இப்ப நிலக்கரி வெட்டி எடுக்கபடுவதிலிருந்து - அதை உபயோகிப்பவரை சென்றடையும் வரையிலான நடவடிக்கைகளை Visual லா பார்போம்/கூடவே அந்தந்த கட்டத்துல வியாபார ரீதியா எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பாப்போம், வியாபார நடவடிக்கை விளக்கத்துக்கு முன்னாள் @ இந்த குறிஈடு இருக்கும்.
மேலே காணப்படும் இந்த பிரமாண்டமான இயந்திரங்கள் தான் சுரங்கம் தோண்டும் ஆரம்ப கட்ட பணிகளுக்காக பயன் படுத்தப்படுகின்றன......
ஆரம்ப கட்ட தோண்டுதல் பணி முடிந்து, ஆழப்படுத்தும் பணி நடை பெறுகிறது...
@ இந்த கட்டத்துல தான், நிலக்கரின் தரம் மற்றும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது...பிறகு சுரங்க நிறுவனத்திற்கும், அந்த நிலக்கரியை கொள்முதல் செய்யும் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது உதாரணமா, 10 மில்லியன் மெட்ரிக் டன்/ 48 US$ டாலருக்கு/
5 வருடங்களில் எடுத்து கொள்வதாக.... இப்படி இருக்கும் அந்த ஒப்பந்தம்... இந்த விசயங்களை கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் Sourcing Team,
விற்பனை இலக்கு ,எதிகால தேவை மற்றும் நிறுவனத்தின் நிதி நிலைமை
ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்யும்/
இதன் பிறகு நிறுவனத்தின் Finance & Risk துறை திட்டமிட்டபடி ( Projected ) இதற்க்கு தேவையான நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்யும்,
உதாரணமாக, வங்கி கடன், முதலியவை .....
சுரங்கத்தின் உள்ளே நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.......
வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி, சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டுவரப்படுகிறது.....
சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட நிலக்கரி,அதன் பருமனுக்கு தகுந்தார் போல் ( 0-50 mm/ 0-200mm ) பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது.....
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.......
0 comments:
Post a Comment