Dec 21, 2009

அபுவாகிய நான் பிராமணனாக பிறக்க ஆசை படுகிறேன்............

பிராமணர்கள்,
இந்த வார்த்தையும், இவர்களையும், நான் காதலித்து கொண்டே தான் இருக்கிறேன், இந்த காதலுக்கான காரணம் இதுவாக கூட இருக்க்லாம்......

எங்கள் ஊர் மன்னார்குடியை பொறுத்தவரை, பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்,இப்பொது இதில் நிறைய பிராமணர்கள்,பணிநிமிர்தமாகவோ,தொழில் நிமிர்தமாகவோ,வெளியேறி வெளி மாநிலங்களிலும்,வெளி நாடுகளிலும் குடியேறி விட்டார்கள், அவர்களில் பெரும்பாலனவர்கள் வசித்த ராஜகோபால சுவாமி கோவிலை சுற்றிவுள்ள, தெற்கு வீதி, வடக்கு வீதிகளில் மற்றவர்கள் தற்போது பெரும்பாலும் குடியேறி விட்டார்கள், அவர்கள் வசித்த புராதானமான வீடுகள் பெரும்பாலும் இடிக்கப்பட்டு concrete கட்டிடங்கலாகிவிட்டன, அந்த தெருக்களை இபோதெல்லாம் கடந்து செல்கையில், ஏதோ ஒரு வெறுமையே உணரமுடிகிறது,
அந்த ஆட்சரமான தெருக்கள், நாகரீகத்தை பூசி பொய்யாய் சிரிக்கின்றன.....
குங்குமம் இழந்த சுமங்கலிகளை ஞாபக படுத்துகின்றன......

தலைப்புக்கான விசயத்திற்குள் புகும் முன், இன்னும் பசுமையாய் என் மன ஊற்றில் பெருக்கெடுத்து, சல சலத்து ஓடிகொண்டே இருக்கும் என் நினைவுகளின் ஆற்றில் கொஞ்சம் மூழ்கி, எழுந்து கொள்கிறேன்.....


பெரிய கோவிலின் நான்கு மதில்களையும் சுற்றியுள்ள வீதிகளிலும், பெரிய தெப்ப குளத்தின் நான்கு கரைகளிலும் இருந்த வீதிகளிலும் ஏராளமான பிராமணர்கள் வசித்து வந்தார்கள், ஊரின் மற்ற இடங்களிலும் இருந்தாலும், எங்கள் தெருவிலிருந்து ஒரு 10 நிமிட நடை தூரத்தில் இருந்ததால், மற்ற இடங்களில் இருந்த பிராமணர்களைவிட கோவிலும், அதை சுற்றி இருந்த பிராமணர்களுமே எங்களுக்கு பிரசித்தம்,

என்னுடைய, என் நண்பர்களுடைய 7,8 ஆம் வகுப்பு பருவத்திலிருந்து, கல்லூரி, முதலாமாண்டு பருவம் வரையிலான ( மது, சிகரட்,etc,etc...எல்லாம் அப்போது நாங்கள் பழகி இருக்கவில்லை ) நிகழ்வுகள் பெரிய கோவிலையும், தெப்ப குளம் சார்ந்த இடங்களையும் சுற்றியே அமைந்திருந்தன, பெரிய கோவிலின் பிரமாண்டமும், யானையும், அங்கே பரவி இருக்கும் ஈர பத வாசனையும், வௌவால்களின் எச்சத்தின் நாற்றமும், எங்களுக்கு மிக பிடிதமானவையாகவே இருந்தன, கூடவே மட பள்ளியில் தரப்படும்,புளியோதரையும், தயிர் சாதமும், முறுக்கும், சுண்டலும், எங்களை கிட்ட தட்ட அடிமையாகவே ஆக்கி வைத்திருந்தது......

வீட்டு கட்டுபாடுகளில்லிருந்தும், அங்க போகாத, இங்க போகாத,எனும் பெரியவர்களின் அதட்டல்களில் இருந்தும், விடுபட ஆரம்பித்த எங்கள் 13 ஆம் வயதிலேயே, நெருக்கமாக அறிமுகமாகி இருந்தது பெரியகோவில், புறா,மற்றும் கிளிகளை பிடிக்கவே அங்கே செல்ல ஆரம்பித்தோம், பிறகு பரீட்சை நேரங்களில் புத்தகத்துடன் ஆஜராகி உட்பிரகார மண்டபங்களில் வில்வ மரத்து நிழலில்,அந்த அமைதியான சூழலில் சிலர் படிக்க, மற்றவர்கள் தூங்கிகொண்டோ, வில்வமர காய்ந்த கொட்டைகளை வைத்து Cricket ஆடிகொண்டிருபோம், இபோதுள்ள கட்டுபாடுகள் அப்போது இல்லை....

இதற்கு தோதான மதிய நேரங்களில் அங்கே ஆஜராகி இருப்போம், இந்த பக்கம் செங்கலை வைத்து யானையை தேய்த்து குளிப்பட்டி கொண்டிருப்பார் பாகன் ( இவர் என் கல்லூரி தோழனின் தந்தை ) இதை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி ஆனந்தம்,


அடுத்தடுத்த வருடங்களில் எங்களுடைய கால் பந்தாட்ட குழு ( Maradona Football Club -MFC ) ஆரம்பித்த நாட்களில் கோவிலின் முன் பக்கத்தில் உள்ள யானை மண்டபத்திற்கு எதிர் பக்கமே எங்கள் கால் பந்தாட்ட பயிற்சி களமானது,

மாலை நேரங்களில் பந்துடன் ஆஜராகி, ஆக்ரோசமாக விளையாடிகொண்டிருபோம், ஒரு முறை என் நண்பன் அடித்த பந்து,சாமி கும்பிட வந்த ஒரு ஐயர் மாமி நெஞ்சில பட்டு " அந்த மாமி நீங்க எல்லாம் மார்கழில போயிருவிங்கடா " என்று திட்டிய அந்த வார்த்தை இன்னும் நினைவுகளின் ஊடே இருந்து கொண்டுதான் இருக்கிறது,
என் பதினாறாம் வயதுகளில், நான் சுத்திகிட்டு இருந்த, என்னோட ஆளுன்னு சொல்லிக்கிட்டு அலஞ்ச " சோபனா " ( செக்க செவேல்னு இருப்பா, அவளோட கன்னத்து கற்றை முடியே ஆயிரம் கத சொல்லும், மொத்தத்துல சூப்பர் பிகரு )ஒரு 11 மணி போல குடும்பத்தோட கோவிலுக்கு வந்தா விளையாடி கொண்டிருந்த நானும், அப்பத்தான் முதல் முதலா கோவிலின் கருவறை வரை சென்றேன் ,அவள் ராஜா கோபாலனை தருசிக்க, நான் அவளை தரிசித்து கொண்டிருந்தேன், அவ அப்பா என்ன மொரட்சிக்கிட்டு இருந்தாரு, ஆஹா எத்தனை ரம்மியமான, மனதிலிருந்து நீக்கவே முடியாத நாட்கள் அவை...

பங்குனி மாதம் வந்துட்டாலே நாங்களெல்லாம் பரபரப்பாகிவிடுவோம், ஒரு மாத திருவிழா, தேரோட்டம் என்ன, வெண்ணைதாலி உற்சவம் என்ன, வானவேடிக்கை காட்டும் சூரிய பிறை என்ன, தெப்பம் என்ன, வெட்டும் குதிரை புறப்பாடு என்ன, திருவிழா கடை என்ன, ராட்டினம் என்ன, மரணகிணறு என்ன, வெண்ணை தாலி அன்றைக்கு Free யா நீர் மோரு கடைகிதினு, கடைக்கி, கடை மோரா வாங்கி குடிச்சிபுட்டு, வயித்த புடுங்கி ஆத்து பக்கம் ஓடுறது என்ன,
திருவிழா பாக்க வெயில் தாள வரும் ஐயர் வீட்டு பாவாடை, தாவணி கட்டிய தேவதைகலென்ன, பட்டு புடவைல அம்மன் சிலை மாதிரி செக்க செவேல்னு வரும் ஐயர் வீட்டு மாமிகலென்ன, போச்சி,போச்சி எல்லாமே போச்சி....

இப்போதும் அந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், இந்த பிராமண தேவதைகளின் நடமாட்டம் இல்லாமல் வெறுமை ஆகிவிட்டன....

வேலை நிமிர்த்தமாகவும், தொழில் நிமிர்த்தமாகவும் அவர்கள் பல நாடுகளுக்கும்,பல மாநிலங்களுக்கும் ,வெளி ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டாலும், ராஜகோபாலனையும், மன்னார்குடியையும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன், என்னை பொறுத்த வரை அவர்கள் இல்லாத எங்கள் மன்னார்குடி தெய்வீக தன்மையை இழந்து கொண்டிருகிறது என்றே நினைக்கிறேன், அவர்களின் இடபெயர்சி எங்கள் மனதை எதோ செய்கிறது, இந்த பிரிவு வலியை அவர்களும் உணர்ந்தார்களா? தெரியவில்லை.....

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்..........
















1 comments:

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!
கோவிலை சுற்றி இருக்கும் தெருக்கலில் கோவிலில் வேலை பார்ப்பவர்களே இருந்தார்கள்(பழைய காலத்தில்)அதுவும் மட(சாப்பாடு) வேலைகள் செய்பவர்கள் அதனாலேயே அந்த தெருக்களுக்கு மட விளாகம் என்று பெயர் வந்ததாம்.என்னுடைய தமிழ் ஆசிரியர் சொன்ன விளக்கம் இது.

Post a Comment