Feb 1, 2010

காயத்ரி.......?....!

" காயத்ரி "மங்களகரமான பேருல. யாரு இவ, நல்லவளா-கெட்டவளா, கருப்பா- செகப்பா-எந்த ஊரு  எதுவும் எனக்கு தெரியாது, இருந்தாலும் சில நாள் என் காதலியாவும்,சில நாட்களுக்கு என் மனைவியாவும் இருந்தா, குழப்புறனோ...

 இது உண்மையிலே நடந்த, என்னோட சொந்த அனுபவம், படிச்சிட்டு நான் செஞ்சது தப்பா, சரியானு நீங்க தான் சொல்லணும்...அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம், எனக்கு ஏற்கனவே திருமணமாகி  "காதலி "   இருக்காங்க,இத ஏன் சொல்லுறேன்னு கடைசில புரியும்....

ஒரு ஏழு,எட்டு மாசத்துக்கு முன்ன, லீவுக்காக சொந்த ஊருக்கு போயிருந்தேன், நண்பர்களோட ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போது, குரு'ங்கிர நண்பன் 98946----- காயத்திரியோட இந்த மொபைல் நம்பர குடுத்தான், இவ யாரு கால் பண்ணுனாலும் பேசுவா, ஒனக்கு போரடிட்சிசின்னா கால் பண்ணி கல்ல போட்டுக்கன்னு சொன்னான், ஏதும் சிக்கல்ல மாட்டிவிட்டுடாதடா,அவ எந்த ஊரு?ஒனக்கு எப்புடி இந்த நம்பர் கிடைட்சிட்சி,நீ பேசி இருக்கியான்னு கேட்டேன், திண்டுக்கல்லுக்கு பக்கதுல ஒரு பிரபலமான ஊர்லேர்ந்து பேசுறேன்னு சொன்னா, நெறைய வாட்டி  அவகிட்ட பேசி இருக்கேன், அவ Missed Call மட்டும் தான் குடுப்பா நம்மதான் கால் பண்ணனும், எனக்கு ரீ சார்ஜ் பண்ணி கட்டுபடியாவள அதான் உட்டுட்டேன்,ஒனக்குதான் உன்னோட கம்பெனி பில்லு கட்டுதே அப்பறம் என்னான்னா, நானும் அந்த நம்பர சேவ் பண்ணி வச்சதோட சரி அதோட மறந்துட்டேன்....

அப்பறம் லீவு முடிஞ்சி சூரத் வந்துட்டேன், ஒருநாள் எதார்த்தமா மொபைல நோண்டிகிட்டு இருக்கும் போது காயத்திரியோட   நம்பர் கண்ணுலபட்டுட்சி,ஒரு சபலம், அவளோட ரியாக்சன் எப்புடி இருக்குனு தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு மிஸ்டூ கால் குடுத்து வச்சேன், அடுத்த செகண்ட் அவகிட்டேர்ந்து மிஸ்டூ கால் வந்திச்சி, எனக்கு பயம், நான் ரியாக்சனே பன்னால, மறுபடியும்,மறுபடியும் அவ கிட்டேர்ந்து மிஸ்டூ கால் வந்துகிட்டே இருந்திச்சி, தைரியத்த வரவலட்சிகிட்டு கால் பண்ணுனேன் அவ தான் பேசுனா.....

நல்ல அமைதியான,இனிமையான குரல், அவளோட குரல்ல நல்ல குடும்பத்து பெண்களோட அதே அச்சம்,மடம்,நாணம் எல்லாம் இருந்திச்சி.நீங்க யாரு, எந்த ஊரு, ஏன் கால் பண்ணுனீங்க, அப்புடின்னு கேட்டா, நான் சாரிங்க என்னோட பிரண்டுக்கு கால் பண்ணுனேன், நம்பர் தப்பா போனதால உங்களுக்கு வந்துட்டுன்னு சொல்லி மறுபடியும், தப்பா நெனைட்சிகாதிங்க சாரின்னு சொன்னேன், இல்ல பரவா இல்லன்னு சொன்னா, அப்டியே பேச்சி தொடர்ந்திட்சி நான் என்னோட பேர் விஜி,கோயம்புத்தூர்ல சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கேன்னு சொல்லி அறிமுகபடுத்திகிட்டேன், அவளும் என்  பேர் காயத்ரி,நான் BA முடிச்சிட்டு,கம்ப்யூட்டர் கிளாஸ் போய்கிட்டு இருக்கேன் , எங்கப்பா ரிடயர்ட்டூ டீச்சர்,
நாங்க மூணு சகோதரிங்க, அதுல நான் ரெண்டாவது பொண்ணு அப்படின்னு சொல்லி என் பிரண்டு சொன்னா  அதே ஊர் பேர சொன்னா,அப்டியே பேச்சி ஒரு அரை மணிநேரம் தொடர்ந்திட்சி,பிரெண்டாயிட்டோம்....

காலைல எல்லாம் பேச மாட்ட, கேட்ட அம்மா, அப்பா சந்தேக பாடுவாங்கன்னு சொல்லுவா, SMS மட்டும் அனுப்புவா, அடுத்தடுத்த நாட்கள்ல, வாங்க-போங்க,வா-போன்னு ஆட்சி, உலக விசயதுலேர்னு, பக்கத்துக்கு வீட்டு விஷயம் வரைக்கும்,அறிவு பூர்வமாவும் பேசுவா, எனக்கு,அவளோட பேசாம இருக்கவே முடியாதுங்கிற நிலைமை ஆகிபோட்சி....ஊருக்கு வந்தா உன்ன மீட் பண்ணமுடியுமான்னு கேட்டேன், தாராளமா வரலாம்னு சொன்னா....

அடுத்து வந்த நாட்கள்ல வாடி,போடியாட்சி, நான் என்னோட நிலமைய மறந்து உண்மையிலே அவள லவ்வே பண்ண ஆரம்பிட்சிடேன், அவளும் தான்,நான் உன்ன பார்த்தது கூட இல்லடா நீ எப்படி இருந்தாலும் பரவா இல்லடா உன்னோட அன்பு மட்டும் போதுண்டான்னு அடிக்கடி சொல்லுவா , அடுத்து கல்யாணம், முதலிரவுன்னு எங்க பேச்சி டெவலப் ஆகி போய்கிட்டே இருந்திச்சி, நைட்டு ரெண்டு மூணு மணி வரைக்கும் பேசுவோம், போர்வைக்குள்ள படுத்துகிட்டு குசு,குசுனு பேசுவா,நாங்க பேசாத பேச்சே இல்லன்னு சொல்லாம்,கணவன்-மனைவியாகவே வாழ்ந்தோம்,அவகிட்ட நீ இனிமே யார்கிட்டேயும் பேசகூடதுன்னு கண்டிசன் எல்லாம் போட்டேன்....ஒத்துகிட்டா....

கொஞ்ச நாளைல, நான் பண்ணிக்கிட்டு இருக்கது தப்பூன்னு ஒரைட்சிட்சி, நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்,அப்படி இருக்கப்ப ஒரு அப்பாவி பொண்ண நம்ப வச்சி ஏமாத்துறது எவ்வளவு பெரிய பாவம்னு உணர்ந்தேன்,இனிமே இந்த பாவத்த தொடரகூடதுன்னு முடிவு பண்ணுனேன்...

இந்த விசயத்த  என்னோட லவ்வர்கிட்ட கூட சொன்னேன்,அவளுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்,அதனால ஜாலியா எடுத்துகிட்டா, இப்பகூட ரெண்டுநாள் கால் பண்ணலன்னா, ஒனக்கு என்னடா காயத்திரி இருக்கா, என்னோட ஞாபகமா வரபோகுதுன்னு,சில சமயம் சீரியசாவும்,சில சமயம் ஜாலியாவும் கிண்டல் பண்ணுவா....

அடுத்தநாள்  கால் பண்ணி, காயத்திரி -எங்க  கம்பெனி On Site ப்ராஜெக்ட் விசயமா என்ன ஆஸ்ட்ரேலியா அனுப்புறாங்க,நாளைக்கே கிளம்பனும், திரும்ப வர 7-8 மாசம் ஆகும், அதுவும் இல்லாம நம்ம கல்யாணத்த பத்தி, எங்க அப்பா,அம்மாட்ட பேசுனேன் அவுங்க ஒத்துக்க மாட்டேன்குறாங்க நாம பிரிஞ்சிருவோம்டா,என்ன மறந்திருன்னு சொன்னது தான் தாமதம்,பயங்கரமா அழுக ஆரம்பிச்சிட்டா,பக்கத்துல கூட யாரோ ஏண்டி இப்படி அழுகுறேன்னு படபடப்பா கேக்குற சத்தம் கேக்குது, ஒண்ணுமில்லேம்மான்னு சொல்லிகிட்டே அழுகைய அடக்குரா,அவளால முடியல....
என்னடா  இவ்வளவு  சீரியஸா எடுதுகிட்டாலேன்னு, நானே கொஞ்சநேரம் தடுமாறி போய்ட்டேன், அந்த நேரத்துல எதோ சமாதானம் சொல்லி போன வட்சிட்டேன்,

ஆனாலும் அவளோட அழுகை மட்டும்,மனசுக்குள்ள கேட்டுகிட்டே இருந்திச்சி,இந்த நேரத்துல நான் கல்யானமானவன்குற  உண்மைய சொல்லிடலாமேன்னு கூட யோசிச்சேன், இவ்வளவு உணர்வு பூர்வமா இருக்குரவ ஏதும் தவறான முடிவுக்கு கூட போகலாம் இல்லையா,அதனால அடுத்த நாள், நான் ஆஸ்ட்ரேலியா கெளம்பிட்டேன், வந்து ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னு சொல்லி சமாதானம் பண்ணுனேன்,  ஒனக்காக நீ வர்ற வரைக்கும் காத்துகிட்டே இருப்பேண்டா என்ன மறந்திறாதடான்னு சொல்லி அழுதா,அதுதான் அவகிட்ட நான் கடைசியா பேசுனது,அதுக்கப்பறம் என்னோட போன் நம்பர மாத்திட்டேன்,

ஆனா அவளோட ஞாபகத்த மட்டும், இன்னைக்கு வரைக்கும்  மறக்கவே முடியல,
ஏன்னா, அவள நான் உண்மைலேயே லவ் பண்ணுனேன், இப்பவும் பண்ணுறேன்.....

இது நடந்து ஒரு மூணுமாசம் ஆகியிருக்கும் ,ஒரு நாள்  எனக்கு 
அவளோட போன் நம்பர குடுத்த என்னோட பிரண்டுகிட்ட, அவள பத்தி விசாரிச்சேன்,அவன் சொன்னான் , இப்பல்லாம் நாங்க எத்தன வாட்டி கால் பண்ணுனாலும், எடுக்கவே மாட்டேன்கிறா, தொடர்ந்து அடிச்சிகிட்டே இருந்தா, எடுத்து கண்ணா பின்னான்னு திட்டுறா, இனிமே இந்த நம்பர்லேர்ந்து கால் வந்தா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன்னு மெரட்டுரா, அதுனால இப்பெல்லாம் நாங்க அவளுக்கு கால் பண்ணுறதே இல்ல, ஆமாம் உனக்கு அவளோட  நம்பர் குடுத்தனே நீ பேசுநியான்னு கேட்டான், இல்லடா அதுக்கெல்லாம் எங்கடா நேரம் இருக்குன்னு அவன்கிட்ட பொய் சொன்னேன்...


அப்பவும் எனக்கு மனசு கேக்கல, என்னோட லவ்வர்கிட்ட, காயத்ரியோட நம்பர குடுத்து நீ என்னோட தங்கச்சின்னு சொல்லி அவ கிட்ட பேசு, அவ மனசு மாறி இருக்கான்னு பாரு, இப்பவும் அவ அதே தீவிரத்தோட இருந்தா, எங்க வீட்ல உங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்கிறாங்கன்னு செண்டி மென்டா பேசி புரியவையுப்பான்னு சொன்னேன், அவ   போன் பண்ணி சொன்னப்ப, அவகிட்டையும் அழுது பொலம்பிருக்கா, அவரு எப்ப வேணும்னாலும் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கட்டும், நான் இப்பவே உங்க வீட்டோட வந்துருறேன், நீங்க என்ன வந்து அழைச்சிட்டு போங்கன்னு சொல்லி துடிட்சிட்டாலாம் என் காயத்ரி....மறுபடி,மறுபடி அவ கால் பன்னுனதனால இவ பயந்து போய் நம்பர மாத்திட்டாளாம்.....  இதுக்காக என்னோட லவ்வர் என்ன திட்டுனா, ஆனா முன்ன விட எம்மேல அவளுக்கு பொசசிவ்நஸ் கூடிருச்சி....

என் லவ்வர்  சொன்னத கேட்ட எனக்கு, காயத்ரி  மேல இன்னும் மரியாதை கூடிருச்சி, நம்ம தப்பே பண்ணிருந்தாலும்,ஒரு அப்பாவி பெண்ணோட வாழ்க்கை சீரழியாம நான் அவமேல கொண்ட காதல் இன்னும் காப்பாத்திகிட்டு இருக்குன்ற ஆழ்ந்த மன திருப்தி உண்டாட்சி, நீங்களே யோசிங்க அவ முண்ணாடி மாதிரி அப்பாவியா கண்டவன்கிட்ட போன்ல பேசி, யாரோ ஒரு கெட்டவன்கிட்ட மாட்டி சீரழிஞ்சி போய் இருந்தான்னா....அவளோட வாழ்க்கையும் நாசமாகிருக்கும், ஒரு நல்ல ஆசிரியரோட குடும்ப மானமும் கப்பல் ஏறி இருக்கும்.....

இப்ப சொல்லுங்க நான் பண்ணினது தப்பா ? சரியா ?

சரி என்ன சந்திக்கிறதுக்கு முன்னால என்னோட  காயத்ரி  ஏன் அப்படி இருந்தா? அப்புடீன்னு யோசிச்சி பாக்குறேன்,

எல்லாருகிட்டேயும் அப்பாவியா பேசுனதனால அவ கெட்டவளா ? இல்ல என்னோட காயத்ரி புனிதமானவ,
ஒரு வேளை மூணு பெண்ணுங்களுக்கும் வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணிகுடுக்க வசதி இல்லாத அந்த ஏழை ஆசிரியருக்கு மகளா பொறந்துட்டாளே அதனாலயா  ,

இல்ல மூணுமே பெண்ணா பொறந்துட்டதால, அவ குடும்பதுலேர்ந்து பாசமோ,அன்போ  கிடைக்லையோ, அந்த அன்பை தான் என் காயத்திரி வெளியே தேடினாலோ,

இத புரிஞ்சிக்காம தான், ஆரம்பத்துல நானும், என் நண்பர்களும், இந்த சமூகமும் அவள தப்பான கண்ணோட்டத்துல பார்த்திருகோம், இந்த மாதிரி தவறாய் பார்க்கப்படும் எத்தனை காயத்திரிகளோ    என் இந்தியாவுல.....

Any Way....
என்னோட காயத்திரிக்கும் திருமணமாகி, திகட்ட,திகட்ட கணவனோட அன்பு கிடைச்சி சந்தோசமா, வாழ்க்கைல எந்த குறையும் இல்லாம வாழணும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன்....

By........தம்பி.........

110 comments:

sakthi said...

Heheee no comments please

புலவன் புலிகேசி said...

:) பென்பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க

Kaipulla said...

என்ன சக்தி நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு...

Kaipulla said...

பாவந்தான், கடைசியில சுபமா தானே முடிஞ்சிருக்கு புலவா...

மதார் said...

நல்லா இருங்க

Kaipulla said...

இந்த நல்லா இருங்கவுக்கு அர்த்தம் புரியலையே மதார், சாபமா?

மதார் said...

நல்லா இருங்க -ஒரு வாழ்த்துதானே ? ஏன் உங்களுக்கு சாபமா தெரியுது ?

Kaipulla said...

இல்ல ஒரு கருகல் வாடை வந்திச்சி, அதான் வயிறு எரிஞ்சி வாழ்த்துநிங்கலோன்னு ஒரு டவுட்டு..சாரி

மதார் said...

அப்படியா ? தெரியலையே வந்துருக்கலாம் .

Kaipulla said...

ஆஹா.... ரிப்ளை வர்ற வேகத்த பார்த்தா, எங்க ஆபீஸ் மாதிரியே,வேலை வெட்டி பாக்காமலே சம்பளம் தர்ற இளிச்சவாய் ஆபீஸ் நெறைய இருக்குன்னு மட்டும் புரியிது....

மதார் said...

Exactly

Kaipulla said...

வேணாம் , வலிக்கிது அழுதுருவேன்....மாதர், அழுதுருவேன்

மதார் said...

மாதர் இல்ல மதார் , நா அழுதுருவேன்

Kaipulla said...

சாரி, மதர் இல்ல.. மாதர் ஐயோ அதுவும் இல்லையோ...மதார்... என்ன நண்பா புனை பெயரா ?

மதார் said...

ஐயோ இந்தக் கொடுமைய நா எங்க போய் சொல்ல ? இதப் படிங்க சார் http://mathar-itsallaboutmine.blogspot.com/2009/11/blog-post_19.ஹ்த்ம்ல்

மதார் said...

http://mathar-itsallaboutmine.blogspot.com/2009/11/blog-post_19.html

Kaipulla said...

அய்யய்யோ மிஸ்சா, தெரியாம வாய குடுதுட்டமோ....சாரி என்ஜினியர் மேடம் , எஸ்கேப் ஆகிடுடா கைப்புள்ள.....

மதார் said...

ஏன் என்ன ஆச்சு ?

Sangkavi said...

என் கருத்து நீங்கள் செய்தது தவறு... கல்யாணத்தைப் பத்தி அவ பேசுனா அப்பவே கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்து இருக்கணும்... இது என்னோட அனுபவம்... பாவம் காயத்திரி அவ மனது என்ன பாடு பட்டு இருக்கும்....

Kaipulla said...

பொண்ணுங்க கிட்ட பேசனும்னாலே, எனக்கு நடுக்கும் அதான், சும்மா ஜோக்,ஒங்க பேர பத்தி ஒரு சோக கதையே எழுதி இருக்கீங்க, ஏன் நீங்க ப்ளாக் எழுத ஒரு புனை பெயர் வச்சிக்க கூடாது எஞ்சினியர்

மதார் said...

நல்லா சொல்லுங்க சங்கவி

Kaipulla said...

கண்டிப்பா சங்கவி,நான் பண்ணினது தப்புதான்....அவ அன்பால என்ன ஈர்த்துட்டா...மூளை யோசிச்சாலும், இந்த பாழா போன மனசு சொல் பேச்சி கேக்கலையே...

மதார் said...

நீங்க ஈஸியா விலகிட்டீங்க , அந்த பொண்ணு லைப் மனசு ?

Kaipulla said...

ஹலோ மதார்,திட்டுறதுக்கு கூட்டணி சேருற மாதிரி தெரியிது....

மதார் said...

எனக்கு அரசியல் ஆகாது

Kaipulla said...

கண்டிப்பா என்னோட காயத்திரி, புரிஞ்சிப்பா, Still i Love Her...என்ன பண்ண வேற வழி தெரியல மதார்

மதார் said...

Gud Answer

Kaipulla said...

சரி அவள பத்தி மட்டும் யோசிக்கிறீங்களே, இழந்தது நானும் தான மதார்...

மதார் said...

what u lost?

மதார் said...

still u have a lover know ? other than kayathri .

Anonymous said...

aen indha veen vambu ,vilaiyattu.pen pavam poladhadhu.risk venam thats why im writing in anonymous.

Kaipulla said...

yes i accept ,அன்போ, காதலோ எத்தன பேர் மேல வேணும்னாலும் வரலாம், துரோகம் தான் பண்ண கூடாதுங்குறது என்னோட பாலிசி.....
நான் என்னோட லவ்வர்கிட்ட காயத்திரிய பத்தி சொல்லாமலே மறட்சிருக்க முடியாத,நான் சொன்னேன் அவ புரிஞ்சிகிட்டா...புரிதலும்,விட்டு கொடுத்தாலும் தானே காதலுக்கு அழகு.... மதார்...

மதார் said...

dont mistaken me, i don like to fight with u, sorry.

Kaipulla said...

ப்ளீஸ் என் மனச குழப்பாதிங்க...I Feel Guilty..இதோட இத பத்தி ஒரு முற்று புள்ளி வச்சிருவோம் நண்பர்களே...

Kaipulla said...

எடுத்து சொல்லவும் மனசு வேணும் நன்றி மதார்,நன்றி நண்பர்களே...

sakthi said...

தல சுத்துது .ஒரு ப்ளாக் பாபுலர் அவது எப்படினு இங்க பார்தா புரயுது (ஹி ஹி எனக்கும் இப்படி ஒரு நம்பர் கொடுத்தார் என் நண்பர்.ஆனா பயத்துல கடைசி வரைக்கும் நான் பேசவே இல்லையே!!!)

Anonymous said...

முதல்ல தமிழ் தப்பில்லாமல் எழுதப் பழகு;அப்புறம் காயத்ரிகிட்ட பழகுனத எல்லாம் சொல்லலாம் !

Kaipulla said...

அட போங்க சக்தி இந்த கிண்டல் தானே வேணாங்கிறது, உங்களுக்கும் தமிழ்ல சரியா எழுத தெரியல, அதனால நம்ம ரெண்டு பேரும், உங்க கமண்டுக்கு கிழே ஒருத்தர் கமென்ட் போட்டிருக்காருல அவருகிட்ட ட்யுசன் சேருவோமா...

மதார் said...

//Kaipulla said...

பொண்ணுங்க கிட்ட பேசனும்னாலே, எனக்கு நடுக்கும் அதான், சும்மா ஜோக்,ஒங்க பேர பத்தி ஒரு சோக கதையே எழுதி இருக்கீங்க, ஏன் நீங்க ப்ளாக் எழுத ஒரு புனை பெயர் வச்சிக்க கூடாது எஞ்சினியர்//

எனக்கு என்பெயர்தான் பிடிச்சது , நான் நானா மட்டுமே இருக்க விரும்புறேன் .ஏன் மதார்க்கு என்ன குறைச்சல் கண்டீர் ?

sakthi said...

தம்பி
நான் வரல

sakthi said...

அடுத்தது என்ன எழுதபோரிங்க

sakthi said...

எல்லாம் பென்பாவம் பொல்லாததுன்னு சொல்றாங்க .ஆண்பாவம்?
பரவா இல்லையா ?

மதார் said...

ஆமாமா ஆண்பாவம் ரொம்ப பாவம் !!!!!!!!!!

Kaipulla said...

வாம்மா மின்னல்.....மதார்
நம்ம சக்தி அண்ணன் வந்துருக்காக, சங்கவி அண்ணன் வந்துருக்காக, மற்றும் anonymous எல்லாம்
வந்துருக்காக.....இன்னும் யார், யாரெல்லாம் வரபோராகன்னு தெரியல....
ஆரம்பிச்சி வச்சிட்டு நீங்க எஸ்கேப் ஆயிடீங்க.....நல்லா இரும்மா, நல்லா இரு....

மதார் said...

ஹலோ என்ன பேசுறீங்க ? நான் என்னமோ எல்லார்க்கும் போன் போட்டு சொல்லிட்டு போனா மாதிரி சொல்றீங்க .

Kaipulla said...

சக்தி நான் அடிச்சா தாங்க மாட்ட.....
நான் ஒங்கள சொல்லலப்பா....அடுத்த தலைப்பு...

Kaipulla said...

இதுல போனு வேற போட்டு சொல்லனுமா.....

மதார் said...

//சக்தி நான் அடிச்சா தாங்க மாட்ட.....//

வாங்க ........இன்னும் எவ்ளோ பேர் கிளம்பி இருக்கீங்க ? உங்களுக்கு கடைசில கிடைக்குற ஆயுதம் இதானே ?

sakthi said...

தம்பி
அவங்க ஆண்பாவம் ரொம்ப பாவம் !!!!!!!!!! அப்டின்னு சொல்லிட்டாங்க .ரொம்ப நலவங்கலா இருகாங்கலே !!!!!

மதார் said...

ஆமா நாங்க ஒன்னும் கண்ணா மூடிட்டு உலகம் இருட்டுன்னு சொல்ற ஆளு இல்ல .

Kaipulla said...

என் பாரதி கண்ட புதுமை பெண்ணே....
அது சும்மா தலைப்புமா....இந்த ஆயுதத்த ஆண்கள் கையில எடுத்து ரொம்ப நாளாட்சுமா, உங்க கிட்டேர்ந்து பூரி கட்டயால அடி வாங்காம தப்பிக்கிறதே இப்பெல்லாம் பெரிய பாடு....

மதார் said...

//என் பாரதி கண்ட புதுமை பெண்ணே//

நீங்க ரொம்ப நல்லவரு , எனக்கு யாருமே இந்த பட்டம் இன்னும் குடுக்கல .

Kaipulla said...

ஆமாம் சக்தி, பாவம் மதார் உட்டுடுவோம்....

மதார் said...

அடடா ரொம்பதான் பாவம் பாக்குறீங்க .!!!!!!!!!!
நீங்க பாவம் பாக்குற அளவுக்கு ஒன்னும் நா இல்ல , இதுல கூட்டு வேறயா ?

sakthi said...

தம்பி
வேற வழி இல்ல நான் அடிச்சா தாங்க மாட்ட.....// எப்போ release ?

Kaipulla said...

அப்பறம் சாயந்திரம் ஆறு மணி வரையும் சண்ட போடுவாங்க....

மதார் said...

வேற வழி இல்ல நான் அடிச்சா தாங்க மாட்ட.....// எப்போ release ?

உண்மை எல்லாம் வெளில வருது போல ? பாவம் நீங்க எவ்வளவு நேரம்தான் நீங்களும் நல்லவரு மாதிரியே .............முடியும் ? கேம் அ முடிச்சுக்கலாம் .

Kaipulla said...

எங்க ரிலீஸ் பண்ண, எஞ்சினியர் மேடம் ரிப்லையில அடிக்கிற அடியையே தாங்க முடியல, நான் எங்க அடிக்க....நம்ம மட்டும் மாட்டிகிட்டமேன்னு நெனச்சேன், சேர் மார்கெட்ட உட்டுட்டு, நீங்களும் அடிய சேர் பண்ண வந்ததுக்கு ரொம்ப நன்றி சக்தி.....

மதார் said...

அதென்ன எஞ்சினியர் மேடம்?? ஏன் பொண்ணுங்க சிவில் எஞ்சினியர் ஆகுறதுல உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு ஜீரணிக்க ???

Kaipulla said...

தப்பா நெனைக்காதிங்க மதார், சும்மா கிண்டல் தான் பண்ணுறோம், நீங்க சொல்லுறதும் சரி தான் அப்பறம் இத வச்சே ஒரு பதிவு போட்டுடுவாங்க.....

Kaipulla said...

ச்சே ச்சே, நீங்க கட்டுன பத்து கட்டடம் இடிஞ்சி போனான கூட,பதினோராவது கட்டடத்த சரியா கட்டிடுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.....

மதார் said...

மிக்க நன்றி , இதுலே தெரியுதே . பெண் கட்டினா 11 தான் ஜெய்க்கும்.அதே ஆண் கட்டினா 1 ye தரமா இருக்கும் ????????????

Kaipulla said...

கட்டடத்த விடுங்க, நம்ம இப்புடியே பேசிகிட்டு இருந்தா, யாராவது Anonymous வந்து டின்னு கட்டாம இருந்தா சரி....

மதார் said...

Anonymous
வாழ்க

sakthi said...

தம்பி
நானும் ஒரு பதிவு எழுதபோறேன் .தலைப்பு :உங்கள் பதிவை எப்படி ஸ்ட்ராங்கா கட்டுறது?

Kaipulla said...

ஏம்மா சக்தி, இப்பதான் மதார் உஷ்ணம் கொறஞ்சி, சமாதானம் ஆனாங்க....

மதார் said...

எண்ண கம்பெனி பொருள் நல்லா தரமானதா உங்க பட்ஜெட் க்கு சரியா வரும்னு நா சொல்றேன் .சரியா ??

Kaipulla said...

அனேகமா அதிக பின்னூட்டம் உள்ள பதிவு இதா தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.....
ஏதும் அவார்ட்,கிவார்டு குடுப்பாங்களா...

மதார் said...

அடுத்த அரசியல்வாதி ரெடி போல ?

மதார் said...

அவார்ட் வாங்குற படம் எல்லாம் நல்ல படமா இருக்க முடியுமா ??

Kaipulla said...

எஸ்ட்டிமேட் குடுக்குற , ஒங்க எஞ்சினியர் வேலைய காட்டிடின்களே மதார்

மதார் said...

not only Estimate . (Planning, Tender, Costing )

sakthi said...

அப்போதானே நிறையா வாங்க முடியும்

Kaipulla said...

ஒன்னும் வேணாம்பா, நாங்க ஒரு நல்லா என்ஜினியரா வச்சி கட்டிகிறோம் என்ன சக்தி....

மதார் said...

நா ஏதும் உங்களுக்கு கட்டி தரேன்னு சொல்லலியே

sakthi said...

தம்பி
இப்ப சொல்லுங்கோ ஆண்-பாவம் தானே?

மதார் said...

யாரு ? என்னை கட்டிக்க போற ஆண் மகனா ?

sakthi said...

நான் எங்கங்க அப்டி சொன்னேன்?

மதார் said...

பொழச்சு போங்க

Kaipulla said...

அப்பாட சாப்ட்டாச்சி இனிமே தெம்பா சண்ட போடலாம்....
என்ன மதார் கேட்டிங்க, எங்களையே இந்த காட்சி, காட்சிரீங்களே, உங்கள கட்டிக்க போரவர சும்மாவா உடுவீங்க.....எந்த புண்ணியவானோ...பாவம் அவரு

Kaipulla said...

நீங்க ரெண்டு பேரும் பாவுன்னாரா ? கானா காயா ? சாப்டாச்சா ?

மதார் said...

அந்தக் கவலை உங்களுக்கு வேணாம் , எங்களுக்கு பாத்துக்க தெரியும் .

sakthi said...

தம்பி
இன்னைக்கு லீவ் அதான் இப்படி (உங்களுக்கு அமைஞ்ச மாத்ரி எனக்கு company அமையலேயே)

மதார் said...

கொஞ்சம் ஜாஸ்தி பேசுற பொண்ணுங்க எல்லாம் ஒன்னும் பயங்கரவாதி இல்ல , பெண்ணியம் , பெண் உரிமை எல்லாம் எழுத்துலத்தான்.

//company// anything new word apart from this ?

Kaipulla said...

என்ன தான் இருந்தாலும், ஒரு ஆணோட கஷ்டம் , ஒரு ஆணுக்கு தானே தெரியும் என்னா சக்தி,
அதான் மதார் உங்க வருங்கால கணவர பாவம்னு சொன்னேன்...

மதார் said...

அவர் வரும்போது இத நா அவர்கிட்ட கண்டிப்பா சொல்லிடுறேன் .

sakthi said...

நாங்க ஆண்உரிமை பத்தி பேசிக்கினு இருக்கோம் .நீங்க வேற? எந்த காலத்துல இருகிங்க

Kaipulla said...

No No...மாதர் தன்னை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோமுன்னு சொன்ன பாரதியோட சிஷ்யர்கள் நாங்கள், என்னா சக்தி,எழுத்தும், செயலும் ஒண்ணா தான் இருக்கும்....மதார்..

மதார் said...

Gud job , keep it up

Kaipulla said...

சக்தி நல்லா சொன்னீங்க போங்க....நெத்தியடி....

மதார் said...

நெத்தில மட்டும்தான் அடிக்க தெரியுமா ? என்னவொரு வீரம் ? just for fun .

Kaipulla said...

நான்தாம்பா பழைய காலத்துலேயே இருக்கேன்.....சக்தி,இனிமே ஆண் உரிமைய பத்தி பாட எந்த செல்லமாவோ, கண்ணமாவோ வந்தா தான் உண்டு....

மதார் said...

Be cool , i m here

மதார் said...

உங்க ஆளுகிட்ட என்னை போட்டுகுடுத்து திட்ட வச்சுடாதீங்க ப்ளீஸ் .இதோட நிறுத்திக்கலாம் .

Kaipulla said...

என்ன மதார், நீங்க தான் நல்லா கழுதஎல்லாம், சாரி கவிதை எல்லாம் எழுதுவீங்களே, எதுக்கு செல்லமாவோ, கண்ணமாவோ, கொஞ்ச நாளைக்கு மீன் குழம்பு வைக்கிறத பத்தி எல்லாம் எழுதுறத விட்டுட்டு ஆண் உரிமைய பத்தி எழுதலாமே....

மதார் said...

நீங்களும் கழுத எழுதுவீங்கல்ல , பாக்குறேன் . அப்புறம் எண்ண ஆண் உரிமையா? இல்லாத ஒன்ன பத்தி எழுதலாம் . எல்லா இடத்துலயும் கொட்டி கிடக்குரதப் பத்தி எழுதி நா ஏன் நேரத்த வேஸ்ட் பண்ணனும் ?

sakthi said...

thambi
உங்க ஆளு யாரு?

Kaipulla said...

Ok mam வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையும் பாப்போம்....

மதார் said...

side la velayum poguthu .

Kaipulla said...

உங்கள தான் சொல்லுறாங்கன்னு நெனைக்கிறேன் சக்தி...பாவம்பா இனிமே திட்டாதிங்க....

Kaipulla said...

ஒ, பாத்திங்களா சக்தி, நம்ம தாம்பா ஏமாந்துட்டோம், நம்மள கலாய்ட்சுகிட்டே அவங்க வேலையும் பாக்குறாங்களாம்....என்ன ஒரு வில்லத்தனம்

sakthi said...

தம்பி, உங்க காயத்ரி வாழ்க
மதார், உங்க பெண்ணியம் , பெண் உரிமை வாழ்க
என்னை விட்டுடுங்க

Kaipulla said...

சரியான குசும்பு புடிச்ச ஆளுங்க சக்தி நீங்க.... கலட்டி விட்டுட்டு போறீங்க பத்திங்களா....

gulf-tamilan said...

இன்னும் கும்மி முடியலையா???:)))

மதார் said...

2 நாளா மனசு சரி இல்ல . நல்லது பண்ண 2 பேருக்கு ஒரு நன்றி கூட சொல்லலியேனு. ரொம்ப நன்றி சக்தி , தம்பி . ஆபீஸ் ல வேலை கொஞ்சம் தூக்கம் நெறையனு ரொம்ப கஷ்டப்பட்டேன் . என்னை தூங்கவிடாம பதில் போட்டு முழிக்க வைத்தமைக்கு நன்றி .

வேலையும் செஞ்சேன் தூங்கவும் இல்ல . எவ்ளோ நல்லவங்க நீங்க ?

Kaipulla said...

யோவ் எப்டியா இருக்க....
நான் அடிச்சா தாங்க மாட்டேன்னு ஒரு பதிவு போட்டேனே...படிட்சியாயா..
ஏன் போனியாகள.... வழக்கம் போல உங்க கருத்தம்மா, வேலைய கொஞ்சம் காட்டுறது..பொழுது போகுமுள்ள..

மதார் said...

hello i m not a male k.

Kaipulla said...

என்னை பொறுத்தவரை....நீங்க மேல் தாங்க.....
வேலை நேரத்திலையும்,இந்த மாதிரி டுபாகூர் பதிவுக்கு எல்லாம் பின்னுட்டம் போடுற நீங்க எல்லோரையும் விட ஒரு படி மேல் தாங்க...யாருக்கு வரும் இந்த மனசு...

மதார் said...

//இந்த மாதிரி டுபாகூர் பதிவுக்கு எல்லாம் பின்னுட்டம் //

யானை தன் தலைல தானே மண் அள்ளி போட்டுக்குமாம் .

Kaipulla said...

நான் பூனை மதார்....
ஆனா யானை கலர்ல தான் இருப்பேன்....

Post a Comment