடை நிறைய மலர்கள்....
ஒன்றில் கூட இதழ்கள் இல்லை...
super

தம்பி.... said...

appdiyaa thanks

கமலேஷ் said...

///கூடை நிறைய மலர்கள்....
ஒன்றில் கூட இதழ்கள் இல்லை.....
எப்படி நான் சிரிக்க ///

வலி நிறைந்த வரிகளும், பதிவும்...

அன்புடன் அருணா said...

///கூடை நிறைய மலர்கள்....
ஒன்றில் கூட இதழ்கள் இல்லை.....
எப்படி நான் சிரிக்க ///
மனதைத் தொட்ட வரிகள்.பூங்கொத்து!

தம்பி.... said...

இது என் மன ஓட்டம், என் உணர்வுகளுக்கு மொழி கொடுத்திருக்கிறேன் நன்றி ...கமலேஷ் & அருணா

Post a Comment