Jan 28, 2010

ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....

மதுவால் தினம், தினம் என் மனதுக்குள்ளே நடக்கும் போராட்டத்தை ஞாய படுத்தி என் மனம் எனக்கே சொல்லும் சமாதானத்தை இங்கே இறக்கி வைக்கிறேன்.....

நானொரு குடிகாரன், இரவினில் மட்டும்,
இந்த நொடி கூட இந்த மது அரக்கனை விட்டு வென்று, வெளியேற முடியும்.....
நான் அதை தோற்கடிக்க விரும்ப வில்லை...

ஏன் ?

சில நேரங்களில், என் எண்ணங்களை, தீய சக்திகளை எதிர்த்து நான்

செய்ய விரும்பும் புரட்சியை "சேகுவாராவாக"  நின்று வழி நடத்துகிறது......

( மனதுக்குலேயாவது )

நிகழ்வில் நடக்காத என் கனவுகளை, ( இந்த உலகத்திலிருந்து )

தீமையையும்,வறுமையையும், வன்முறையையும்,தீண்டாமையையும் .....

அழிக்க விரும்பும் என் போராட்டத்தில்  என் " தளபதியாய்"

நின்று முன்னேறி  செல்கிறது ......

நானும் அதன் பின்னே நின்று, வெல்ல விரும்பிய அந்த போரில்,

ஆக்ரோசமாய் மோதி அழிக்கிறேன், ஜெய்க்கிறேன்....

( மனதுக்குலேயாவது )

என் மனதிடம் தோற்றோடும்  இவை, நாளை மீண்டும் நிகழ்வாய் வந்து இந்த

உலகத்தை மிரட்டத்தான் செய்யும் என்று தெரிந்தும் மோதுகிறேன்,

போதை தெளியும் வரை............

ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....பகல் வரும் வரை.....



ஏமாற்றிய என் காதலியின்...., காதல் என்மீது எறியும் நெருப்பு கக்கும் ஈட்டிகளை,

இந்த மது கேடயத்தை கொண்டு தான் தடுத்துகொண்டிருக்கிறேன்,

இல்லையேல் என்றோ தற்கொலையாகி இருப்பேன்.......

இப்போதெல்லாம்,

அவள் நினைவுகள், என் தனிமை மீது போர்தொடுக்கும் போதும் நானே வெல்கிறேன்

என் இதயத்தில் பாய்ந்த அவளின் பார்வை அம்புகளை, எந்த குருதியும், வலியும்

இல்லாமல் பிடுங்கி எறிகிறேன்......

 என் மீது, காதல் வாளை வீசி....என் கா " தலை " கொய்து போட்டாள்,

முண்டமான போதும் எழுந்து நிற்கின்றேன்.....

விரும்பிய போது விழி கொண்டும், வெறுத்த போது வார்த்தை கொண்டும்

தாக்கினாள்,இந்த இரு பக்க தாக்குதலை எப்படி சமாளிக்க.....

அதனால் தான் இந்த தற்காப்பு போரை விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்.

 ஆயுதமும், தைரியமும் இல்லாத நானும் ஒரு போராளிதான்....பகல் வரும் வரை.....

2 comments:

புலவன் புலிகேசி said...

கவிதை நன்ராக இருக்கிறது. ஆனால் கருத்து தவறானது. குடிதான் காதல் தோல்வியின் முடிவு என்பதை ஏற்று கொள்ள இயலாது

தம்பி.... said...

இல்லை புலவா,(புலவறேனு சொன்னா வயசு அதிகமா தெரியுது) காதல் தோல்வி பற்றி எழுதி இருப்பது கற்பனை..., கண்டிப்பா குடிதான் காதல் தோல்வியின் முடிவு என்பதை ஏற்று கொள்ள இயலாது

Post a Comment