Jan 12, 2010

கருப்பு வைரம்- "நிலக்கரி" ( Coal ) பகுதி-3

பகுதி -1      http://athigapadiabu.blogspot.com/2010/01/coal-feild-tecnical-z-from-to-user.html

பகுதி -2    http://athigapadiabu.blogspot.com/2010/01/coal-2.html


சுத்த படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட நிலக்கரி வரைக்கும் பார்த்தோம், இப்ப இதோட அடுத்த கட்ட நடவடிக்கைகளை  பார்போம்...



சுத்த படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட நிலக்கரி, Barges எனப்படுகின்ற சின்ன, சின்ன படகுகள்ள ஏற்றபடுகின்றன.....








 Barges கள்ள ஏற்றப்பட்ட நிலக்கரி, சுரங்கம் அமைந்திருக்கும் இடங்களில் இருந்து, அவை ஏற்றுமதி செய்யப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகங்களுக்கு அனுப்பபடுகின்றன...









Barges களிலிருந்து இறக்கப்பட்ட நிலக்கரி துறைமுகங்களில்   சேமித்துவைக்கபடுகிறது..

இங்கே இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் Chattering Team வேலை தொடங்கும், எந்தெந்த நாட்டு துறைமுகங்களுக்கு, சரக்கு அனுப்பப்படவேண்டும், எந்தெந்த காலகட்டத்தில் அனுப்பப்படவேண்டும், எத்தனை மெட்ரிக் டன்,இதையெல்லாம், கணக்கில் கொண்டு, தேவையான கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்,

குறைந்த அளவுன்னா Handy Max  கப்பல்கள், இதன் கொள்ளவு 30 to 50 ஆயிரம் மெட்ரிக் டன்ஸ், ( ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ )
இதவிட கூடுதல் என்றால் Pana Max  கப்பல்கள், இதன் கொள்ளளவு 65 to 80 ஆயிரம் மெட்ரிக் டன்ஸ்..இவைகள் முடிவு செய்யப்பட்டு, வாடகைக்கு, (சில நிறுவனங்கள் தங்களுகென்றே தனி கப்பல்களையும் வைத்திருக்கும்) அமர்த்தப்பட்ட கப்பல்கள் ஏற்றுமதி செய்யும் துறை முகங்களுக்கு அனுப்பப்படும்,










 துறைமுகங்களுக்கு வரவழைக்கப்பட்ட கப்பல்களில், நிலக்கரி நிரப்பபடுகிறது...
சரக்கு நிரப்ப பட்ட கப்பல்களுடன் சில டாக்குமெண்ட்ஸ் அனுப்பப்படும் இவை Load Port Documents என்று அழைக்கபடுகிறது..அவைகள்...

1. Bill of Lading -இதில் இறகுமதியாலரின் முகவரி, ஏற்றப்பட்ட நிலக்கரின் அளவு ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும்.
2.  Draft Survey Report - இதில் கப்பலின் கொள்ளளவு சம்பந்தப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
3.  Certificate of Insurance - இதில் கப்பல் தேவையான இறக்குமதி துறைமுகங்களை சென்று சேரும் வரைக்குமாக எடுக்கப்பட்டிருக்கும் இன்சூரன்ஸ் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
4.  Certificate of Weight - கப்பலில் எற்றபட்டிருக்கும் சரக்கின் மொத்த எடை விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
5.   Report of Orgin - இதில் எந்த நாட்டில், எந்த சுரங்கத்திலிருந்து இந்த நிலக்கரி எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருக்கும்.
6.    Form -B - இதில்  ஏற்றுமதி செய்யும் நாட்டின் Ministry of Trade ஆல் சுரங்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி சம்பந்தமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
௭.Certificate of Analysis - இதில் நிலக்கரியின் தரம் ( Quality ) பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.




 சரக்கு, இறக்கப்பட வேண்டிய துறை முகங்களை சென்றடையும்.
இனி சரக்கு இறக்கபடவேண்டிய துறை முகங்களில் நடைபெறும் விசயங்களை பார்போம்.....




 சரக்கு இறக்கப்பட வேண்டிய துறை முகங்களை அடைந்த கப்பல், ஆழ்கடலில் நங்குரமிடபடுகிறது, ( சில ஆழமான துறைமுகங்களை தவிர )

பிறகு Custom Duty செலுத்தப்பட்டு, Bill of Entry எனப்படும் இறக்குமதி சான்றிதழ் பெறப்படுகிறது, இந்த நடைமுறைகளுக்கு பிறகு...







ஆழ்கடலில்  நங்குரமிடபட்டிருகின்ற கப்பலிலிருந்து ( Transhipment ) Barges என அழைக்கபடுகின்ற சிறு கப்பல்களுக்கு சரக்கு மாற்றப்பட்டு துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது...

கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதில் ஆரம்பித்து, அதை இறகுமதியாளரின் Stock Yard வரை கொண்டு சேர்ப்பது வரையிலான இந்த வேலைகளை ( Stevedores ) என்று அழைக்கபடுகின்ற உள்ளூர்  சரக்கு கையாளுனர்கள் செய்கிறார்கள், ( இதற்கான தனி ஒப்பந்தம் இறகுமதியாலருக்கும்/ இவர்களுக்கும் இடையே போடபட்டிருக்கும் )

இங்க Lay Time Calculation எனப்படுகிற ஒரு முக்கியமான விசயத்தை பார்போம்,
கப்பலில் இருக்கும் முழு சரக்கையும், இறக்குவதற்கான நேரம் முதலிலேயே முடிவு செய்யப்பட்டிருக்கும், உதாரணமாக மூன்று நாள்..
இந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே, உதாரணமாக 2.1/2 நாளில் இறக்கப்பட்டுவிட்டால், கப்பல் நிறுவனத்திடமிருந்து Despatch Money எனபடுகிற ஊக்க தொகை தரப்படும், இதை இறக்குமதி செய்யும் நிறுவனமும், சரக்கு கையாளுபவர்களும் ( Stevedores ) ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பிரித்துகொள்வர், இதுவே சரக்கு இறக்கப்பட
3. 1/2  நாட்கள் எடுத்துக்கொள்ள படுகின்றது எனும் போது..Demurage Money எனப்படுகின்ற கூடுதல் கட்டணம், கப்பல் நிறுவனத்தால் வசூலிக்கபடுகிறது, இது கொஞ்சம் நஞ்சம் இல்ல, உதாரணமா ஒரு நிமிசத்துக்கு 5 US டாலர்னா, கணக்கு போட்டுக்கங்க....
Barges எனும் சிறு கப்பல்களில் ஏற்றப்பட்ட நிலக்கரி Jetty எனப்படும் துறைமுகப்படுகைக்கு கொண்டுவரப்படுகிறது.....







ஜெட்டிக்கு கொண்டுவரப்பட்ட நிலக்கரி , Barge களிலிருந்து இறக்கப்பட்டு, இறக்குமதியாளர்களின் Stock Yard களுக்கு கொண்டுசெல்லபடுகிறது.....

                                     





Stock Yard களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப படுகிறது,

நண்பர்களே கூடுமானவரை நிலக்கரியின், பிறப்பு முதல் இறப்புவரையிலான நிகழ்வுகளை Visuval லா விளக்கி இருக்கிறேன்....இந்த பதிவின் மூலம்,  நிலக்கரி பற்றி உங்களுக்கு, கொஞ்சமாவது அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறன்....
நன்றி...............

by ....தம்பி............







4 comments:

மைக் முனுசாமி said...

நிலக்கரி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தேடி வந்து படிப்பார்கள். இது நிரந்தரமான பதிவு. மற்ற மொக்கை பதிவு போல் அல்ல. எனவே எப்போதும் பயனளிக்கும். கண்டிப்பாக பலராலும் பார்க்கப்படும்..... தாங்க்ஸ்

Thameem said...

நண்பரே இன்னும் கூடுதலான விபரங்கள் நிலக்கரியை பற்றி தேவைபடுகிறது வியாபார விசயமாக , உதாரணம் நிலக்கரியில் எத்தனை வகைகள் இருகின்றது அது எந்த எந்த துறைக்கு தேவைப்படும் என்ற விபரம் தெரிந்தால் சொல்லி உடவிபன்னவும் நன்றி
evershining07 @yahoo .com மெயில் பண்ணவும் நன்றி

Unknown said...

Any enquiry about coal please contact lntraders1@gmail.com

dagobertkaiserman said...

ceramic vs titanium curling iron - Titanium Art
Shop from Titsanium 2016 ford fusion energi titanium Art titanium stronger than steel online. Shop titanium oxide formula from titanium chloride Titsanium Art for a great selection of babyliss pro titanium unique & custom designs and personalized prints from our

Post a Comment