Dec 29, 2009

நீங்களும் பத்திரிக்கை அதிபர் தான்.....

ஒரு முன்னணி பத்திரிக்கைல நம்மோட விமர்சன கடிதமோ, கேள்வி பதில் பகுதிக்கான கடிதமோ, உங்கள் இடம் பகுதில இடம்பெறும், குறை தீர்க்கும் பகுதியிலோ கூட, நம்மோட கடிதங்களோ, விமர்சனங்களோ இடம் பெறுவதென்பது குதிரை கொம்பா இருக்கும் நிலையில்,
நம் படைப்புகளோ , கவிதை, கட்டுரையோ, லட்ச கணக்கானவர்களை சென்றடையும் ஒரு முன்னணி தின பத்திரிக்கையிலோ, ஒரு வார பதிரிக்கயிலோ இடம் பெற வைப்பது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நமக்கு தெரியும்......
அப்படி இடம்பெறனும்னா 2 வழி தான் இருக்கு, ஒன்னு,வருஷ கணக்கா தொடர்ந்து எழுதி, அதுல, சில படைப்புகள், அந்த முன்னணி பத்திரிக்கையோட ஆசிரியருக்கு பிடிட்சிபோய், அதிஷ்டம் இருந்தா அது பிரசரிக்க படலாம் , அப்படி இடம் பெற்ற உங்க படைப்பு, அத படிக்கிற வாசகனுக்கும் பிடிட்சிபோயிருந்தா, நீங்க தொடர்ந்து எழுத வாய்ப்பு கிடைச்சி, பிரபலமாகி, ஒரு சுஜாதா சார் மாதிரியோ, ஒரு பால குமாரன் சார் மாதிரியோ, ஒரு மதன் சார் மாதிரியோ, முன்னணி எழுத்தாளரா உருவெடுக்கலாம், இதுக்கெல்லாம் குறைந்தது ஒரு ஐந்து வருசத்தயாவது செலவளித்தாகனும்,

இல்லையா, உங்க அப்பாவோ, தாத்தாவோ, முதல்வரா இருந்து, காசு, கோடி, கோடியா குவிஞ்சி இருந்து, சரி காசுதான் கோடி, கோடியா இருக்கே, சும்மா ஒரு 200 கோடிய போட்டு கழுத, ஒரு பத்திரிக்கைய தான் ஆரம்பிபோமேனு, ஆரம்பிச்சி, நம்மக்கிட்ட உள்ள TV சேனல Use பண்ணி, செகண்டுக்கு 3 வாட்டி காது கிளியிர மாதிரி விளம்பரம் செஞ்சி, 50 காசுக்கோ, 75 காசுக்கோ அத வித்து, கூடவே, ஸ்டிக்கர் பொட்டு, சாம்பு பாக்கெட், பவுடர் டப்பா, லொட்டு, லொசுக்கு எல்லாம் Free யா குடுத்து, சரி அதுல இருக்குற செய்தியவிட, போண்டா, பக்கடா, மடிக்கிரதுக்கு வசதியா இருக்குதுன்னு நினைட்சாட்சும், என்ன மாதிரி மங்குனி பாண்டிங்க 50, 60 ஆயிரம் பேராவது வாங்க ஆரம்பிச்சி, அந்த பத்திரிக்கை பிரபலமாகி, அதுல நம்ம கருத்தையோ, படைப்பையோ, எவன் படிச்சா என்ன, படிக்காட்டி என்னன்னு, எத்தனை பக்கத்துக்கு வேணும்னாலும் எழுதிக்கலாம்......

இதெல்லாம் இல்லாம, ஒரு பைசா செலவில்லாம, Office ல சம்பளமும் வாங்கிகிட்டு, கிடைக்கிற நேரத்துல, ஒரு சொடக்குல கம்புட்டர தொறந்து, ஒரு Blog ஆரம்பிச்சி, நம்ம நெனைக்கிறத எழுதி, Tamilish, Tamil Manam மாதிரியான வலை தொகுப்புல இணைத்து, பல ஆயிரம் வாசகர்களின் பார்வைக்கு நேரடியா கொண்டு போறது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம், இப்ப சொல்லுங்க நீங்களும் ஒரு பத்திரிக்கை அதிபர் மாதிரி தானே....
இந்த வாய்ப்ப நம்ம எந்த அளவுக்கு Use பண்ணிக்கணும், அது மட்டும் இல்லாம இனி வருங்கால செய்தி தொடர்பே இந்த வலை பூக்களையும், இணையத்தையும் நம்பித்தான் இருக்க போகுது என்பது, நமக்கு கிடைத்த மிகப்பெரும் பெரிய வசதி இல்லையா, இதன் மூலம் பிரபலம் அடைந்து, ஏன் நீங்களே கூட ஒரு மிகபிரபலமான எழுத்தாளரா, சிந்தனையாளர, இந்த சமூகத்தால ஏற்றுக்கொள்ளகூடிய வாயப்பு கூட இருக்கு....
So இனி எழுதும்போது, இதெல்லாம் ஞாபகம் வட்சிகங்க, சரியோ, தப்போ, உங்களோட சொந்த கருத்த எழுதுங்க, அது கதையோ, கவிதையோ, கட்டுரையோ உங்களோட சொந்த சிந்தனையிலேர்ந்து உதிக்கட்டும், அதேமாதிரி வர்ற விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் , நல்ல பதிவுன்னு தெரிஞ்சா, அது யாரு எழுதிருந்தாலும், பாரபட்சம் பாக்காம, ஒரு 2 நிமிஷம் ஒதுக்கி, ஒட்டு போட்டு பாராட்டி ஊக்கம் குடுக்க மறக்காதிங்க.....
அதனால, நல்ல சிந்தனைகளை தூண்டுற ,உங்களுக்குனு ஒரு வாசகர் வட்டம் தோன்றுகின்ற அளவுக்கு எழுதி, எதிர்கால பிரபல எழுத்தாளர்களுக்கான பதவிக்கு, இப்பவே துண்டு போட்டு இடம் புடிச்சி வட்சிக்கங்க .....
வாழ்த்துக்கள்....................

0 comments:

Post a Comment