Feb 22, 2010

தாழ்த்தப் பட்டவனும்...தாழ்த்தப் பட போகிறவனும்....

உன்னை தாழ்த்தப் பட்டவன் என்று ஒதுக்குகிறார்களே சகோதரா சில மூடர்கள், அவர்களை விட நீ எந்த வகையில் தாழ்ந்து விட்டாய்.....உனக்கு மட்டும் இந்த அவப்பெயர் எப்படி வந்தது....என்ன காரணம்.....

நீ பிரம்மனின் காலடியில் இருந்து பிறந்தவனா ?...இருக்காது, பிறப்பால் எல்லோரையும் சமமாகத் தான் படைத்திருப்பான்  அந்த ஏக இறைவன்,  அப்படி ஏற்றத் தாழ்வோடு படைத்திருந்தால் அவன் இறைவனாகவே இருந்திருக்க முடியாது.....பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் சில கீழ் தரமான மனித இதயங்களின் செயலே ...
உயர்க் குலத்தினர் என்று கூறிக் கொள்கிறார்களே அவர்களின் பிரித்தாளும் சதி என்கிறாயா ? அது உண்மையே என்றே வைத்துக்கொண்டாலும்,எத்தனையோ 
சமூகத்தினர் இருக்க ஏன் உன்னை மட்டும் காலம்,காலமாக அடிமைப் படுத்தி வைத்தார்கள் ?

எல்லாவற்றிக்கும் காரணம் நீ,  நீ மட்டும்  தான், உன்மீது தான் தவறு, உன்னை சொல்லவதை விட, உன் மூதாதயர்களைத் தான் குற்றம் சாட்ட  வேண்டும்.ஏன் அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்கிறாயா ?

Survival of the Fittest, எனப்படும் ஜீவ,மரண தத்துவம் பற்றி கேள்விப் பட்டிருப்பாய்,
" எந்த ஒரு உயிரினம், சூழ்நிலையை எதிர்கொண்டு, சமாளித்து வாழக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வில்லையோ அது பின்தங்கி விடுகிறது அல்லது அழிந்து விடுகிறது " இப்போது சொல்....

எல்லோரையும் போல் சம பலமும், தகுதியும் இருந்தும், போட்டி போட்டு உழைத்து 
முன்னேற  தயங்கியது உன் மூதாதையரின்  குற்றமா இல்லையா ? கிடைத்ததே போதுமென்று நிறைவு கொண்டது அவர்கள் குற்றமா இல்லையா ? அடங்கி போனது அவர்கள் குற்றம், புதிதாய் முயற்சிக்க தயங்கியது அவர்கள் குற்றம், வாழ்க்கைத் தேடலில் எல்லா சமூகத்தாரும் வேகமாய் ஓடிகொண்டிருந்த போது, சம பலம்  இருந்தும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் குற்றம்,  பலி மட்டும் உன்மீது.......

நீயும் அவர்கள் செய்த அதே தவறைத் தான் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறாய், குலத் தொழிலெல்லாம் உன் அப்பனோடு போகட்டும், சலுகைகளுக்காக கெஞ்சிக்கொண்டிருக்காதே, வெளியே வா கோடிக்கணக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன...படிப்பும் பணமும் இல்லையே என்று தயங்குகிறாயா ? படிக்காத மேதைகளையும், புத்திசாலித்தனமே இல்லாமல் கோடிகளை குவித்தவர்களை நீ பார்த்ததிலையா....

உனக்கு இப்போது தேவை தீவிர முயற்சியும், புதுமை தேடலுமே, ஆரம்பத்தில் சில கஷ்ட்டங்களை நீ எதிர்கொண்டே ஆகவேண்டி இருக்கும்...அதையும் எதிக்கொள்ளும்  மான நிலையோடு வெளியே வா....

இந்த அவபெயரும்,அடிமைப்பட்டுகிடந்ததும்  உன்னோடு போகட்டும், நாளை வரும் உன் சந்ததிகளை  எல்லோருக்கும் சரிக்கு சமமானவர்களாய் வாழச் செய்யவேண்டியது உன் கடமை.....உன் பொறுப்பு...
இந்த கருத்து  எந்த சகோதரருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.... 
காலம் நாளை மாறலாம்...
காட்சி எல்லாம் தெளியலாம்..
சோகமென்ன தோழனே...
சூழ்ச்சி வெல்வாய் வீரனே..
எதிர்த்து நின்று போரிடு...
நீயும் வாள் எடு.....

சரி அது யாரு தாழ்த்தபட போகிறவர்கள் என்று யோசிக்கிறீர்களா ? ஏன் அது நீங்களாகவோ,நானாகவோ கூட இருக்கலாம்...

" ஏனோ தொடர் தோல்விகளால் நான் இருண்டு போயிருந்தாலும்,இன்னதென்று விவரித்துச் சொல்லமுடியாத ஓர் அபாரமான தன்னம்பிக்கை என்னிடமிருந்தது, நிச்சயம் எனக்கொரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உளமார நம்பினேன் " -தேவன் அரோரா -CEO ( GE )

இந்த நம்பிக்கையும், கனவும் இப்போது  இருக்கிற இளைஞர்களிடம் இல்லை என்று நினைக்கிறேன், இருக்கிற வேலையே போதும், இதில் உயர் பதவிகளை அடைந்தால் மட்டும் போதும் என்கின்ற சாதாரண மனநிலை தான் நிறைய பேர்களிடம் இருக்கிறது,அடுத்த கட்ட திட்டங்கள்  கூட இருப்பதில்லை....அடுத்தவர்களை சார்ந்திருப்பதை நினைத்து சிறிதளவு கூட வெட்கப்படுவதில்லை இவர்கள்....இதன் காரணமாக சமீபத்தைய Recession சமயத்தில என்ன ஆனது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்....

இருக்கிறத விட்டுட்டு, பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது, இதுவே போதும் என்று எவன் ஒருவன் தன்னிறைவு அடைந்துவிடுகிறானோ,அவன் தேங்கிய சாக்கடையாக போகிறான் என்பது மட்டும் நிச்சயம்....இது பழைய மொழி, இப்போதைய சூழ்நிலைக்கு  இதெல்லாம் ஒத்து வராது....

ஒரு விஷயம் தெரியுமா, எவனுக்கு  கனவுகளும்,ஆசைகளும் பிரம்மாண்டமானவையாக இருக்கிறதோ, அவனுடைய   தற்போதைய முயற்சிகளில்/வேலைகளில் எத்தகைய  இடையூறுகளும், கஷ்டங்களும் வந்தாலும் அவன் பாதிக்கப்பட மாட்டான்..அவனுக்கு மன அழுத்தமும் வராது, அதனால் அவன் உடல் நலமும் பாதிக்கப்படாது, அவன் மன அமைதி தேடி எந்த சாமியார்களையும் தேடி போகமாட்டான்...இதென்ன பெரிய விசய்ம்கிற மாதிரியான  ( Just Like That ) மனநிலையில் இருப்பான், காரணம் அவனுடைய கனவுகளுக்கு முன்னாள் இந்த விஷயங்கள் ஒரு பொருட்டாகவே இருக்காது.....

 நீங்கள்  எந்த துறையில் இருக்கிறீர்களோ, எந்த துறையை நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த துறையில் தற்போதைக்கு முன்னணியில் இருக்கும் சாதனையாளரை மிஞ்சிக்காட்ட வேண்டும் என்று Atleast கனவாவது காணுங்கள், கண்டிப்பாய் மாற்றம் வரும் உங்களுக்குள்  மாற்றம் வந்தால், ஏற்றம் வரும், ஏற்றம் வந்தால்,பணம் வரும், பணம் வந்தால் உங்கள் சந்ததியே ஏற்றம் பெரும் என்று தான் சொல்ல வருகிறேன்...பணம் தான் பாஸ் எல்லாமே....

வெறும் கனவு மட்டும் இருந்தால் வெற்றி வந்துவிடுமா, முயற்சி எடுங்க, ஒரு விசயத்துல, ஒரு மனிதன் ஜீனியஸ் ஆகுவதற்கு, அந்த விசயத்திற்காக 10000 மணி நேரம்  உழைத்தால் மட்டுமே  போதும் என்று ஒரு சமீபத்தைய ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கிறார்கள், அடைய விரும்புகிற கனவுக்காக குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ஒதுக்குங்க, வருசத்துக்கு 720 மணிநேரம் , 5 வருசத்தில கிட்டத்தட்ட பாதி கனவு நிறைவேறி இருக்கும்.....
என்னடா இவன் பணத்த பற்றியே பேசுகிறானே, குணத்தை  விடவா பணம் பெரியது என்று தத்துவம் பேசுகிறவர்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.....

இப்ப சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமா ஓடிய 2012 ங்கிற ஆங்கில திரைபடத்தை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள், அதில் உலகம் அழிவது போல் காட்டப்படும், ஒரு உதாரணத்துக்கு உண்மையிலேயே உலகம் அழிகிறது என்று வைத்துக்கொள்வோம், என்ன நடக்கும், அந்த படத்தில் யார்,யாரெல்லாம் உயிர் தப்பிப்பதாக காட்டாப்படும், முக்கிய தலைவர்களும்,பணம் படைத்தவர்களும் தான், அதே தான் மாதிரி தான் உண்மையிலும் நடக்கும்...நமக்கெல்லாம் டாட்டா ,பைபை காட்டிவிட்டு அவங்க போய்கிட்டே இருப்பாங்க......

இப்போதைக்கு  நடக்கிற FOS ங்கிற ஜீவ,மரண போராட்டத்தில், உங்க சந்ததியும் ஜெயித்து,நிலைத்து நிற்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பணம் வேணும் மக்கா,கோடி,கோடியா பணம் வேணும், அதற்க்கு  நீங்கள்  முயற்சிக்க விரும்பவில்லை என்றால் இந்த பாழாய் போன பணம் படைத்த உலகத்தாரால் நீங்களும் ,உங்கள் சந்ததியும் தாழ்த்தப் பட்டவர்களாக ஆக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.....

நம் இந்தியா வல்லரசு ஆகுவதற்க்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும்,இந்த பொன்னான சூழ்நிலையில், அதில் முக்கிய பங்கு வகிக்க போகின்ற, முக்கியஸ்தர்களில்,நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுங்கள்....

கடவுளோட விதி, செண்டிமெண்ட்,பணம் வந்தால் நிம்மதி இல்லாமல் போய்விடும்,பணத்த விட குணம் தான் பெரியது, இப்படியெல்லாம் வெட்டிப் பேச்சி, பேசிகிட்டு தோற்று போய்விடாதீர்கள்... இது தன்னம்பிக்கை கட்டுரை இல்லை, அதை எழுதும் தகுதியும் எனக்கு இன்னும் வரவில்லை, இதுதான் Practical ...மாமே,Practical...அப்பறம் உங்க இஷ்டம்....

" எல்லா சாதனைகளும் ஓர் ஆசையிலிருந்து தான் தொடங்குகிறது,இதை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்,பலவீனமான ஆசைகள்,பலவீனமான வாழ்க்கையையே கொடுக்கும்-சிறிய அளவிலான நெருப்பு, சிறிதளவு வெப்பத்தையே தரக்கூடியது போல " - நெப்போலியன் ஹில்.
By........தம்பி......


7 comments:

Unknown said...

ஹிஹி பணம் வேணும்னு மட்டும் சொன்னால் போதுமா .நம்ம ப்ளாக் வந்து பாருங்க. பணம் பண்ணுங்க

Unknown said...

உங்களுக்கு தெரிஞ்ச வழிகளையும் சொல்லிடுங்க தம்பி

தம்பி.... said...

சக்தி இதெல்லாம் அநியாயம், பப்ளிஸ் பண்ணுறதுக்கு முன்னாடியே கமெண்ட் எழுதுறது, உங்க ப்ளாக் அட்ரசையும் போடுங்க....பணம் சம்பாதிக்க விரும்புறவங்க உங்க ப்ளோக்குக்கு வருவாங்கல்ல

தம்பி.... said...

இன்னைக்கு டூட்டிக்கு போகலையா சக்தி....

Unknown said...

no pa

Unknown said...

I changed my blog as discussed earlier .now is it viewable now?

தம்பி.... said...

now its ok easy to access

Post a Comment