இது சும்மா போட்டோ லிங்க் பண்ணி, எப்படி பதிவு போடுறதுன்னு டெஸ்ட் பண்ணுறதுக்காக, அடுத்தது என்னோட துறை சம்பந்தமா ஒரு Visual பதிவு போடுறதுக்கு முன்னோட்டமா இந்த பதிவு, இதெல்லாம் நான்
பல்வேறு சமயங்கள்ல எடுத்த புகை படங்கள், இந்த புகை படங்களை பார்த்துட்டு, அதுக்கு தகுந்த மாதிரி, நட்சின்னு Comments ஒ ஹைக்கூ கவிதையோ எழுதுநிங்கனா, அதுல சிறந்தத தேர்ந்தெடுத்து ஒங்க பேரோட தனி பதிவா போடலாம்னு திட்டம், கற்பனை குதிரைய தட்டுங்க.......
இது ஒருநாள் மாலை நேரம் ரோட்டோரமா போய்க்கிட்டு இருக்கும் போது கண்ணுல சிக்குனது, ஒரு பள்ளி மாணவன், அன்றைய Home Work அ எழுதிக்கிட்டே, அவங்க அப்பாவோட கடலை கடை வியாபாரத்த கவனிச்சுக்கிட்டு இருக்கும் போது எடுத்தது, என்ன ரொம்ப பாதித்த புகை படம்.....
இது ஒருநாள், கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல வர்ற ஈழத்து அவல காட்சிகளை பார்த்துட்டு, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, செம மப்பு அடிச்சிட்டு எழுதுன கவிதை, அத புகைப்படமா எடுத்தது....
இது நாங்க வேளாங்கண்ணி டூர் போனப்ப எடுத்தது, கடல் அலையில விளையாடுறது என்னோட தங்கச்சி பொண்ணு......
இது என்னோட அறைல இருக்க குப்ப தொட்டி, இத பார்த்தாலே நான் எப்படின்னு கண்டுபிடிச்சிரலாம்.....
இது என்னோட கொடுக்கு, போட்டோ பிடிக்கும் போது எத மறைக்கிறான் பாருங்க....
இது மும்பைல கடல் தண்ணிக்கு நடுவுல அமைந்திருக்கும் Haji Ali தர்ஹா, எங்க அலுவலக ஜன்னல் வழியா எடுத்தது, இந்த பாவா அருளால ஒரு குறிப்பிட்ட நேரத்துல மட்டும், கடல் தண்ணி விலகி, இங்க போறதுக்கு வழி விடுமாம், அப்பறம் மூடிக்கொள்ளுமாம், அப்படின்னு சின்ன வயசுல புருடா விடுவாங்க, அப்பறம் தான் தெரிஞ்சிச்சி High Tide/ Low Tide ன்னால ஏற்படுதுனு.....
சோதனை பதிவுக்கு இது போதும்.....இதுக்கு மேல உங்கள சோதிக்க விரும்பல.....
5 comments:
அந்த பையனுக்கு கொடுத்திருக்கிற கமெண்ட் சூப்பர்
ஒரு சின்ன Suggestion..உங்களுக்கு கமெண்ட் போடும்போது வர்ற வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்திடுங்க. நேயர்களுக்கு கமெண்ட்
போடும்போது டிஸ்டர்பா இருக்கும்.
மும்பை தர்ஹா பற்றிய தகவல் நன்று.
முகத்தை மறைக்கும் அந்த பையன் படம் சூப்பர்.
உங்கள் Sugestion க்கு நன்றி கவிதை காதலன், நான் Blog க்கு புதியவன்,Word Verification அ எப்படி எடுத்துவிடுவதென்று சொன்னால் நன்றாக இருக்கும்
//நான் Blog க்கு புதியவன்,Word Verification அ எப்படி எடுத்துவிடுவதென்று சொன்னால் நன்றாக இருக்கும்//
Select 'No' radio button in the Show Word verification for comments in the Setting tab .
This will require people leaving comments on your blog to complete a word verification step, which will help reduce comment spam. Learn more
Blog authors will not see word verification for comments.
Post a Comment