Feb 19, 2010

எதுத்த வீட்டு பார்வதியக்கா பொண்ணு....

இது ஒரு காதல் கடிதம் தான், என்ன ஒன்னு கல்யாணமாகி குழந்தை குட்டிகளோட இருக்குற நம்ம கார்த்திக், அடுத்தவனோட பொண்டாட்டிக்கு  எழுதுறது தான் இங்க சிக்கலே, அவ வேற யாரும் இல்ல சின்ன வயசுல ரொம்ப தீவிரமா ஒருதலையா காதலிச்ச பொண்ணுதான்..அவ  இவன காதலித்தாளான்னு தெரிஞ்சிக்க முடியாமலேயே முடிந்துப் போன  காதல் அது.....

அவ மேல வச்சிருந்த புனிதமான  காதல சொல்ல ஒரு அருமையான வாய்ப்பு நம்ம கார்த்திக்குக்கு இப்ப கிடைச்சிருக்கு, இப்ப காதல சொல்லி ஒன்னும் நடக்க போறதில்லை, அவ அடுத்தவனோட மனைவின்னு  அவனுக்கும் நல்லாவே  தெரியும், இருந்தாலும் இத்தனை வருசமா,அவன் சுமந்துகிட்டு இருந்த காதல் சுமைய இறக்கி வைத்திட்டோம்கிற
திருப்பதி  அவனுக்கு That's All..... 

இந்த ஒருதலைக்காதல் அனுபவம் நம்மல்ல நிறையப் பேருக்கு இருக்கும், So நம்மளும் கார்த்திக் கூடவே போய்.....என்ன ஆகுதுன்னு பார்போம்,

 கொஞ்சம் அலுப்புப்  பார்காமக்  கடைசி வரைக்கும் படிச்சிடுங்க, ஒரு விஷயம் இருக்கு.....

அன்புள்ள சோபனா,

முதல் காதலும், முதல் முத்தமும், வாழ்நாளில்  மறக்கவே முடியாத விசயங்க அக்கான்னு  உணர்ச்சிவசப்பட்டு, அழுதுட்டியாமே, என் மனைவி  சொன்னா ....

நீயுமா, என்னை காதலிச்ச  ? ஒரே ஒரு கண் ஜாடையில கூட சொல்லி இருக்கலாமேயடி, அந்த அழகான, மறக்க முடியா நாட்களை நினைச்சி  நானும் எத்தனையோ முறை வருதப்பட்டுருக்கன்டி  சோபனா, நீ அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தாலும் , எனக்கு நீ எப்பவுமே  பார்வதியக்கா பொண்ணு தான், அதனால  "டீ" போட்டு எழுதுறத தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்....

1 .நான் 12 படிச்சிகிட்டு இருந்தேன், அப்ப நீ ரொம்ப அழகா இருப்ப தெரியுமா,ரெட்ட ஜட போட்டுக்கிட்டு, செக்க செவேல்னு, பார்வதி அக்கா கூட சாட்சாத் அந்த மகாலச்சுமியே வந்து எனக்கு பொறந்துருக்கான்னு அடிக்கடி, சொல்லும் , அந்த அழகுல மயங்கின எம்மனசுல காதல் ஜுரம் வந்து நெருப்பாய் கொதித்தது உனக்கு  தெரிஞ்சிருக்க ஞாயம் இல்ல தான் , ஏன்னா ஒனக்கு அப்ப 14 வயசுதான்,நீ பாட்டுக்கு ரொம்ப கூல எங்க வீட்டுக்கு வருவ,போவ....

2 . நீ என்ன எதார்த்தமா பார்த்தா கூட, எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா, நல்ல வெயில் காலத்துல, நம்ம தெப்ப குளத்துல குளிக்கும்  போது மேல இருக்க தண்ணி சூடவும், அதுக்கு கிழே கொஞ்சம் வெது வெதுப்பவும், அதுக்கு கிழே ஜில்லுன்னும் இருக்கும் தெரியுமா, அந்த மாதிரி ஒரு வித்யாசமான,கலவையான ஒரு  உணர்வு வரும்....

3 நீ என்னோட உணர்வ  புரிஞ்சிக்காம இருக்கத நினைச்சி,
 .என்னுள்ளே, உன்மீதான காதல் ஈர ஊற்றாய் கசிந்து சுரக்க,
 உன்மனமோ  ஏதுமறியா பாலையாய் வறண்டு கிடக்கிரதுன்னு...
 கவிதைகூட எழுதினேன், அந்த நோட்ட கூட இப்பவும் பத்தரமா வச்சிருக்கேன்......

4 .நீ தனியா வரும் போது மனச தைரிய படுத்திகிட்டு காதல சொல்ல வாய தொறப்பேன், பயத்துல வார்த்தையே வெளியே வராம வாய் முடிக்கும்....

5 . அதையும் மீறி சோபனா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு ஆரம்பிப்பேன், அந்தே நேரம் பார்த்து தான் எவனாச்சும் அந்த பக்கம் வருவான், அப்பறம் சொல்லுறேன்னு பேச்சை நிறுத்திட்டு அவனோட கிளம்பிருவேன்....

6 .அப்ப நீ வயசுக்கு வந்துட்ட , சில நேரம் எங்க வீட்டுல யாருமே இல்லாத நேரத்துல நீ வருவ, நானும்  இதுதான் லவ்வ சொல்ல சரியான  நேரம்னு நினைச்சி  நெருங்கி வருவேன், அத்த இல்லையான்னு கேட்டுட்டு Just Like நீ போய்கிட்டே இருப்ப.... என்னடா ஒரு 16 வயசு பொண்ணுக்கு இதகூட புரிஞ்சிக்க தெரியாதான்னு அப்ப வரும் பாரு எனக்கு கோவம்...

7 & 8 .இவ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறா, இனிமேலும் தயங்க கூடாது இன்னைக்கு எப்படியாச்சும், சொல்லியே தீரணும்னு முடிவுப்  பண்ணி , காலையிலேயே எந்திரிச்சி குளிச்சிட்டு ரொம்ப வேகமா உன்ன தேடிகிட்டு வருவேன், அப்பத்தான் நீ பய பக்தியோட கோவில் பிரகாரத்த அடிமேல் அடிவைத்து மெதுவா சுத்தி வருவ.....கோவில்ல வச்சி ஏதும் சொல்ல கூடாதுன்னு வாய மூடிகிட்டு, மனச அடக்கிகிட்டு  திரும்பிடுவேன்....

9 . சில நேரம் கணவர்  இல்லாமலே, இவ்வளவு வறுமையிலும்  உன்ன, இந்த அளவுக்கு, அடக்கமாகவும், தெய்வ பக்தியோடவும் வளர்த்த உங்க அம்மாவ நினச்சா பெருமையா இருக்கும்...நீ எனக்கு  கிடைத்தா என் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு கனவு கூட  காணுவேன்....

10 . உன்கிட்ட நேரடியா சொல்லத்தான் பயம், கைக் காலெல்லாம் நடுக்குதுன்னு யோசிச்சி, ரொம்ப ஈசியான ஒரு வழிய தேர்ந்தெடுத்தேன், சிம்பிளா, மனசுல இருக்க என் காதலையெல்லாம் கொட்டி ஒரு காதல் கடிதம் எழுதி சட்டை பக்கெட்டுல வச்சிக்கிட்டு, உன்ன பார்க்க வெளிய கிளம்புனேன்....அந்த நேரம் பார்த்துதான்.....?

அதுக்கு முன்னாடி கிழே இணைத்துள்ள Scan கப்பிய பார்த்துடுங்க....


நேத்து தண்ணியடிக்க, சைட் டிஷ்சா  வாங்குன கல்லைய இந்த பேப்பர்ல தான் மடிச்சி குடுத்தான், மப்பு ஏறுனதுக்கு அப்பறம் எதார்த்தமா இதுல Similar Or Opposites ங்குற படிச்சப்ப தோன்றின ஐடியாதான் இந்த காதல் கடிதம்,இதுல உள்ள வார்த்தைகள வச்சே ஒரு பதிவு எழுதலாமேன்னு முயற்சி பண்ணி இருக்கேன்
 கார்த்திக் எழுதின லெட்டர்ல Bold பண்ணியிருக்க வார்த்தையும், இந்த Scan காப்பியையும் மேச் பண்ணி பார்த்துக்கங்க, நல்லா இருந்தா சொல்லுங்க இன்னும் 10  பாய்ன்ட் பாக்கி இருக்கு அத அடுத்த பதிவுல எழுதுறேன்....நீங்க டிலே பண்ணிராதிங்க, ஏன்னா சோபான திங்கள் கிழமை ஊருக்கு கிளம்பிடுவா, அப்பறம் கார்த்திக் லெட்டர அவகிட்ட குடுக்க முடியாது.....

By.............தம்பி.......3 comments:

புலவன் புலிகேசி said...

//நேத்து தண்ணியடிக்க, சைட் டிஷ்சா வாங்குன கல்லைய இந்த பேப்பர்ல தான் மடிச்சி குடுத்தான், மப்பு ஏறுனதுக்கு அப்பறம் எதார்த்தமா இதுல Similar Or Opposites ங்குற படிச்சப்ப தோன்றின ஐடியாதான் இந்த காதல் கடிதம்,இதுல உள்ள வார்த்தைகள வச்சே ஒரு பதிவு எழுதலாமேன்னு முயற்சி பண்ணி இருக்கேன்//

இப்புடில்லாமா யோசிக்குரீங்க..?

தம்பி.... said...

ஐடியா வொர்க் அவுட் ஆகலையோ.....புலவா

sakthi said...

Realse soon thazthapatta ...... dont keep it in draft

Post a Comment