Feb 15, 2010

நீங்க கடவுளை பார்க்க வேண்டுமா ?

நீங்க,   கடவுளை பார்க்க வேண்டுமா ? its Not a Joke, ஆன்மீகமும் இல்லை......நாத்தீகமும் இல்லை....இது உண்மைலேயே வேற, வேற,வேற....

அதுக்கு முன்னாடி இந்த வீடியோவ கண்டிப்பா பார்த்திடுங்க......நீ யாருப்பா ? நான் ஒரு ஹிந்து மத தலைவர் + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் ஒரு  இஸ்லாமியன் மத தலைவர்  + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் ஒரு  கிருஸ்துவன்  மத தலைவர் + அரசியல்வாதி ஐயா...
நீ யாருப்பா ? நான் புத்த மத தலைவர் + அரசியல்வாதி  ஐயா...

நீ யாருப்பா ? நான் ஒரு பகுத்தறிவாளன்  ...நான் இவங்கள மாதிரி கேவலமான அரசியல் வாதி இல்ல ஐயா, நான் ஒரு கடவுள் மறுப்பு கொள்கையுடைய கழகத்தின் தொண்டன், ஆனா தேர்தல் நேரத்துல எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு இருக்கோ,  அந்த கட்சிக்கு ஆதரவு மட்டும் அளிப்போம் அவ்வளவு தான், எங்க பொழப்பும் ஓடனும்ல ஐயா......

ஏன் நீங்கெல்லாம்   கூட்டமா இங்கே வந்துருக்கிங்க ?

( இவர மக்களை நேரடியா சந்திக்க விட்ட, உண்மையெல்லாம் சொல்லி தங்களோட பொழப்புக்கு ஆப்பு வச்சிருவாருன்னு பயந்து,எல்லா மத அரசியல் தலைகளும் கூடிப்பேசி, இவர்கிட்ட எடக்கு,மடக்கா எதையாவது பேசி, விரட்டிடனும்னு  முடிவு பண்ணிக்கிறாங்க )
பகுத்தறிவாதி - அட லூசு பயலே நீ தானடா இல்லாத கடவுளை, பார்கனுமான்னு கேட்ட......அதான் வந்துருக்கோம்,இருக்க சாமியாருங்க பத்தாதுன்னு நீ வேற கிளம்பி இருக்கியா ? ஆளு ஒரு மாதிரி வித்யாசமா இருக்கியே மொதல்ல நீ  யாருன்னு சொல்லு ( ஆகா தமிழிஷ்,தமிழ் மணத்துல தான் கடவுள திட்டி, பக்கத்துக்கு மூணு பதிவு எழுதி உயிர வாங்குரானுங்கன்னா,இங்கயும் வந்து இவனுங்க வேலைய காட்ட ஆரம்பிட்சிட்டான்களே, )

கடவுள நீங்க பார்க்கணும்னா ?

ஹிந்து.அ.வா  - நாங்க பார்க்கணும்னா, என்ன ஒத்த கால்ல நின்னு ஆயிரம் வருஷம் தவம் பண்ண சொல்லுறிங்களா  ? அதெல்லாம் எங்க முன்னோர்கள் செஞ்சி பார்த்துட்டாங்க...
இல்ல சமாதி நிலைய அடையனுமா ? நாங்க அதையும் முயற்சி செஞ்சி பார்த்துட்டோம்...
இல்ல எங்கள சாக சொல்லுறிங்களா ?

நீ எந்த மதத்து காரன்டா, அப்படின்னா எங்க மதம் கடவுளை அடைய/உணர சொன்ன வழிகள் எல்லாம் பொய்யா ?
இப்ப நீ மட்டும்   கடவுள காட்டல, அப்பறம் இருக்குடி ஒனக்கு பூஜை.....

( ஆகா சூடாகுரானுங்க )No...No...No....அதெல்லாம் தேவை இல்லை மகனே.....நான் உங்க மதத்த குறை சொல்லவும் நான் வரவில்லை....

 இஸ்லாமிய அ.வா  -என்னா அதெல்லாம் தேவ இல்ல, அப்பறம் என்ன தான்யா செய்ய சொல்லுற, நாங்க அஞ்சி வேளை தொழுகிறோம், ஜக்காத் குடுக்குறோம், ஹஜ்ஜிக்கு போறோம், இதெல்லாம் செய்யுற எங்களாலேயே அவன பார்க்க  முடியல...உருவம் இல்லாத அவனை நீ பார்க்க முடியும்ன்னு சொன்னதுக்கே உன்ன பலி போட்டுருக்கணும்.........நீ ஒரு காபிர் மரியாதையா இங்கே இருந்து ஓடிடு ( ஆகா இவனுங்களும் சூடாகுரானுங்க )

என்ன கொஞ்சம் பேச உடுங்க நண்பர்களே.....

கிருஸ்துவ அ.வா  - நீங்க  ஒன்னும் பேச வேணாம், நாங்களும், அழுது தொழுது, கடுவுள்கிட்ட மன்றாடி மன்னிப்பெல்லாம் கேட்டு பார்த்தும்  எங்கள் தேவனை பார்க்க முடியல,
நீங்க எப்படி அவர காட்ட முடியும் சகோதரரே, ( அப்பாட இவராச்சும் கொஞ்சம் சாந்தமா பேசுறாரே )
இன்னும் கொஞ்ச நாளில் அவரே இந்த பூமியில் தோன்றி எங்களை ரட்சிக்க போகிறேன்னு சொல்லிருக்காரு, அதுக்கு முன்னாடி எங்கள் தேவனை காட்டுகிறேன் என்று சொல்லி நீ குழப்பம் செய்ய வந்திருக்கிறாயா சாத்தானே.....இறுடி மகனே , இந்த விசயத்த எங்க மேலிடத்துல சொல்லி உன்ன நசுக்க சொல்லுறேன் ( ஆகா இதுக்கு அவனுங்களே தேவலை போல, வெட்டுவோம், குத்துவோம்னு தான் சொன்னாங்க சாந்தமா பேசுறாருன்னு நெனைச்சா இவரு நம்மள இன்டெர் நேசனல் லெவல் பிரச்சனையில சிக்க வட்சிருவாரு போல )

புத்திஸ்ட் அ.வா - உலக ஆசைகளை துறந்து, ஒரு துறவி மாதிரி வாழுகிற எங்களால கூட பார்க்க முடியாதததையா நீ காட்ட போறன்னு இவரும் எகிறி குதிக்க....

( உண்மைலேயே  கடவுளை பார்க்க வழி சொல்ல வந்த கடவுளால் அனுப்பப்பட்ட , கேலக்சியின் ( Galaxy )36 வது நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த  உண்மையான ஞானி, இவனுங்க எதை சொன்னாலும் கேட்கிற மான நிலையில இல்ல, இவனுங்களுக்கு, அவங்கவங்க  மதம் தான் முக்கியம், இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நம்மள கொத்து பரோட்டா  போட்டுடுவானுங்கன்னு பயந்து,கையில வைத்திருந்த ரெண்டு புகைபடத்த தோள்ல மாட்டியிருந்த பை உள்ளே அவசர,அவசரமா சொருகிகிட்டு 
 எஸ்கேப் ஆய்ட்டாரு )

இந்த சமயத்துல இன்னொரு குரல் கேக்குது  ...."   கடவுளை நீங்க பார்க்கணுமா " வாங்க நான் காட்டுகிறேன், அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒரு வித்யாசமான மனிதர் வர்றார்...-அவர் கையிலயும்  ரெண்டு புகைபடத்த மறைத்து வைத்திருக்கிறார் ,  இவர் கேலக்சிகளெல்லாம் அடங்கி இருக்கிற பால் வெளியின்              ( Milky Way ) 9999 ஆம் கேலக்சியில இருந்து வர்றார்......இவரையும் கடவுள் தான் அனுப்பி வைத்திருக்கிறார் .....

ஏற்கனவே கொலை வெறியோட இருக்குற நம்ம மதவாதிகள் , இவரையும்  பேசவே விடகூடாது,பேச விட்ட இத்தனை வருஷம் நாம் கட்டி காத்த நமது மத கொள்கைகள் பொய் என்ற உண்மை மக்களுக்கு வெளி பட்டுவிடும் என்று   பயந்து, அவர் கொஞ்சம் வித்தியாசமா தோற்றத்தில் இருந்ததால, அவர
அடிக்கபோய் சாபம், கீபம் விட்டுடுவாரோன்னு பயம் வந்து ,அவர மறைமுகமா மிரட்ட முடிவு பண்ணுறாங்க....

அந்த ஞானி பேச ஆரம்பிக்கிறார்....

நீங்கள்   கடவுளை பார்க்க வேண்டுமா ?

பகுத்தறிவாதி -நிறுத்து நீ  ஒரு பொய்யன், இவன நம்பாதிங்க....கடவுள் என்ற ஒருவரே இல்ல அப்படின்னு எங்க பெரிய ஐயாவும், சின்ன ஐயாவும் சொல்லிருக்காங்க,இருக்க மதங்கள் பத்தாதுன்னு நீவேற புதுசா ஒரு மதத்த ஆரம்பிக்கிற  திட்டத்தோட வந்துருக்கியான்னு ஆரம்பிச்சி வைக்கிறார்....

ஹிந்து அ.வா - இங்க பாருங்க, எங்க கடவுளுக்கு கோயில் கட்டுவதற்காக, ஒரு மாற்று மதத்தினரின் வழிபட்டு தளத்தையே இடிச்சி, பெரிய கலவரத்தையே நடத்தி அப்பாவி மக்களை கொன்று....அந்த இடத்துல மறுபடியும் அவருக்கு கோவில் கட்டாம உட மாட்டோம்னு உறுதியா இருக்க எங்க புனிதமான பக்திக்கு செவி சாய்த்து  எங்களுக்கே  காட்சி தராத எங்க கடவுளையா, நீங்க காட்ட போறீங்க, இப்படி பொய் சொல்லுறத நிறுத்திட்டு மரியாதையா ஓடிடுங்க.....அவ்வளவு  தான் சொல்லுவோம்...கேக்கல மும்பைல இருக்க எங்க ஆளுகிட்ட சொல்லி நீங்க வெளியில கூட நடமாட முடியாத அளவுக்கு பண்ணிருவோம்......

இஸ்லாமிய அ.வா  - எங்கள் ஏக இறைவனுக்காக, ஜிகாத் ங்கிற   பெயரால் அப்பாவி உலக மக்களை கூடுமானவரை கொன்று குவிக்கிற புனித பணியை செய்து வருகிற எங்களுக்கே  காட்சி குடுக்காத கடவுளை நீங்க பார்க்க வழி சொல்லுகிறேன்னு நீங்கள் சொல்வதை  நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம், இதை மீறினால் உங்க மேல "பத்வா" விதிப்போம்,அப்பறம் உங்க இஷ்டம்......  

கிருஸ்துவ அ.வா -  நாங்க அவங்கள மாதிரியெல்லாம் இல்லைங்க,நாங்க ஏழைகளுக்கு  உதவி செய்கிறோம், படிக்க விரும்புகிறவர்களுக்கு  கல்வி கொடுக்கிறோம், அவங்க அசந்தா மட்டும் எங்க மதத்துல சேர்த்துக்குவோம், எங்க தேவனுக்காக பிரபல பதிவர்கள் மாதிரி கூட்டம் சேர்க்கிறோம், அவருக்கு கூட்டம் சேர்க்கிறதுக்காக நாங்க எதை வேணும்னாலும் செய்வோம், இந்த மகத்தான எங்கள் சேவையை மதித்து எங்களுக்கு மட்டும் மீட்சி அளிக்க,எங்கள் தேவன் வரபோகிறார், எங்கள் மதத்தில் சேராத மற்றவர்களுக்கு இந்த சலுகை இல்லைங்க....அதனால நீங்களும் எங்க மதத்துல சேர்ந்துடுங்க நம்ம எல்லாம் சேர்ந்து மத்தவங்கள மூளை சலவை செய்யலாம்.....

புத்திஸ்ட்  அ.வா - அன்பரே நாங்க அமைதியானவங்கன்னு தப்பா  நினைச்சிராதிங்க இலங்கைல நாங்க செய்த அட்டுளியத்த பத்தி ஈழ தமிழர்கள் கிட்ட கேட்டு பார்திருந்திங்கன்ன, இங்க வருவதுக்கே யோசிட்சிருபீங்க.....மரியாதையா எடத்த காலி பண்ணிருங்க அவ்வளவு தான் சொல்லுவோம்,

இப்படி ஆளாளுக்கு அந்த ஞாநிய மிரட்ட, துண்ட காணோம், துணிய காணோமுன்னு ஓடி போய், கடவுள்கிட்ட ......தல உன்னோட பேர சொல்லிக்கிட்டு அலைகிற இந்த மதவாதிகள் இருக்கிறவரை, அப்பாவி மக்களை  நீனே நேர்ல போனாலும் திருத்த முடியாது தலன்னு  முறை இட்டாரு

 நான் எல்லாருக்குமே பொதுவானவன்னு  புரிஞ்சிக்காம, என்னோட பேர சொல்லியே அடிச்சிகிட்டு சாகுரானுங்கலேன்னு பரிதாப பாட்டு, என்னை பற்றிய  உண்மைய சொல்ல சொல்லி, நான் அனுப்புன தூதர்களையே மிரட்டி அனுப்பின மனிதர்களை   நினைத்து கடவுள்  தலைல அடுச்சிகிட்டு,எக்கேடு கெட்டோ போங்கடான்னு சொல்லிட்டு வேற வேலைய பார்க்க போயிட்டாரு.......


சரி அந்த கடவுளால் அனுப்ப பட்ட  இரண்டு ஞானிகளும் கடவுளை பார்க்க என்னத்தான் செய்யணும்ன்னு சொல்ல வந்தாங்க, அவங்க கையில மறைத்து வைத்திருந்த அந்த ரெண்டு புகைப்படம் தான் என்ன .....

கிழே பாருங்க.....
இப்படி குறிகிய சிந்தனையோட, கடவுள்  படைத்த ஒரு சின்ன கிரகமான ( பூமி )உலகத்தை பற்றிய   சிந்தனைகளை  மட்டும் மனதில் வைத்து  கொண்டு , குறுகிய மனதோடு,  கடவுளை பார்க்க வேண்டி  நீ சுற்றும், முற்றும் நோக்கினால், உங்கள் கண்களுக்கு கடவுள் தெரிய மாட்டார், இந்த பதிவ எழுதுன தம்பி மற்றும் பிரபல பதிவர்களோட இத்து போன மூஞ்சி மட்டும் தான் தெரியும்......So....
உங்கள் சிந்தனைகளையும், மன ஓட்டத்தையும் விசாலமாக்கி,
உங்கள் எண்ணங்களை இந்த நிகழ் உலக நடப்புகளிலிருந்து விலக்கி வைத்துவிட்டு, உங்கள் மனக்கண்ணால் கடவுள் படைத்த முழு அண்ட வெளியை ஒரே ஒரு நிமிடம் பாருங்க...( உங்கள் மனம் அண்டை வெளிக்கும் வெளியே இருக்கட்டும், மேஜை மேல் இருக்கும் பந்தை பார்பதுபோல் பாருங்கள் ) இறைவனின் பரிபூரண அழகும்,பிரமாண்டமான வடிவமும், அவனின் ஆளுமையும் தெரியும்.....அவன் அழகினை தரிசித்த மகிழ்ச்சியில்,உன் கடவுள்,என்கடவுள்,உன்மதம்,என்மதம் என்ற அறியாமை உங்கள் மனதிலிருந்து தெறித்து விலகி ஓடும், ஒரு ஆழ்ந்த,பரிபூரண அமைதிகிட்டும்.....

என்னோட கண்ணுக்கு கடவுள் தெரியிராருப்பா ,
உங்க கண்ணுக்கு தெரியிறாரா....?

Last but not Least : பகுத்தறிவாளர்களே, மூட நம்பிக்கைகளை சாடுங்கள், கடவுளரை பழிக்காதீர்கள் Please....

என்னோட Boss சுஜாதா சார் கடவுளை பற்றி விளக்கும்  போதெல்லாம் நம்மாழ்வார்  பரசுரம் ஒன்னு குறிப்பிடுவார்...இதோ உங்களுக்காக.....

உளன் எனில் உளன் அவன்
உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்
அருவம் இவ்வுருவுகள் அவை
உளன் என இலன் என
குணம் உடைமையில்
உளன் இரு தகைமையோடு
ஒழிவிலன் பரந்தே.

கடவுள் இருக்கிறான் என்று சொன்னாலும், இல்லை என்று சொன்னாலும்  இருக்கிறான்,உளன் அலன் என்கின்ற இரண்டு குணங்களையும் உடையவன் என்பதால்,உருவமுள்ளது,உருவமற்றது எல்லாமே, அவனுடைய ஸ்தூல சரீரமும்,சூட்சும சரீரமுமாகும், எல்லா காலங்களிலும்,எல்லா இடங்களிலும் உள்ளவன்......நன்றி- உயிர்மை பதிப்பகத்தின்- கடவுள் ( சுஜாதா )புத்தகத்திலிருந்து.....

இது, புனே குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது ஏற்பட்ட  ஆதங்கத்துளையும்,கோவத்திலும் எழுதுனது....

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்....

By............தம்பி.........................2 comments:

Madurai Saravanan said...

katavul enbathu mana saatchi. ok. neelamaana pathivu.

தம்பி.... said...

எல்லாமுமாக இருக்கும் அவன்/அவள்/அது......மனசாச்சியாகவும் இருக்கலாம்...நண்பர் சரவணன் அவர்களே......மதுரையில எந்த ஏரியா ...?

Post a Comment