Dec 16, 2009

வலை பூவின் துர் நாற்றம் , இந்த பிரபல பதிவர்கள்...

தலைப்ப பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே ( அடிசிருக்குமே ) நாத்தம்,

இது ஒரு பதிவல்ல,நானும்,என்னை போன்ற எத்தனையோ சாதாரண,பொதுவான "வலைபூ" வாசகனும் ,இந்த வலைபூ ஞானிகளுக்கு ( நேர்ல கெடச்சா கொலவெறியோட பொரடியில அடிச்சி ) சொல்லனும்னு நினைக்கிற விசயங்களையும்,இவிங்க பண்ற அலும்பு,அராஜகத்தையும் மனசுவிட்டு கொட்டி இருக்கிறேன் ( அவுங்க,இவுங்கன்னு மரியாதையா எழுதனும்னுதான் நினைத்தேன் but மனசு வல்ல ).....

இதுல நல்ல பதிவர்களும், துறைசார்ந்த பதிவர்களும் அடங்கமாட்டாங்க....
இந்த நாயமான கோவத்துக்கு 2 நாளைக்கு முன்பு நடந்த முக்கியமான நிகழ்ச்சிதான் காரணம் அது கடைசில.....

அவிங்கள சொல்லி குத்தமில்ல, என்ன செருப்பாலேயே அடிசிக்கணும்,சரி வேல வெட்டி இல்லையே,கிடைக்கிற நேரத்துல debonairblog,FSIblog,indiansex4u, இன்னு போய் காஞ்சிபுரம் சாமியார் லீலைஎல்லாம் பாத்துட்டு குஜாலா இல்லாம, தமிழ் blogs எல்லாம் படிச்சி,அறிவ வளர்த்துக்கிட்டே பொழுது போக்கலாமேனு நம்பி வந்தேன்.....
இங்க வந்துபாத்தாதான் தெரியிது, ஒரு குங்குமம் புக்க முழுசா படிக்கிறதும், ஜெயா TV Newsa ஒரு மணி நேரம் சலிக்காம பாக்குறதும் ,ஒரு முழு சிம்பு படத்த கஸ்ட் பட்டுக்கிட்டேயாட்சும் பாத்து முடிச்சிறதும் இதவிட பெட்டர்னு.....

இதுக்கெல்லாம் காரணம் இந்த பிரபல பதிவர்கள் தான், அப்படி என்னதான் பண்றாங்க,என்னதான் கூத்து அடிக்கிறாங்க, என்ன என்ன வார்த்தை அடிக்கடி Use பண்ணுவாங்க,எல்லா பிரபல பதிவர்களும் அப்படிதானா,இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, அவிங்கள பற்றி ஒரு Definition கீழே....

பிரபல பதிவர் ( சிறுகுறிப்பு )
" இந்த பிரபல பதிவர்னு சொல்லியோ,அல்லது உரிமையோட பெயரை சொல்லியோ, இவர்அவிங்கள பாத்து ( பிரபல ) ம்பாரு,அவரு இவிங்கள பாத்து ( பிரபல ) ம்ம்னு மாத்தி,மாத்தி அவிங்ககுள்ளேயே சொல்லிக்கிவாங்க "
அதில்லாம இவிங்க Post போட்ட 1 நிமிசத்துகுல்லேயே,( அத படிச்சி முடிக்கவே 1/2 மணி நேரம் ஆகும் ) அது இரவானாலும் சரி,பகலானாலும் சரி, vote Counter "18 " Vote காட்டும், அடுத்த 1 மணி நேரத்துல " 25 to 28 " Vote காட்டிகிட்டு,பிரபல இடுகை வரிசைக்கு வந்துரும் ( ஏன் என்றால் இவர் பிரபல பதிவர் ),
அடுத்த முக்கியமான விஷயம், பிரபல sorry ( பிரபலமாக்கப்பட்ட),இடுகையின் பின்னுட்டத்தில், ( Me The First ) என்ற வரலாற்று சிறப்புமிக்க வார்த்தை இடம் பெற்றிருக்கும்... அதிக ஓட்டு எண்ணிக்கையை பாத்துட்டு ஆர்வமா பதிவ திறந்தால், அந்த பிரபல பதிவர் Night அடுச்ச சரக்கு ஒத்துக்காம ( வாந்தி ) எடுத்து வைத்திருப்பர் " .........

இப்பவாச்சும் புரியுதா ? நான் எந்த மாதிரி பிரபல பதிவர்களை பத்தி சொல்றேன்னு....
இவிங்க Approx ஒரு 20 to 25 பேர் இருகாங்க


நல்ல,நடுநிலையான, சுவாரஸ்யமா எழுதுற, தரமான,எங்களை போன்ற பொதுவான வாசகர்கள் Vote போடுற " உண்மையிலே பிரபலமான பதிவர்கள்" ஒரு 10 to 15 பேர் இருகாங்க...உதாரணமா,

கேபிள் சங்கர் Sir..

ஜாக்கி சேகர் Sir...

S.முருகன் ( கவிதை 07 )...

ஆமா " தாமிராவ " எங்க ரொம்பநாளா காணோம் ,இது போல நெறைய பேர் இருகாங்க.....


இப்ப டுபாகூர் பார்டிங்கள பத்தி மேல பேசுவோம் ,இவிங்க அடிகடி Use பண்ற Words, இவிங்க Mentality, etc..etc...இதுல சில விஷயங்கள் மேல சொன்ன உண்மையான பிரபலங்கலோடும் ஒத்து போகும் But குழப்பிக்க கூடாது....
இவிங்க பிரபல பதிவாளரா காட்டிக்க என்ன என்ன வார்த்தை Use பண்ணுவாங்கனு பார்போம்....
1.ஆணி புடுங்குவது ( நீங்க எதுவும் எழுதாம ஆணியே புடுங்கிகிட்டு இருந்திருக்கலாம், சுத்தியலாவது எங்க தலையில விழாம இருக்கும் )
2.பெட்டி தட்டுறது ( Software காரனுன்கலாம்,நாங்கெல்லாம் அறிவு ஜீவிகள் எங்க எழுத்தும் அப்படித்தான் இருக்கும்னு மறைமுகமா சொல்லுரான்கலாம் )
3.தங்கமணி .
4.பின்நவீனத்துவம் ( என்ன எளவோ )
5.மொக்கை ( இது அது மொக்கை பதிவுன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க, என்னமோ இதுக்கு முன்னாடி எழுதுனது எல்லாம் உலக இலக்கியத்துல சேர்க்கப்பட்ட மாறியும், இதுக்கு மேல வார்த்த வல்ல )
6.மீள் பதிவு ( No Comments )
ஆரம்பத்துல இந்த வார்த்தை எல்லாம் படிக்க நல்லாத்தான் இருந்திச்சி,இப்பலாம் இந்த வார்த்தைய கேட்டாலே BP எகிறுது அதும் இவிங்க Use பண்ணும்போது.
சரி இவிங்க Mentality எப்பிடி .....

அது Next.............
1 comments:

நான் தமிழன் said...

சபாஸ் தம்பி! ..( அண்ணே ..!)

Post a Comment