நேத்து எனக்கும் எங்க ஜெனரல் மேனேஜருக்கும் கொஞ்சம் வாங்கல், எல்லாத்தையும் மனசுல வச்சிகிட்டு மப்பு எத்துனதுல, மாநாங்கன்னியா போத ஏறி போச்சு, நைட்டு ஒரு பதினோரு மணி போல பொதிகை டிவில, மானுஷ்ய புத்திரனோட பேட்டி ஓடிகிட்டு இருந்திச்சி .....அவரு நம்ம சுஜாதா சாரால பெருமைபடுதபட்டவர் என்பதாலும், அவரோட எழுத்து எனக்கு பிடிக்கும் என்பதாலும் ரொம்ப உன்னிப்பா பார்த்தேன், நல்லா தெளிவா, கம்பீரமா பேசுனாரு, அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு But, இன்னைக்கு காலைல தான் தம்பிங்கல்லாம் கேட்டாங்க என்னண்ணே நேத்து பயங்கர மப்பு போல, டிவி ஸ்க்ரீனுக்கு பக்கத்துல போய் உட்கார்ந்துகிட்டு எதோ பாத்துகிட்டு இருந்தீங்கன்னு...
அது மட்டும் ஞாபகத்துல இல்ல, போடா பொய் சொல்றீங்கனு சொல்லிட்டு, பெட்டுல பார்த்தா, ஒரு பேப்பரு, அத எடுத்து பார்த்தா, என்னையும் அறியாம மப்புல கிறுக்கி வச்சிருந்த சில வரிகள்...எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சதால வந்த Side Effects..சரி இன்னக்கி இதையே பதிவா போட்டுரலாம்னு இருக்கேன்,நீங்களும் கொஞ்சம் படிங்க ப்ளீஸ்.....ஆனா திட்ட கூடாது, அடிக்க கூடாது OK....
இத எழுதும்போது, சுஜாதா சாரும், மானுஷ்ய புத்திரனோட பேட்டியும் மைண்ட்ல இருந்திச்சி போல.
சுஜாதா.....
நான் நேசித்தவன், அவன் கடவுளும் அல்ல....
ஒரு அனுமானுஷ்ய புத்திரனை பற்றி சொன்னான்... (எனக்கு )...
அந்த மனிதனுடைய புத்திரனும்....
என் நேசிப்பை பற்றி, மிக சிறப்பாகத்தான் சொன்னான்...பொதிகையில்
இந்த இருவருக்கும் பிடித்த ஒருவன்,இறைவன் மட்டுமல்ல..
என்னைப்போல் ஒருவன்-பாரதி ( யும் கூட )
நான் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுப்பவன்....
சுஜாதாவை போல்.....
சுஜாதாவின் காதலி நான்...
நாங்கள் லெஸ்பியனும் இல்லை, அவள் ஆணாக இருபதனால்...
நீ செதுக்கிய சிலைகள் தான், என்னிடம் கற்களாய் இருந்தன...
நீ சொன்ன இலக்கியங்கள் தான், என்னிடம் வார்த்தைகளாய் இருந்தன...
கடவுளை பற்றி விளக்கிச்சொல்ல, கடவுளால் தானே முடியும் சுஜாதா.....
ஏதும் தப்பா எழுதிருந்தா, மன்னிச்சுருங்க ..............
0 comments:
Post a Comment