நான் இருக்கிற "நிலக்கரி" ( Coal Feild ) துறை சம்பந்தமா ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள ஆசை, வள வளன்னு ரொம்ப Tecnical லா எழுதி போரடிக்க விரும்பல, ஆனாலும் படிக்கிறவங்க இத பத்தி A to Z ( from Process to User )தெரிஞ்சிகனும்கிரதனால இத ஒரு Visual Treat அ குடுக்கலாம்னு ஒரு ஐடியா, கூடவே, அது எப்படி வியாபாரம் செய்யபடுகிறதுங்கிற விசயத்தையும், ஒவ்வொரு கட்டமா விளக்க போறேன், அதுக்கு முன்ன நிலக்கரி பத்தி ஒரு சின்ன அறிமுகம்...
கூட்ஸ் ரயில் வண்டியில, நிரப்ப பட்டு, எங்கேயோ, அனுப்ப படுவதற்காக, நிருத்தபட்டிருக்கும் காட்சியை, நீங்க அடிக்கடி ரயில்ல போறப்ப, பார்த்திருக்கலாம்,இந்த அளவுக்கு தான் உங்கள்ள, பெரும்பாலானவர்களின் நிலக்கரி பற்றிய அனுபவம் இருந்திருக்கும்,அதுக்கு மேல இத பத்தி கூடுதலான விசயங்களை, நீங்க தெரிஞ்சிக்கணும் என்பது தான் இந்த பதிவோட நோக்கம்,
நிலக்கரி, இது ஒரு கார்பன், இந்த கார்பன் தான், பல கால கட்டங்களுக்கு பிறகு வைரமா மாறுகிறது என்பது கூடுதல் தகவல்,இது பொதுவா எல்லா நாடுகள்லயும் கிடைகிறது, ஆனால் தரம் மட்டும் நாடுகளுக்கு, நாடு மாறுபடும் ,இந்த அட்டவணைய பாருங்க...
அடுத்து இதோட தரம், வகைகளை பற்றி தெரிஞ்சிக்க கிழே உள்ள வரைபடத்த பாருங்க
இதுல Lignite ங்கிறது தான் தரம் குறைந்தது, இதுதான், நம்ம நெய்வேலியில வெட்டி
எடுக்க படுகிறது....
இதுல நாம பாக்க போறது, எங்க நிறுவனம் ஈடு பட்டிருக்கிற ( Imported Coal ) பற்றியது,
இத பொதுவா, இரும்பு, சிமெண்ட், மின் உற்பத்தி போன்ற துறைகள்ல துறைகள்ல உபயோக படுத்துறாங்க, சில துறைகள்ல Raw Meterial லா சில துறைகள்ல எரி பொருளா, பெரும்பாலும் எரிபொருளா, இதோட தரமும், விலையும், இதுல அடங்கி இருக்கிற Chemical அளவுகள், மூலமாகவும், இதோட எரியும் சக்தி ( Gross Calorific Value ) மூலமாகவும், நிர்ணயிக்கப்படுகிறது, உதாரணமா கிழே உள்ள இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியோட Chemical அட்டவணைய, பாருங்க..... பொதுவா எங்க நிறுவனம், இந்தோனேசியா, ஆஸ்ட்ரேலியா, தென்ஆப்ரிக்கா,சைனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.....
Total Moisture ARB-----------------------35%
Inherent Moisture ADB ------------------16%
Ash ADB --------------------------------------6%
Volatile Matter ADB ----------------------38 - 42%
Fixed Carbon ADB -------------------------By diff
GCV Kcal/Kg ADB -------------------------5500 (+/- 100)
Sulphur ADB ---------------------------------0.6 % Max.
Size MM-------------------------------------- 0 to 50 mm
சரி நிலக்கரி பத்தி இந்த அளவு அறிமுகம் போதும், அடுத்து இதோட பிறப்புலேர்ந்து ஆரம்பிப்போம்......
8 comments:
அதிக வளவளனு எழுதாமல் ஷார்டா மேட்டரை சொல்லியிருக்கிங்க. நல்ல விஷயம் தெரிந்துக்கொண்டேன். உங்கள் தகவலுக்கு நன்றி
நல்லா எழுதறீங்க... டெக்னிகலாவும் எழுதுங்களேன். அதையும் தெரிஞ்சிக்கிறோம்...
தெரியாத விபரங்களை பொதுவில் வைத்துள்ளீர்கள்.மிக்க நன்றி.
கேஸ் இருந்தா ஆயில் இருக்கனும் அல்லது நிலக்கரி என்ற மூன்றுக்கும் தொடர்பு உண்டா? அப்படி இருந்தால் ஐக்கிய அரசில் நிலக்கரி இல்லை அதெப்படி சாத்தியமாகியது?
Tecnicala எழுதுனா படிக்க மாட்டாங்க பாஸ்
Gas, Oil, இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம், Coal க்கும் இவைகளுக்கும் சம்பந்தம் இல்லை குமார், நான் மன்னார்குடி நண்பா...
romba nallarukku
thodara vazhthukal
@biskothupayal
நல்ல பதிவு .அடுத்த பதிவு எப்போது?
Great and that i have a keen proposal: How To Properly Renovate A House updating exterior of home
Post a Comment