Feb 6, 2010

The Boss.....?

Boss இந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் இருக்கு தெரியுமா.....

பேர கேட்டாலே சும்மா அதுருதுல்ல....அப்டீங்கிற  மாதிரி இந்த வார்த்தைய கேட்ட்கும் போதே,ஒரு வைப்ரேசன உணரமுடியும்....

ஒரு மல்டி நேசனல் கம்பெனியோட பாஸ், வருசத்துல எப்பயாவது ஒருநாள் வர்றாருன்னு தெரிஞ்சாலே, அந்த அலுவலகமே அவர் வந்துட்டு போற வரைக்கும் உண்மைலேயே அதிரும், அந்த அலுவலகமே துடைத்து வச்சது மாதிரி பளபளக்கும், ஸ்டாப்ச பத்தி சொல்லவே வேணாம்,  குளிக்காம ஆபீஸ் வர்ற ஆளு கூட ( எங்க ஆபிஸ்ல ஒருத்தன் இருக்கான் ), நல்லா முடி, நகமெல்லாம் வெட்டி, இருக்கதுலையே நல்ல ட்ரெஸ்சா போட்டுக்கிட்டு ஜம்முன்னு,வழக்கமா லேட்டா வர்ற ஆளுகூட ஒருமணி நேரம் முன்னாடியே வந்துருவான்....பாஸுங்கிற வார்த்தைக்கு அந்த அளவு மரியாத இருக்கு....

அதுக்காக நாய்,நரி,நத்தை எல்லாத்தையும் பாஸ்ன்னு சொல்லமுடியுமா,கண்டிப்பா நான் சொல்லவேமாட்டேன்,இதுக்கு பேர் கர்வமோ,ஆணவமோ
இல்ல,என்னோட அகராதியில பாஸ்ன்னா,சாதிட்சவன்னு அர்த்தம்....தற்போதைய உலகம்  நிர்ணயிட்சி இருக்கிற,நமக்கு கணவாய் மட்டும், இருக்கின்ற சாதனை எல்லைகளை கடந்தவர்கள்ன்னு அர்த்தம்.....அது ஒரு வார்த்தை தானே, இதுக்கு ஏன் இவ்வளவு அலட்டிக்கனும்னு நினைக்கிறவங்க, தயவு செய்து இத்தோட கழண்டுக்கலாம்......

இதுக்கு உதாரணம் சொல்லனும்ன்னா, நான் மனசார Boss ன்னு ஏத்துகிட்ட( ஆமாம் இவரு பெரிய பு _ _ கி ன்னு நீங்க மனசுக்குள்ள திட்டுறது கேக்குது )  மூணு பேர சொல்லலாம்.....

1. Mr.பில் கேட்ஸ்..
2. Mr.சச்சின் டெண்டுல்கர்...
3. Mr.சுஜாதா சார்....

இப்ப சுஜாதா சாரா எடுத்துக்கங்க, நம்ம தமிழ் எழுத்துலகின் எல்லைகளை அனாயசமா கடந்தவர், இத யாராவது மறுக்க முடியுமா ? அவர் கற்பனை கதைகள மட்டுமா எழுதினார், அவருக்கு இலக்கியம்,அறிவியல்,மொழி, வரலாறு, அரசியல்,பத்திரிக்கை  இது மாதிரியான எல்லா விஷயங்கள்ளையும் அரைகுறை இல்லாத முழு அறிவும், இன்னும் சொல்ல போனா முழு அனுபவமும் இருந்தது, அதனாலதான் அவர் எழுதிய விசயங்கள மறுப்பே சொல்ல முடியாம ஏத்துக்க முடிந்தது...வெறும் கற்பனையையும், எனக்கு தெரிஞ்ச கொஞ்ச அறிவையும் வச்சிகிட்டு குவாண்டம் தியரிய பத்தி எழுதினா நீங்க என்ன அடிக்க வரமாட்டிங்க...
இப்ப இருக்கிற வளரும்  எழுத்தாளர்களுக்கும்   அவர் தானே  ரோல் மாடல், அவர மாதிரி தானே வரணும்னு ஆசை படுறோம், இந்த ரோல் மாடல் ங்கிற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் தான் Boss...

இப்ப சொல்லுங்க யார Boss ன்னு சொல்லாம், சுஜாத்தா சாராயா, இல்ல ஆள வச்சி,குரூப் சேர்த்துகிட்டு  ஹிட் கவுண்டரரோட எண்ணிக்கைய கூட்டி காட்டி  அதையே ஒரு பதிவா போடுற நம்ம பிரபல பதிவர்கலையா ?

 எப்படி , நெப்போலியன் குவாட்டர் அடிக்கிறவன எல்லாம், நெப்போலியன் தி கிரேட்ன்னு சொல்ல கூடாதோ அதே வித்யாசம் தான் Boss க்கும் மத்தவங்களுக்கும் .....( அலெக்ஸ்சாண்டர தான் தி கிரேட்ன்னு சொல்லுவாங்க அவர் பேர்ல சரக்கு ஒன்னும் அகப்படல ) எந்த திறமையும் இல்லாத,அரை  வேக்காடு,காட்டி கொடுத்தோ,கூட்டி கொடுத்தோ  
 பதவிக்கு வந்தவன எல்லாம் மேலதிகாரியா இருகாங்கன்கிற ஒரே காரணத்துக்காக
பாஸ்ங்கிற கம்பீரமான வார்த்தைய பயன் படுத்தி அந்த வார்த்தையே அசிங்க படுத்துறாங்க ,ப்ரைவேட் கம்பெனிகல்ல மட்டும் தான் இந்த கூத்து நடக்குது...ஏன் அப்படி, ஒன்னு இவங்க எந்த இலக்குகளும்,கனவுகளும்  இல்லாத ஒரு சாதாரண மனிதனா, வாழ்ந்தோம்-இறந்தோம்னு போற டைப்பா இருக்கணும், இல்ல இவங்களோட திறமை , சுய மரியாதை, எல்லாத்தையும் மறந்துட்டு, சம்மந்த பட்டவங்க  காது பட இந்த மாதிரி எல்லாம் துதி பாடுனாதான்,சம்பளமும்,பதவியும் ஏறும்கிற கேவலமான எதிர் பார்ப்பு உள்ளவங்களா இருக்கணும் ,இவங்கள விடுங்க -இவங்களுக்கும் அரசியல் ஆதாயத்துக்காக அம்மா கால்ல விழுற கேவலமான அரசியல்வாதிங்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கு சொல்லுங்க....
நீங்க எந்த கவர்ன்மென்ட் அலுவலகத்துலயாட்சும் இந்த வார்த்தைய, அட்லீஸ்ட் ஒரு கடைநிலை ஊழியராவது உபயோகிச்சி கேட்டுருக்கின்களா ? வாய்ப்பே இல்ல...ஏன்னா அங்க சம்பளத்துல இருந்து,பதவி உயர்வு வரை ஒரு ஆர்டரா தான் ஏறும், அப்படி கிடைக்காட்டியும் நம்ம நீதி கேட்டு கோர்ட் வரைக்கும் போகமுடியும்....யாரையும் காக்க புடிக்கனும்னு அவசியம் இல்ல...

 சம்பளம் குடுக்குரதனால மட்டும் ஒரு நிறுவனத்தோட   முதலாளிய Boss ன்னு சொல்லலாமா, கூடாது  ஏன்னா அவர் நம்முடைய   உழைப்ப எடுத்துக்கிட்டு தான்  ஊதியம் தர்றார்... Just இது ஒரு பண்ட மற்று That's all....அவர CEO ன்னு சொல்லுங்க, MD/Proprietor இந்த மாதிரி ஆயிரம் வார்த்தை இருக்கு அவர குறிப்பிட....

சம்பளம் தர்ற முதலாளிக்கே இந்த கதின்னா, உங்க மேலதிகாரிய நீங்க Boss ன்னு கூப்பிடலாமா? இந்த நிமிஷம் அவர் எனக்கு   மேலதிகாரி, நாளைக்கே இந்த  வேலைய விட்டுடலாம்ன்னு நான் முடிவு எடுதிட்டாலோ, அதே மாதிரி  இந்த கம்பெனிய விட்டுட்டு அவர் வேற கம்பெனியில சேரனும்ன்னு முடிவு பண்ணிட்டாலோ, அவருக்கு என்மீதான  அதிகாரம் "ஜீரோ" -இப்ப சொல்லுங்க ஒருத்தருக்கு அதிகாரம் இருக்கதால மட்டும்  அவருக்கு Boss ங்கிற அங்கீகாரம் குடுக்க முடியுமா, அவர் ஒரு சக ஊழியர், அவர குறிப்பிட GM,RM, FM,Team Leder,Department Head இந்த மாதிரி பல வார்த்தைகள் இருக்கு அத மட்டும் உபயோக படுத்துங்க.....

ஒரு உதாரணம் சொல்லுறேன், எனக்கு தெரிந்த ஒரு மல்டி நேசனல் கம்பெனியோட, Country Head அவர்,அவர் ஒரு சிங்கம் மாதிரி, வந்தாலே ஆபீஸ்ல எல்லாம் நடுங்குவாங்க, அதிகாரம் தூள் பறக்கும், சின்ன சின்ன தப்புக்கெல்லாம்  வரைமுறை இல்லாம திட்டுவாரு...ஒரு நாள் அவருக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து படுத்துட்டாரு, என்னாச்சி அந்த கம்பெனியே இனிமேல் அவர் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு முடிவு பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டு...
இப்ப அவரோட Boss ங்குற பதவி என்னாச்சி ?

 உங்க மேலதிகாரியோட திறமைக்கும், பதவிக்கும் குடுக்க வேண்டிய ஞாயமான மரியாதைய குடுங்க.....அவங்களோட பதவி பேர மட்டும் சொல்லி குறிப்பிடுங்க, எல்லாரையும் Boss ன்னு சொல்லி அந்த உயர்ந்த அர்த்தம் உடைய வார்த்தையின் மதிப்ப கெடுக்காதிங்க....

உங்களோட பதவியையும்,சம்பளத்தையும் நிர்ணயிக்கிரவங்க உங்க Boss இல்ல....

உங்களோட கனவுகளையும், இலட்சியத்தையும் நிர்ணயிக்கிரவங்க தான் உண்மையான Boss....

உங்கள் எண்ணங்களும்,கனவுகளும்,செயல்களும்,வார்த்தைகளும் உயர்வாக
இருந்தால் , உங்கள் வாழ்க்கையும் உயர்வாகவே அமையும்.......

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.....

By...........தம்பி......6 comments:

sakthi said...

இத வச்சிதான் சிவாஜி தி பாஸ் எடுதாங்கலா?
எனக்கு தெரிஞ்சதெல்லாம் மொட்டை பாஸ்.( அவரும் அதுல மொட்டை அடிச்சிட்டு வருவாரு.அதனாலதான் தி பாஸ் அப்டின்னு வச்சாங்கநு நெனச்சேன்)

gulf-tamilan said...

இதனால் தெரிவது நீங்க உங்க பாஸ் மேல் ரொம்ப கடுப்பா இருக்கீங்க!!! :))))

புலவன் புலிகேசி said...

:)

Kaipulla said...

சக்தி ஒங்களுக்கு ஒன்னுமே தெரியாது பாவம்....ஏன் இப்புடி அப்பாவியா இருக்கீங்க...
சாரி சக்தி ஒங்க நம்பர, என்னோட மொபைல்ல சேவ் பண்ண மறந்துட்டு போய்ட்டேன் அதன் சனி கிழமை கால் பண்ண முடியல...

Kaipulla said...

Gulf தமிழா உங்க நாட்டுக்கு பக்கத்துல்ல,துபைல தான் எங்க CEO இருக்காரு போட்டு குடுத்துடாதிங்க

Kaipulla said...

புலவரே இந்த சிம்பளுக்கு அர்த்தம் என்ன, புரியல

Post a Comment