Dec 24, 2009

எனதருமை ஈழ சகோதரா....உனக்கான "Game Plan "

" கந்தல் ஆனாலும், தாய் மடி போல் ஒரு சுகம் வருமா....வருமா....

சொர்க்கம் சென்றாலும், சொந்த ஊர் போல சுதந்திரம் வருமா....வருமா...

கண் திறந்த தேசம் அங்கே, கண் மூடும் தேசம் எங்கே ?

பிரிவோம் நதிகளே, பிழைத்தால் வருகிறோம்....

மீண்டும் தாயகம், அழைத்தால் வருகிறோம்.....

கண்ணீர் திரையில், பிறந்த மண்ணை, கடைசியாக பார்கின்றோம்.....

--------------------------------------------------------------------------------------

விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே,

பனை மர காடே, பறவைகள் கூடே, மறு முறை, ஒரு முறை, பார்ப்போமா...?

----------------------------------------------------------------------------------------

உதட்டில் புன்னகை தொலைத்தோம், உயிரை உடம்புக்குள் புதைத்தோம்....

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்......

என் ஈழ சகோதரா,கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல வர்ற இந்த பாட்ட கேட்ட, நான் சூழ்நிலைய மறந்து கதறி அழுதுவிடுவேன், உன்னை நினைத்து என்னால் தற்போது செய்ய முடிந்தது இதுதான்,

நீ எத்தனையோ இழப்புகளை சந்தித்துவிட்டாய், ஈழத்தில் உன் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஆயுதத்தை தூக்கிக்கொண்டு, கடல் கடந்து வந்து உனக்கு தோல் கொடுக்க வேண்டும் என்று எனக்கும் ( எங்களுக்கும் ) ஆசைதான்,என்ன செய்ய, எங்கள் நாடு எங்களையும் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடும் என்ற பயத்தில் ஒதுங்கி இருக்கிறோம்.....மன்னித்து விடு நாங்கள் கூட்டு குடும்பத்தில் பிறந்துவிட்டோம்....

உன் நிலையை நினைத்து கண்ணீர் விடவும், கவிதை/கட்டுரை மட்டுமே, எழுதக்கூடிய கையறு நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்,என்ன செய்ய?

நீ ,இன்னுமா எங்கள் அரசியல்வாதிகளை நம்பிகொண்டிருக்கிறாய் ? அதற்கு பதில், நீயாகவே தற்கொலை செய்துகொள்வது உத்தமம், உன் பெயரை சொல்லி, அரியணையை பிடிப்பதுதான் அவர்களின் நோக்கம், அவர்களின் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதைவிட, நீ முக்கியமில்லை...அதற்காக உங்கள் உயிர்களை முதலீடு செய்கிறார்கள், இவர்களை நம்பி நீ இழந்ததெல்லாம் போதும், இனிமேலும் உன்னை பலி கொடுக்க நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்,உன்னை கரை சேர்க்க நினைத்த "அண்ணனையும் "காணவில்லை, மீண்டும் வருவான் என்ற உன் நம்பிக்கையையும், நான் தகர்க்க விரும்பவில்லை,நல்லது நடந்தால், நானும் சந்தோசமே படுவேன்,இனி எந்த ரட்சகனும், வானிலிருந்து குதித்து வந்து உன்னை காப்பாற்ற வரபோவதில்லை என்பதை நீயும் அறிவாய்.....

பிறகு என்னதான் நாங்கள் செய்வது, இப்படி மடிவதையும், நாடு விட்டு, நாடு ஓடிக்கொண்டு இருப்பதையும் தவிர, எங்களுக்கு வேறு மார்க்கமே இல்லையா ? என்று நீ கேட்க நினைபதையும் நான் அறியாதவன் அல்ல...

பொருத்தது போதும், பொங்கி எழு என்று உன்னை உசுப்பேற்ற வரவில்லை நான், பொறுமையை கையில் எடு, கொஞ்சம் பொறுத்திரு என்றுதான் சொல்ல வந்தேன்


நீ யார் தெரியுமா? கல் தோன்றி, மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய, மூத்த குடியில் பிறந்தவன், உலகுக்கே வழிகாட்டிய நாகரீகாதிலிருந்து வந்தவன், உன்னை மிஞ்ச இந்த உலகத்தில் ஒரு இனம் இல்லை, உன் அறிவுக்கு நிகரான எந்த மனித இனமும் இல்லை, இத்தனை சிறப்பு பெற்ற நீ, ஏன் அறிவை உபயோகித்து எதிரியை வெல்ல கூடாது?

சத்ரியன் உன் நெஞ்சிக்குள் இருக்கட்டும்,உன் சாணக்கிய தனத்தை கொஞ்சம் வெளிக்காட்டு, உன்னை மிஞ்சிய அரசியல் ஞானம் பெற்றவன் எவனும் இல்லை என்பதை நிருபி, எதிரிக்கு கொஞ்சம் அரசியல் விளையாட்டை காட்டு என்று சொல்லவருகிறேன்,

நீ எத்தனையோ அயல் நாடுகளில் பரவி, பெரிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருகின்றாய் உன் பொருளாதார நிலையும் நன்றாகவே இருக்கிறது ,

நீ செய்ய வேண்டியது இது தான், எல்லா நாடுகளிலும் உள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்கு, ஈழ மீட்ட்புக்கான அணைத்து நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு தீர்மானிக்கட்டும்,உங்களின் இறுதி இலக்கு தமிழீழ விடுதலையாக இருக்கட்டும்,

செய்ய வேண்டிய பணிகள் இலங்கைக்கு வெளியே :

நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வை, உங்களின் ஒவ்வொருவருடைய பொருளாதார முனேற்றமும் முதன்மையாக இருக்கட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதன் பொருட்டு ஈழ வங்கி ஒன்றை தொடங்கு,உங்களின், சேமிப்பும்,முதலீடுகலும், அதன் மூலமாக நடைபெறட்டும், அதை மற்ற இடங்களிலும், விரிவு படுத்து, உங்கள் எல்லோருடைய பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக அது இருக்கட்டும், அடுத்து உங்கள் குழந்தைகளின் கல்விதரம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்படி பார்த்துகொள்,அவர்கள் நாளைய உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள இது உதவும், இவை இரண்டிலும் நீ பலம் பெற்றுவிட்டால், உன் தனி ஈழ கனவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக அர்த்தம், அடுத்து அரசியல் நீ குடியேறி இருக்கும் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பில் குறிப்பிட்ட பதவிகளிலும், நிலைகளிலும் இடம்பெறுமாறு காய்களை நகர்த்து, இவை எல்லாவற்றிற்கும் உங்கள் உலகம் தழுவிய ஒற்றுமை முக்கியம் இதை நன்றாக நினைவில் வை.......

ஈழத்தில் செய்ய வேண்டிய பணிகள் :

ஈழ வங்கியின் வருவாயின் ஒரு பகுதி,ஈழத்தில் உள்ள வறியவர்களின் உணவுக்கும், முக்கியமாக சிறப்பான கல்விக்கும், உன் சகோதர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும், மருத்துவத்திற்கும் உதவட்டும்,உன் சகோதரன் உள்நாட்டு அரசியல் அமைப்புகளில் உயர்ந்த நிலைகளை அடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும்,செய், உள்நாட்டு அரசியலை கூர்ந்து கவனித்து, எடுக்க வேண்டிய அரசியல் முடிவுகளையும், செயல் பாடுகளையும் மேற்குறிய அமைப்பு முடிவு செய்யட்டும், உள்நாட்டு அரசியலில் அழுத்தமாக காலுன்ற வேண்டியது அதி முக்கியம், உன் ஒவொரு அசைவும், இலங்கையின் உள்நாட்டு அரசியலை,அசைதுப்பாற்பதாக இருக்கட்டும்,

ஈழ மக்களின் வாழ்க்கைதரம் உயர உயர, நம்பிக்கை வரும்,இப்பொது தொடங்கு உன் தாக்குதலை, வன்முறை வழியில் இல்லை, அரசியல் ரீதியாக அது இருக்கட்டும், வேறு வழியே இல்லாமல் எதிரிகள் உன் காலடியில் வந்து பனியும் படி செய் ---உன் தமிழ் ஈழ கனவு, நனவாக வந்து அமையும்.....

இதற்கான காலக்கெடு " 20 " வருடங்களாக நிர்ணயித்துகொள்,இந்த இருபது வருடங்களில்,உன் அரசியல்வழி தாக்குதளுக்கான ஆயத்த பணிகள் மறைமுகமாக நடந்துகொண்டே இருக்கட்டும், தீராத தமிழ் ஈழ கனவு உன் நெஞ்சில் அனலாய் கொதித்துகொண்டே இருக்கட்டும், நாளைய புதிய தலைமுறைகளின் செயல்பாடுகளில், எதிரிகளின் கூடாரம் தூள்,தூள் ஆகட்டும்,அதேநேரத்தில் நாங்களும் வல்லரசு ஆகி இருப்போம்,எங்களுக்கும் மற்ற நாடுகளை ஆட்டிவைக்கும் பலம் வந்திருக்கும், உனக்கு முழுவதுமாய் கைகொடுப்பதை தடுக்க, அப்போது எந்த அந்நிய சக்திக்கும் துணிவு இருக்காது, நாம் இருவரும் சேர்ந்து ஆயுதமில்லா இறுதி தாக்குதலை தொடுத்து தமிழ் ஈழத்தை மீட்டெடுப்போம்.........

ஓட,ஓட விரட்டிகொள்ளப்பட்ட, உலகமெங்கும் விரட்டப்பட்ட யூதர்களின் கனவு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு நிறைவேறியது உனக்கு ஞாபகம் இல்லையா ? சகோதரா......

ஏன் உன்னால் முடியாது ?....நமக்கு வெறும் இருபது வருடங்கள் தானே......

ஆரம்பமாகட்டும் நம் அடுத்த கட்ட இறுதி போருக்கான ஆயத்தம், ஆதி பராசக்தி நமக்கு துணையிருப்பாள் .......வெற்றி நமதே.....

புரட்சிக்கான வித்தை இட்டுவிட்டேன், இனி புரட்சி மட்டும்தான் பாக்கி

"என் பாரதி சொன்னபடி,

" அக்கினி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கே ஓர் காட்டிடை பொந்தினில் வைத்தேன், வெந்து தணியட்டும் காடு ......

வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.......

( தமிழ் நாட்டிலிருந்து உன் அன்பு தம்பி )


0 comments:

Post a Comment