குஜராத்தோட பொருளாதார வளர்ச்சி பத்தி ஒங்களுக்கு தெரியும், தொழில் துறைல முன்னேறிய மாநிலம், அதோட GDP பத்தி பத்திரிகைல வருகிற செய்தியெல்லாம் உண்மையா இருந்தாலும்,( During the 10th five-year plan (2002-07), the state's gross state domestic product (GSDP) posted a growth of 10.6%, well ahead of the county's overall growth of 7.7%. It is also much higher than the growth rate of other 'developed' states. )இந்த மாநிலத்தோட உண்மையான GDP அத விட அதிகமாத்தான் இருக்கும், எப்படின்னா இங்க அந்த அளவுக்கு கருப்பு பணம் விளையாடுது, நடக்குற ஒவ்வொரு வியாபார நடவடிக்கைளையும் கிட்ட தட்ட 40% கருப்பு பணம் மூலமா தான் நடக்குது....அது அரசாங்கத்துக்கு தெரிஞ்சிருந்தாலும், இதுக்கு எதிரா பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்க படுவதில்லை....இது நமக்கு தேவை இல்லை, இதுல உள்ள சில சுவராஸ்யமான விசயங்கள மட்டும் பார்போம்,
இங்க நீங்க எந்த பொருள வாங்குனாலும் கடைகாரர் மொதல்ல உங்ககிட்ட கேக்குற கேள்வி , கட்சாவா, பக்காவா ன்னு தான், கட்சான்னா பில்லு தரமாட்டாங்க( ப்ளாக் ) , பக்கான்னா பில்லு கெடைக்கும் ( லீகல் ),
இங்க வந்த புதுசுல என்ன ஆட்சிரியத்துளையும், குழப்பத்தையும் உண்டு பண்ணினது ( Third Party Cheqes ) ங்குற விஷயம் தான், ப்ளாக்ல விக்கும் போது, பணத்துக்கு பதிலா சில செக்கு( Cheque ) இல்ல ( Draft )தருவாங்க, ( உதாரணமா 2 லட்ச ரூபாய்க்கு ஒரு 20,to 25 Chq/DD யோ தருவாங்க) இத கணக்குலளையும் காட்ட முடியாது,இதுல என்னா ஆட்சிரியம்னா, இந்த Cheque/Draft ஒ நம்ம பேர்ல இருக்காது, குப்பு சாமி,முனு சாமி, இந்த மாதிரி சம்மந்தா,சம்மந்தமே இல்லாத பேர்ல இருக்கும், நமக்கு அத குடுக்குரவன்களோட Cheque/Draft ஆவும் இருக்காது, அதுவும் யாரோ முத்து பாண்டி, சரவணநோடதா இருக்கும், அதுவும் ரெண்டு மூணு கை மாறி வந்திருக்கும்,
இத எடுத்துகிட்டு பேங்குக்கு போனா நம்ம ஊரா இருந்த எவனோட Chq/DD யையோ திருடிட்டு வந்துட்டோம்னு உள்ள தூக்கி போட்டுருவாங்க,பத்து பேர்,பேர்ல உள்ள Chq/DD யையோ டெபாசிட் பண்ண நம்ம பத்து Account ஆ ஓபன் பண்ண முடியும்,சான்சே இல்ல,அப்பறம் இத எப்படி Bank Account ல டெபாசிட் பண்ணி பணமாக்குறது, முடியாது, அப்ப நமக்கு வரவேண்டிய பணம் எப்படி வரும், கோவிந்தாவா...
இங்க அத பத்தி கவலையே இல்ல, இத பணமா மாத்தி தருவதற்காகவே ( Sherof ) சேராப், அப்படிங்கற சில இடங்கள் இருக்கு, நம்ம ஊருங்கள்ள அடகு புடிக்கிற சேட்டு கடைங்க மாதிரி தான் இது இருக்கும், அரசாங்கத்துக்கு தெரியாம ரகசியமா இது இயங்கும், இந்த Chq/DD ங்கள இவங்க கிட்ட கொடுத்தா, பணமா தருவாங்க, ஒடனே பணம் வேணும்னா ஒரு குறிப்பிட்ட தொகை கமிசனா குடுக்கணும், ஒரு வாரம் கழிச்சி கிடைச்சா போதும்னா, எந்த கமிசனும் கொடுக்க தேவை இல்ல,சரி இவங்கள எப்புடி நம்புறது பணத்தோட ஜூட் விட்டுட்டாங்கன்னா, அது மாதிரியும் சில முறை நடந்திருக்கு, ஆனா 95% உத்தரவாதம்....
சரி இவங்க அந்த Chq/DD ய எப்புடி பணமா மாத்துறாங்க, அப்புடிங்கிறது தேவ ரகசியம், நானும் எத்தனையோ பேருகிட்ட கேட்டுட்டேன், அந்த ரகசியத்த மட்டும் தெரிஞ்சிக்க முடியல....
அடுத்தது Angaadiyaa ( அங்காடியா)
இத பத்தி கேள்விபட்டுருபிங்க, தெரியாதவங்களுக்காக இதோட நடை முறைய கொஞ்சம் சொல்லுறேன்,
இப்ப குஜராத்ல இருக்க நான் என்னோட கருப்பு பணம் ஒரு 25 லட்ச ரூபாய தமிழ் நாட்ல இருக்க ஒங்களுக்கோ, இல்ல துபாய்ல இருக்க என்னோட நண்பனுக்கோ அனுப்பனும்னு வட்சிகங்க , வாய பொலக்காதிங்க சும்மா ஒரு பேச்சிக்கு தான், பேங்கு மூலமா அனுப்புனா டாக்ஸ் கட்டலேன்னு என்ன உள்ள தூக்கி போட்டுடுவாங்க, எனக்கு அந்த பணம் எப்படி வந்திச்சி, தீவிர வாத இயக்கத்துல இருக்கனா, அப்படிங்கற மாதிரி ஆயிரம் கேள்வி வரும்,
இதுக்கு தான் அங்காடியா உதவுது, நான் அவங்ககிட்ட, பணத்த குடுத்து உங்க முகவரியையும், உங்களோட மொபைல் நம்பரையும் குடுதன்னா, அடுத்த ஒரு மணி நேரத்துல நீங்க இருக்க ஊர்ல இருக்க இதே மாதிரி அங்காடியா தொழில் பன்னுரவர்டேர்ந்து உங்க மொபைல் நம்பருக்கு அழைப்பு வரும், நீங்க போய் விவரம் சொன்னிங்கன்னா, நீங்க சரியான நபரான்னு செக் பண்ண, அந்த இடத்திலேர்ந்து உங்களோட மொபைல் நம்பருக்கு கால் பண்ணி பார்பாங்க, நீங்க கால எடுத்து அந்த Incoming நம்பர அவங்க கிட்ட காட்டனும், சரியா இருந்திட்சின்னா பணத்த உங்க கிட்ட ஒப்படட்சிட்டு கையெழுத்து வாங்கிக்குவாங்க, மொபைல் வராத காலத்துல எல்லாம், நீங்க வச்சிருக்க ஒரு 10 or 20 ரூபா நோட்டோட சீரியல் நம்பர வாங்கி இங்க குடுக்கணும், நீங்க பணம் வாங்க போகும் போது அந்த சீரியல் நம்பர் உள்ள நோட்ட காட்டுனா தான் பணம் குடுப்பாங்க....இதுக்கு ஆயிரத்துக்கு இவ்வளவு கமிசன்னு இங்க கட்டனும்.....இது தான் அங்காடியா.....
இதெல்லாம் நம்ம ஊருங்கள்ளையும் இருக்குன்னாலும், குஜராத் மாதிரி பெரிய அளவுல நடக்கல....
இந்த அளவுக்கு சுலபமா, இங்க இதெல்லாம் நடக்குரதனால தான் கருப்பு பண பரிவர்த்தனை அதிகமா இருக்கு.....
இது போதும்னு நெனைக்கிறேன்......அதோட உங்களுக்கு எண் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.....
By.......தம்பி..................
3 comments:
அருமை தம்பி !!
குஜராத்திகள் பணம் பண்ணுவதில் கில்லாடிகள் .அதுமடுமல்ல ஒரு பொருளை பார்த்து ஆச்சு அசலாக copy அடிசிடுவாங்க .இதுல கொடுமை என்னன்னா original விட தரமாக செஞ்சு வியாபாரம் பண்ணிடுவாங்க .நம்ம industry சம்பந்தமா எல்லாம் அங்க கிடைக்கும்
ம்...உங்களுக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்
அது என்னவோ உண்மைதான் நண்பா சக்தி, ஆனா என்னோட அனுபவத்துல, வரவு செலவு பண்ணுறதுல நேர்மையானவங்க,
மற்றும் பின்னுட்டம் இட்ட புலவருக்கும் நன்றி..
Post a Comment