Dec 30, 2009

கருப்பு பண ரகசியங்கள் பகுதி - 1 ( அறிமுகம் )

கருப்பு பணம், இந்த வார்த்தைய கேட்டாலே ஒரு மர்மம் கலந்த சுவராஸ்யம் இருக்கும், அதும் இல்லாம நான் குஜராத்ல வேல பாக்குறதால இத பத்தி எனக்கு நேர்முக அறிமுகம் உண்டு, இத பத்தி ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாள நெனச்சிக்கிட்டு இருந்தேன், கொஞ்சம் பெரிய பதிவா இருக்கதால இத இரண்டு பகுதியா  பிரிட்சிருக்கேன், முதல் பகுதில இத பத்திய ஒரு சின்ன அறிமுகமும், இரண்டாவது பகுதில இது சம்பந்தமான என்னோட நேரடி அனுபவத்தையும் எழுதலாம்னு இருக்கேன், கண்டிப்பா நீங்க கேள்விபடாத, சுவராஸ்யமான நெறைய விஷயங்கள் இருக்கும்......

கருப்பு பணம்னா என்ன?

இந்த வார்த்தைய, அடிக்கடி கேள்வி பட்டிருப்போம், சமீபத்துல கூட சுவிஸ் பேங்குல, இந்தியர்களோட கருப்பு பணம் 70 லட்சம் கோடி ருபாய் பதுக்கி வைக்க பட்டிருப்பது பற்றியும், அத மீட்பது பற்றியும், இந்திய அளவுல ஒரு விவாதம் எழுந்தது உங்களுக்கு தெரியும், அது மட்டுமில்லாம வருமான வரி சோதனையில இத்தனை கோடி கருப்பு பணம் சிக்கியது, அவரு இந்த சினிமா எடுத்ததே கருப்பு பணத்த மாத்த தான், அந்த முதலியார்கிட்ட இவ்வளவு கருப்பு பணம் இருக்கு, அந்த அரசியல்வாதி வருமான வரித்துறையின் ரைடுக்கு பயந்து இத்தனை கோடி பணத்த வேன்ல வச்சிக்கிட்டு சுத்துனாறு, இந்த ஹீரோ சம்பளத்த, பாதி கருப்பு, பாதி வெள்ளையா தான் வாங்குறாரு,இவருக்கு, இவருதான் பினாமி, இந்த மாதிரி கருப்பு பணம் சம்பந்த பட்ட விசயங்களை எல்லாம், ஜூவி, நக்கீரன், போன்ற புலனாய்வு பத்திரிகைகள்ள படிட்சோ, செவி வழி செய்தியாகவோ கேள்விபட்டிருப்போம்.....

சரி இப்ப கருப்பு பணம்னா என்ன, அத எப்படி Generate பண்ணுறாங்க, யார்,யார் இத செய்றாங்க, எதுக்காக செய்றாங்க இதெல்லாம் தெரிஞ்சிக்கலாம்.....

கருப்பு பணம்னா என்ன ?
கருப்பு கலர்ல இருக்குமா, இல்ல நம்மாலே பிரிண்ட் பண்ணுறதா, இதெல்லாம் இல்ல, அதுவும் நம்ம புலன்குற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணம் தான்,கருப்பு பணம்னா கணக்குல காட்டாத பணம்னு அர்த்தம், நாமே பிரிண்ட் பண்ற பணம் கருப்பு பணம் இல்ல, கள்ள நோட்டு, கருப்பு பணத்த கூட சில நடைமுறைகளுக்கு உட்பட்டு, அதற்க்கான வரிய கட்டிட்டா, அங்கீகரிக்கப்பட்ட பணமா மாற்றிவிடலாம், உதாரணமா சில வருசங்களுக்கு முன்ன கூட நம்ம சிதம்பரம்  ஐயா நிதியமைச்சரா இருந்தப்ப VDIS ( Voluntary Discloser Income Scheme ) என்கிற திட்டத்த இதுக்காக அறிமுகபடுத்துனது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், கள்ள நோட்டு அடிச்சா கம்பி தான் எண்ணனும், இந்த விஷயமெல்லாம் கூடுமானவரை உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும், இத பத்தின மேல் விவரங்களை பார்போம்.......

எதுக்காக ஞாயமா சம்பாதித்த பணத்த கணக்கு காட்டாம, கருப்பு பணமா பதுக்குறாங்க, முக்கியமா வரி ஏய்ப்பு செய்யத்தான், சில நேரம் நிர்ணயித்தத விட கூடுதலா உற்பத்தி ஆகுறது கூட காரணமா இருக்கலாம்,

நம்ம சம்பாதித்த லாபத்துல ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருமான வரியா கட்டனும்குறது அரசாங்க விதி, உதாரணமா 10 லட்சத்துக்கு 3 லட்சம் வருமான வரியா கட்டனும், வேலை பார்க்கிற நம்ம மாதிரி ஆட்களோட வருவாய் எல்லாம் இந்த 10 லட்சதுக்குள்ள அடங்கிர்றதால, அதுவும் வரி விளக்கெல்லாம் போக 1 லட்சமோ, 1.1/2 லட்சமோ கட்டுரதனால நமக்கு பெருசா எந்த பதிப்பும் எற்படுரதில்ல, இதுக்கே லபோ, திபோன்னு அடிச்சிகிரவுங்களும் உண்டு, இப்ப நீங்க ஒரு தொழில் நிறுவனம் நடத்துரிங்கனு வட்சிகங்க, உங்க நிறுவனத்தோட ஆண்டு வருமானம் 1 கோடினா, வரி 30 லட்சம், 10 கோடினா வரி 3 கோடி, 100 கோடினா வரி 30 கோடி, 1000 கோடினா 300 கோடி, இப்ப தெரியுதா பிரமாண்டம், நம்ம கஷ்ட்ட பட்டு, Risk எடுத்து சம்பாதித்த வருவாயில கிட்டத்தட்ட 50 சதவீதம், அரசாங்கத்துக்கு குடுக்கனும்னா, இப்ப சொல்லுங்க யாருக்கு மனசு வரும், அதுக்காகத்தான், இதுல ஒரு பகுதிய கணக்கு காட்டாம, கருப்பு பணமா பதுக்குறாங்க,(சரி எப்படி கணக்கு கட்டாம இருக்க முடியும், வாங்குற பொருளுக்கு பில்லு தராதது மூலமா, இத தான், முதல்வன் படத்துல சங்கர் சொல்லி இருப்பாரு, சில தில்லு முள்ளு வேலையெல்லாம் பார்த்து, உற்பத்திய குறைச்சி காட்டுறது மூலமா, செலவுகள அதிகரித்து  காட்டுறது மூலமா),   இது தவறு தான் இருந்தாலும் இவங்களோட மனநிலை எப்படி இருக்குன்னா, இதே இந்த அளவுக்கு நம்ம நிறுவனம் நஷ்டம் அடைந்தா, அரசாங்கம் நமக்கு உதவி செய்யுமா...இவங்க ஞாயமான வழியில சம்பாதிக்கிரதனால இத கூட ஏத்துக்கலாம், இது சின்ன,நடுத்தர நிறுவனங்கள்ல மட்டும் நடக்கல, தொழில் துறைல ஜாம்பவான இருக்கிற நாட்டின் முன்னணி நிறுவனங்களையும் 
இந்த கருப்பு பண பதுக்கல் நடக்குது,இது தொழில் துறை சார்ந்த கருப்பு பண பதுக்கல்......இன்னொரு வகை இருக்கு....


அது என்னன்னா, சட்டத்துக்கு புறம்பா சம்பதிகிறது, உதாரணமா அரசு அதிகாரிங்க வாங்குற லஞ்ச பணம், அரசியல்வாதிங்க செய்யற ஊழல் மூலமா சேருகிற பணம், போதை பொருள் விக்கிறது மூலமா வர்ற பணம்,இதுக்கெல்லாம், கணக்கும் காட்ட முடியாது, வரியும் கட்ட முடியாது, So, Obviously இந்த பணமெல்லாம் கருப்பு பணமா மாறுவதை தடுக்கவும் முடியாது...இந்த மாதிரி சேர்கிற கருப்பு பணத்தோட சதவீதம் தான் அதிகம் ......நம்ம அரசாங்கம் என்ன பண்ணுது,சும்மா  பேருக்கு சில, அரசியல்வதிங்களையும், அரசாங்க அலுவலர்களையும், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா கைது பண்ணுது, அதுலயும் அரசியல் ரீதியா  பலி வாங்குறது தான் முக்கிய நோக்கமா  இருக்கு..ஆனா தொழில் துறையில உள்ளவங்களுக்கு, ஆயிரம் சட்ட, திட்டம் இருக்கு...

சட்டத்துக்கு புறம்பா சம்பாதித்தவன்களோட நோக்கம் சொத்து சேக்குறது, சரி இவ்வளவு Risk எடுத்து, தொழில் துறைல முன்னணியில உள்ள ஜாம்பவான் நிறுவனங்கள் கூட எதுக்கு கருப்பு பணத்த Generate பண்ணனும்......

அது Next......


1 comments:

வடுவூர் குமார் said...

வாவ்! சும்மா கலக்கிரீங்க.
பல வருடங்கள் வெளிநாட்டிலேயே இருந்துவிட்டதால் இதன் வீரியம் தெரியாது.சமீபத்தில் ஒரு பேரத்தில் கருப்பு எவ்வளவு வெள்ளை இவ்வளவு என்று காதில் விழுந்த போது கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்.

Post a Comment