Dec 23, 2009

பிரபல பதிவர் ஆவது So Simple...( Easy Formula )

இது பதிவு எழுதிட்டு , என்னடா எவனுமே ஓட்டே போடமாட்டன்றாங்க, என்ற வெறுப்புல, மண்டைய பிச்சிக்கிட்டு, என்னடா பிரபலங்க என்ன குப்பய எழுதுனாலும் ஓட்ட போடுறாங்க, அப்ப நம்மெல்லாம் வேஸ்டா, நம்மளுக்கு கற்பனை வளமே இல்லையா ? அப்படின்னு தன்னால பொலம்பிகிட்டு, நம்ம என்ன எழுதுனா ஒட்டு போடுவாங்க, அப்படின்னு நைட்டு ஒரு கோட்டாறு +கட்டிங் அடிச்சிட்டு மப்புல, மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சி,யோசிச்சி, புதுசு,புதுசா Subject புடுச்சி, பதிவு எழுதி,எழுதி முயற்சித்து கொண்டே இருக்கும் பதிவர்களுக்கானது.......
எல்லோருமே ஒரு அங்கீகாரத்துக்காக ஏங்குபவர்கள் தான், அதனாலதான் தாங்கள் எழுதுனத ஓட்டுக்காக இந்த வலைபூ தொகுப்பு முன் வக்கிறாங்க, நீங்க, நான், எல்லோருமே.....
இதுல ஒட்டு வாங்க ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்கு, அதவிடுங்க,
ஒட்டு கிடைக்கலேன்னா, ஒங்க பதிவு நல்லா இல்லேன்னு அர்த்தம் இல்ல, உங்களுக்கு கற்பனை வளம் இல்லனும் அர்த்தமில்ல,நீங்களே நாளைக்கு பெரிய எழுத்தாளரா அங்கீகரிக்க படலாம், உங்க படைப்புகள் கூட நாளைய உலக இலக்கியத்தில் இடம் பெறலாம், So உங்க எழுத்து மீதும், கருத்துக்கள் மீதும் நம்பிக்கை இருக்கும் வரை, முயற்சி செஞ்சிகிட்டே இருங்க... இதுலயும் திருப்தி இல்லையா.....
சரி அப்படின, இப்படி விஜயகாந்த் ஸ்டைல்ல யோசிச்சி பாப்போம்,
தமிழ் நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு சுமாரா -6.5 கோடி,
இதுல படிச்சவுங்க எத்தனை பேர் சுமாரா - 4.5 கோடி,
இதுல கம்ப்யுட்டர் அறிவு பெற்றவுங்க சுமாரா - 2 கோடி,
இதுல அரசாங்க, மற்றும் வங்கி ஊழியர் எத்தனை பேர் ( அரசாங்க வேலைல OB அடிக்கத்தான் முடியும், இஷ்டத்துக்கு Browse எல்லாம் பண்ண முடியாது ) சுமாரா -1.5 கோடி,
இதே போல Private கம்பெனில அவுங்க இஷ்டத்துக்கு Brows பண்ண முடியாதவங்க எத்தனை பேர் சுமாரா -25 லட்சம்,
ரகசியமா Sex Site மட்டும் பாக்குறவுங்க எத்தனை பேர் சுமாரா -18 லட்சம்,
பாக்கி -7 லட்சம், இதுல Face Book,Orkut,Chatting,Online Games இப்படி போறவுங்க சுமாரா - 6.5 லட்சம்,
பாக்கி 50 ஆயிரம் பேர் , இதுல நெட்டுல, தின தந்தி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், அப்பறம் Matrimonial இப்படி மட்டும் பாக்குறவங்க சுமாரா - 41 ஆயிரம், பாக்கி -9 ஆயிரம், பிளஸ் இலங்கை தமிழர்கள் - 5 ஆயிரம் பேர், பாக்கி மொத்தம் சுமாரா - 14 ஆயிரம் பேர்,
Tamilish, Tamil Manam, இந்த மாறி வலைபூக்களை தொகுத்து தருகிற தளங்கள் மட்டும் சுமாரா 7,8 இருக்கு, பாக்கி உள்ள இந்த -14 ஆயிரம் பேர் தான், இந்த 7,8 தளங்களையும் படிக்கிறவங்க,
இந்த 7,8 தளங்களுக்கும் தோராய ஒரு நாளைக்கு வரும் வாசகர்கள் சுமாரா - 2.5 ஆயிரம்,
இதுல எந்த தளத்தில ஒங்க பதிவ இணைக்கிறிங்க, நான் Tamilish, இந்த -
2.5 ஆயிரம் பேர்லயும், சும்மா பொழுது போக்குறதுக்காக படிக்கிறவங்க சுமார 2.4 ஆயிரம் பேர்,
பாக்கி -100 பேர் இந்த நூறு பேரு தான் டீப்பா படிச்சி ஒட்டு போடுறவங்க, இந்த 100 பேர்ல, அவுங்க, அவுங்க Group க்கு மட்டும் ஒட்டு போடுறவங்க - 80 பேர் ( இவங்க மற்றவங்க பதிவ படிக்க மாட்டாங்க, ஒங்க பதிவு அவங்களுக்கு புடிச்சிருந்தாலும் உங்களுக்கு ஒட்டு போடா மாட்டாங்க ), So இவிங்கள கணக்குல எடுக்காதிங்க
பாக்கி உள்ளவங்க 20 பேர், முதல்ல இவங்க கண்ணுல ஒங்க பதிவு மாட்டனும், அந்த செகண்ட்ல அவுங்க என்ன மூடுல இருக்காங்களோ, அதோட ஒங்க பதிவோட கருத்து ஒத்து போகணும், So இவங்க போடுற - 2,3 ஒட்டு கடைசிட்டாலே, நீங்க ஜெயித்துடீங்கனு அர்த்தம், So ஓட்ட பத்தி யோசிக்காம, எழுதிக்கிட்டே இருங்க ....
அதெல்லாம் முடியாது, நானும் பிரபல பதிவர்கள் மாதுரி -25 - 30 ஒட்டு வாங்கி பிரபல பதிவர ஆகணும்னு அடம் புடிட்சிங்கான, அதுக்கும் ஐடியா இருக்கு...
ஐடியா நம்பர் 1, -
ஒரு 20-25 பிரபலங்கள புடிச்சி வச்சிக்கங்க, அவங்க என்ன எழுதினாலும், ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து பின்னூட்டம் போடுங்க, மறக்காம " கலக்கிட்ட தல " , " சூப்பர் அண்ணா " இந்த மாறி வார்த்தையெல்லாம் கண்டிப்பா Use பண்ணனும்,ஆரம்பத்துல கண்டுக்க மாட்டாங்க , ஒரு ஆறு மாசம் இதையே Follow பண்ணுங்க, போன போகுதுன்னு அவிங்க க்ரூப்ல சேத்துக்குவாங்க, அப்பறம் பாருங்க, நீங்களும் பிரபலம் தான்.....
ஐடியா நம்பர் 2, -
பெண்பால் பெயர்ல பதிவு எழுதுங்க, அதே பேர்ல மேல சொன்னமாதுரி பின்னூட்டம் போடுங்க, ஒங்களுக்கு Quick Response கிடைக்கும், இந்த ஐடியாவ Follow பண்ணா, உங்கள , ஒரே மாசத்துல பிரபலமாக்கிடுவாங்க, ஒரு வேலை கண்டு புடிசிட்டாங்கனா , சுஜாதா Sir மாதுரி, புனை பெயர்ல எழுதுனேன்னு அடிச்சி உடுங்க....
That's All ........

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

குட் ஹுயூமர் தல...!

:)))

என் நடை பாதையில்(ராம்) said...

ஆஹா....! பதிவுலகத்தை அலசி ஆராஞ்சிடீன்களே! வந்த புதுசுல எல்லாரும் பேசுற பேச்சு தான்....

http://shelpour.blogspot.com/2009/10/blog-post_12.html

தம்பி.... said...

நான் Tamilish படிக்க ஆரம்பிச்சி 2 வருஷம் ஆகுது நண்பா, அந்த அனுபவம் தான் நான் எழுதுனதுக்கு காரணம், இப்பதான் பதிவே போடா ஆரம்பித்திருக்கிறேன்

Post a Comment