Jan 11, 2010

குஜராத்தில், என் கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்.....

நேத்து காலைல ஒரு 7.35 மணி போல இருக்கும், வழக்கம்போல வாக்கிங் போய்கிட்டு இருந்தேன், அப்பத்தான்,அந்த பயங்கரமான, நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துச்சி, கொஞ்சநேரம் ஆடிப்போயிட்டேன், கண்ணு முன்னாடி நடந்தும்,அத தடுக்க முடியலையேன்ற குற்றஉணர்வு இன்னும் இருக்கு, நைட்டு இத நெனைச்சே ரெண்டு பெக் கூட போட்டேன், அப்பவும் தூக்கம் வரல....

நானும் சூரத்துக்கு வந்து, 5 வருசத்துக்கு மேல ஆய்ட்டு,குஜராத்ல எல்லா இடமும் சுற்றி இருக்கேன், இதுவரைக்கும் நம்ம ஊர்லயெல்லாம் சகஜமா நடக்குமே, அந்த மாதிரி ஒரு, கோஷ்டி சண்டையோ,அடி தடியோ, வெட்டு குத்தோ,கட்ட பஞ்சாயத்தோ நடந்து நான் பார்த்ததே இல்ல, அவங்க உண்டு, அவங்க வேலை உண்டுன்னு போய்கிட்டே இருப்பாங்க.......

நான் கூட நெனட்சிக்குவேன், இவங்க சின்ன, சின்ன சில்லறை சண்டையெல்லாம் போடா மாட்டாங்க போலிருக்கு, எல்லாத்தையும் மொத்தமா சேர்த்து வச்சி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துல நடந்த மாதிரி, ஒரு ரெண்டாயிரம், மூவாயிரம் பேர மொத்தமாத்தான் கொல்லுவாங்க போலிருக்கு, அப்படின்னு.....
இல்ல, இங்கயும் இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு, இந்த சம்பவத்துக்கு அப்பறம் தான் எனக்கு தெரிய வந்துச்சி....

என்னன்னா, ஒருத்தன் எனக்கு எதுக்க, கொஞ்சம் தள்ளி நடந்து வந்துகிட்டு இருந்தான், ஆளு நல்ல செகப்பா, வாட்டம் சாட்டமா, இருந்தான், அவங்க ஆளுங்க மாதிரி தான் இருந்தான், எந்த வித்தியாசமும் தெரியல..
எனக்கு பின்னாடி ஒரு ஆறு, ஏழு பேரு இருப்பாங்க, நல்லா மொரட்டு, மொரட்டு பசங்களா இருந்தானுங்க,ஏதோ ஆக்ரோசமா, சத்தமா பேசிகிட்டு, நின்னுக்கிட்டு இருந்தானுங்க, நான்கூட பயந்துகிட்டே தான், அவனுங்கள கிராஸ் பண்ணி வந்தேன்,

என்ன நெனைசான்னுன்களோ தெரியல,எதுக்க வந்தவன பார்த்துட்டு,கொலவெறியோட,பயங்கரமா சத்தம் போட்டுக்கிட்டு,திடு ,திடுன்னு  என்ன கிராஸ் பண்ணி ஓடுனாங்க, எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு...நான் என்னத்தான் போட போறாங்களோனு நெனச்சேன், நல்லவேள அப்புடி ஏதும் நடக்கல,ஏன்னா எனக்கு, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி மூணு சம்பவம் நடந்திருக்கு,ஆனா இந்த மாதிரி குரூப் அட்டாக் இல்ல.....

இவனுங்க ஓடி வர்றத பார்த்தவுடனே, எதுத்தாப்புல வந்தவனும், திரும்பி, ஓட ஆரம்பிச்சிட்டான், இன்னைக்கு என்னமோ,நடக்க போகுதுன்னு மட்டும் தெரிஞ்சிபோட்சி.....

வெரட்டுனவங்கள்ள தலைவன் மாதிரி இருந்தவன், ஓடி வந்த வேகத்துல கண்ட்ரோல் பண்ணமுடியாம, அவனோட மேல மோத, அவன் ரெண்டடி பறந்து போய் கிழே விழுந்து, ரெண்டு புரண்டு, புரண்டு எழுந்திரிச்சான்,அதுக்குள்ள மத்தவங்களும் வந்து அவன சுத்தி, வளைச்சி பொரட்டி எடுத்துட்டாங்க, நல்லவேள ஆயுதம் எதுவும் அவனுங்களுட்ட இல்ல....

என் ரத்தம் துடிக்குது, இருந்தாலும் தமிழ் பட ஹீரோ மாதிரி போய் காப்பாத்த முடியல...அவன் பயந்து, நடுங்கிகிட்டே எழுந்திரிச்சான், கண்ணுல மரண பயம் தெரியுது, இவனுங்க ஆத்திரமும் கொஞ்சம் தனிஞ்சமாதிரி தெரிஞ்சிச்சி, அவன் ஏதோ சொல்ல, இவனுங்க ஏதோ சொல்ல பிரச்சன முடியிறமாதிரி தெரியல, பொம்பள பிரச்சனையா, இல்ல ஜாதி தகறாரா,ஏரியா தகறாரா, இல்ல வேற ஏதும் பிரச்சனையா என்னன்னு புரியல, எனக்கு இங்க்ளிஷும், ஹிந்தியும், மட்டும் தான் தெரியும்கிரதனால, என்ன பேசிக்கிரானுங்கனு புரியல...பிரச்சன மறுபடியும் சூடாவுது....

இந்த சமயத்துல, அடி வாங்குனவன், கெடைச்ச கொஞ்ச கேப்புல, Escape ஆகி மெயின் ரோட்ட கிராஸ் பண்ண பார்தாம்பாருங்க, எதுக்க வந்த கார் மோதி, ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சி, ஆளு Spot Out.......எல்லாம் ஒரு ரெண்டு  நிமிசத்துல முடிஞ்சி போச்சி......

ஓடிபோய் பார்த்தா...

பார்த்தா....

பார்த்தா ...

பார்த்தா...

 அந்த செகப்பு நிற "நாய்" ரத்த வெள்ளத்துல, செத்து கிடக்கு ....

ரொம்ப Terror ஆ இருக்குல்லா........


(* எனக்கு மூணு முறை இந்த சம்பவம் நடந்திட்சினு மேல சொன்னது, நான் மூணு வாட்டி நாய்கிட்ட கடி வாங்குனத தான்...... )


 

0 comments:

Post a Comment