Feb 17, 2010

எழுதுவது எப்படி ? - எழுத்தாளர் சுஜாதா....

என்னடா சுஜாதா, சார் பேர சொல்லி இவன் அடிக்கடி ( அவரோட பாஷையிலேயே சொல்லனும்னா )  ஜல்லி அடிக்கிறானே, எழுதுற பதிவ போனி பன்னுரதுக்கான டெக்னிக்கா, அப்படின்னு நீங்க யோசிக்கிறது புரியிது.....

மன்னிச்சிருங்க, தமிழ்ல எழுத்துன்னு வந்துட்டாலே, எத்தனையே சிறந்த எழுத்தாளர்கள் இருந்தாலும் நம்ம தல தான் முன்னாடி வந்து நிக்குது அதுக்கு நான் என்ன செய்ய...( I Want & Wish to be Every Think Best in My Life )....

தலையோட முகத்த  பார்த்து ரொம்ப நாளாச்சி இல்ல, கொஞ்சம் பார்த்துக்கங்க...

நேற்று, நான் படிச்சி முடிச்ச பழைய புத்தகத்த எல்லாம் சேர்த்து வச்சிருந்த அட்டை பெட்டிய நோண்டிகிட்டு இருந்த போது, சுஜாதா சார் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு இருந்த " பார்வை 360 " ங்கிற ஒரு அருமையான புத்தகம் கண்ணுல பட்டது, அதுல போகிற போக்குல நம்ம சுஜாதா சார்,எப்படி ஒரு புது எழுத்தாளர் எழுதணும்,அதுக்கு என்னென்ன வழிமுறைகள பின்பற்றனும்கிற ரீதியில சில குறிப்புகள அவரோட அனுபவத்துலேர்ந்தே குடுத்திருந்தாரு, சரி நம்மளுக்கும் பதிவு எழுத மேட்டரு எதுவும் கிடைக்கலையே, இன்னைக்கு நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு எதுவும் கருத்து சொல்லாம  இருந்தா நைட்டு குவாட்டர் + கட்டிங் அடிச்சாலும் தூக்கம் வராதே அப்படிங்கிற கெட்ட எண்ணத்தில அத அப்படியே கொடுத்திருக்கிறேன், படிச்சி பாருங்க உங்களுக்கும் எழுத்தும் போது உதவியா இருக்கும்...அதுக்கு முன்னாடி உயிர்மை பதிப்பகத்துக்கு ஒரு நன்றிய சொல்லிருவோம்........அப்பறம் மானுஷ்ய புத்திரன் சார் எம்மேல Copy Rights சுக்காக கேச,கீச போட்டுருவாரு.....
நன்றி-சுஜாதா சார் & உயிர்மை பதிப்பகம்....
புத்தகத்தின் விலை-ரூ.40
கிடைக்கும் இடம்-உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை-600 018.Tel No:044-24993448,E-Mail.uyirmmai@gmail.com.

( பக்கம் 28  )
" இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நான்கு முறை போர் மூண்டிருக்கிறது.சுதந்திரம் வந்த உடனே முதல் முறை.1965-ல் இரண்டாவது முறை.1971-ல் மூன்றாம் முறை.போரின் விளைவாக பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து பங்களாதேஷ் உருவாயிற்று.இந்தப் போரைப் பின்னணியாக அமைத்து ' பதினாலு நாட்கள் ' என்ற தொடர்கதையை அந்த யுத்தம் நடந்த சூட்டில் எழுதினேன்.'எப்படி பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு டாக்காவில் நடந்த போரைப் பற்றி எழுதமுடியும் ?' என்று ஓர் எழுத்தாளர் கிண்டல்கூடச் செய்திருந்தார். ஓர் இந்திய விமானப் படை பைலட் கிழக்கு பாகிஸ்தானில் குண்டு போடச் சென்றபோது,விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் விழுகிறான்.இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் மாட்டிக்கொள்கிறான் என்று கதை போகிறது.இந்த கதை  செளரி அவர்களால் 'செளதா தின்' என்று இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்தது. இந்திய விமானப்படையில் எனது நண்பர் விங் கமாண்டர் ரங்கநாதன் உதவியுடன் டெக்னிக்கல் சமாசாரங்கள் பலவற்றை Close Air Space. தொடர்பான விஷயங்கள் எழுத முடிந்தது. கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல.அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம்.

தெரியாத புதிதான விசயங்களை எழுதும்போது,இந்த முறையை அமெரிக்க பெஸ்ட் செல்லர் எழுத்தாளரான ஆர்தர் ஹெய்லி முதலில் பயன்படுத்தினார்.அவருக்குப்பின் ராபின் குக், ஜான்  க்ரெஷம் போன்றவர்கள் வெற்றிகரமாக எழுதினார்கள்.இவர்கள் எல்லாம் வருஷக் கணக்கில் தகவல் சேகரித்து, கதையின் சூழலிலேயே வாசம் செய்து எழுத வல்லவர்கள். அந்த அளவுக்கு வசதியும் அவகாசமும் இல்லையெனினும் எழுத்தும் விஷயம் எதுவானாலும் அதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் எழுதுவது என்கிற முறையை அப்போதிலிருந்தே கடைப்பிடித்தது என் வெற்றிக்கு ஒரு முக்கியக்காரணம். கணேஷ் வசந்த் நாவல்களில் வரும் ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. சட்ட சம்பந்தமான விஷயங்கள் ஏறக்குறைய சரியாகவே இருக்கும். அதேபோல்,பெங்களூர் பின்னணியில் நான் எழுதிய ' கமிஷனருக்குக் கடிதம்' ஆஸ்பத்திரியை மையமாக வைத்து 'பேசும் பொம்மைகள்', ஆடிட்டரி ஹாலுசினேஷன் என்னும் உபாதையை வைத்து எழுதிய ஆ போன்றவைகளிலும் இந்தத் தகவல் சேகரிப்பு இருக்கும். ஒரு சாமியார் மேல் இளம்பெண் கேஸ் போடுவதாக எழுதிய 'மாயா' குறுநாவலுக்காக ஸர் ஜான் உட்ராபின் 'தந்த்ரா' புத்தகத்தில் ஹேவஜ்ர பூஜை பற்றி விவரமாகப் படித்து எழுதினேன். இம்மாதிரி நிஜமாகவே  ஒரு பிரபல யோகியின்மேல் ஒரு பெண் வழக்குத் தொடர்ந்ததாக ஒரு வக்கீல் அண்மையில் எனக்கு மெய்ல் அனுப்பியிருந்தார். பல விசயங்களை எழுத வேண்டியது முக்கியம். படித்துவிட்டு எழுதுங்கள்.இல்லையேல்,கண்ணாடியில் தன்னழகையே பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரே கதையைத் திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டிருப்பீர்கள்.

புதிய எழுத்தாளர்களுக்கு இந்த அறிவுரை பயன்தருவது.உங்கள் சூழலுக்கு வெளிப்பட்ட எதையும் எழுதுவதானால் அதைப் பற்றிப் படித்துவிடுங்கள்.அல்லது தெரிந்தவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

( பக்கம் 38 )

"அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை. எழுத்தில் எந்த அளவுக்கு அந்தரங்க விஷயங்கள் கலக்கவேண்டும்: எந்த விகிதத்தில் உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும் என்பது பற்றி கருத்துக்கள் வேறுபடுகின்றன. என்னைக் கேட்டால் முழு உண்மையை அப்படியே எழுதக்கூடாது. எப்படியும் நான் எழுதமாட்டேன். தின வாழ்கையில் உள்ள சம்பவங்கள் இலக்கிய அந்தஸ்து பெற,அவற்றில் ஒரு காலம் கடந்த உண்மை பொதிந்திருக்கவேண்டும்.இல்லையேல் அது சாதாரணச் சிறுவனின் நாட்குறிப்பு போல, காலை எழுந்தேன், பல் தேய்த்தேன், குப்பை பொறுக்கினேன் என்று அற்பமாக முடிந்துவிடும். முழுக்க முழுக்க கற்பனையாகவும் எழுத முடியாது. அப்படி எழுதினால் அது கதையல்ல fairy tale,fantasy. உண்மையும் கற்பனையும் கலக்க வேண்டும். இந்த கலக்கல், ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு கடையில் மட்டும் கிடைக்கும் நன்னாரி சர்பத் போல தனிப்பட்டது. இந்த விகிதாச்சாரம் ஆளுக்காள் மாறுபடுவதைக் கவனிக்க, கோபிகிருஷ்ணன்,தி.ஜானகிராமன்,ஆதவன் இம்மூவரின் கதைகளைப் படித்துப் பாருங்கள் " 

என்ன சுஜாதா சாரோட அறிவுறையப் படிச்சாச்சா, நல்லா எழுதுங்க,நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்....

கொஞ்சம் பெரிய பதிவாப் போச்சில்ல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இந்த ஜோக்க படிங்க.....சுட்டது தான்.....

At 18 a Lady is Like a Football, 22 Men Behind Her......
At 28 a Basket Ball, 10 Men Behind Her.......
At 38 a Golf Ball, 1 Man Behind Her......
At 48 a Table Tennis Ball, 1 Man Pushing Her to the Other......

By.............தம்பி................


5 comments:

மந்திரன் said...

கடைசியா சொன்னது நல்லா இருக்கு .. ரொம்ப நல்லா இருக்கு ..
அதுவும் சுஜாத்த சொன்னதுதானா ?

தம்பி.... said...

இல்ல, இல்ல அது ஒரு பலான பலான ப்ளோக்ல படிச்சது....

Vels said...

நல்லாருக்கு தம்பி உங்க பதிவு. என்னோட தளத்துக்கு வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி தம்பி. அப்டியே உங்களை பின் தொடர்ந்துக்கறேன்.

sakthi said...

Thmabi
Good !!I have seen many visitors here .Keep it up.And im little busy so not able to update my blog.

தம்பி.... said...

Thanks Sakthi....

Post a Comment