Feb 8, 2010

தெரியுமா....தெரியாதா ?

 பொதுவா சின்ன சின்ன விசயங்கள   கூட,தவறுகள  கூட  ஊதி, ஊதி பெரிய விசயமாக்குற ஊடகங்களோ,

தெரியாமலோ,அறியாமலோ  செய்து விட்ட  குற்றத்திற்கு கூட சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,குற்றம்,குற்றமே  என்கின்ற அடிப்படையில் தண்டனைகளை வகுத்து வைத்திருக்கிற அரசாங்கங்களோ ...

ஒரு சிறிய, ஏமாற்றத்தையோ, பொய்யையோ கூட தாங்கிக்கொள்ள முடியாமல் எகிறி குதிக்கிற நம்மை போன்ற பொது ஜனங்களோ....

 இது குற்றம்,இது தவறு, இது பொய்,இது ஏமாற்று வேளை என்று வெளிப்படையாக தெரிந்தும், இந்த உலகத்தில் உள்ள ஆறறிவு பெற்ற மக்களாகிய நாம், எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல்,மிக  எளிதாக எடுத்துக்கொண்ட,ஏற்று கொண்ட மிக,மிக அதி முக்கியமான  சில விசயங்களை, தெரியுமா....தெரியாதா ? என்கின்ற ரீதியில் நமக்கு நாமே கேள்வியாக கேட்டு பார்போம்.....

1 . ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு கடவுள்களையும்,வழிபட்டு முறைகளையும்,சட்ட திட்டங்களையும்   உருவாக்கி வைதிருகின்றோமே ,அந்தந்த மத கடவுள்கள்,அந்தந்த  மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் தான் படைத்தார,காப்பாற்றுகிறாரா? மாற்று மதத்தினரை அழித்து விடுகிறாரா ? அந்த சக்தி உள்ள கடவுள் நினைத்தால் நம் அனைவரையும் ஒரு நொடிப்பொழுதில் ஒரே மதத்தினராக மாற்றிவிட முடியாத ? இவை எல்லாம் உண்மை இல்லை என்று தெரிந்தும் -கடவுள் ஒருவனே, நம் தவறான நம்பிக்கைகளும், சிந்தனைகளும்  தான் சக மனிதர்களை  மத ரீதியாக பிரித்து வைத்திருகின்றது என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

2 . ஒரு சிறு எறும்பை கொள்வது கூட பாவம் என்று தெரிந்தபோதும் , வன்முறையின் பெயராலும்,போர்களின் பெயராலும் கோடி கணக்கான மக்களை கொன்று குவிப்பதை தற்காப்புக்காக என்றும், Survival of the Fittest என்றும் சப்பைக்கட்டு கட்டுவது மாபெரும் குற்றம் என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

3.  .அரசியல்வாதிகள், வன்முறையை நிகழ்த்தியும், பணத்தை இறைத்தும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருவது நமக்கு சேவை புரிய இல்லை , பணம் சம்பாதிக்க தான் என்று நமக்கு தெரியுமா தெரியாதா ?

4 . அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பள பணத்தை வைத்து மட்டும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகமுடியாது என்றும்,தனக்கென்று தனி தீவையே
விலைக்கு வாங்க முடியாதென்றும், அவை நாம் வரிப்பணத்திலிருந்து கொள்ளயடிக்கபட்டது தான் என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?

5 .   ரவுடிகளையும், குற்றவாளிகளையும், திருடர்களையும், கூலிப்படையினரையும் காவல் துறையினர் நினைத்தால் ஒரு நாளைக்குள், கைது செய்து நாட்டையே அமைதி பூங்காவாக மாற்ற முடியும் என்ற போதும், அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் தான் தங்கள் சுய நலத்திற்காக, இவர்களை வளர்த்து விடுகிறார்கள், சுதந்திரமாக நடமாட விடுகிறார்கள் என்று நமக்கு தெரியுமா தெரியாத ?

6 .  எல்லோரும் மனிதர்களே,அவர்களுக்கு அதிசயங்கள் நிகழ்த்தி காட்டும் சக்தி இல்லை என்று தெரிந்த போதும், சாமியார்கள் வாயிலிருந்து,லிங்கம் வரவழைப்பதும்,கையிலிருந்து திருநீறு,மோதிரம் வரவழைப்பதும் பொய்  என்று தெரிந்தும் ,உண்மையை நம்ப மறுக்கும் மூடர்களுக்கு சாமியார்கள் செய்வது சித்து வேலை தான் என்று தெரியுமா தெரியாதா ?

7 . அனைத்து  உயிர்களை  படைத்தவர் இறைவன் தான் என்று நன்கு தெரிந்த போதும், கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு மாற்று மதத்தினரை கொள்வதை கடவுள் விரும்புவது இல்லை என்பது தீவிரவாதிகளுக்கு தெரியுமா தெரியாதா ?

8 . சட்டங்கள் எல்லாம், மக்களுக்குத்தான், அவை ஆளுபவர்களை கட்டுப்படுத்துவதில்லை...  என்ற உண்மை தெரிந்த போதும், சட்டங்கள் அனைவருக்கும் பொது என்று நம்பிக்கொண்டு இருக்கும் நம்முடைய அறியாமை நமக்கு தெரியுமா தெரியாதா ?

9 . ஆயிரம் ருபாய் வரி ஏய்ப்பு செய்தவனை, தண்டிக்கும் அரசுக்கு, சுவிஸ் வங்கியில் பதிக்கி வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி ருபாய் வரி ஏய்ப்பு செய்து செய்து தான் பதுக்கி வைக்கப்பட்டு இருகின்றது என்பது தெரியுமா தெரியாதா ?

இந்த மாதிரி,  இது குற்றம்,இது தவறு, இது பொய்,இது ஏமாற்று வேளை என்று வெளிப்படையாக தெரிந்தும்,சட்டத்தாலும்,ஊடகங்களாலும், நம்மாலும்  சகஜமாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான விஷயங்கள் பாக்கி இருக்கு.... எல்லாவற்றையும் இங்கே பட்டியல் போட முடியாது.....உங்களை நீங்களே கேட்டுக்கங்க......

By.................தம்பி.........

7 comments:

புலவன் புலிகேசி said...

//ந்த மாதிரி, இது குற்றம்,இது தவறு, இது பொய்,இது ஏமாற்று வேளை என்று வெளிப்படையாக தெரிந்தும்,சட்டத்தாலும்,ஊடகங்களாலும், நம்மாலும் சகஜமாக எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான விஷயங்கள் பாக்கி இருக்கு....//

நிஜம்தான்..நமக்கு சட்டம் தெரியாது ஆனா அதுல இருக்குற ஓட்டைதான் தெரியும்

அரசூரான் said...

கைபுள்ள... இப்படியே கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்கன்னா ஆட்டோ வரும்... அது தெரியுமா தெரியாதா?

Kaipulla said...

உண்மைதான் புலவா...

இத இன்னும் Aggressive வா எழுதி இருக்கலாம்,இதுல விட்டு போன நெறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு.....அத நீங்க எழுதுங்க நெறைய பேர போய் சேரும்.....

Kaipulla said...

அதான் காப்பாத்துறதுக்கு நீங்கெல்லாம் இருக்கீங்களே நண்பா அரசூரான்...

Kaipulla said...

அப்புடியும் காப்பாத்திக்க முடியலையா....இருக்கவே இருக்காரு நண்பர் சக்தி.....குடுக்குறதுல பாதிய அவரு வாங்கிப்பாரு.....என்ன சக்தி....
அவரு தான் என்னை, அடுத்தது என்ன,அடுத்தது என்னன்னு கேட்டு உசுப்பி விடுறாரு...

Virutcham said...

ம்ம்ம் ...
அரசியல் உண்மைகள் புரிந்தவர்கள் ஒட்டு போட வருவதில்லை . வந்தாலும் ஒட்டு இருப்பதில்லை.
மதவாதிகளுக்கு அவரவர்கள் மதத்தை மட்டும் பின்பற்றுவதில் ஒரு பெரிய சுய லாபம் இருக்கிறது. அதனால் தன் கடவுள் பிற கடவுள் என்று பிரித்தாக வேண்டி இருக்கிறது


http://www.virutcham.com

Kaipulla said...

தேர்தலில் நிக்கிறவன், சேவை செய்ய போவதில்லை, கொள்ளை தான் அடிக்க போகிறான் என்று தெரிந்தும் ஓட்டு போடுகிறேம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம், வேற வழியும் இல்லையே, எல்லாமே மொள்ளமாரியா தான் இருக்கானுங்க,

Post a Comment